ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

Written By:

மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நூற்றாண்டு பெருமை மிக்க நிறுவனமாக விளங்குகிறது. உலக அளவில் ஹார்லி டேவிட்சன் பிராண்டை தெரியாத மோட்டார்சைக்கிள் பிரியர்கள் இருக்க முடியாது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களின் தனித்துவமும், அலாதியான சப்தமும் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும்.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிளை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில் கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

ஹார்லி டேவிட்சன் அயன் 883 மற்றும் ஃபார்ட்டி எயிட் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு இடையிலான ரகத்தில் இருக்கிறது ஹார்லி 1200 கஸ்டம். அதேநேரத்தில், அந்த இரு மாடல்களையும் விடவும் வடிவத்தில் சற்று சிறிய மாடலாகவும் காட்சி அளிக்கிறது. வலிமையான டயர்கள், அகலமான ஹேண்டில்பார்கள், குட்டையான பின்புறம் போன்றவை பார்ப்போரை ரசிக்க வைக்கிறது.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

இந்த மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவிலான ஹேலஜன் பல்புடன் கூடிய ஹெட்லைட் இருக்கிறது. டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் 17 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

இந்த மோட்டார்சைக்கிளில் க்ரோம் பாகங்களின் அலங்காரம் தூக்கலாகவே இருக்கிறது. அலுமினியம் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஸ்பீடோ மீட்டர் பழைய காலத்து மோட்டார்சைக்கிளில் இருப்பது போன்ற தோற்றத்தை பெற்றிருக்கிறது. இது மட்டுமல்ல, பல பாகங்கள் பழைய டிசைன் தாத்பரியங்களை நினைவூட்டுகின்றன.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

இருப்பினும், சிறிய மின்னணு திரையும் உண்டு. அதில், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், டாக்கோமீட்டர், கடிகாரம், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லும் உள்ளிட்ட தகவல்களை பெற முடிகிறது. சுவிட்ச் கியர்கள் தரம் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. இயக்குவதற்கும் எளிதாக உள்ளது.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

வண்டியில் அமர்ந்தவுடனே, தாழ்வான இருக்கை அமைப்பு பழைய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை நினைவூட்டுகிறது. மேலும், வழக்கமான க்ரூஸர்கள் போன்று இல்லை. ஹார்லி ஃபார்ட்டி எயிட் மோட்டார்சைக்கிளைவிட வீல்பேஸ் மற்றும் எடை அதிகம்.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

மேலும், இதன் உட்புறம் வளைந்த ஹேண்டில்பார் அமைப்பு, முன்னோக்கிய கால் வைப்பதற்கான ஃபுட்பெக்குகள் மற்றும் தாழ்வான இருக்கை அமைப்பு ஆகியவை மிக சவுகரியமான உணர்வை தருகிறது. அதேநேரத்தில், நீண்ட தூரம் ஓட்டும்போது சிலருக்கு உடல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. ஏனெனில், இருக்கை போதிய அளவு குஷன் இல்லை.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

இந்த மோட்டார்சைக்கிளில் 1,202சிசி வி- ட்வின் ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 3,500 ஆர்பிஎம்மில் மிக அதிகபட்சமான 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், பெல்ட் டிரைவ் சிஸ்டத்தில் இயங்குகிறது.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

இதன் டார்க் திறன் மிக அதிகமாக இருப்பதால், மிக கவனமாக கையாள வேண்டியிருக்கிறது. எனினும், ட்ராக்ஷன் கன்ட்ரோல் மூலமாக இந்த அதீத டார்க் திறனை சமாளிக்க முடியும். இந்த மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாகத்தான் கிடைக்கிறது என்பது சிறிய ஏமாற்றம். மழை நேரத்தில் இந்த மோட்டார்சைக்கிளை மிக கவனமாக ஓட்ட வேண்டியிருக்கிறது.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

இந்த மோட்டார்சைக்கிள் 270 கிலோ எடை இருந்தாலும், வளைவுகளில் மிக லாவகமாக செல்கிறது. அதேபோன்று, போக்குவரத்து நெரிசல்களையும் எளிதாக சமாளிக்கிறது. நெடுஞ்சாலைகளில் 120 கிமீ வேகத்தில் மிக அலாதியான சுகத்தை தருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஐட்லிங்கில் இருக்கும்போதும், குறைவான வேகத்திலும் அதிர்வுகள் சற்று அதிகமாக தெரிகிறது.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

இந்த மோட்டார்சைக்கிளில் 5 ஸ்போக்குகளுடன் கூடிய 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மிச்செலின் ஸ்கார்செர் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்புறத்திலும், பின்புறத்திலும் சிங்கிள் டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது. போதுமான பிரேக்கிங் திறனை அளிப்பதாகவே கூறலாம்.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

டயர்களும் மிகச் சிறப்பான தரைப் பிடிப்பை வழங்குகின்றன. வெறும் 105 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் இருப்பதால், வளைவுகளில் திருப்பும்போதும், மேடு பள்ளமான சாலைகளில் ஓட்டும்போதும் கவனமாக இருக்க வேண்டி இருந்தது.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் எமது டெஸ்ட் டிரைவின்போது நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜும் தந்தது. 17 லிட்டர் கொள்திறன் பெட்ரோல் டேங்க் மூலமாக 230 கிமீ முதல் 250 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்புள்ளது.

ரோடு டெஸ்ட் எடிட்டர் புரோமித் கோஷ் கருத்து

ரோடு டெஸ்ட் எடிட்டர் புரோமித் கோஷ் கருத்து

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் ஓட்டுவதற்கு எளிதான க்ரூஸர் மாடலாக இருந்தபோதிலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிரைவிங் மோடுகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இல்லாதது பெரும் ஏமாற்றம். ரூ.10 லட்ச ரூபாய் மதிப்புடைய மோட்டார்சைக்கிளில் இவையெல்லாம் நிரந்தரமாக இடம்பெற்றிருப்பது அவசியமாக கூறலாம்.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்!

இந்த குறைகளை தவிர்த்து மறுபுறத்தில் பார்க்கும்போது ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிளுக்கு ஏராளமான கஸ்டமைஸ் ஆக்சஸெரீகளை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இவற்றை வாங்கி பொருத்தி அழகு பார்க்கலாம். கஸ்டமைஸ் ரக மோட்டார்சைக்கிளை வாங்குவோருக்கு இது மிகச் சிறந்த சாய்ஸாக இருக்கும்.

English summary
Review: Harley-Davidson 1200 Custom — Pimped Up American Cruiser
Story first published: Saturday, September 16, 2017, 16:08 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos