ஹோண்டா டியோ விட்டுச் சென்ற இடத்தை நிரப்பப்போகும் ஹீரோ ஸூம்! ஓட்டி பார்க்க எப்படி இருக்குது?

110 சிசி ஸ்கூட்டர் செக்மொண்ட் இந்தியாவில் அதிகம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகும் ஒரு பிரிவாகும். பல தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பிரிவில் தங்கள் தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த தலைமுறையிலும் இந்த செக்மெண்டில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய டூவீலர் தயாரிப்பாளர்கள் இந்த தலைமுறை வாடிக்கையாளர்களை இந்த செக்மெண்ட் வாகனம் மூலம் குறி வைத்தால் என்ன ஆகும்? புள்ளிங்கோ பைக் என அழைக்கப்பட்ட ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் இடத்தை வேறு யாரும் பிடிக்காத நிலையில் அந்த இடத்தையும் பிடிக்க ஹீரோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்கூட்டர் தான் ஸூம்

ஹோண்டா டியோ விட்டுச் சென்ற இடத்தை நிரப்பப்போகும் ஹீரோ ஸூம்! ஓட்டி பார்க்க எப்படி இருக்குது?

ஹூரோ ஸூம் பைக் புதிய தலைமுறையினரைக் கவருமா? ஹோண்டா டியோ விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புமா? இதைத் தெரிந்து கொள்ள எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழு டில்லிக்கு பயணித்து இந்த ஹீரோ ஸூம் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்தது.

டிசைன் மற்றும் அம்சங்கள்

ஹீரோ நிறுவனம் தனது ஸூம் ஸ்கூட்டரை தங்கள் வாடிக்கையாள்கள கவரும் படி வடிவமைத்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ஸ்போர்ட்டி லுக்கிலும், பார்க்க ஸ்டைலாகவும் குறிப்பிட்ட செக்மெண்டில் உள்ள எல்லா வாடிக்கையாள்களுக்கு பிடிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் முன்பக்கம் பக்கம் இந்த ஸூம் ஸ்கூட்டரில் டூயல் டோல் ஏப்ரான் டிசைன் வழங்கப்பட்டுள்ளது (கருப்பு பெயிண்ட் ஸ்கீம் தவிர). முகப்பு பக்க ஹெட்லைட் சிறப்பான டிசைன் வடிவமைப்புடன் ஹெட்லைட் முகப்பு ஏப்ரானின் கீழ்ப் பகுதியில் ஷார்ப் லுக் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா டியோ விட்டுச் சென்ற இடத்தை நிரப்பப்போகும் ஹீரோ ஸூம்! ஓட்டி பார்க்க எப்படி இருக்குது?

ஹெட்லைட்டை பொருத்தவரை ஹூரோ ஸூம் ஸ்கூட்டரில் புரோஜெக்டர் ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்டைலைான H வடிவில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. புதிய ஸூம் பைக்கின் ஹேண்டில் பாரில் பிளிங்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸூம் ஸ்கூட்டர் மற்ற 110 சிசி ஸ்கூட்டரை விட வித்தியாசமாகத் தோற்றம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் கார்னரிங் லைட்கள் பைக்கின் க்ரே ஃபென்டர்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இது திருப்பங்களில் இரவில் இருட்டான இடத்தில் பயணிக்கும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பக்கவாட்டிலிருந்து பார்க்கும் போது புதிய ஸூம் ஸ்கூட்டரில் முக்கிய ஹைலைட்டாக 12 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது ZX வேரியன்ட்டில் வழங்கப்பட்டுள்ளது. அந்த வேரியன்டை தான் நாங்கள் ஓட்டிப்பார்த்தோம். இந்த வேரியன்டில் முன்பக்கம் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

மற்றொரு முக்கியமான ஹைலைட் பெரிய எக்ஸாஸ்ட், இது ஸ்கூட்டரை சற்று அகலமாக மாற்றுகிறது. இது போக பின்பக்கம் சிங்கிள் பீஸ் கிராப் ஹேண்டில் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க டெயில் லைட்டிலும் அதே H வடிவ டிசைன் லைட் வழங்கப்பட்டுள்ளது. இன்டிகேட்டர்கள் அதன் கீழே பொருத்தப்பட்டுள்ளது. டயரை பொருத்தவரை அகலமாக டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. VX, ZX ஆகிய வேரியன்ட்களில் மட்டும் பெரிய டயர் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டருக்கு ஸ்போர்ட்டி லுக்கை கொடுக்கிறது.

நீங்கள் பெரிய சீட்டில் ஏறி அமர்ந்தவுடன் உங்கள் கண்களை முதலில் கவர்ந்து இழுப்பது முழுமையாக டிஜிட்டல் டிபிளே தான். இதில் ஸ்பீடு, ரியல் டைம் மைலேஜ், டைம் மற்றும் ஃப்யூயல்கேஜ் ஆகிய தகவல்களை வழங்குகிறது. இதில் ப்ளூடூத் மூலம் செல்போனை இணைத்துக்கொள்ள முடியும். இணைக்கப்பட்ட பின்பு செல்போனிற்கு வரும் போன் கால் குறித்த தகவல்கள் ஸ்கிரீனில் தெரியும். மிஸ்டு கால் குறித்த தகவல்களும் இதில் இடம் பெறும். இது போக செல்போனிற்கு வரும் மெசேஜ்கள், போன் பேட்டரி அளவு ஆகிய தகவல்கள் இடம் பெறுகிறது. இதில் VX வேரியன்டில் ப்ளூடூத் இணைப்பு மட்டும் இருக்காது. LX வேரியன்டில் செமி டிஜிட்டல் செட்டப் இருக்கிறது.

கீழே முகப்பு ஏப்ரான் பகுதியில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது LX வேரியன்டில் ஆப்ஷனாக வழங்குகிறது. சீட்டிற்குக் கீழ்ப் பகுதியில் பெரிய ஸ்டோரேஜ் வசதியும் இருக்கிறது. இதுவும் LX வேரியன்டில் இல்லை. இந்த ஹீரோ ஸூம் ஸ்கூட்டர் மொத்தம் 5 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. பிளாக், பியர்ல் சில்வர் ஒயிட், போல்ஸ்டர் ப்ளூ, மேட் அர்பேக்ஸ் ஆரஞ்ச் மற்றும் ஸ்போர்ட்டி ரெட், ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

ஸ்பெக் மற்றும் டைமன்சன்

ஹீரோ ஸூம் ஸ்கூட்டரில் புதிய ஏர்-கூல்டு 110.9 சிசி ஃப்யூயல் இன்ஜெக்டட் சிங்கிள் சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.05 பிஎச்பி பவரை 7250 ஆர்பிஎம்மிலும், 8.70 என்எம் டார்க் திறனை் 5750 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜினில் ஹீரோவின் ஐ3எஸ் ஸ்டார்ட் ஸ்டாப் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது இன்ஜினிற்கு சிறப்பாக மைலேஜை தருகிறது. இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஹீரோ ஸூம் பைக்கின் சஸ்பென்ஸனை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக்ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனோ ஷாக் அப்சர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டரை கடுமையான பாதையிலும் பயணிக்க வைக்க உதவுகிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்பக்கம் 190 மிமீ டிஸக் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. LX மற்றும் VX வேரியன்டில் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஸூம் எம்ஆர்எஃப் நைலோ கிரிப் டயர் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க டயர் 90/90 என்ற அளவிலும், பின்பக்க டயர் 100/80 அளவிலும் வழங்கப்பட்டுள்ளது. LX மற்றும் VX வேரியன்டில் 90/90 அளவிலேயே பின்பக்க டயரும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஹீரோ ஸூம் ஸ்கூட்டரை பொருத்தவரை 1881 மிமீ நீளம், 731 மிமீ அகலம், 1118 மிமீ உயரம் கொண்டதாக இருக்கிறது. இதன் வீல் பேஸை பொருத்தவரை 1300 மிமீ நீளம் கொண்டது. 150 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இந்த ஸ்கூட்டரின் சீட் உயரத்தைப் பொருத்தவரை 770 மீமீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 5.2 லிட்டர் ஃப்யூயல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

ரைடிங் இம்பிரஷன்

ஹீரோ ஸூம் இன்ஜினை பொருத்தவரை கொஞ்சம் பெர்ஃபாமென்ஸ் இன்ஜினாக இருக்கிறது. இது 30 கி.மீ வேகம் வரை சாதாரணமாக மற்ற இன்ஜினை போல தான் செயல்படுகிறது. குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் அதன் ஃபெர்பாமென்ஸ் தாறுமாறாக அதிகமாகி சீக்கிரம் 80 கி.மீ வேகத்தை எட்டி பிடிக்கிறது. சிங்கிள் சிலிண்டரில் பவர்ஃபுல்லான பெர்ஃபாமென்ஸை இந்த இன்ஜின் வழங்குகிறது.

இந்த பைக்கின் சஸ்பென்சன் செட்டப்பான முன்பக்கம் டெலஸ்கோபிக் மற்றும் பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்சன்கள் பள்ள மேடுகளில் ஏறி இறங்கச் சிறப்பாக இருக்கிறது. புதிய எம்ஆர்எஃப் நைலோ கிரிப் டயர்கள் பைக் ஓட்டும் போது ஒரு விதமான கான்ஃபிடென்ஸை தருகிறது. ஓட்டும் போது அந்த அழுங்கள் குலுங்களும் இல்லாமல் சிறப்பாக ஓட்ட முடிகிறது.

வேகமாகச் செல்லும் ஸூம் ஸ்கூட்டரை நிறுத்துவது ஒன்று கஷ்டமான காரியம் கிடையாது. முன்பக்கம் சிங்கிள் பிஸ்டர் பைபேர் கேலிபருடன் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் உள்ள கேஸ்ட் டிரம் பிரேக் ஆகியவை இணைந்து போதுமான பிரேக்கிங் திறனை பைக்கிற்கு வழங்குகிறது. ஹீரோ நிறுவனம் இந்த பைக்கில் இன்டர்கிரேட்டட் பிரேக்கிங் சிஸ்டத்தை வழங்குகிறது. இந்த பிரேக் ஸ்லிப் ஆகாமல் இருக்கும்.

சீட்டிங் செட்டப்பும் வேரியன்டை பொருத்து மாறுபடும். Zx வேரியன்டை தான் நாங்கள் ஒட்டி பார்த்தோம் அது ரைடர்களுக்கு சொகுசான குஷன் அனுபவத்தை வழங்கும் சீட்டாக இருந்ததும். டில்லி சாலைகளில் இந்த ஸ்கூட்டரை ஓட்டி செல்ல சிறப்பாக இருந்தது.

இறுதித் தீர்ப்பு

ஹீரோ ஸூம் ஸ்கூட்டர் அதன் வாடிக்கையாளர்களைக் கவரும் அத்தனை அம்சங்களையும் கொண்டதாக இருக்கிறது. இதன் ஷார்ப்பான ஸ்டைலிங், 110 சிசியில் பவர்ஃபுல் இன்ஜின் என புள்ளிங்கோ ஸ்கூட்டரில் தற்போது இணைந்துவிட்டது என்றே சொல்லிவிடலாம். இது புள்ளிங்கோ எல்லாம் சாலையில் இந்த பைக்கில் வலம் வருவதை விரைவில் காண முடியும்.

Most Read Articles
English summary
Hero xoom 110 review price spec colors and other details
Story first published: Thursday, February 2, 2023, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X