மஹிந்திரா கஸ்ட்டோ Vs ஹோண்டா ஆக்டிவா 3ஜி: டெஸ்ட் டிரைவ் ஒப்பீடு!

Written By:

பைக்குகளின் விற்பனையை விஞ்சும் அளவுக்கு, ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது. மார்க்கெட் லீடரான ஹோண்டா ஆக்டிவா இடையிடையே விற்பனையில் நம்பர்1 இடத்தை பிடித்து பல முன்னணி பைக் மாடல்களையே அரட்டி வருகிறது.

இதனால், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை கருதி பல புதிய மாடல்களை இருசக்கர வாகன நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா ஆக்டிவா மார்க்கெட்டை குறி வைத்து களமிறக்கப்பட்ட புதிய ஸ்கூட்டர் மாடல் மஹிந்திரா கஸ்ட்டோ. இந்த ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை மஹிந்திரா வழங்கியிருந்தது.

இந்தநிலையில், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் மாடலையும், மஹிந்திரா கஸ்ட்டோவையும் டெஸ்ட் டிரைவ் செய்து, இந்த இரு இரு ஸ்கூட்டர்களில் எது பெஸ்ட் என்பது பற்றி ஒரு தீர்மானத்துக்கு வரும் வகையில், இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.

01. டெஸ்ட் டிரைவ் ஸ்கூட்டர்கள் விபரம்

01. டெஸ்ட் டிரைவ் ஸ்கூட்டர்கள் விபரம்

மஹிந்திரா கஸ்ட்டோ

[பெங்களூர் ஆன்ரோடு விலை: ரூ. 57,152]

ஹோண்டா ஆக்டிவா 3ஜி

[பெங்களூர் ஆன்ரோடு விலை: ரூ. 58,739]

டெஸ்ட் டிரைவ் இடம்: பெங்களூர்

02. முன்புற டிசைன்

02. முன்புற டிசைன்

ஹோண்டா ஆக்டிவாவின் டிசைனை யாரும் குறை சொல்ல முடியாது. எனவே, கஸ்ட்டோவில் சில கவர்ச்சிகரமான கூடுதல் டிசைன் அம்சங்களை சேர்த்திருக்கிறது மஹிந்திரா. கஸ்ட்டோவின் ரியர் வியூ கண்ணாடிகளின் டிசைன், ஹெட்லைட், அலுமினிய வண்ண இரட்டை கிரில் அமைப்பு, எல்இடி பைலட் விளக்குகள் ஆகியவை கவர்வதாக இருக்கிறது. ஆனால், ஆக்டிவாவின் முகப்பு எளிமையாக காட்சி தருகிறது.

03. பின்புற டிசைன்

03. பின்புற டிசைன்

பின்புற டிசைனில் மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கோர் செய்துவிடுகிறது. குறிப்பாக டெயில் லைட் டிசைன் நன்றாக இருக்கிறது. ஆனால், அந்த கிராப் ரெயில் டிசைன் கவர்வதாக இல்லை. ஆக்டிவாவின் கிராப் ரெயில் பிடிப்பதற்கும், பார்ப்பதற்கும் கச்சிதமாக இருக்கிறது.

04. எஞ்சின்

04. எஞ்சின்

ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 8 பிஎச்பி சக்தியையும், 8.74 என்எம் டார்க்கையும் வழங்கும் ஹோண்டா ஈக்கோ தொழில்நுட்பம் கொண்ட 109சிசி எஞ்சின் உள்ளது. மஹிந்திரா கஸ்ட்டோவில் 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் வழங்கும் எஞ்சின் உள்ளது. இதில், எந்த எஞ்சின் சிறப்பானது. அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

 05.செயல்திறன்

05.செயல்திறன்

ஹோண்டா ஆக்டிவா 3ஜி எஞ்சினின் மென்மையும், சீரான சக்தியை வெளிப்படுத்தும் திறனும் அபரிமிதமானது. எஞ்சின் அதிர்வுகள் துளியும் தெரியவில்லை. ஆனால், மஹிந்திரா கஸ்ட்டோவின் எஞ்சின் வேகமெடுப்பதில் திக்கி திணறுவதுடன், அதிர்வுகள் மிக அதிகமாக தெரிகிறது. ஹோண்டா ஆக்டிவா 3ஜி எஞ்சினுடன் ஒப்பிடமுடியாத அளவுக்குத்தான் எஞ்சினின் செயல்திறன் இருக்கிறது. இந்த விஷயத்தில் ஹோண்டா ஹோண்டாதான்...!!

06. கையாளுமை

06. கையாளுமை

அதிவேகத்தில் செல்லும்போதும், வளைவுகளில் திரும்பும்போதும் ஆக்டிவாவை ஓட்டும்போது இருக்கும் நம்பிக்கையான உணர்வு கஸ்ட்டோவில் இல்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 07. ரைடிங் பொசிஷன்

07. ரைடிங் பொசிஷன்

ரைடிங் பொசிஷன் என்று கூறப்படும் இருக்கையின் அமைப்பும், ஹேண்டில்பார் அமைப்பும் ஆக்டிவா 3ஜியில் மிக சரியான அளவில் வடிவமைத்துள்ளனர். ஆனால், கஸ்ட்டோவில் நேர் மாறாக இருக்கிறது. இருக்கையின் உயரத்தை இரு விதமாக கூட்டிக் குறைத்துக் கொண்டாலும், கஸ்ட்டோ இருக்கையில் அமரும்போது தரையில் அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது. இதேபோன்று, ஹேண்டில்பார் மிக உயரமாக தெரிவதால், தோள்பட்டை வலி ஏற்படுகிறது.

 08. சஸ்பென்ஷன்

08. சஸ்பென்ஷன்

மஹிந்திரா கஸ்ட்டோவின் பின்புற சஸ்பென்ஷன் சிறிய பள்ளங்களுக்கெல்லாம் தேவையில்லாமல், தாண்டி குதிக்கிறது. இதனால், சில வேளைகளில் பேலன்ஸ் குறையும் வாய்ப்பும் ஏற்படுகிறது. ஆனால், ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் மிகச்சிறப்பாக இருக்கிறது. இருவர் பயணிக்கும்போதும் சொகுசான உணர்வை வழங்குகிறது.

09. பிரேக் சிஸ்டம்

09. பிரேக் சிஸ்டம்

ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டரில் இருக்கும் கோம்பி பிரேக் சிஸ்டம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. அதேநேரத்தில், மஹிந்திரா கஸ்ட்டோவின் டிரம் பிரேக்குகள் மிக சிறப்பாக இருக்கிறது. அதிவேகத்தில் செல்லும்போது பிரேக்குகள்தான் நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், ஆக்டிவாவின் பிரேக்குகள் அவ்வளவு நம்பிக்கையான உணர்வை தரவில்லை.

10. மைலேஜ்

10. மைலேஜ்

எமது டெஸ்ட் டிரைவின்போது மஹிந்திரா கஸ்ட்டோ லிட்டருக்கு 28 கிமீ மைலேஜையும், ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் 41 கிமீ மைலேஜையும் வழங்கியது. மஹிந்திரா கஸ்ட்டோ லிட்டருக்கு 63 கிமீ மைலைஜையும், ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

11. மீட்டர் கன்சோல்

11. மீட்டர் கன்சோல்

ஆக்டிவாவைவிட சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் கவர்ச்சி அம்சங்கள் கஸ்ட்டோவில் அதிகம். அதில், ஒன்றாக மீட்டர் கன்சோலை குறிப்பிடலாம். அலுமினிய வண்ண பினிஷிங்குடன் மீட்டர் கன்சோல் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இது கவர்ச்சியாக இருக்கிறதேயொழிய, மீட்டரில் எழுத்துகள், எண்களை பார்ப்பதற்கு தெளிவாக இல்லை. ஆனால், ஆக்டிவாவில் வண்டியின் வேகம், இன்டிகேட்டர் விளக்குகள் எரிவதை தெளிவாக பார்த்து செயல்பட முடிகிறது.

 12. இருக்கையை திறக்கும் வசதி

12. இருக்கையை திறக்கும் வசதி

இருக்கைக்கு கீழே இருக்கும் பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை பயன்படுத்துவதற்கு, ஹோண்டா ஆக்டிவாவில் பின்புறத்திலிருந்து திறக்க வேண்டும். ஆனால், மஹிந்திரா கஸ்ட்டோவில் முன்புறத்திலிருந்து திறக்க வேண்டும். இரு ஸ்கூட்டரிலும் பெட்ரோல் நிரப்புவதற்கும் இருக்கையை திறக்க வேண்டும்.

13. பொருட்களுக்கான இடவசதி

13. பொருட்களுக்கான இடவசதி

ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டரில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டை வசதியாக வைக்க முடியும். ஆவணங்கள் மற்றும் முதலுதவி மருந்துப் பொருட்களை வைப்பதற்கு சிறிய அறை போன்ற தடுப்பும் உள்ளது. ஆனால், கஸ்ட்டோவில் பெரிய சைஸ் ஹெல்மெட்டுகளை வைக்க முடியாது. இடவசதி மிக குறைவு. ஆவணங்களை வைத்தால் ஹெல்மெட்டுக்கு இடம் இல்லை.

 14. ரியர் வியூ கண்ணாடி

14. ரியர் வியூ கண்ணாடி

மஹிந்திரா கஸ்ட்டோவில் உருப்படியான விஷயங்களில் முக்கியமானது ரியர் வியூ கண்ணாடிகள். சிறப்பாகவும், தெளிவான பார்வை திறனை வழங்குகிறது. ஹோண்டா ஆக்டிவா 3ஜி ரியர் வியூ கண்ணாடிகள் அந்தளவுக்கு பார்வை திறனை வழங்கவில்லை என்பதுடன், டிசைனும் மிக சாதாரணமாக இருக்கிறது.

15. ஹெட்லைட் பிரகாசம்

15. ஹெட்லைட் பிரகாசம்

மஹிந்திரா கஸ்ட்டோவின் ஹெட்லைட் ஒளி மிக பிரகாசமாக இருக்கிறது. இரவு நேரத்தில் சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட உதவுகிறது. ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டரின் ஹெட்லைட் ஒளி அவ்வளவு சிறப்பாக இல்லை.

16. கஸ்ட்டோவில் சில சிரமங்கள்

16. கஸ்ட்டோவில் சில சிரமங்கள்

மஹிந்திரா கஸ்ட்டோவின் சென்டர் ஸ்டான்ட், சைடு ஸ்டான்ட் டிசைன் மிக மோசமாக உள்ளது. மேடுபள்ளங்களில் ஏற்றி இறக்கும்போது சில வேளைகளில் தரையில் இடிக்கிறது. அதேபோன்று, சைடு ஸ்டான்டு போட்டு நிறுத்தும்போது போதுமான சாய்வு இல்லாமல் இருக்கிறது. வீட்டில் சைடு ஸ்டான்ட் போட்டு நிறுத்தியிருக்கும்போது குழந்தைகள் ஏறினால், கீழே சாய்ந்துவிடும் வாய்ப்புள்ளது.

17. மஹிந்திரா கஸ்ட்டோ சிறப்பம்சங்கள்

17. மஹிந்திரா கஸ்ட்டோ சிறப்பம்சங்கள்

மஹிந்திரா கஸ்ட்டோவின் முக்கிய சிறப்பம்சங்களாக கவர்ச்சியான டிசைன் அம்சங்கள், ரியர் வியூ கண்ணாடிகளின் டிசைன், மற்றும் பார்வை திறன், பிரேக் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

18. மஹிந்திரா கஸ்ட்டோவின் குறைகள்

18. மஹிந்திரா கஸ்ட்டோவின் குறைகள்

அதிர்வுகள் அதிகம், பிக்கப் குறைவான எஞ்சின், மென்மையான சஸ்பென்ஷன், குறைவான ஸ்டோரேஜ் வசதி ஆகியவை முக்கியமானதாகும்.

 19. ஹோண்டா ஆக்டிவா 3ஜி சிறப்புகள்

19. ஹோண்டா ஆக்டிவா 3ஜி சிறப்புகள்

மிக அருமையான எஞ்சின், சிறப்பான ரைடிங் பொசிஷன், சிறப்பான ஸ்டோரேஜ் வசதி.

20. ஹோண்டா ஆக்டிவா 3ஜி குறைகள்

20. ஹோண்டா ஆக்டிவா 3ஜி குறைகள்

கவர்ச்சியில்லாத பின்புற டிசைன், நம்பிக்கையை தராத பிரேக் சிஸ்டம், ஹெட்லைட் மற்றும் ரியர் வியூ கண்ணாடிகள்.

21. எது பெஸ்ட்?

21. எது பெஸ்ட்?

இரண்டு ஸ்கூட்டர்களையும் தலா அரை கிலோமீட்டர் ஓட்டினாலே போதும். தீர்ப்பு சொல்லிவிடலாம். ஆம், உண்மைதான். அவ்வளவு வேற்றுமைகளை உடனே உணர்ந்து கொள்ள முடிகிறது. இரண்டில் ஹோண்டா ஆக்டிவா 3ஜி மிக சிறந்தது. கவர்ச்சியை மட்டும் காட்டி வாடிக்கையாளர்களை விலை பேச முடியாது என்பதை மஹிந்திரா உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த டெஸ்ட் டிரைவில் என்னை மிக மிக கவர்ந்தது ஹோண்டா ஆக்டிவா 3ஜிதான். இரண்டையும் ஓட்டிப் பார்த்தவர்கள் மாற்றுக் கருத்து சொல்லவே முடியாது. மீண்டும் ஒரு டெஸ்ட் டிரைவ் செய்தியில் சந்திக்கலாம்.

ஆக்டிவாவை வீழ்த்த இன்னொரு ஸ்கூட்டர் பொறந்துதான் வரணும்! அப்படி வந்தாலும், அது இன்னொரு ஹோண்டாீ பிராண்டாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

ஃபோட்டோ ஷூட்: திரைக்கு பின்னால்...!!

ஃபோட்டோ ஷூட்: திரைக்கு பின்னால்...!!

லைட்டிங் பிரச்னை இல்லையே ராஜ்... உடனே வரும் ரெடிமேட் பதில், என்கிட்ட சாஃப்ட்வேர் இருக்கு, சரி பண்ணிக்கலாம்!

ஆங்கிள் பார்க்கும் ராஜ், ஜோபோ

ஆங்கிள் பார்க்கும் ராஜ், ஜோபோ

இப்பவாச்சும் ஆங்கிள் சரியா இருந்துச்சா... அடுத்து இல்லை என குரல். அப்படீன்னா, எது சரியான ஆங்கிள் ஜோபோ...!!

இதுதான் கரெக்ட்...

இதுதான் கரெக்ட்...

இதுதான் ராஜ் கரெக்ட்டான ஆங்கிள்.

ட்ரெயின் போயிட போவுது

ட்ரெயின் போயிட போவுது

கேமராவ அட்ஜெஸ்ட் பண்றதுக்குள்ள ட்ரெயின் போயிட போகுது. கமான் ராஜ்...!!

 
English summary
Honda launched a refreshed Activa variant called the 3G in the 110 cc segment recently and the competition only got immense. Mahindra launched the Gusto in India recently as well to directly compete with the Activa. So, putting them on a one-on-one street fight, which one would emerge as a better commuter? Let’s find out in our exclusive comparison between the Mahindra Gusto and Honda Activa 3G:
Story first published: Wednesday, April 15, 2015, 14:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark