இது என்ன வாகனம்? பரிசோதனையின்போதே கேள்வியால் திக்குமுக்காட செய்த மக்கள்! எப்படி இருக்கு ஈவீ செனியா?

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன தயாரிப்பு நிறுவனமான ஈவீ இந்தியாவின் முதல் மின்சாரன ஸ்கூட்டர் செனியா. இதையே கடந்த சில நாட்களாக நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் டெஸ்ட் டிரைவ் செய்து வருகின்றனர். அப்போது எங்களுக்கு கிடைத்த தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன விற்பனை உலகம் முழுவதும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், இந்தியாவிலும் மின் வாகன விற்பனை ஊக்குவிப்பு முயற்சிகள் மிக அமோகமாக செய்யப்பட்டு வருகின்றது. இதனால், இந்தியாவில் நாளுக்கு மின் வாகனங்களின் அறிமுகம் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி உள்நாட்டு நிறுவனங்களும் இதில் பங்களித்து வருகின்றன. அந்தவகையில், இந்தியாாவில் தனது மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்திய இந்திய நிறுவனங்களில் ஈவீ இந்தியாவும் (Eeve India) ஒன்று. இந்நிறுவனம் தற்போது வரை நான்கு விதமான மாடல் மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், செனியா (Xeniaa) என்பதே அதன் முதல் மின்சார ஸ்கூட்டராகும்.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

இந்த மின்சாரக் ஸ்கூட்டரைதான் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசோதனையோட்டம் செய்தனர். இதனடிப்படையில் ஈவீ செனியா மின்சார ஸ்கூட்டர் பற்றி கிடைத்த தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

டிசைன் மற்றும் ஸ்டைல்:

ஈவீ செனியாவை நீங்கள் ஓட்டிச் செல்கின்றீர்கள் என்றால் நிச்சயம் பலர் உங்களைத் திரும்பி பார்ப்பார்கள். ஆம், நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையிலேயே இதை நாங்கள் கூறுகின்றோம். இந்த கூற்றிற்கேற்ப ஸ்டைல் மற்றும் சிறப்பு வசதிகள் பலவற்றை செனியாப் பெற்றிருக்கின்றது. மேலும், இந்த ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு சிக்னலுக்காக சாலையில் காத்துக் கொண்டிருந்தபோது பலர் ஸ்கூட்டரைப் பற்றி விசாரிக்க தொடங்கினர்.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

இதில், பலர் கார்களில் இருந்தும் விசாரித்தனர். அந்தளவிற்கு ஈர்க்கும் தோற்றத்திலேயே ஈவீ செனியா இருக்கின்றது. செனியா மின்சார ஸ்கூட்டரை இந்த அளவிற்கு பலர் விசாரிப்பதற்கு அதன் முகப்பு பகுதியின் கவர்ச்சியான தோற்றமே முக்கிய காரணமாகும். முகப்பு பகுதியில், நீளமான வடிவத்தில் இரு ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த மின் விளக்குடன் இணைந்தவாறே எல்இடி டிஆர்எல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

இது, ஸ்கூட்டருக்கு மிகவும் ஷார்ப்பான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதேபோன்று, பக்கவாட்டு பகுதியைக் கவர்ச்சியானதாக காண்பிக்கும் வகையில், கட்டுமஸ்தான உடல் பேனல்களைஈவீ இந்தியா பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக, கூரான லைன்கள் மற்றும் மடிப்புகளால் அது அலங்கரிக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஸ்கூட்டரின் பெயரை பிரபதிபலிக்கக் கூடிய பல்வேறு ஸ்டிக்கர்கள் அங்கு ஒட்டப்பட்டிருக்கின்றன.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

இதேபோன்று, ஸ்கூட்டரின் பின் பகுதியிலும் கவர்ச்சியான தோற்றத்திற்காக சில வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்காக பெரிய உருவம் கொண்ட சிவப்பு மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் இரு முனைகளிலும் திரும்பும் சிக்னலை வெளிப்படுத்தும் டர்ன் இன்டிகேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுபோதாதென்று, வெளிச்சத்தில் ஒளிரும் ரெஃப்ளெக்டர்களும் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. இது மின் விளக்குகள் இல்லாத சாலையில் ஈவீ செனியா செல்வதை காட்டிக் கொடுக்க உதவும்.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

பயண அனுபவம்:

ஈவீ செனியா மின்சார ஸ்கூட்டரில் பயணிப்பது மிகவும் அலாதியான உணர்வை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்த மின்சார ஸ்கூட்டரில் பயணிக்கும்போது பெரியளவில் கலைப்போ, அசௌகரியமான உணர்வோ ஏற்படவில்லை. இதை நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் மணிக் கணக்கில் வைத்து ஒவ்வொரு நாளும் டெஸ்ட் டிரைவ் செய்தனர். ஆனால், அதில் ஒரு நாள்கூட மின்சார ஸ்கூட்டர் எரிச்சலான உணர்வை ஏற்படுத்தவில்லை.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

ரைடருக்கு மட்டுமின்றி பின்பக்கத்தில் அமர்ந்து வருபவருக்கும் இதே மாதிரியான உணர்வே கிடைத்துள்ளது. இத்துடன், பின் பக்கத்தில் அமர்ந்தவருக்கு, தனக்கும் இந்த ஸ்கூட்டரை இயக்க வேண்டும் என்ற நினைப்பேத் தோன்றியிருக்கின்றது. மிகுந்த சௌகரியமான உணர்விக்காக அதிக ஸ்பாஞ்ச் தன்மைக் கொண்ட இருக்கைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது செனியா மின்சார ஸ்கூட்டரில் களைப்பில்லா பயண அனுபவத்தை வழங்கியிருக்கின்றது.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

இத்துடன், ஸ்கூட்டருக்கு தேவையான அனைத்து பேட்டரிகளும் பூட் பகுதியிலேயேப் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனால்தான், இதன் கால் வைக்கும் இடம் சற்று தாழ்வாகக் காட்சியளிக்கின்றது. இவ்வாறு, கால் வைக்கும் பகுதி சற்று தாழ்வாக இருப்பதும் ரைடரின் சௌகரியமான பயண அனுபவத்திற்கு காரணமாக இருக்கின்றது. ஆம், இது தாழ்வாக இருக்கின்ற காரணத்தினால் எந்தவொரு அசௌகரியமும் இல்லாமல் ரைடரால் கால்களை நிம்மதியாக வைத்துக் கொண்டு பயணிக்க முடிகின்றது.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

மிகப்பெரிய பேட்டரிகளே இருக்கைக்கு அடியில் நிறுவப்பட்டிருக்கின்றன. எனவே, அங்கு சிறிய பொருளைக் கூட வைத்துக் கொள்ள இடமில்லாத சூழலேக் காணப்படுகின்றது. ஆகையால், லக்கேஜ் அல்லது வேறு ஏதேனும் பொருள் இருந்தால் அதை கால்கள் வைக்கும் இடத்தில் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். இது செனியா மின்சார ஸ்கூட்டரில் காணப்படும் குறையாக இருக்கின்றது.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

இதுதவிர பெரியளவில் குறைகளை இந்த ஸ்கூட்டரில் நம்மால் காண முடியவில்லை. மேலும், செனியா மின்சார ஸ்கூட்டரில் செல்போன்களைச் சார்ஜ் செய்துகொள்ள ஏதுவாக யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் நிறுவப்பட்டிருக்கின்றது. இத்துடன், பயண அனுபவத்தின் தரத்தை உயர்த்தும் விதமாக சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது கரடு-முரடான சாலையில்கூட பெரியளவில் குலுங்களை ஏற்படுத்தவில்லை.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

அந்தவகையில், செனியா மின்சார ஸ்கூட்டரின் முகப்பு பகுதியில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பகுதியில் ட்யூவல் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவையே சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளன. இதில், ஆச்சரியம் என்னவென்றால், ஸ்கூட்டரின் இரு வீல்களிலும் ஈவீ இந்தியா நிறுவனம் டிஸ்க் பிரேக்குகளை வழங்கியிருக்கின்றது.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

மணிக்கு 150 கிமீ வேகத்தில் செல்லும் இருசக்கர வாகனங்களிலேயே ஒற்றை டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு வரும்நிலையில், மணிக்கு வெறும் 25 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லக்கூடிய மின்சார ஸ்கூட்டரில் இரு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, ஓவர் குவாலிஃபிகேஷனைப் போல அதிகளவிலான தகுதி என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

முன்பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் டிஸ்க் உடனடியாக வாகனத்தை நிறுத்த உதவுகின்றது. ஆனால், பின் பக்க டிஸ்க் வாகனத்தை வேகத்தை குறைத்து, பின்னரே ஸ்கூட்டரை நிறுத்துகின்றது. இந்த மின்சார ஸ்கூட்டர் மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும் என்ற காரணத்தினால் இதனை இயக்க ஓட்டுநர் உரிமமோ அல்லது பதிவு சான்றோ பெற வேண்டிய அவசியம் இல்லை. இது இந்த ஸ்கூட்டரில் காணப்படும் மிக சிறப்பான மற்றும் வரவேற்கக்கூடிய வசதி ஆகும்.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

செனியாவில் இடம்பெற்றிருக்கும் சிறப்பு வசதிகள்:

ஈவீசெனியா மின்சார ஸ்கூட்டரில் பல்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனால், ஈவ் நிறுவனத்தின் பிரபலமான மின்சார ஸ்கூட்டராக இது மாறியிருக்கின்றது. ஏற்கனவே கூறியதைப் போல் இந்த மின்சார ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான மின் விளக்குகள் எல்இடி தரத்திலானவை ஆகும். இதுமட்டுமின்றி, முழுமையான டிஜிட்டல் திறன் வாய்ந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

இது பல்வேறு தகவல்களை வழங்கக்கூடியது. வாகனத்தின் வேகம், பேட்டரி அளவு, ஓடோ மீட்டர் மற்றும் டிரிப் மீட்டர் உள்ளிட்டவற்றை அது காண்பிக்கும். இத்துடன், மூன்று விதமான இயக்க மோட்கள் இந்த மின்சார ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை டிஜிட்டல் டிஸ்பிளே வாயிலாக மட்டுமே கன்ட்ரோல் செய்ய முடியும். ஒவ்வொன்றும் தனித்துவமான இயக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

இத்துடன், செனியாவில் 'பார்க்' எனும் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது இருசக்கர வாகனத்தை பார்க் செய்துவிட்டு செல்லும்போது அதிக பாதுகாப்பை வழங்க உதவும். குறிப்பாக, திருட்டில் காக்க இது உதவும். இத்துடன், வழக்கமான ஸ்கூட்டர்களில் இருப்பதைப் போன்ற பல்வேறு பொத்தான்கள் ஸ்கூட்டரின் கைப்பிடிகளில் வழங்கப்பட்டுள்ளன.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

இதுதவிர, ஸ்கூட்டரின் ஸ்டைலைக் கூட்டக்கூடிய அம்சங்கள் சிலவற்றையும் ஈவீ இந்தியா வழங்கியிருக்கின்றது. பின் இருக்கையாளர்கள் பாதுகாப்பாக அமர்ந்து பயணிப்பதற்கு ஏதுவாக கைப்பிடி, ஸ்டைலான தோற்றமுடைய அலாய் வீல்கள், சாவி இல்லாமல் இயக்கும் வசதி, கழட்டி மாட்டும் பேட்டரிகள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செனியாவில் வழங்கப்பட்டுள்ளன.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் பேட்டரி 60V 20Ah லித்தியன் அயன் பேட்டரிகள் ஆகும். இதை தேவைக்கேற்ப கழட்டிச் சென்று சார்ஜ் போட்ட பின்னர், மீண்டும் செனியா ஸ்கூட்டரிலேயே பொருத்திக் கொள்ள முடியும். இதுதவிர, ஸ்கூட்டரிலேயே பேட்டரியை வைத்துக் கொண்டு சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், சார்ஜ் தீர்ந்து விட்டால் பேட்டரியைத் தனியாக கழட்டியோ அல்லது செனியா ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் சார்ஜ் போர்ட்டின் வாயிலாகவோ சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

4 மணி நேரங்களில் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது இதைவிட குறைந்த நேரத்தில் சார்ஜ் ஏற்றம் செய்யப்படும். அவ்வாறு, முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் அதிகபட்சம் 65 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும்.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

செனியா மின்சார ஸ்கூட்டர் நகர வாசிகள் மற்றும் அன்றாட பயன்பாட்டாளர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான் மிகக் குறைந்த வேகம் மற்றும் ரேஞ்ஜ் திறனில் இது காட்சியளிக்கின்றது.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

ஆரம்ப பதிவுகள்:

ஈவீ செனியா மின்சார ஸ்கூட்டரை சோதனைக்கு உட்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துவதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த ஸ்கூட்டர் பற்றிய மேலும் பல சுவாரஷ்ய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இந்த ஸ்கூட்டரின் சில சிறப்பு வசதிகளை உங்களுக்கு முன் கூட்டியே வழங்கும் நோக்கில் ஆரம்ப தகவல்களை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம்.

இது என்ன வாகனம்? ஈவீ செனியா பரிசோதனையின்போது கேள்வியால் திக்குமுக்காட செய்த இளைஞர்கள்... எப்படி இருக்கு?

விரைவில் மேலும் பல சுவாரஷ்ய தகவல்கள் இந்த ஸ்கூட்டரைப் பற்றி வெளியிடப்படும். குறிப்பாக, இந்த ஸ்கூட்டர் பெர்ஃபார்ம் செய்கிறது, இதன் ஹேண்டிலிங் வசதி எப்படி இருக்கின்றது மற்றும் என்ன மாதிரியான லாபத்தை இது நமக்கு வழங்கும் என்பது பற்றிய பல்வேறு தகவல்களை மிக விரைவில் வெளியிட இருக்கின்றோம்.

Most Read Articles

English summary
Eeve Xeniaa Long-Term Review (First Report): Design, Styling, Features, Ride Comfort, Practicality & All Other Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X