எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எம்ஆர்எஃப் மாசெட்டர் உயர்வகை டயர் விமர்சனத்தை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய வாகனங்களுக்கான டயர் விற்பனையில் எம்ஆர்எஃப் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக டயர் தயாரிப்புத் துறையில் எம்ஆர்எஃப் நீண்ட பாரம்பரியம் கொண்ட நிறுவனமாக விளங்குகிறது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், தற்போது மெட்ஸீலர், பைரெல்லி போன்ற பிராண்டுகளுக்கு போட்டியாக பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளுக்கான உயர் வகை டயர் மாடலை எம்ஆர்எஃப் நிறுவனம் அறிமுகம் செய்தது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மாசெட்டர் என்ற பெயரில் அழைக்கப்படும், இந்த டயருக்காக www.ruleeverycurve.com என்ற விசேஷ இணையதளத்தையும் எம்ஆர்எஃப் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த இணையதளத்தில் இந்த டயரின் செயல்திறன் மற்றும் உயர் வகைக்கான பண்புகள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதுமட்டுமின்றி, இந்தியாவில் இருக்கும் பைக் பயணம் செல்வதற்கான சில சிறந்த வழித்தடங்கள் குறித்த விபரம் கொண்ட வரைபடத்தையும் கொடுத்துள்ளது. ஏற்கனவே, ரெவ்ஸ் என்ற பிராண்டில் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளுக்கான உயர்வகை டயர்களை எம்ஆர்எஃப் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், தற்போது மாசெட்டர் என்ற புதிய வகை டயரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரை சோதனை செய்வதற்கு எம்ஆர்எஃப் நிறுவனம் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் டெஸ்ட் டிரைவ் குழுவிடம் வழங்கி இருந்தது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த டயரை யமஹா எஃப்இசட் -16 பைக்கில் பொருத்தி அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். 1,000 கிமீ தூரம் வரை இந்த டெஸ்ட் டிரைவ் செய்ததில் கிடைத்த, அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த டயர் பைக்கின் கம்பீரத்தை கூட்டும் வகையில் இருக்கிறது. அத்துடன், தீ ஜூவாலைகள் போன்ற ட்ரெட் அமைப்பு கொடுகக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், டிசைன் இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் எழுகிறது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த டயர் மென்மையான கட்டுமான அணைபப்பை கொண்டுள்ளது. எனவே, ஏராளமானோர் பந்தய களத்தில் வைத்து சோதனை செய்த விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த டயர்கள் பெரும்பாலும் சாதாரண சாலைகளில் பயன்படுத்தும் பைக்குகளின் உரிமையாளர்களே வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த டயர் தினசரி பயன்பாட்டுக்கு எவ்வாறு இருக்கிறது என்பதை காணலாம்.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

"Rule Every Curve" என்பதே இதன் டேக்லைன். அதாவது, ஒவ்வொரு வளைவிலும் ஆட்சி செய் என்ற அந்த டேக்லைனுக்கு இது பொருத்தமானதாக இருக்கிறதா என்பதை சோதித்து பார்க்க, பெங்களூரில் இருக்கும் சில மோசமான வளைவுகள் நிறைந்த இடங்களை தேர்வு செய்து சென்றோம்.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டேக்லைனுக்கு தக்கவாறு இந்த டயர் வளைவுகளில் மிக சிறப்பான கையாளுமையை தந்தது. அதேநேரத்தில், இது மென்மையான கட்டமைப்பை பெற்றிருப்பதால், பஞ்சர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆம், நாம் சில மோசமான சாலைகளில் சோதனை செய்தபோது டயர் பஞ்சர் ஆனது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதேநேரத்தில், அந்த பஞ்சருடன் இரண்டு நாட்கள் அந்த பைக்கை ஓட்டினோம். ஆனாலும், வளைவுகளிலும் சிறப்பான கையாளுமையை தந்தது. பஞ்சரான டயருடன்தான் இந்த செய்தியில் காணும் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வளைவுகளில் மிகச் சிறப்பான நிலைத்தன்மையை வழங்கியது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பல இளைஞர்களின் கனவு பைக் மாடலான யமஹா எஃப்இசட் -16 மிகச் சிறந்த கையாளுமை கொண்ட மாடல். நாம் பயன்படுத்திய மாடல் சற்று பழமையானது. இருந்தாலும், அந்த பைக் மிகச் சிறந்த கையாளுமையை வழங்கியதற்கு மாசெட்டர் டயரும் மிக முக்கிய காரணம் என்று உணர முடிந்தது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மேலும், மழை பெய்த சமயத்திலும் இந்த டயரை வளைவுகளில் வைத்து சோதனை செய்தோம். அப்போது, ஓட்டுபவரின் கட்டளைக்கு ஏற்ப மிக சரியான கோணத்தில் திருப்பங்களை கடக்கிறது. இந்த பைக்கில் முன்புறத்தில் எம்ஆர்எஃப் ஸாப்பர் எஃப்எக்ஸ் டயர் பொருத்தப்பட்டு இருந்தது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயர் மோசமான சாலைகளில் கூட சிறப்பான நிலைத்தன்மையை வழங்குகிறது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த டயரானது 80/90-17 என்ற அளவில் முன்புற சக்கரத்திற்கும், 100/90-17 என்ற அளவிலிருந்து 140/70-17 என்ற அளவு வரை பின்புற சக்கரங்களுக்கும் கிடைக்கிறது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை விலையில் புதிய எம்ஆர்எஃப் மாசெட்டர் டயர் மாடல்கள் கிடைக்கிறது.

எம்ஆர்எஃப் மாசெட்டர் டயரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகளிடம் எம்ஆர்எஃப் பிராண்டுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில், பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களையும் இந்த டயர் வெகுவாக கவரும் என்று கூறலாம்.

Most Read Articles
மேலும்... #விமர்சனம் #review
English summary
MRF launched its new tyre series named Masseter last year and Invited a few automotive journalists as well as experienced riders to test it out. Initial impressions from these riders on the track about the tyre were excellent, but how would it perform on the open roads? We find out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X