இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மீது பெரிய அளவிலான ஈர்ப்பு எப்போதுமே இருந்ததில்லை. எனவே, இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்ட்டி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவுக்கு வருகிறது என்றவுடன் பெரிய ஆவல் எதுவும் எழவில்லை. அந்த பிரம்மாண்டமான மோட்டார்சைக்கிள் அலுவலகத்துக்கு வந்தபோது கூட தொடர்ந்து என் மனதில் ஓட்டி பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் துளியும் இல்லை.

ஏன் இவ்வாறு நான் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக 2 ஸ்ட்ரோக் எஞ்சின் மீது எனக்கு இருக்கும் கண்மூடித்தனமான காதல்தான் இதற்கு காரணம். பால்ய காலம் முதல் கசிந்து உருகி நேசித்து, சுவாசமாகி போன 2 ஸ்ட்ரோக் எஞ்சின்களுடனான நீண்ட சகவாசம், அதற்கு அப்பாற்பட்ட விஷயத்தின் மீதான [4 ஸ்ட்ரோக் எஞ்சின்கள்] மகத்துவத்தை அறிந்து கொள்ளாமல் செய்து விட்டதோ? 

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய தலைமுறை மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்வதை தவிர்ப்பது எனக்கு இழப்பா அல்லது கண்மூடித்தனமான ஒதுக்கிய விஷயமா? க்ரூஸர்கள் மீதான எனது நிலைப்பாட்டை இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் மாற்றி எழுதுமா? தொடர்ந்து வாசியுங்கள்.

முதல் பார்வை

முதல் பார்வை

க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை பார்த்தால் யாக் எருதுபோல இருப்பதாக நண்பர்களிடம் கிண்டலாக கூறுவதுண்டு. பிரம்மாண்டமான டயர்கள், வலிமையான தோற்றம் இந்த மோட்டார்சைக்கிளை மிரட்டலாக காட்டியது. ஆனால், இந்த மோட்டார்சைக்கிளில் அமர்ந்து பார்த்தவுடன், க்ரூஸர்கள் மீதான எனது பார்வையை மாற்றி அமைத்தது. ஆம், வேகமாக ஓட்டும்போது மிக இலகுவாகவும், அதிக நிலைத்தன்மையுடன் செல்வதை உணர முடிந்தது.

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் 642மிமீ உயரத்தில் அமைந்த இருக்கையும், இலகுதன்மையும் நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு துணை புகிறது. அத்துடன், 5 அடி 10 அங்குலம் உயரம் கொண்ட எனக்கு, இதன் இருக்கை அமைப்பு நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு சவுகரியமான உணர்வை தருகிறது.

அதேநேரத்தில், உயரம் குறைவானவர்களுக்கு இந்த மோட்டார்சைக்கிளின் இருக்கை அமைப்பு சவுகரியமாக இருக்காது. ஏனெனில், இதன் ஃபுட்பெக் எனப்படும் கால் வைப்பதற்கான பகுதி சற்று முன்னோக்கி தள்ளி இருக்கிறது. கைப்பிடிகளும் மிக அகலமாக இருப்பதால் உயரம் குறைவானவர்களுக்கு சவுகரிய குறைச்சலாக இருக்கலாம்.

டெஸ்ட் டிரைவ் பயணத் திட்டம்

டெஸ்ட் டிரைவ் பயணத் திட்டம்

இந்த மோட்டார்சைக்கிளை டெஸ்ட் டிரைவ் செய்யும் எண்ணம் குதூகலம் மனதிற்குள் எழுந்த நிலையில், நேரத்தை வீணாக்காமல் பெங்களூரில் இருந்து நேராக ஹார்ஸ்லி ஹில்ஸ் மலை பிரதேசத்திற்கு செல்ல முடிவு செய்தோம்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ள இந்த மலைப் பிரதேசம், கடல் மட்டத்திலிருந்து 1,265 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. பெங்களூரில் இருந்து 150 கிமீ தூரத்திலும், சென்னையிலிருந்து 274 கிமீ தூரத்திலும் இருக்கிறது.

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பெங்களூர் எல்லையை கடந்தவுடன் நெடுஞ்சாலையில் இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளை ஓட்டுவது மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

அடுத்து, மதனப்பள்ளி மற்றும் ஹார்ஸ்லி ஹில்ஸ் செல்லும் பாதைகளில் பல மோசமான வளைவுகளை இந்த மோட்டார்சைக்கிளில் கடந்தோம். குறிப்பாக, மலைச்சாலையின் வளைவுகளில் ஓட்டும்போது இதன் ஃபுட்பெக் தரையில் இடித்தது.

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் 999சிசி லிக்யூடு கூல்டு வி - ட்வின் எஞ்சின் மிகவும் மென்மையாகவும், அளவுகடந்த சக்தியை அபாரமாக வழங்கும் தன்மையை பெற்றிருக்கிறது. இதனால், அதிவேகத்தில் ஓட்டுவதற்கு தூண்டுகிறது.

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியன் ஸ்கவுட் மாடலில் இருக்கும் 1133சிசி எஞ்சினில் மாற்றங்களை செய்து உருவாக்கப்பட்ட 999சிசி எஞ்சின்தான் இந்த ஸ்கவுட் சிஸ்க்டி மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 78 பிஎச்பி பவரையும், 88.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதேநேரத்தில், ஸ்கவுட் மாடலில் இருக்கும் 1133 எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 97.7 என்எம் டார்க் திறனையம் வழங்கும் திறன் வாய்ந்தது.

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நெடுஞ்சாலைகள் மற்றும் மலைச்சாலைகளின் வளைவுகளில் இந்த மோட்டார்சைக்கிள் மிகச் சிறப்பான கையாளுமையை வழங்கியது. அதிகபட்சமாக 31 டிகிரி கோணம் சாய்மானம் வரை வைத்து திருப்ப முடிகிறது. இதன் சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பு மிக சொகுசான பயணத்தையும், சிறப்பான நிறுத்துதல் திறனையும் மோட்டார்சைக்கிளுக்கு வழங்குகிறது.

அதேநேரத்தில், வலது பக்கம் அதிகமாக சாய்ந்து திரும்பும்போது சைலென்சர் தரையில் இடிக்கிறது. எனவே, மிகவும் எச்சரிக்கையாக ஓட்ட வேண்டி இருக்கிறது.

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் 999சிசி எஞ்சின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரைடு பை ஒயர் எரிபொருள் செலுத்து அமைப்பு இருப்பதால் 2,000 ஆர்பிஎம்.,மில் சிறந்த டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. மணிக்கு 120 கிமீ வேகம் வரையில் மிக மென்மையான பயண அனுபவத்தை தருகிறது.

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதற்கு மேலான வேகத்தில் அதிர்வுகள் அதிகம் இருக்கிறது. இது நிச்சயம் க்ரூஸருக்கு சிறப்பானது இல்லை. 4வது கியரில் வைத்து செலுத்தும்போது 5,500 முதல் 8,100 ஆர்பிஎம் வரையில் எஞ்சின் சக்தி திடீரென அபரிதமாக உயர்கிறது.

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் 16 இன்ச் முன்புற டயர் சிறப்பான பிடிப்பை தரவில்லை. அதேநேரத்தில், இதனை ஸ்போர்ட்ஸ் பைக் போன்று கருதி ஓட்ட முடியாது என்பதையும் மனதில் நினைவுப்படுத்திக் கொண்டேன். அதிவேகத்தில் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் ஓட்டுவது அவசியமாகிறது.

முக்கிய விஷயங்கள்

முக்கிய விஷயங்கள்

விலை: ரூ.14 லட்சம் ஆன்ரோடு

எரிபொருள் கலன் கொள்ளளவு: 12.5 லிட்டர்கள்

மைலேஜ்: 15 கிமீ/லி

ரேஞ்ச்: 200 கிமீ தூரம்

எஞ்சின் திறன்: 78 பிஎச்பி @7,300ஆர்பிஎம்/ 88.8 என்எம் டார்க் @5,800 ஆர்பிஎம்

டாப் ஸ்பீடு: மணிக்கு 180 கிமீ வேகம்

அபிப்ராயம்

அபிப்ராயம்

2 ஸ்ட்ரோக் பைக்குகள் போல அல்லாமல், ஒரு முறையான ஓட்டும் முறையை பின்பற்றி செலுத்தும் விதத்தில் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் இருக்கிறது. 2 ஸ்ட்ரோக், ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மீது வெறித்தனமானக இருந்த என்னை இந்த மோட்டார்சைக்கிள் அசைத்து பார்த்து விட்டது.

1901ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியன் மோட்டார்சைக்கிள் பிராண்டு நீண்ட பாரம்பரியம் மிக்கது. அதேநேரத்தில், க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை விரும்பும் பெரும்பான்மையான இந்தியர்களின் மனதில் இந்தியன் மோட்டார்சைக்கிள் பிராண்டு இடம்பிடிக்க நிச்சயம் சிறிது காலம் பிடிக்கும்.

ஏனெனில், க்ரூஸர் மோட்டார்சைக்கிள்கள் என்றவுடன் இந்தியர்களின் மனதில் இடம்பிடிக்கும் ஒரே பிராண்டு ஹார்லி டேவிட்சன்தான். ஆனால், பிறரிடமிருந்து தனித்து அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவோருக்கு இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்ட்டி மிகச் சரியான தேர்வாக அமையும்.

எடிட்டர் கருத்து...

எடிட்டர் கருத்து...

நீண்ட தூர பயணம், தினசரி பயன்பாடு அல்லது ஸ்போர்ட்ஸ் பைக் போன்று செலுத்துவதற்கான பல சிறப்புத்தன்மைகளை கொண்டுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமெனில், க்ரூஸர் மோட்டார்சைக்கிள்கள் மீதான எனது கண்ணோட்டத்தை இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் மாற்றி விட்டது என்பதை கூறியாக வேண்டும்.

சரி, உடனே க்ரூஸர் மோட்டார்சைக்கிளை வாங்கி ஓட்ட வேண்டும் என்ற வேட்கை என்னுள் எழுந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா? இப்போதிலிருந்து அதற்கு நிச்சயம் ஒரு தசாப்தம் பிடிக்கும். ஏனெனில், 2 ஸ்ட்ரோக் மீதான காதலும், அதிர்வுகளும் என் மனதில் அணைவதற்கு இந்த கால அவகாசம் நிச்சயம் தேவைப்படும்.

உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா?

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்ட்டி பெயர்: இந்த மோட்டார்சைக்கிளில் சிக்ஸ்டி என்பது அமெரிக்க வழக்கில் எஞ்சின் திறனை குறிப்பிடும் முறை. ஆம், இந்த மோட்டார்சைக்கிள் 60 க்யூபிக் சென்டிமீட்டர் எஞ்சின் பெற்றிருப்பதால்தான் இந்த பெயர்.

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ்:

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ்:

1887ம் ஆண்டு ஹெண்டி என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் சில்வர் கிங், சில்வர் குயின் மற்றும் அமெரிக்கன் இந்தியன் ஆகிய பிராண்டுகளில் மிதிவண்டி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. 1901ம் ஆண்டு சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்பதற்கான பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மிதிவண்டிகளை அறிமுகம் செய்தது. 1928ம் ஆண்டு இந்தியன் பெயருக்கு மாறியது.

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் பொருளாதார பிரச்னையால் 1953ம் ஆண்டில் செயல்பாடுகளை நிறுத்தியது. இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுக்க பல நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், அவை பெரிய வெற்றியை தரவில்லை. இந்த நிலையில், 2011ம் ஆண்டில் ஆஃப்ரோடு வாகனங்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற போலரிஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. 2014ம் ஆண்டு இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது போலரிஸ் நிறுவனம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துடனான தொடர்பு...

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துடனான தொடர்பு...

1953ம் ஆண்டு திவாலான அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தையும், அதன் பிராண்டு பெயரை பயன்படுத்துவதற்கான உரிமையையும் மற்றொரு அமெரிக்க நிறுவனமான பிராக்ஹவுஸ் எஞ்சினியரிங் வாங்கியது. 1955ம் ஆண்டு முதல் 1960 வரை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை இறக்குமதி செய்து அதனை இந்தியன் பிராண்டில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Words: Jobo Kuruvilla

English summary
Indian Scout Sixty First Ride Review. Is the Indian Scout Sixty the perfect cruiser for Indian roads.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark