கேடிஎம் ட்யூக்250 VS யமஹா எஃப்இசட்-25: இரண்டில் சிறந்த பைக் எது தெரியுமா?

Written By:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்யூக்250 சிசி பைக்கை இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது கேடிஎம் நிறுவனம். தற்போது 250சிசி பிரிவில் கேடிஎம் நிறுவனம் நுழைந்துள்ளதால், கடந்த ஜனவரி மாதத்தில் யமஹா நிறுவனத்தால் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட 'எஃப்இசட்-25' மாடலுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இவை இரண்டில் எது சிறந்த பைக் என தெரிந்துகொள்வோம்.

கேடிஎம் ட்யூக்250 VS யமஹா எஃப்இசட்-25: ஒரு முழுமையான ஒப்பீடு!

கேடிம் நிறுவனத்தின் ட்யூக் பைக்குகள் சிறந்த டிசைன் மற்றும் செயல்திறன் கொண்டது, எடையும் குறைவாக உள்ளதால் எளிதாக கையாளலாம், என்பதால் இளைஞர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் யமஹா நிறுவனம் செயல்திறன்மிக்க வாகனங்களை சந்தைப்படுத்தி இந்தியளவில் ஏற்கெனவே பிரலமாக விளங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் பைக் மாடல்களையும் முழுமையாக ஒப்பீட்டு பார்க்கலாம்.

டிசைன்

டிசைன்

மஸ்குலர் டிசைன் கொண்ட யமஹா எஃப்இசட்-25 பைக் ஆகாஜபானுவான தோற்றம் கொண்டது, ட்யூக்குடன் ஒப்பிடுகையில் அளவில் சற்று பெரிதாக காட்சியளிக்கிறது. அதேவேளையில் ட்யூக் 205-ன் டிசைன் கவர்ச்சிகரமாகவும், ட்ரெண்டியாகவும் உள்ளது.

இரண்டு நிறுவன பைக்குகளிலும் ஒப்பிடுகையில் ட்யூக்250-ன் ஆரஞ்சு வண்ணம் முதல் விருப்பமாக இருக்கும்.

ஒட்டுமொத்த டிசைன் மதிப்பீடு:

கேடிஎம் ட்யூக்250 - 8/10

யமஹா எஃப்இசட்-25 -8/10

இஞ்சின்: விவரம் & செயல்திறன்

இஞ்சின்: விவரம் & செயல்திறன்

இரண்டு பைக்குகளிலும் ஒரே கன திறன் கொண்ட எஞ்சின் இருக்கிறபோதிலும், ட்யூக்250 பைக்கின் ஒற்றை சிலிண்டர் கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 31 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதனோடு ஒப்பிடுகையில் யமஹா எஃப்இசட்-25 எஞ்சின் அதிகபட்சமாக 20 பிஹச்பி ஆற்றலையே வெளிப்படுத்துகிறது. ட்யூக்கின் எஞ்சின் எடை யமஹா எஞ்சினை விடவும் 10 கிலோ குறைவானதே. இது ட்யூக்கை முன்னிலைப்படுத்திகிறது.

ஒட்டுமொத்த எஞ்சின் திறன் மதிப்பீடு:

கேடிஎம் ட்யூக்250 - 8.5/10

யமஹா எஃப்இசட்-25 - 7.5/10

சிறம்பம்சங்கள்

சிறம்பம்சங்கள்

யமஹா எஃப்இசட்-25 பைக்கில் பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி முகப்பு விளக்கு உள்ளது. ட்யூக்250-ல் எல்ஈடி சரவுண்டட் ஹாலோஜன் முகப்பு விளக்கு உள்ளது. இரண்டு பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை. ஆனால் இரண்டு மாடல்களிலும் இருபக்க டிஸ்க் பிரேக்குகள் உள்ளது.

ட்யூக்250 பைக்கில் மட்டும் ஸ்லிப்பர் கிளட்ச் சிஸ்டம் உள்ளது, ஆனால் யமஹா மாடலில் அது கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இதிலும் ட்யூக் முன்னிலை வகிக்கிறது.

சிறப்பம்சங்களின் ஒட்டுமொத்த மதிப்பீடு:

கேடிஎம் ட்யூக்250 - 8/10

யமஹா எஃப்இசட்-25 - 7.5/10

மைலேஜ்

மைலேஜ்

ட்யூக் பைக்குகள் உடனடி வேகத்தில் சிறந்து விளங்குகிறது. யமஹா எஃப்இசட்25 பைக் ஓட்டுவதற்கு மென்மையாகவும், கையாளுவதிலும் வசதியாக உள்ளது. செயல்திறன் மிக்க ட்யூக்கை விடவும் யமஹா மைலேஜில் முன்னிலை வகிக்கிறது.

யமஹா எஃப்இசட்-25 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 35-40 கிமீ கிடைக்கலாம், இதேநிலையில் ட்யூக்250 லிட்டருக்கு 30-35 கிமீ என்ற அளவிலேயே கிடைக்கக்கூடும்.

மைலேஜில் ஒட்டுமொத்த மதிப்பீடு:

கேடிஎம் ட்யூக்250 - 7.5/10

யமஹா எஃப்இசட்-25 - 8/10

விலை

விலை

ட்யூக்250 பைக்கின் விலையை ரூ.1.73 லட்சமாக நிர்னயித்துள்ளது கேடிஎம் நிறுவனம். யமஹா நிறுவனம் எஃப்இசட்-25 பைக்கின் விலையை ஒப்பிடமுடியாத அளவுக்கு ரூ.1.19 லட்சமாக நிர்னயித்துள்ளது.

இரண்டு பைக்குகளின் விலை வித்தியாசம் ரூ.54,000 ஆக உள்ளது. இது மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக மக்கள் வாங்கக்கூடிய விலையில் 250சிசி பைக்கை யமஹா நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ளது. இதனால் விலையை பொருத்தவரையில் யமஹா முன்னிலைப்படுகிறது.

விலையில் ஒட்டுமொத்த மதிப்பீடு:

கேடிஎம் ட்யூக்250 - 7.5/10

யமஹா எஃப்இசட்-25 - 8/10

முடிவு!

முடிவு!

எஃப்இசட்-25 மாடலின் விலையை மிகவும் மலிவாக நிர்ணயித்துள்ளது யமஹா நிறுவனம். இந்தியாவைப் பொருத்தவரையிலும் விலை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஸ்டைலிஷ் மற்றும் நல்ல செயல்திறன் கொண்ட எஞ்சின் உள்ளதாக எஃப்இசட்-25 இருக்கிறது.

ஸ்போர்டி மற்றும் கவர்ச்சியான தோற்றம், ஸ்லிப்பர் கிளட்ச் தொழில்நுட்பம் ஆகியவை கொண்ட பைக்காக ட்யூக்250 இருக்கிறது.

முடிவு

முடிவு

இரண்டு பைக்குகளில் எதை தேர்வு செய்வது என்ற நிலை ஏற்படும் போது குறைந்த பட்ஜெட்டில் 250சிசி பைக் என்ற அடிப்படையில் யமஹா சிறந்த தேர்வாக அமையும்.

விலையை பற்றிய கவலையில்லை, அதிக திறன் கொண்ட எஞ்சின் தான் தேவை என்போர் கண்டிப்பாக ட்யூக்250 பைக்கை தேர்வு செய்யலாம்.

புதிய வரவான கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் படங்கள்: 

English summary
Comparing the Duke 250 vs. FZ25 on specs, prices, features and the all important verdict.
Story first published: Saturday, February 25, 2017, 13:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark