புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா நிறுவனத்தை வீழ்த்துவதற்காக பல புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில், 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டெஸ்ட்டினி 125 என்ற புதிய மாடலை அண்மையில் ஹீரோ மோட்டோகார்ப் களமிறக்கியது. இந்த புதிய ஸ்கூட்டர் மாடலை ஓட்டி பார்த்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய 125சிசி மாடல்

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டூயட் 125 என்ற பெயரில் இந்த ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டூயட் 110 ஸ்கூட்டரின் டிசைனை ஒத்திருந்தாலும், இதனை பிரிமீயம் மாடலாக காட்டுவதற்காக பல நகாசு வேலைப்பாடுகளை செய்துள்ளது ஹீரோ நிறுவனம்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முகப்பு டிசைன்

ஹீரோ டூயட் 110 மாடலின் 125 வெர்ஷனாகவே இந்த புதிய டெஸ்ட்டினி ஸ்கூட்டரை குறிப்பிட முடியும். ஆனால், தோற்றத்தில் சிறிய வித்தியாசங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புற அப்ரான் பகுதியில் வி வடிவிலான க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் ஊடாகவே டர்ன் இண்டிகேட்டர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

முன்புறத்தில் ஹெட்லைட் கவுல் பகுதியானது மேற்புறத்தில் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இரட்டை வண்ணத்தில் வசீகரிக்கிறது. சைடு மிரர்கள் டிசைனும் ஸ்கூட்டருக்கு கவர்ச்சியை சேர்க்கிறது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் மிக கச்சிதமான மாடலாக தெரிகிறது. பாடி பேனல்களில் க்ரோம் பட்டையும், டெஸ்ட்டினி 125 பிராண்டு பெயரும் கவர்ச்சியை கூட்டுகிந்றன. சைலென்சர் மஃப்ளரில் க்ரோம் கவர் பொருத்தப்பட்டு இருப்பதும் பிரிமீயமாக மாறி இருக்கிறது. இரட்டை வண்ண இருக்கையும் கவர்ச்சியான விஷயம். கருப்பு வண்ண அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

இந்த ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் பிரம்மாண்டமாக தெரியும் டெயில் லைட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டு பேனல்களுடன் இணைந்தாற்போல, இது டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பகுதியிலேயே, பெட்ரோல் டேங்க் மூடி வெளிப்புறமாக கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சில்வர் வண்ணத்தில் வலிமையான கிராப் ரெயில் கைப்பிடி ஸ்கூட்டருக்கு கம்பீரத்தை தருகிறது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இந்த ஸ்கூட்டரில் அனலாக் மானியுடன் ஸ்பீடோமீட்டர் மற்றும் டிஜிட்டல் ஓடோமீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர் மற்றும் ஐ3எஸ் சிஸ்டம் இயங்குவதை காட்டும் விளக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இருக்கிறது. எரிபொருள் அளவு, ஓடிய தூரம் உள்ளிட்ட தகவல்களை டிஜிட்டல் திரை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சுவிட்ச் கியர்

சுவிட்சுகளின் தரம் திருப்தியை தருகிறது. இடதுபுறத்தில் ஹெட்லைட், இண்டிகேட்டர் பட்டன்களை இயக்குவதற்கும் எளிதாக இருக்கிறது. வலதுபக்கத்தில் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் சுவிட்ச் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின்

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் 124.6சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டூயட் 110 ஸ்கூட்டரைவிட 9 சதவீதம் கூடுதல் பவரையம், 17 சதவீதம் கூடுதல் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

செயல்திறன்

இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இருக்கும். அதேபோன்று, ஆரம்ப நிலையில் இருந்து நடுத்தர நிலை வரையில் மிகச் சீரான பவர் டெலிவிரியை வழங்குகிறது. எஞ்சினில் அதிர்வுகளும் குறைவாக இருப்பது இதன் ப்ளஸ்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஐ3எஸ் சிஸ்டம்

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் ஐ3எஸ் எனப்படும் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் உள்ளது. சிக்னல் உள்ளிட்ட இடங்களில் 5 வினாடிகளுக்கு மேல் எஞ்சின் ஐட்லிங்கில் இருக்கும்போது, இந்த சிஸ்டம் தானாக எஞ்சினை அணைத்துவிடுகிறது. இது அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற உதவுகிறது. அதேநேரத்தில், சில நேரங்களில் இந்த சிஸ்டம் எரிச்சலூட்டுவதையும் கூற வேண்டும். எனினும், இதனை அணைத்து வைப்பதற்கு பிரத்யேக பட்டன் இருப்பது ஆறுதல்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கையாளுமை

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது மிகவும் மென்மையான அமைப்பை கொண்டிருப்பது கையாளுமையில் சிறிது ஏமாற்றமான உணர்வை தருகிறது. ஆனால், இதன் பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் இறுக்கமாக இருப்பதும், இந்த 110 கிலோ எடையுடைய ஸ்கூட்டரின் கையாளுமை மோசமாக இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அமரும் அமைப்பு

இந்த ஸ்கூட்டரின் இருக்கை அகலமாகவும், சொகுசாகவும் இருக்கிறது. இருக்கையில் போதுமான பஞ்சு பொதி இருப்பதும் சவுகரியமான, சொகுசான பயணத்தை அளிக்கிறது. அதேபோன்று, இதன் இருக்கை அமைப்பும், கால் வைப்பதற்கு போதிய இடவசதியை கொண்ட ஃபுட்போர்டும் ஓட்டுனருக்கு சாவகாசமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிரேக் சிஸ்டம் செயல்பாடு

இந்த ஸ்கூட்டரில் இரண்டு சக்கரங்களிலுமே டிரம் பிரேக்குள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்டகிரேடட் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வந்திருப்பது கூடுதல் பாதுகாப்பை வழங்கும் அம்சமாக இருக்கிறது. அவசரத்தில் வேகமாக பிரேக் பிடிக்கும்போது இந்த பிரேக் சிஸ்டம் துல்லியமாக செயல்பட்டு வண்டியை நிறுத்த உதவுகின்றன. டிஸ்க் பிரேக் இருந்தால், இதன் செயல்திறன் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மல்டி ஃபங்ஷன் கீ சிறப்பு

இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டு இருக்கும் மல்டி - ஃபங்ஷன் கீ ஸ்லாட் மூலமாக, பெட்ரோல் டேங்க் மூடி, இருக்கையை திறப்பதற்கு எளிதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் இரண்டு லக்கேஜ் ஊக்குகளும், ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் வைப்பதற்கு போதுமான இடவசதியையும் அளிக்கிறது. யுஎஸ்பி சார்ஜர், பூட் லைட் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்கள்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வண்ணத் தேர்வு

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் நோபுள் ரெட், செஸ்ட்நட் பிரான்ஸ், பியர்ல் சில்வர் ஒயிட் மற்றும் பாந்தர் பிளாக் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும். இதில், நோபுள் ரெட் வண்ணம் விஎக்ஸ் என்ற வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

விலை விபரம்

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரின் எல்எக்ஸ் வேரியண்ட் ரூ.54,650 எக்ஸ்ஷோரூம் விலையிலும், விஎக்ஸ் வேரியண்ட் ரூ.57,500 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். பாடி கலர் சைடு மிரர்கள், அலாய் வீல்கள், முகப்பில் க்ரோம் பட்டை அலங்காரம் மற்றும் டூயல் டோன் இருக்கை ஆகியவை விஎக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தீர்ப்பு

குறை சொல்ல முடியாத டிசைன், அதிர்வுகள் குறைவான எஞ்சின், போதிய செயல்திறன் ஆகியவை நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற மாடலாக புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரை கூறலாம். அதேநேரத்தில், எல்இடி ஹெட்லைட், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டிஸ்க் பிரேக் போன்றவை இருந்திருந்தால், 125சிசி மார்க்கெட்டில் வெகு சீக்கிரமே முன்னிலை பெறுவதற்கான வாய்ப்புகளை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கும்.

Tamil
English summary
To find out how the scooter performs on the road, we ride the new Hero Destini 125 and bring you the first ride review of the flagship scooter from Hero MotoCorp.
Story first published: Monday, October 29, 2018, 15:29 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more