நவி வரவேற்பை பெற்றாலும், க்ரோம் பைக்கை களமிறக்காத ஹோண்டா... காரணம்?

By Gopi

மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது ஹோண்டா நவி. ஸ்கூட்டர் மாடலான இந்த வண்டியில், பல அம்சங்கள் வித்தியாசமானவை.

அறிமுகமாகி ஓரிரு மாதங்களே ஆனாலும் கூட, இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை பெரும்பாலானோரது வரவேற்பைப் பெற்ற மோட்டோ-ஸ்கூட்டர் என்ற வகை பைக் இது. புதுமையான வடிவமைப்புதான் நவியின் ஹைலைட்.

Honda Navi Vs Honda Grom

அதுசரி, இதுபோன்ற மாடலில் வேறு வண்டிகளே இல்லையா? என்றால், நிச்சயமாக இருக்கிறது. அதுவும் ஹோண்டா தயாரிப்புதான். க்ரோம் என்ற பெயரில் சர்வதேச மார்க்கெட்களில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த வண்டி, பக்கா பைக் மாடலைச் சேந்தது.

வடிவமைப்பில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல நவியும், க்ரோமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. ஆனால், இரண்டு மாடல்களிலும் எஞ்சின் முதல்கொண்டு பெரும்பாலான அம்சங்கள் மாறுபடுகின்றன.

அவற்றை முதலில் பார்க்கலாம்...

நவியைப் பொருத்தவரை சிறிய பெட்ரோல் டேங்க், இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கை வசதி, ஹோண்டா ஸ்டன்னர் மாடலைப் போன்ற பிற்பகுதி (டெய்ல்) வடிவமைப்பு ஆகியவை உள்ளன.

க்ரோமைப் பொருத்தவரை அது ஒரு மினி பைக். தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் கணிசமான மார்க்கெட்டை க்ரோம் கொண்டுள்ளது. எஞ்சினைப் பொருத்தவரை நவியில் அப்படியே, ஹோண்டா ஆக்டிவா என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, 109 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின். 7.8 பிஎச்பி (முறுக்கு விசை) மற்றும் 8.9 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஆக்டிவாப் போலவே நவியிலும் வாகனத்தின் பின்புறம் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டோமேடிக் கியருடன் கூடிய ஸ்கூட்டர் மாடல் நவி.

அதே க்ரோமை எடுத்துக் கொண்டால் 124.9 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின். 9.8 பிஎச்பி (முறுக்கு விசை) மற்றும் 10.9 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மொத்தம் 4 கியர்கள் உள்ளன. சிறிய வடிவிலான பைக் மாடலாக உள்ளது க்ரோம்.

அனைத்து வகையிலும் நவியைக் காட்டிலும் கூடுதலான சில அம்சங்களைக் கொண்டுள்ளது க்ரோம். பிறகு நவிக்கு கிடைத்த வரவேற்பு ஏன் க்ரோமுக்கு கிடைக்காது? அந்த மாடலை ஏன் இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை? என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் கடினமான சாலைகளில் ஸ்கூட்டர் மாடல் வாகனங்களை இயக்குவது சுலபம். அதனால்தான் இங்கு ஸ்கூட்டர் விற்பனை அதிகமாக உள்ளது.

இதைத்தவிர, நவி மாடல் விலை கைக்கு அடக்கமாக ரூ.39,500 (தில்லி எக்ஸ்-ஷோரூம் விலை) உள்ளது. ஆனால், க்ரோமை இந்திய சந்தைக்குக் கொண்டு வந்தால், அதன் விலை அதிகமாக இருக்கும். அதையெல்லாம் கருத்தில்கொண்டே ஹோண்டா நிறுவனம், தற்போது க்ரோம் மாடலை இந்தியாவுக்குள் விற்பனை செய்ய முன்வரவில்லை.

Most Read Articles
English summary
Honda Navi vs Grom: Why Didn't The Grom Come To India?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X