பிரீமியம் வசதிகள் இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்... ஹோண்டா சிபி500எக்ஸ் ரிவியூ!

ஹோண்டா சிபி500எக்ஸ் (Honda CB500X) மோட்டார்சைக்கிள் முதல் முறையாக கடந்த 2013ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் டிசைன், நடைமுறை பயன்பாடு உள்ளிட்ட அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்தன. எனவே விற்பனைக்கு வந்த உடனேயே ஹோண்டா சிபி500எக்ஸ் பிரபலமாக தொடங்கியது. இதன்பின் கடந்த 2016ம் ஆண்டு சிபி500எக்ஸ் மோட்டார்சைக்கிளை ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தியது. அத்துடன் கடந்த 2019ம் ஆண்டும் இந்த மோட்டார்சைக்கிள் முக்கியமான அப்டேட்களை பெற்றது.

இந்திய சந்தையிலும் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும் என நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, இறுதியாக இந்த மோட்டார்சைக்கிளை ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள ஹோண்டா சிபி500எக்ஸ் மோட்டார்சைக்கிளை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.

பிரீமியம் வசதிகள் இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்... ஹோண்டா சிபி500எக்ஸ் ரிவியூ!

டிசைன்

ஹோண்டா சிபி500எக்ஸ் மோட்டார்சைக்கிளின் டிசைனை பொறுத்தவரை, ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிளின் சாயல் தெரிகிறது. இந்த பைக்கின் முன் பகுதியில் எல்இடி பகல் நேர விளக்குகளுடன், எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்பிற்கு மேலே உயரமான விண்டுஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது. இதனை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

பிரீமியம் வசதிகள் இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்... ஹோண்டா சிபி500எக்ஸ் ரிவியூ!

அத்துடன் கவர்ச்சிகரமான எரிபொருள் டேங்க் மற்றும் ரேடியேட்டர் கவசங்களுடன் இந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது. அதே சமயம் இந்த பைக்கின் பின் பகுதி எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் டிசைனில் இன்ஜினும் கூட முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் இந்த பைக்கின் சைலென்சரும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரீமியம் வசதிகள் இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்... ஹோண்டா சிபி500எக்ஸ் ரிவியூ!

ஹோண்டா நிறுவனத்தின் தற்போதைய டிசைன் மொழி அடிப்படையில், சிபி500எக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் மற்றும் கிராண்ட் பிரிக்ஸ் ரெட் என மொத்தம் 2 வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கும். சில்வர் பாகங்களும், சைலென்சரில் காணப்படும் க்ரோம் வேலைப்பாடுகளும் இந்த பைக்கை தனித்து தெரிய செய்கின்றன. இந்த பைக்கின் முன் மற்றும் பின் பகுதியில் வழங்கப்பட்டுள்ள பெட்டல் டிஸ்க் பிரேக்குகளும் சிறப்பாக உள்ளன.

பிரீமியம் வசதிகள் இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்... ஹோண்டா சிபி500எக்ஸ் ரிவியூ!

இன்ஜின் மற்றும் செயல்திறன்

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில், லிக்யூட் கூல்டு, 471 சிசி பேரலல்-ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 46.93 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 43.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் கிளட்ச் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பவர்அவுட்புட் போதுமானதாக இல்லை என நீங்கள் நினைக்கலாம்.

பிரீமியம் வசதிகள் இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்... ஹோண்டா சிபி500எக்ஸ் ரிவியூ!

ஆனால் சாலையில் இதன் செயல்திறன் சிறப்பாக உள்ளது. 2,500 ஆர்பிஎம் என்ற நிலையில் டார்க் நன்றாக கிடைக்க தொடங்குகிறது. 6,500 ஆர்பிஎம்மில் நீங்கள் முழு டார்க் திறனையும் பெறலாம். 6வது கியரில் மணிக்கு 70 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை அடைய வெறும் 5 வினாடிகள் மட்டுமே ஆகிறது. அதே சமயம் அதே டாப் கியரில், மணிக்கு 70 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 7 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விட முடிகிறது. இந்த பைக்கின் அதிகபட்ச வேகத்தில் நாங்கள் பயணிக்கவில்லை. எனினும் மணிக்கு 170 கிலோ மீட்டர் என்ற வேகத்தை எளிதாக எட்டும் என நம்புகிறோம்.

பிரீமியம் வசதிகள் இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்... ஹோண்டா சிபி500எக்ஸ் ரிவியூ!

ரைடு மற்றும் ஹேண்ட்லிங்

அட்வென்ஜர் டூரர் பைக் என்றால், தொலைதூர பயணங்களின்போது மிகவும் சௌகரியமாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஹோண்டா சிபி500எக்ஸ் உங்களின் தேவையை சரியாக பூர்த்தி செய்கிறது. இந்த பைக்கின் இருக்கை மிகவும் மிருதுவாக உள்ளது. அத்துடன் சஸ்பென்ஸனும் சிறப்பாக இருக்கிறது.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்த பைக்கில் மூன்று இலக்க வேகத்தில் பயணிப்பது மிகவும் எளிமையானது. இந்த வேகத்தில் சஸ்பென்ஸன் அமைப்பும் சிறப்பாக செயலாற்றுகிறது. நெடுஞ்சாலைகளில் இந்த பைக் ஒரு நட்சத்திரத்தை போல் ஜொலிக்கிறது.

அதேபோல் கார்னர்களிலும் இந்த பைக் ரைடருக்கு நல்ல நம்பிக்கையை வழங்குகிறது. திருப்பங்கள் நிறைந்த சாலைகளில், 4,500 ஆர்பிஎம்மிற்கு மேலாக பயணிக்கும்போது, ஹோண்டா சிபி500எக்ஸ் நிச்சயமாக உங்கள் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கும்.

பிரீமியம் வசதிகள் இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்... ஹோண்டா சிபி500எக்ஸ் ரிவியூ!

ஹோண்டா சிபி500எக்ஸ் என்றாலே, பலரும் கேட்கும் முதல் கேள்வி இந்த பைக்கின் ஆஃப் ரோடு திறன்கள் எப்படி உள்ளன? என்பதுதான். இது முழுமையான ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிள் கிடையாது. மாறாக இது சாலை சார்ந்த அட்வென்ஜர் டூரர்தான். எனினும் குண்டும், குழியுமான உடைந்த சாலைகளை இந்த பைக் எளிதாக எதிர்கொள்கிறது. இத்தகைய சாலைகளிலும், ரைடர் மற்றும் பில்லியன் ரைடருக்கு சௌகரியமான பயணம் கிடைக்கிறது.

இந்த பைக்கில் டன்லப் ட்ரெயில்மேக்ஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ஆஃப் ரோடு சார்ந்ததாக இருந்தாலும், சாதாரண சாலைகளிலும் நல்ல க்ரிப் உடன் சிறப்பாக செயல்படுகிறது. அதே சமயம் மென்மையான மணலிலும் நாங்கள் இந்த பைக் ஓட்டி பார்த்தோம். அப்போது வீல் அதிகமாக சுழன்றது.

பிரீமியம் வசதிகள் இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்... ஹோண்டா சிபி500எக்ஸ் ரிவியூ!

இந்த பைக்கின் முன் பகுதியில் வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பகுதியில் 9 விதங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது. அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்புற சஸ்பென்ஸன் சிறப்பான ஒன்றாக உள்ளது. அதே சமயம் இந்த பைக்கின் முன் பகுதியில் 19 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் வழங்கப்பட்டுள்ளன.

அதே சமயம் இந்த பைக்கின் முன் பகுதியில் 310 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. பிரேக்குகளின் செயல்பாடும் சிறப்பாக உள்ளது. அத்துடன் இந்த பைக்கின் ஃபுட்பெக்குகளும், ரைடருக்கு சௌகரியமான பயணத்தை வழங்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் இருக்கை உயரம் 830 மிமீ. சுமார் 5 அடி 8 இன்ச் உயரம் கொண்ட என்னால், இரண்டு கால்களையும் தரையில் சௌகரியமாக வைக்க முடிந்தது. அதே சமயம் இந்த பைக்கின் எடை வெறும் 199 கிலோ மட்டுமே. போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்த பைக்கின் எடை மிகவும் குறைவு.

பிரீமியம் வசதிகள் இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்... ஹோண்டா சிபி500எக்ஸ் ரிவியூ!

முக்கியமான வசதிகள்

ட்யூயல் சேனல் ஏபிஎஸ், முழு எல்இடி லைட்டிங், அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த பைக் வருகிறது. இந்த பைக்கில் அனலாக் டேக்கோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டிரிப் மீட்டர்கள், கடிகாரம் மற்றும் கியர் பொஷிஷன் இன்டிகேட்டர் உள்பட தேவையான அனைத்து தகவல்களையும் எல்சிடி ஸ்க்ரீன் வழங்குகிறது.

மேலும் எமர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் உடன் ஹசார்டு லைட் ஸ்விட்ச்சையும் ஹோண்டா சிபி500எக்ஸ் பெற்றுள்ளது. நீங்கள் திடீரென கடுமையாக பிரேக் பிடித்தால், மோட்டார்சைக்கிள் அதனை எமர்ஜென்ஸி பிரேக்கிங் என உணர்ந்து கொள்ளும். அத்துடன் ஹசார்டு லைட்களையும் ஆன் செய்து விடும். இது உண்மையிலேயே மிக சிறப்பான வசதியாகும்.

பிரீமியம் வசதிகள் இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்... ஹோண்டா சிபி500எக்ஸ் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கை ஓட்டிய நாள் மிக சிறப்பானதாக அமைந்தது. இந்த பைக் தொலைதூர பயணங்களுக்கு மிகவும் சௌகரியமானதாக உள்ளது. ஆனால் இந்த பைக்கிற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலைக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய சில பிரீமியம் வசதிகள் இதில் இல்லை.

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 6.87 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெனெல்லி டிஆர்கே 502 மற்றும் சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 உள்ளிட்ட பைக்குகளுடன் ஹோண்டா சிபி500எக்ஸ் போட்டியிடும். இந்த விலைக்கு இது மதிப்பு வாய்ந்த பைக்கா? என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். இதற்கு 'ஆம்' என்பதுதான் பதில். பிரீமியம் வசதிகள் இல்லாவிட்டாலும், இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புதான். இதற்கு ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கின் சிறப்பான இன்ஜின் மற்றும் ரைடிங் டைனமிக்ஸ் ஆகிய அம்சங்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

Most Read Articles

English summary
Honda CB500X First Ride Review: Design, Features, Engine, Performance, Handling And More. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X