மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Posted By:

உலகிலேயே அதிக வலுவான இந்திய பைக் மார்க்கெட் 100சிசி மாடல்களையும், அதிக மைலேஜ் தரும் பட்ஜெட் மாடல்களையும் மட்டுமே தனது பலமாக காட்டி வந்தது. ஆனால், தற்போது காட்சிகள் மாறத் துவங்கிவிட்டன. பட்ஜெட் மாடல்களை தவிர்த்து, அதிக செயல்திறன் மிக்க பைக்குகள் மீது தற்போது இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.

இதனை உணர்ந்து கொண்டு பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மாடல்களை களம் இறக்கி வருகின்றன. இந்த நிலையில், வெளிநாட்டு பைக்குகளின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்தியாவின் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்குடன் மஹிந்திரா களம் புக தயாராகி இருக்கிறது.

சமீபத்தில், இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை பெங்களூரிலிருந்து கூர்க் வரையில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து, இந்த பைக்கின் சாதக, பாதகங்கள் குறித்த அம்சங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

முன்புற டிசைன்

முன்புற டிசைன்

கருப்பு நிறத்திலான பெரிய கெளவுலில் கொடுக்கப்பட்டிருக்கும் இரட்டை ஹாலஜன் ஹெட்லைட்டுகளும், கண் புருவம் டிசைனிலான எல்இடி பகல்நேர விளக்குகளும் சட்டென கவனத்தை ஈர்க்கின்றன. இதன் ஹெட்லைட் உள்ளடக்கிய முகப்பு டிசைன், எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூற இயலாது. ஆனால், போட்டி பைக் மாடல்களை ஒப்பிடும்போது, ஓர் தனித்துவமான முகப்பு டிசைனை கொண்டிருக்கிறது என்று கூறலாம்.

 பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

பெரிய பெட்ரோல் டேங்க் பைக்கின் கம்பீரத்தை உயர்த்துகிறது. அதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நெஞ்செலும்பு போன்ற இரட்டை குழாய்கள், முன்புற ஃபோர்க்குகள், மற்றும் பின்புற ஸ்விங் ஆர்ம் போன்றவை தங்க நிற பெயிண்ட் மூலமாக, இதற்கு தனித்துவமான டிசைன் அம்சத்தை கொடுக்கிறது. மேலும், எஞ்சின், ஃப்ரேம், ஸ்விங் ஆர்ம் ஆகியவை பின்னி பிணைந்திருக்கும் வகையில், டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இரட்டை புகைப்போக்கி குழாய்களும் பைக்கின் ஒட்டுமொத்த டிசைனுக்கும், மதிப்புக்கும் மிகவும் வலு சேர்க்கிறது.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

முன்புறத்தில் பிரம்மாண்டமாக தெரியும் டிசைன் பின்புறத்தில் அப்படியே மாறுகிறது. ஸ்க்ராம்ப்ளர் வகை மோட்டார்சைக்கிள் போன்ற இருக்கை மற்றும் குறுகலான வால் அமைப்புடன் முடிகிறது. அதில், கச்சிதமாக கொடுக்கப்பட்டிருக்கும் எல்இடி விளக்குகள் எம்மை கவர்ந்தது. முடிவில் நம்பர் பிளேட்டுடன் சுபம் போடுகிறது. டிசைன் பற்றி ஒற்றை வரியில் கூற வேண்டுமெனில், இது மிகவும் தனித்துவமான டிசைன் அமைப்பை கொண்ட பைக் மாடல் என்பதாகத்தான் கூற முடியும்.

மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோல்

அனலாக் ஆர்பிஎம் மீட்டரும், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இந்த டிஜிட்டல் திரை வாயிலாக, அதிகபட்ச வேகத்தை பதிவு செய்து காட்டும் வசதி, இரண்டு பயணங்களுக்கான தூர அளவீட்டு பதிவுகளை காட்டும் ட்ரிப் மீட்டர்கள் போன்றவை எம்மை கவர்ந்த அம்சங்களாக கூறலாம்.

 எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

மஹிந்திரா மோஜோ பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 295சிசி லிக்யூட் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 8,000 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் 27 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் 30 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வெளிப்படுத்தும். எஞ்சினின் சக்தி 6 ஸ்பீடு கான்ஸ்டென்ட் மெஷ் கியர்பாக்ஸ் மூலமாக பின் சக்கரத்திற்கு கடத்தப்படுகிறது.

எஞ்சின் செயல்பாடு

எஞ்சின் செயல்பாடு

இந்த பைக் 165 கிலோ எடை கொண்டது. இதனை மிக செம்மையாகவும், மென்மையாகவும் செலுத்துகிறது இதன் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின். ஆனால், குறைவான வேகத்தில் செல்லும்போது கியர் மாற்றும்போது கியர்பாக்ஸ் மென்மையாக இல்லை. அதேநேரத்தில், 100 முதல் 120 கிமீ மிதமான வேகத்தில் க்ரூஸ் செய்து செல்லும்போது எஞ்சின் செயல்திறன் மிகச்சிறப்பாக இருக்கிறது. பவர் டெலிவிரியும் நம்மை உற்சாகப்படுத்துகிறது. மஹிந்திரா பொறியாளர்கள் மிக நீண்ட நாட்களாக வைத்து இந்த எஞ்சினை சோதனை செய்தது வீண் போகவில்லை.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

எமது டெஸ்ட் டிரைவின்போது அதிகபட்சமாக 149 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது. அதனை பதிவு செய்து காட்டும் வசதியும் இந்த பைக்கில் உள்ளது.

 மைலேஜ்

மைலேஜ்

குறைவான வேகத்திலும், அதிவேகத்திலும் வைத்து இந்த பைக்கை சோதனை செய்தோம். அத்துடன், மலைப்பாங்கான சாலைகளிலும் இந்த பைக்கை வைத்து சுமார் 500 கிலோமீட்டர் தூரம் வரை சோதனை செய்ததில், லிட்டருக்கு 20 கிமீ மைலேஜை வழங்கியது. இந்த பைக் லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் என்று மஹிந்திரா தெரிவிக்கிறது. இந்த பைக்கில் 3 லிட்டர் ரிசர்வுடன் கூடிய 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், அடிக்கடி பெட்ரோல் நிலையம் செல்ல வேண்டிய அவசியத்தை தவிர்த்தது.

ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

இதன் இருக்கை ஓட்டுபவருக்கு மிக சொகுசாகவும், வசதியாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 165 கிலோ எடை கொண்ட பைக்கை குறைவான வேகத்தில் செலுத்தும்போதும், தள்ளும்போதும் சற்று கடினமாக தெரிகிறது. அதேநேரத்தில், நெடுஞ்சாலையில் மித வேகத்தை எட்டியவுடன் பைக் மிகச்சிறப்பான நிலைத்தன்மையுடன் செல்வதுடன், ஓட்டுவதற்கு உற்சாகத்தை கொடுக்கிறது. வளைவுகளில் திருப்பும்போது, நம்பிக்கையான உணர்வை அளிக்கிறது. ஆனால், இருக்கைக்கும், ஃபுட் ரெஸ்ட்டிற்கும் இடையிலான உயரம் சரியா அளவில் இல்லை. இதனால், நீண்ட தூர பயணங்களின்போது கால்களில் வலியை தருகிறது. இதுகுறித்து, மஹிந்திராவிடம் எமது கருத்தை தெரிவித்திருக்கிறோம். இதன் பைரெல்லி ட்யூப்லெஸ் ரேடியல் டயர்கள் நல்ல க்ரிப்பை தருகின்றன.

பின் இருக்கை

பின் இருக்கை

ஓட்டுனர் இருக்கை அகலமாக இருக்கும் அதே நேரத்தில், இதன் பின் இருக்கை மிக குறுகலாக இருக்கிறது. இதுபோன்ற பைக்குகளை ஓட்டுபவர் மட்டுமே பெரும்பாலும் செல்வர். அத்துடன், செயல்திறன் மிக்க இதுபோன்ற பைக்குகளில் பின்னால் ஒருவர் அமர்ந்து செல்வது அசகவுரியத்தை தருவதோடு, விபத்து ஆபத்தையும் கொண்டிருக்கும். மேலும், பைக்கின் அழகையும், ஏரோடைனமிக்ஸ் தாத்பரியத்தின்படி, பின் இருக்கை ஷோவுக்காக மட்டுமே என்று கூறலாம்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

நீண்ட தூர பயணங்களுக்கு மிகச்சிறப்பானதாக சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பைக்கின் எடையான 169 கிலோவும், 21 லிட்டர் எரிபொருள மற்றும் ஓட்டுபவரின் எடை என அனைத்தையும் வெகு அழகாக கையாள்கிறது இதன் ஷாக் அப்சார்பர்கள். மேலும், அதிக எடை கொண்ட இந்த பைக்கிற்கு போதிய கையாளுமையை வழங்குவதிலும் இந்த சஸ்பென்ஷன் அமைப்பு முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, இதன் பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் 600சிசி மோட்டார்சைக்கிள்கள் போன்று, தரையிலிருந்து 25 டிகிரி கோண சாய்வில் கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜிஜுவான் நிறுவனம், மோஜோ பைக்கிற்கான பிரேக் சிஸ்டத்தை வடிவமைத்து வழங்கியிருக்கிறது. முன்புறத்தில் 320மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் மற்றும் 4 பிஸ்டன் ரேடியல் காலிபர்கள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 240மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் மற்றும் இரண்டு பிஸ்டன் ப்ளோட்டிங் காலிபர்களுடன் கூடிய பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மோஜோ அரக்கனை கட்டுப்படுத்துவதற்கும், நம்பிக்கையாகவும், போதுமான செயல்திறனை வழங்குகிறது. ஆனால், பின்புற பிரேக் பூட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு ஏபிஎஸ் சிறந்த தீர்வாக இருக்கும். இதுகுறித்து வினவியபோது, அடுத்த ஆண்டு ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் மோஜோ பைக் வரும் என்று மஹிந்திரா தெரிவித்தது.

 டயர்கள்

டயர்கள்

மஹிந்திரா மோஜோ பைக்கில் பைரெல்லி டயாப்லோ ராஸோ- II டயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த டயர்கள் நிரந்தர ஆக்சஸெரீயாக இடம்பெற்று இருப்பது மிக முக்கியமானது. அனைத்து வித சாலைகளிலும், வளைவுகளிலும் மிகச்சிறப்பான க்ரிப்பை வழங்குகிறது. பிரேக் செயல்திறனையும், சிறப்பாக உள்வாங்கி பைக்கை நிறுத்துவதற்கு உதவுகிறது.

எஞ்சின் பிரச்னையை கண்டறியும் வசதி

எஞ்சின் பிரச்னையை கண்டறியும் வசதி

பைக் எஞ்சினில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக கண்டறிந்து எச்சரிக்கும் 'லிம்ப் ஹோம் மோடு' என்ற தொழில்நுட்ப வசதி உள்ளது. எஞ்சினில் பிரச்னை இருப்பது கண்டறிந்தவுடன், பைக்கை 60 கிமீ வேகத்துக்கு மேல் செலுத்த இயலாதபடி, வேக வரம்பு சுயமாக நிர்ணயித்து விடுகிறது இதன் இசியூ கம்ப்யூட்டர். மேலும், அருகிலுள்ள சர்வீஸ் மையத்திற்கு செல்லவும் அறிவுறுத்துகிறது.

 ரோல்ஓவர் சென்சார்

ரோல்ஓவர் சென்சார்

இரண்டாவது மிக முக்கிய பாதுகாப்பு அம்சமாக ரோல்ஓவர் சென்சாரை குறிப்பிடலாம். அதாவது, பைக் 45 டிகிரி கோணத்திற்கும் கீழே சாய்ந்துவிட்டால், எஞ்சின் தானாக ஆஃப் ஆகிவிடும்.

பிடித்த அம்சங்கள்

பிடித்த அம்சங்கள்

  • அதிவேகத்தில் சிறப்பான நிலைத்தன்மை
  • மித வேகத்தில் சிறப்பான பவர் டெலிவிரி
  • மென்மையான, அதிர்வுகள் குறைவான எஞ்சின்
  • சிறப்பான க்ரிப் தரும் பைரெல்லி டயாப்லோ ராஸோ II டயர்கள்
  • சஸ்பென்ஷன்
  • ஆற்றல்வாய்ந்த பிரேக் சிஸ்டம்
  • சிறப்பான புகைப்போக்கி குழாய் சப்தம்
 பிடிக்காதவை

பிடிக்காதவை

  • இருக்கைக்கும், ஃபுட் ரெஸ்ட்டுக்கும் இடையிலான உயரம் குறைவு
  • குறைவான வேகத்தில் கியர்பாக்ஸ் சப்தம்
  • இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை காட்டுவதற்கான வசதி இல்லை.

மஹிந்திரா மோஜோ புகைப்போக்கி சப்தம்- வீடியோ

டிரைவ்ஸ்பார்க் பரிந்துரை

டிரைவ்ஸ்பார்க் பரிந்துரை

கேடிஎம் 390 மாடல்கள் போன்று, அதிக பெர்ஃபார்மென்ஸுடன் ஓர் சிறப்பான ஸ்போர்ட்ஸ் பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு மஹிந்திரா மோஜோ சிறப்பான தேர்வாக கூற முடியாது. ஆனால், கையாளுமை, சிறப்பான பிரேக் சிஸ்டம் போன்றவை நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற இந்தியாவின் பட்ஜெட் விலையிலான சிறந்த ஸ்போர்ட்ஸ் டூரர் வகை மாடலாக கூற முடியும். இந்தியர்களுக்கு மலிவான விலையில் ஓர் சிறப்பான வசதிகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் டூரர் வகை மோட்டார்சைக்கிளை கொடுக்க மஹிந்திரா முனைந்திருப்பது நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.

தர மதிப்பீடு

தர மதிப்பீடு

மஹிந்திரா மோஜோ தர மதிப்பீடு!

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.1.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட் டூரர் பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் ட்யூக் 390 பைக்கை ஒப்பிடும்போது, இது மிக குறைவான விலை கொண்டதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டெஸ்ட் டிரைவ்: ஜோபோ குருவில்லா

ஜோபோ ஃபேஸ்புக் பக்கம்

ஜோபோ டுவிட்டர் பக்கம்

தமிழில் எழுத்தாக்கம்: சரவணராஜன்

 
English summary
For decades, the 100cc motorcycles were the surest way to commute in India. However, Mahindra has a different answer; is it good enough? Twin-pod headlights, upside down forks, a muscular fuel tank, and many more segment first features, are what the all-new Mahindra Mojo has to offer. Does the Mojo have a strong appeal, especially when the KTM 390 is currently the best motorcycle in the 300cc segment?
Please Wait while comments are loading...

Latest Photos