ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் Vs சுஸுகி ஜிக்ஸெர்: எது பெஸ்ட்?

Written By:

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் 150சிசி ரக பைக் மார்க்கெட்டில் சுஸுகி ஜிக்ஸெர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாடலாக வலம் வருகிறது. சிறந்த தோற்றம், சிறப்பம்சங்கள், விலை என அனைத்திலும் சுஸுகி ஜிக்ஸெர் முன்னிலை பெற்றிருப்பதுடன், யமஹா எஃப்இசட் பைக்கின் விற்பனையை கூட சுஸுகி ஜிக்ஸெர் விழுங்கியது. மேலும், இந்த பைக் மூலமாக இந்திய மார்க்கெட்டில் சுஸுகி டூ வீலர் நிறுவனத்துக்கு புதிய நம்பிக்கையையும், அடையாளத்தையும் வழங்கியிருக்கிறது.

எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் சுஸுகி ஜிக்ஸெருக்கு நேரடி நெருக்கடியை தந்துள்ளது. ஹோண்டா தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் அதிக நம்பகத்தன்மையும், வரவேற்பும் இருக்கும் நிலையில், சுஸுகி ஜிக்ஸெருக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவே கருதலாம். நேக்கட் ஸ்ட்ரீட் பைக் ரகத்தில் மோதும், இந்த இரு பைக்குகளின் சிறப்பம்சங்களின் அடிப்படையில் எது பெஸ்ட் என்பதை ஒப்பிட்டு பார்க்கலாம்.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

  • ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர்: ரூ.88,000
  • சுஸுகி ஜிக்ஸெர்: ரூ.85,000

[குறிப்பு: பேஸ் மாடல்களின் டெல்லி ஆன்ரோடு விலை]

டிசைன்: ஹோண்டா ஹார்னெட்

டிசைன்: ஹோண்டா ஹார்னெட்

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சிஎக்ஸ்-01 கான்செப்ட் பைக் மாடலின் அடிப்படையாகக் கொண்டே, ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், வால்பகுதி என அனைத்தும் மிரட்டலான தோற்றத்தை தருகிறது. முன்பக்க இன்டிகேட்டர்கள் மிக உயரமான இடத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக்கில் X வடிவ டெயில் லைட் முக்கிய சிறப்பம்சமாக கூறலாம்.

டிசைன்: சுஸுகி ஜிக்ஸெர்

டிசைன்: சுஸுகி ஜிக்ஸெர்

சுஸுகி ஜிக்ஸெரின் டிசைன் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், சுஸுகி ஜிக்ஸெரின் ஒட்டுமொத்த டிசைன் தாத்பரியங்களை ஹோண்டா ஹார்னெட்டில் பயன்படுத்தியிருப்பதும் காண முடிகிறது. ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், சைலென்சர் உள்ளிட்டவை ஒன்றுபோல் தோன்றுகின்றன. ஆனால், சிறிய வித்தியாசங்களுடன் ஹோண்டா ஹார்னெட் மாற்றம் கண்டிருக்கிறது. இரண்டு பைக்குகளின் டிசைனையும் குறை சொல்ல முடியாது. பிற அம்சங்களை வைத்தே முடிவுக்கு வர இயலும்.

 எஞ்சின்: ஹோண்டா ஹார்னெட்

எஞ்சின்: ஹோண்டா ஹார்னெட்

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 162.71சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 15.6 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்: சுஸுகி ஜிக்ஸெர்

எஞ்சின்: சுஸுகி ஜிக்ஸெர்

சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் 15 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் வழங்கும் 154.9சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இதுவும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. நம்பகத்தன்மை, செயல்திறன், அதிர்வுகள் குறைவான ஹோண்டா எஞ்சின் இந்த விஷயத்தில் முன்னிலை பெறுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் லிட்டருக்கு 58.9 கிமீ மைலேஜ் தரும் நிலையில், சுஸுகி ஜிக்ஸெர் லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் ஹோண்டா ஹார்னெட் பைக் சுஸுகி ஜிக்ஸெரைவிட சிறப்பான மைலேஜை தரும் என்பதில் ஐயமில்லை. இரண்டு பைக்குகளிலும் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

 ஹோண்டா ஹார்னெட் சிறப்பம்சங்கள்

ஹோண்டா ஹார்னெட் சிறப்பம்சங்கள்

பின்புறத்திற்கான ஆப்ஷனல் டிஸ்க் பிரேக் சிஸ்டத்துடன், சிபிஎஸ் எனப்படும் முன்புற, பின்புற சக்கரங்களுக்கான ஒருங்கிணைந்த முறையில் செயல்படும் பிரேக் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் மீட்டர் கன்சோல், பெட்டல் டிஸ்க் பிரேக், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, அலாய் வீல்கள், X வடிவ டெயில் லைட்டுகளும் முக்கிய சிறப்பம்சங்களாக கூறலாம்.

சுஸுகி ஜிக்ஸெர் சிறப்பம்சங்கள்

சுஸுகி ஜிக்ஸெர் சிறப்பம்சங்கள்

முழுமையான டிஜிட்டல் மீட்டர் கன்சோல் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. அலாய் வீல்கள் இருப்பதோடு, இரண்டு பைக்குளிலும் ஒரே அளவுடைய ட்யூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேநேரத்தில், சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஹோண்டா ஹார்னெட் பைக்கை சற்று முன்னிலைப்படுத்துகிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் மணிக்கு 110 கிமீ வேகம் வரை செல்லும் நிலையில், சுஸுகி ஜிக்ஸெர் மணிக்கு 135 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இந்த விஷயத்தில் சுஸுகி ஜிக்ஸெர் முன்னிலை பெறுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் ஆகிய இரு பைக்குகளுமே டிசைன், வசதிகளில் குறை சொல்ல முடியாது என்பதுடன், பல ஒற்றுமைகளை கொண்டிருக்கின்றன. ஆனால், நம்பகமான எஞ்சின், ரீசேல் மதிப்பு, மைலேஜ் போன்ற இதர விஷயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஹோண்டா சிபி ஹார்னெட் பைக் முன்னிலை பெறுகிறது. விலை சற்று அதிகமாக இருந்தாலும் நம்பகத்தன்மையில் ஹோண்டா தயாரிப்பு என்ற பிராண்டு முத்திரையுடன் ஹார்னெட் சிறந்த தேர்வாக அமையும்.

 
English summary
The Suzuki Gixxer took over the market as one of the best looking motorcycles available in the 150cc segment when launched. The Gixxer also managed to upset the Yamaha FZ's sales after being launched and has given Suzuki some confidence in the Indian motorcycle market. All seems well until Honda came up with the CB Hornet 160R a few days ago. The Hornet looks sharp, and very sporty, which might send shivers down Suzuki's spine. So, how do these motorcycles compare in terms of pricing, design, engine specifications, and features? Let's take a look.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark