ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிளை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதன் அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

By Saravana Rajan

இளம் பிராயத்தில் சேட்டிலைட் தொலைக்காட்சி யுகம் துவங்கிய 90களில் பாரிஸ்- டக்கார் ராலியின் ஹைலைட்டுகளை டிரான்ஸ் வேர்ல்டு ஸ்போர்ட் நிகழ்ச்சியை எனது வீட்டில் இருந்த ஒனிடா டிவியில் பார்ப்பது வழக்கம்.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அப்போது அந்த ராலியில் வீரர்கள் சீறிப் பாய்ந்து ஓட்டி வரும் வித்தியாசமான வடிவமைப்புடைய அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள்கள் மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டது. அதுபோன்ற மாடல்கள் எப்போது இந்தியா வரும் என்ற எதிர்பார்ப்பும், அதனை ஓட்டி பார்க்க முடியுமா என்ற ஆவலும் சிறு வயதில் இருந்தே மனதில் இருந்தது.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆனால், தற்போது சிறந்த அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள்களை தேர்வு செய்யும் வாய்ப்பு எழுந்துள்ளது. கேடிஎம் 1190 அட்வென்ச்சர், பிஎம்டபிள்யூ ஆர்1200ஜிஎஸ் அட்வென்ச்சர் மற்றும் டுகாட்டி 1200 மல்டிஸ்ட்ரேடா என்டியூரோ போன்ற மாடல்கள் நமக்கு சிறப்பான தேர்வு வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

Recommended Video

Tata Nexon Review: Specs
ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இருப்பினும், 80களின் இறுதியில் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டை ஒரு தயாரிப்பாளர் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல காரணமாக இருந்தது. ஆம், பாரிஸ் டக்கார் ராலியில் ஹோண்டா நிறுவனத்தின் NXR750 என்ற மாடல்தான் முன்னணி பிராண்டாக இருந்தது. இதனை பாலைவன ராணி என்றும் செல்லமாக அழைத்தனர்.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், அந்த காலத்தில் கலக்கிய ஹோண்டா NXR750 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிளை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஓனிடா டிவிக்கு வரும் விளம்பரம் போலவே, இந்த மோட்டார்சைக்கிள் உரிமையாளருக்கு பெருமையையும், அண்டை வீட்டாருக்கு பொறாமையும் தரும் அம்சங்களை கொண்டிருக்கிறதா? 1989ம் ஆண்டில் அட்வென்ச்சர் ரகத்தில் ஹோண்டா கொடி கட்டி பறந்ததை, இந்த மோட்டார்சைக்கிளும் உயர பிடிக்கிறதா என்ற கேள்விகளுடன் இந்த மோட்டார்சைக்கிளை டெஸ்ட் டிரைவ் செய்தேன்.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போட்டியாளர்களிடத்தில் இருந்து வேறுபடுத்தும் விதத்தில் இந்த மோட்டார்சைக்கிளில் டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இந்த கியர்பாக்ஸ் வகை கொண்ட மோட்டார்சைக்கிள் என்ற பிம்பமும், எமது எதிர்பார்ப்பை அதிகரித்தது.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முதலில் டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் குறித்த பார்த்துவிடலாம். ஆட்டோமேட்டிக் கார் போன்று, இந்த மோட்டார்சைக்கிள் ஆட்டோமேட்டிக் கியர் மாற்றம் நுட்பத்தில் வந்துள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளில் க்ளட்ச் மற்றும் கியர் லிவர் போன்ற விஷயங்கள் கிடையாது. வேகத்தை கணித்து கியர் மாற்றம் மற்றும் க்ளட்ச் கட்டுப்பாடுகளை கம்ப்யூட்டர் துணையுடன் தானியங்கி முறையில் நடைபெறும். ஆக்சிலரேட்டர் மற்றும் பிரேக் மட்டுமே ஓட்டுபவர் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஒருவேளை, ஓட்டுபவர் விரும்பினால் கார்களில் பேடில் ஷிஃப்ட் இருப்பது போன்றே, இந்த மோட்டார்சைக்கிளிலும் ஹேண்டில்பாரில் பேடில் ஷிஃப்ட் போன்ற பட்டன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒருவேளை, நீங்கள் கியர் மாற்றம் செய்வதற்கு தாமதமானால், தானியங்கி முறையில் சரியான கியருக்கு மாறிவிடும்.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நுட்பத்தில் டி மற்றும் எஸ் என்ற இரண்டு விதத்தில் பைக் இயக்கத்தை வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும், சொகுசு மற்றும் நீண்ட தூர இயக்கத்திற்கு டி மோடு பயன்படும். எஸ் மோடில் வைக்கும்போது எஞ்சின் செயல்திறன் அலாதி இருக்கிறது. மேலும், இதனை எஸ்1, எஸ்2 மற்றும் எஸ்3 ஆகிய மூன்று நிலைகளில் வைத்துக் கொள்ளலாம்.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கிளட்ச், கியர் இல்லாமல் ஓட்டுவதே புதிய அனுபவமாக இருந்தது. மேலும், ஹேண்டில்பாரில் நிறைய பட்டன்கள் இருந்ததும் சற்று குழப்பத்தை தந்தது. அதன்பின்னர், ஹோண்டா நிறுவனத்தின் பயிற்றுனர் கொடுத்த சில ஆலோசனைகள் மூலமாக இந்த குழப்பங்கள் தீர்ந்தது. மேலும், இந்த இயக்கத்தை பார்ப்பதற்கு கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கு இன்னமும் எளிதாக புரியும்.

இந்த மோட்டார்சைக்கிளின் குறுகலமான அமைப்புடைய பெட்ரோல் டேங்க், இலகு தன்மை, உயரமான இருக்கை அமைப்பு ஆகியவை மிகவும் கவர்ந்தது. மோசமான சாலைகளை கடக்கும்போது அமர்ந்து ஓட்டினாலும், எழுந்து ஓட்டினாலும் மிகச் சிறப்பான நிலைத்தன்மையையும், கையாளுமையையும் உணர முடிந்தது.

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 999.11சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, இதன் டார்க் வெளிப்படுத்தும் திறன் உற்சாகத்தை தரும் விஷயம்.

இந்த மோட்டார்சைக்கிளில் க்ளட்ச் இல்லை என்பதால், செங்குத்தான மற்றும் இறக்கமான நிலப்பரப்புகளை கடக்கும்போது எஞ்சின் ஸ்தம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த மோட்டார்சைக்கிளின் டிசிடி டிரான்ஸ்மிஷன் சாலைநிலையை உணர்ந்து கொண்டு முன்கூட்டியே கியர் மாற்றத்தை நிகழ்த்துவதால் அச்சமின்றி செலுத்த முடிகிறது.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம் முலமாக எஞ்சின் டார்க் வெளிப்படுத்தும் திறனை ஓட்டுபவர் எளிதாக கட்டுப்படுத்த முடியும். மூன்று நிலைகளில் டார்க் சிஸ்டத்தை வைத்து கட்டுப்படுத்த முடியும். இதற்காக இடது கைப்பிடியில் பட்டன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சாதாரணமாக லெவல் 3 என்ற நிலையில் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம் இருக்கும். சாலை நிலைகளை பொறுத்து ஓட்டுபவர் மாற்றிக் கொள்ளலாம். மேலும், சக்கரங்கள் சறுக்குவதை இசியூ கம்ப்யூட்டர் கணக்கிட்டு, அதற்கு தக்கவாறு டார்க் திறனை செலுத்தும்.

சக்கரங்கள் சறுக்கி செல்வதை உணர்ந்தால், எஞ்சினுக்கு எரிபொருள் செல்வது குறைக்கப்பட்டு எஞ்சினிலிருந்து வெளிப்படும் டார்க் திறனும் குறைக்கப்பட்டுவிடும். இந்த மோட்டார்சைக்கிளின் கையாளுமையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதே நேரத்தில், ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் கட் அடிப்பது போல செல்ல முடியாது.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் பின்புறத்தில் 150/70 R18 M/C 70H டயரும், பின்புறத்தில் 90/90-21 M/C 54H அளவுடைய டயரும் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் 18 அங்குல சக்கரமும், முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மோட்டார்சைக்கிளுடன் கொடுக்கப்படும் டயர்கள் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு பெரிதும் உகந்ததாக தெரியவில்லை. எனவே, முழுமையான ஆஃப்ரோடு சாகசங்களுக்கு டயர்களை நம்பி இறங்குவது உசிதமானதாக இருக்காது.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் ஷோவா 54மிமீ கேட்ரிட்ஜ் வகை அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் முன்புறத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஃபோர்க்குகள் 228மிமீ மேலும், கீழும் நகரும் சிறப்பு கொண்டது. இந்த சஸ்பென்ஷன் அமைப்பு அட்ஜெஸ்ட் வசதியுடன் வந்திருப்பதும் குறிப்பிடப்பட்டது.

பின்புறத்தில் 46மிமீ சிலிண்டர் கொண்ட ஷோவா சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சஸ்பென்ஷன் 220மிமீ வரை மேலும், கீழும் நகரும் சிறப்பு கொண்டது. இது சாஃப்ட் ரக சஸ்பென்ஷன் அமைப்புடையதாக இருப்பதுடன், ஆஃப்ரோடு, ஆன்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் 310மிமீ விட்டமுடைய இரண்டு பெட்டல் டிஸ்க் பிரேக்குகளம், பின்புறத்தில் 256மிமீ விட்டமுடைய ஒற்றை பெட்டல் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் சிறந்த பாதுகாப்பை வழங்கும். பிரேக்குகள் சிறப்பாக இருக்கின்றன. பின்புற சக்கரத்தில் மட்டும் ஏபிஎஸ் பிரேக்கை அணைத்து வைக்கலாம்.

ஒட்டுமொதத்தில் ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் சிறந்த செயல்திறன், சஸ்பென்ஷன், சொகுசு வசதிகளை பெற்றிருக்கும் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளாக கூறலாம். ஓட்டுபவருக்கும் சிறந்த ரைடிங் பொசிஷனை அளிக்கிறது.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் முதல் 1,000சிசி ஹோண்டா மோட்டார்சைக்கிள் ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் என்பது குறிப்பிடத்தக்கது. சிகேடி எனப்படும் முக்கிய உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, மானேசரில் உள்ள ஹோண்டா இருசக்கர வாகன ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுதால், இதன் ரகத்தில் போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் கிடைக்கிறது. ஆம். இந்த மோட்டார்சைக்கிள் ரூ.15 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது இது மிக மிக குறைவு.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நாடு முழுவதும் உள்ள 22 'ஹோண்டா விங் வேர்ல்டு அவுட்லெட்ஸ்' என்ற பிரிமியம் ஷோரூம்களில் மட்டுமே இந்த ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கிடைக்கும். சாதாரண ஹோண்டா டூ வீலர் ஷோரூம்களில் இது விற்பனைக்கு கிடைக்காது.

எடிட்டர் கருத்து

எடிட்டர் கருத்து

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிளை ஓட்டிய அனுபவத்தில் நீண்ட தூர பயணங்களுக்கான சிறந்த டூரிங் ரக மோட்டார்சைக்கிளாகவும் இருக்கிறது. இதனை இயக்குவதும், தொழில்நுட்ப வசதிகளும் மிகவும் சிறப்பாக இருப்பதும், ஆஃப்ரோடு மற்றும் டூரிங் என இரண்டு வகையிலும் பயன்படுத்தும் அம்சங்கள் இருப்பது இதன் ஆகச்சிறந்த விஷயமாக கூறலாம்.

அதேநேரத்தில், க்ளட்ச், கியர் லிவர் கொண்ட மோட்டார்சைக்கிளை விரும்பும் மோட்டார்சைக்கிள் பிரியர்களை கவர்வதற்கு ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிளுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படலாம்.

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம்

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் உருவாக்கத்திற்கான அடிப்படையான ஹோண்டா என்எக்ஸ்ஆர்750 மோட்டார்சைக்கிளில் 59 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருந்தது. இப்போது விற்பனையில் இருக்கும் பல கார் மாடல்களைவிட இது மிக அதிகம். இவ்வளவு பெரிய பெட்ரோல் டேங்க்கை இந்த மோட்டார்சைக்கிளில் எவ்வாறு பொருத்தினர் என்பது ஆச்சரியமான தகவல்தான்.

Most Read Articles
English summary
First Ride: Honda Africa Twin DCT — A Daring Adventure Or Nothing?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X