இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

முதல் தலைமுறை ஹார்னெட் 160 பைக்கை ஹோண்டா நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், ஹோண்டா ஹார்னெட் 160 அதிக எண்ணிக்கையில் விற்பனையானது. முதல் தலைமுறை ஹோண்டா ஹார்னெட், டிசைனில் தலைசிறந்து விளங்கிய அதே நேரத்தில், சக்தி வாய்ந்த பைக்காகவும் இருந்தது. இதன் காரணமாகதான் வாடிக்கையாளர்கள் அந்த பைக்கை அதிகம் விரும்பினர். குறிப்பாக இளைய தலைமுறையினர்.

இந்த சூழலில், இரண்டாவது தலைமுறை ஹார்னெட் 2.0 பைக்கை ஹோண்டா நிறுவனம் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 1.27 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில், புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம், இந்த பைக்கின் விலை உயர்ந்துள்ளது. ஆனால் அதற்கு ஏற்ற வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் தற்போது ஸ்போர்ட்டியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. அத்துடன் பெரிய இன்ஜினை பெற்றுள்ளது.

புத்தம் புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் எங்கள் கைகளுக்கு கிடைத்தது. நகர சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில், அதனை ஒரு சில நாட்கள் நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த பைக் எங்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பைக்கை பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோம்? என்பதை, இந்த செய்தியின் மூலம் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

டிசைன் & ஸ்டைலிங்

முதல் பார்வையிலேயே ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் நம்மை கவர்ந்து விடுகிறது. நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்த பைக் மேட் ப்ளூ வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. இந்த பெயிண்ட் வேலைப்பாடுகளை வசீகரமாக உள்ளன. இந்த பைக்கின் டிசைன் & ஸ்டைலிங் பற்றிய அம்சங்களை முதலில் முன் பகுதியில் இருந்து தொடங்குவோம். தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள அப்சைடு-டவுன் ஃப்ரண்ட் ஃபோர்க்குகள்தான் இங்கே ஒருவரின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். ஷோவா நிறுவனத்திடம் இருந்து இது பெறப்பட்டுள்ளது.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

அத்துடன் முழு எல்இடி ஹெட்லைட் யூனிட்டையும் இந்த பைக் பெற்றுள்ளது. மேலும் எல்இடி டிஆர்எல்களும் வழங்கப்பட்டுள்ளன. ஹெட்லைட் பிரகாசமாக இருப்பதால், இரவு நேரங்களில் வெளிச்சத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது. ஹெட்லைட்டிற்கு மேலே நெகட்டிவ் எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுளளது. இந்த க்ளஸ்ட்டர் 5 நிலை பிரகாசத்தை கொண்டுள்ளது. ஆனால் சூரியன் மேலே இருக்கும் சமயங்களில் கண் கூசுவதால், ரீடிங்குகளை பார்ப்பது கடினமாக உள்ளது.

ஸ்பீடோமீட்டர், டேக்கோமீட்டர், கியர் இன்டிகேட்டர், பேட்டரி வோல்டேஜ், ட்ரிப் மற்றும் நேரம் ஆகியவற்றை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பெற்றுள்ளது. அத்துடன் இன்ஜினை செக் செய்வது, ஏபிஎஸ், ஹை-பீம் மற்றும் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் ஆகியவற்றுக்கான லைட்களும் வழங்கப்பட்டுள்ளன. டர்ன் சிக்னல்களை பொறுத்தவரை, ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக், எல்இடி இன்டிகேட்டர்களை பெற்றுள்ளது.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

அதே சமயத்தில் ஸ்விட்ச்கியரின் தரம் அவ்வளவு மோசமாக இல்லை. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பட்டனும் சரியான இடத்தில் வழங்கப்பட்டிருப்பது எங்களை வெகுவாக கவர்ந்தது. ரைடர்கள் எந்த பிரச்னையும் இன்றி அவற்றை பயன்படுத்தலாம். அத்துடன் ஹேண்டில்பாரின் வலது பக்கத்தில் ஹசார்டு லைட் இன்டிகேட்டர் ஸ்விட்சும் வழங்கப்பட்டுள்ளது.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை, எக்ஸ்டெண்டர்கள் உடன் ஸ்போர்ட்டியான எரிபொருள் டேங்க்கை இந்த பைக் பெற்றுள்ளது. இந்த எரிபொருள் டேங்க் பார்ப்பதற்கு பெரிதாக தெரியலாம். ஆனால் உண்மையில் இதன் கொள்ளவு 12 லிட்டர்கள் மட்டும்தான். இது ஓரளவிற்கு போதுமானதுதான். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பெரிதாக வழங்கப்பட்டிருக்கலாம். எரிபொருள் டேங்க்கில் ஹார்னெட் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் எக்ஸடெண்டரில் ஹோண்டா பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2.0 ஸ்டிக்கர் வழங்கப்பட்டுள்ள இடத்தில் சென்டர் பேனலின் ஃபிட்டிங் தரம் அவ்வளவு சிறப்பாக இல்லை.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

அதே சமயம் ஸ்பிளிட் இருக்கைகளை, இந்த பைக் பெற்றுள்ளது. ரைடரின் இருக்கை சற்றே தாழ்வாகவும், சௌகரியமாகவும் உள்ளது. பில்லியன் இருக்கை அகலமாக உள்ளது. தொலை தூர பயணங்களை மேற்கொள்வது ஒரு பிரச்னையாக இருக்காது. அதே நேரத்தில் க்ராப் ரெயில்கள், பைக்கிற்கு நல்ல தோற்றத்தை வழங்குகின்றன. பில்லியன் ரைடர் பிடித்து கொள்வதற்கும் வசதியாக உள்ளது.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இந்த பைக்கின் பிரேக் லைட்டும் எல்இடிதான். X வடிவ டிசைனை அது பெற்றுள்ளது. இரவு நேரங்களில் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த பைக் பார்ப்பதற்கு அட்டகாசமாக உள்ளது. ஹார்னெட் பேட்ஜை தவிர முந்தைய தலைமுறை மாடலில் இருந்து வேறு எதுவும் இந்த புதிய பைக்கிற்கு கொண்டு வரப்படவில்லை. அனைத்தும் புதிதுதான்.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இன்ஜின் & ஹேண்ட்லிங்

ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில், புத்தம் புதிய 184.5 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 17 பிஎச்பி பவரையும், 16.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கியர்பாக்ஸ் மிகவும் லேசாக உள்ளது. அத்துடன் ஹோண்டா நிறுவனம் கியரிங்கை மிகவும் குறுகியதாக வைத்துள்ளது. இதன் மூலம் நின்று கொண்டிருக்கும் பைக்கை இரண்டாவது கியரில் கூட நகர்த்த முடிகிறது. அப்படி நகர்த்தும்போது பைக் ஆஃப் ஆகாது.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

கியர்பாக்ஸை போலவே கிளட்ச்சும் இலகுவாக உள்ளது. நின்று நின்று செல்லும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூழல்களில், பைக் ஓட்டுபவரின் கைகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. கால்களை வைக்ககூடிய ஃபுட்பெக்குகள் சற்றே பின்னோக்கி அமைக்கப்பட்டிருப்பதாலும், ஹேண்டில்பார் சற்றே முன்னோக்கி இருப்பதாலும், ரைடிங் பொஷிஷன் அருமையாக உள்ளது. இந்த கலவை, உயரமான ரைடர்களுக்கு கூட சிறப்பான ரைடிங் பொஷிஷனை வழங்குகிறது. அத்துடன் தொலை தூர பயணங்களின்போது, முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இல்லை.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

அதே நேரத்தில், பருமனான டயர்களை இந்த பைக் பெற்றுள்ளது. முன் பகுதியில் 110 மிமீ செக்ஸன் டயரும், பின் பகுதியில் 140 மிமீ செக்ஸன் டயரும் வழங்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் யூஎஸ்டி ஃபோர்க்குகளை இந்த பைக் பெற்றுள்ளதால், முந்தைய தலைமுறை மாடல் உடன் ஒப்பிடுகையில், சஸ்பென்ஸன் அமைப்பு சற்று கடினமானதாக இருப்பது போல் தோன்றுகிறது. அதே சமயம் பின் பகுதியில் மோனோ-ஷாக் வழங்கப்பட்டுள்ளது.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

இந்த பைக்கின் ஓட்டுதல் தரம் சிறப்பாக உள்ளது. நகர பகுதிகளிலும் சௌகரியமான ஓட்டுதல் அனுபவத்தை பெறலாம். அத்துடன் மோசமான சாலைகளையும் இந்த பைக் சிறப்பாக கடக்கிறது. கார்னர்களில் இந்த பைக் உங்களை நிச்சயமாக ஆச்சரியப்படுத்தும். ஏனெனில் கார்னர்களை இந்த பைக் சிறப்பாக எதிர்கொள்கிறது. அத்துடன் ஹேண்ட்லிங்கும் நன்றாக உள்ளது.

அதே சமயம் கியரிங் ரேஷியோ குறுகியதாக இருப்பதால், இந்த பைக்கின் பிக்-அப்பும் நன்றாக இருக்கிறது. உயர் கியர்களில், குறைந்த வேகத்தில் சென்றாலும் கூட பைக் அழுத்தத்திற்கு ஆளாகாது. நெடுஞ்சாலைகளில் செல்லும்போது மணிக்கு 90 முதல் 95 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிப்பது உங்களுக்கு சௌகரியமாக இருக்கலாம்.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

குறைவான வேகத்தில் செல்லும்போது அதிர்வுகளை உணர முடியவில்லை. ஆனால் மூன்று-இலக்க வேகத்தை கடக்கும்போது அதிர்வுகள் ஏற்படுகிறது. அதே சமயம் மணிக்கு 120 கிலோ மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தை நீங்கள் எளிதாக எட்டலாம். ஆனால் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மட்டுமே வழங்கப்பட்டிருப்பது ஒரு குறையாக உள்ளது. எனினும் அது நன்றாக வேலை செய்கிறது.

இனி வாடிக்கையாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் மைலேஜ் பற்றிய விஷயங்களுக்கு வருவோம். நகர பகுதிகளில் இந்த பைக் எங்களுக்கு லிட்டருக்கு 34 முதல் 37 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கியது. அதே சமயம் நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 45 முதல் 49 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைத்தது. இதனை சிறப்பான மைலேஜ் என கூறலாம். அத்துடன் ஒரு முறை எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பினால், 480 முதல் 500 கிலோ மீட்டர்கள் வரை எளிதாக பயணிக்கலாம்.

இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஸ்விட்ச்கியரின் தரம், சைடு பேனல்களின் ஃபிட்டிங் ஆகியவை இன்னும் நன்றாக இருந்திருக்க வேண்டிய ஒரு சில அம்சங்கள். இந்த ஒரு சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால், புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் சிறப்பாக உள்ளது. இந்த பைக் ஸ்மூத் ஆக இருப்பதுடன், சௌகரியமான பயணத்தையும் வழங்குகிறது. மேலும் கையாள்வதற்கும் நன்றாக இருக்கிறது. எனவே இதனை சிறந்த பிரீமியம் கம்யூட்டர் பைக் என கூறலாம். எனவே இளம் தலைமுறையினரை இந்த பைக் நிச்சயமாக கவர்ந்து இழுக்கும். பஜாஜ் பல்சர் என்எஸ்200, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் யமஹா எம்டி-15 உள்ளிட்ட பைக்குகள் உடன், புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் போட்டியிடும்.

Most Read Articles
English summary
Honda Hornet 2.0 Review (First Ride): Engine, Performance, Handling, Price, All Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X