புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

நம் நாட்டு ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும் ஹோண்டா நிறுவனம், தனது சந்தையை வலுப்படுத்தும் க்ரேஸியா என்ற புதிய 125சிசி ஸ்கூட்டரை களமிறக்கியது. இந்த புதிய ஸ்கூட்டரை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது கிடைத்த சாதக, பாதக அம்சங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அனைத்து தரப்பினருக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பொருத்தமானதாக இருக்கும். ஒவ்வொருவரின் தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்கிறது.

அதேநேரத்தில், அந்நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டர் இளைஞர்களை கவரும் மாடலாக இருந்தது. இந்த நிலையில், அதே துள்ளலான ஒரு ஸ்கூட்டர் மாடல் 125 சிசி செக்மென்ட்டிலும் ஹோண்டாவிற்கு தேவைப்பட்டது.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதனை நிரப்பும் வகையில், ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் துள்ளலான டிசைன் தாத்பரியங்களையும், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் நம்பகத்தன்மை மற்றும் கூடுதல் சக்திவாய்ந்த 125சிசி எஞ்சினுடன் ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Andhra Pradesh State Transport Bus Crashes Into Bike Showroom - DriveSpark
 டிசைன்

டிசைன்

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரின் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. பெரிய அளவிலான எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகளுடன் முகப்பு வசீகரிக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுடன் வந்த முதல் ஸ்கூட்டர் மாடல் என்ற பெருமையும் க்ரேஸியாவுக்கு உண்டு.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்பீடோமீட்டர் மமற்றும் டாக்கோமீட்டர் ஆகியவை ஓட்டுனர் எளிதாக பார்க்கும் வடிவிலும், அளவிலும் உள்ளது.

டிஜிட்டர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருக்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் மற்றொரு எல்சிடி திரையில் கடிகாரம், எரிபொருள் மானி, ஓடோமீட்டர் மற்றும் ட்ரிப் மீட்டர் ஆகிய தகவல்களை பெற முடியும்.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் 4 இன் 1 வசதியுடன் இக்னிஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வண்டியை ஸ்டார்ட் செய்வது, இருக்கையை திறப்பதற்கும் பயன்படுகிறது. இருக்கைக்கு கீழே 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்தில் இரண்டு பிடிகளுடன் கூடிய கிராப் ரெயில்கள் கொாடுக்கப்பட்டு இருக்கின்றன. மூன்று பாகங்களாக கொடுக்கப்பட்டு இருக்கும் டெயில் லைட்டும் பின்புற வாகன ஓட்டிகளுக்கு தெளிவான எச்சரிக்கை சமிக்ஞையை வழங்கும் என்பதுடன், கவர்ச்சியாகவும் இருக்கிரது. அதேநேரத்தில், இண்டிகேட்டர்களில் எல்இடி விளக்குகள் இல்லாமல் ஹாலஜன் பல்புகள் இருப்பது ஏமாற்றம்.

எஞ்சின் மற்றும் செயல்திறன்

எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் 124.9சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே எஞ்சின்தான் இந்த புதிய க்ரேஸியா ஸ்கூட்டரிலும் இடம்பெற்று இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8பிஎச்பி பவரையும், 10.54என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வழக்கம்போல் ஹோண்டா ஆக்டிவா எஞ்சினுக்குரிய அதே பிக்கப் மற்றும் செயல்திறனை ஆரம்ப நிலையில் இருந்து நடுத்தர நிலை வரை உணர முடிகிறது. எஞ்சின் ஆற்றல் வெளிப்படுத்தும் திறன் உற்சாகத்தை தருகிறது.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 47 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் 5.3 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. முழுமையாக நிரப்பும்போது 250 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

இந்த ஸ்கூட்டரின் இருக்கை மற்றும் ஹேண்டில்பார் அமைப்பானது அமர்ந்து ஓட்டுவதற்கு லாவகமாகவும், சொகுசாகவும் இருக்கிறது. நீண்ட தூரம் பயணிக்கும்போதும் முதுகுவலி அதிகம் வராத வகையில் இருக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில் 6 அடிக்கும் மேல் உயரம் கொண்டவர்கள் வளைவுகளில் திருப்பும்போது முழங்கால் இடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சஸ்பென்ஷன் அமைப்பு கடினமாக இருப்பதால், பள்ளம் மேடுகளில் குதிக்கிறது.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் முன்புறத்தில் 12 அங்குலம் கொண்ட 5 ஸ்போக் கருப்பு வண்ண அலாய் வீலும் பின்புறத்தில் 20 அங்குல அலாய் வீலும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சியட் அல்லது எம்ஆர்எஃப் டயர்களுடன் வருகிறது.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

க்ரேஸியா ஸ்கூட்டரின் முன்சக்கரத்தில் 190மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஹோண்டா நிறுவனத்தின் காம்பி பிரேக்கிங் தொழில்நுட்பம் இருப்பதால், சிறப்பான பிரேக் செயல்திறனை உணர முடிகிறது.

 டிரைவ்ஸ்பார்க் கருத்து

டிரைவ்ஸ்பார்க் கருத்து

கவர்ச்சிகரமான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் ஹோண்டா நிறுவனத்தின் நம்பகத்தன்மை ஆகியவை இந்த ஸ்கூட்டருக்கு வலு சேர்க்கும் அம்ங்கள். இந்த புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் ரூ.62,269 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 125 சிசி மார்க்கெட்டில் சற்றே பிரிமியமான ஸ்கூட்டர் மாடலாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் போல அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மாடலாக கூற முடியாது. இது முழுக்க முழுக்க இளைய சமுதாயத்தினரை குறிவைத்து களமிறக்கப்பட்டு உள்ளது. நிச்சயம் ஹோண்டாவின் எதிர்பார்ப்பையும், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளையும் க்ரேஸியா கச்சிதமாக பூர்த்தி செய்யும்.

English summary
We got to ride the Grazia for a couple of days in the city and here is our take on Honda all new modern scooter.
Story first published: Tuesday, January 23, 2018, 18:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark