ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கினை நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கினை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டெல்லியை தலைமையிடமாக கொண்ட புகழ்பெற்ற நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மே 1ம் தேதி ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் என மூன்று பைக்குகளை அறிமுகம் செய்தது. டிசைனில் முற்றிலும் மாறுபட்டு மூன்று பைக்குகளும் காட்சியளித்தது. இதில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஸ்போர்ட்ஸ் பைக் டிசைனுடன் ஃபுல்லி ஃபேர்டு மாடலில் வெளிவந்தது.

ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஹீரோ நிறுவன வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்த்துள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கினை நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெல்லியில் உள்ள புத் சர்வதேச சர்க்யூடில் டெஸ்ட் டிரைவ் செய்தது. இதில் இந்த பைக்கில் உள்ள சிறப்பு அம்சங்கள், என்ஜின் செயல்திறன் மற்றும் வடிவமைப்பை குறித்து கண்டறிந்தோம். இதில் பெரிதளவில் குறைகள் ஏதும் இல்லை ஆனாலும் பட்டியலிடும் அளவிற்கு நிறைகள் அதிகம் என கூறலாம்.

ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்:

ஹீரோ மோட்டார்கார்ப் எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் டிசைனை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் ஃபுல்லி ஃபேர்டு வெர்ஸனாக வெளிவந்துள்ளது. மேலும் இதன் நேர்த்தியான சிங்கிள் ஹாண்டில் பார் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக்கின் அடிப்படையை கொண்டு பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஃபூட் பெக்குகள் (Foot Peg) பைக்கிற்கு சிறப்பான தோற்றத்தை தருகிறது.

ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் சீட் பைக் ரைடர்களுக்கு சவுகரியமான வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது. ஹீரோ நிறுவனத்தின் கரிஷ்மா மட்டும் CBZ பைக் போன்று எக்ஸ்ட்ரீம் 200ஆர் ஸ்போர்ட்டி லுக்கினை தருகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் ரவுண்டு வடிவ எல்இடி ஹெட்லேம்ப் பிரகாசமான வெளிச்சத்தை தருகிறது. இதன் எல்இடி விளக்குகள் இதனுடன் வெளிவந்த எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் 200டி பைக்கினை விட டிசைன் மாறுபட்டுள்ளது.

ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஹீரோ நிறுவனத்தில் எல்இடி ஹெட்லேம்ப்புடன் வெளிவரும் மூன்றாவது பைக் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோ நிறுவனத்தின் பெரும்பாலான பைக்குகள் ஹலோஜின் விளக்குகளாக வெளிவந்துள்ளது. இதன் நேர்த்தியான பெயிண்ட் வேலைப்பாடு பைக்கிற்கு கூடுதல் கம்பீர தோற்றத்தை தருகிறது. ஹீரோ கரிஷ்மா பைக்கில் உள்ளது போலவே இதில் முன்னாள் அமைந்துள்ள ஏர் கிளைடர் போன்ற டிசைன் ஸ்போர்ட்ஸ் பைக்கின் தாத்பரியத்தை காட்டுகிறது

ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சிறப்பு அம்சங்கள்:

எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் மேன்படுத்தப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் கனெக்டிவிடி வசதி மற்றும் ஜிபிஎஸ் நாவிகேசன், மொபைல் கால் ரிமைண்டர் மற்றும் பைக் சர்வீஸ் நோட்டிபிகேஷன் வசதியும் ஹீரோ நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் இதில் கூடுதல் கிராம்பு அம்சமாக கியர் இண்டிகேட்டர், ஸ்பீடோமீட்டர், டாக்கோமீட்டர், ட்ரிப்மீட்டர் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

என்ஜின்:

எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் சக்திவாய்ந்த என்ஜின்ஏர் கூல்டு டூயல் வால்வு சிங்கிள் சிலிண்டர் 199.6 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 18 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 17.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும் ஆற்றல்மிக்கது . இதில் கார்புரேட்டருடன் கூடிய 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியையும் ஹீரோ நிறுவனம் வழங்கியுள்ளது.

ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கினை ஓட்டி பார்த்ததில் இந்த பைக் 110கிமீ ஸ்பீடினை எளிதாக தொடுகிறது. இருப்பினும் 100கிமீ வேகத்தினை தாண்டும் போது பைக்கிக் அதிர்வுகள் அதிகமாக தெரிகிறது. இது நகர் சாலைகளை விட நெடுச்சாலைகளில் பயணம் செய்ய சிறப்பானதாக இருக்கும்.

ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பைக்கினை வளைவுகளில் எளிதாக திருப்ப முடிகிறது. மேலும் இதில் உள்ள 37மிமீ முகப்பு மற்றும் பின்புற சஸ்பென்ஷன்சொகுசான பயண அனுபவத்தை தருகிறது. இதன் 276மிமீ முன் வீல் டிஸ்க் பிரேக் மற்றும் 220மிமீ பின் வீல் பிரேகுகள் வண்டியை கட்சிதமாக நிறுத்துகிறது.

ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தீர்ப்பு:

எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் ஓட்டுபவர்க்கு சிறப்பான பயண அனுபவத்தை தருகிறது. சவுகர்யமான பைக் சீட், நேர்த்தியான டிசைன் வடிவமைப்பு மற்றும் சக்திவாய்த 200சிசி என்ஜின், சிறந்த செயல்திறன் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிடியுடன் கூடிய இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர் இவை அனைத்தும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் வாங்க விரும்புவோர் மனதில் வைக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும். எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் 98,500 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையில் உள்ளது. விலை மலிவான ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க விரும்புவோர்க்கு எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles
English summary
Hero Xtreme 200S Test Drive Report: Read In Tamil
Story first published: Saturday, May 11, 2019, 16:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X