வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

இந்திய இருசக்கர வாகன சந்தையை பொறுத்தவரையில் பஜாஜ் பல்சர் பிரபலமான மற்றும் முன்னணி நிறுவனத்தின் பிராண்ட் ஆகும். பல்சர் பிராண்டில் இருந்து இதுவரையில் 70க்கும் அதிகமான நாடுகளில் மில்லியனுக்கும் அதிகமான மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் பைக்குகளுக்கு கிட்டத்தட்ட 20 வருட வரலாறு உள்ளது. முதல் பல்சர் பைக்கை 2001 அக்டோபரில் அறிமுகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இத்தனை வருடங்களில் பல செயல்திறன்மிக்க பல்சர் மாடல்களை விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. இந்த வகையில் சமீபத்தில், கடந்த அக்.28ஆம் தேதி முற்றிலும் புதிய பல்சர் 250 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

என்250 & எஃப்250 என்கிற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இவை தான் தற்போதைக்கு அளவில் பெரிய என்ஜினை கொண்ட பல்சர் பைக்குகளாகும். இதில் நாக்டு வெர்சனான என்250 பைக்கை இயக்கி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இதன் மூலம் இந்த புதிய 250சிசி பல்சர் பைக்கை பற்றி நாங்கள் அறிந்து கொண்டவைகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

டிசைன் & ஸ்டைல்

இந்த புதிய பல்சர் 250 பைக்குகளை வடிவமைத்தது நிச்சயம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு ஓர் சவாலான காரியமாக இருந்திருக்கும். ஏனெனில் விற்பனையில் உள்ள பல்சர் பைக்குகளின் கேரக்டர் லைன்களை இவற்றில் வழங்க வேண்டும் (அப்போதுதான் அவற்றுடன் ஒத்து போகும்), அதேநேரம் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் தயாரிப்பை வழங்க வேண்டும்.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

இந்த அளவிற்கு நிபந்தனைகள் இருந்த போதிலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் இவற்றை வடிவமைப்பதில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பெட்ரோல் டேங்க் பகுதியில் இருந்து பின்பக்க முனை வரையில் கூர்மையான லைன்கள் ஆரம்ப காலக்கட்ட பல்சர் பைக்குகளில் இருந்து அடையாளமாக வழங்கப்பட்டு வருகின்றன.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

இவை இந்த 250சிசி பைக்குகளில் சற்று பருமனான தோற்றத்துடன் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் பல்சர் பைக்குகளின் மற்றொரு அடையாளமான இரு-கோடு டிசைனிலான பின்பக்க எல்இடி டெயில்லைட் அமைப்பு இந்த புதிய பைக்குகளிலும் சில மாற்றங்களுடன் தொடரப்பட்டுள்ளன. இந்த அடையாள அம்சங்களை தவிர்த்து மற்றவை அனைத்தும் இந்த புதிய பல்சர் பைக்குகளில் முற்றிலும் புதியவை.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

நாம் இந்த செய்தியில் பார்க்கும் என்250 பைக்கானது, சட்டென்று பார்க்கும்போது பிரபலமான பல்சர் என்.எஸ்200 பைக்கை ஞாபகப்படுத்தலாம். ஏனெனில் இவை இரண்டும் பஜாஜ் பல்சர் பிராண்டின் நாக்டு மோட்டார்சைக்கிள்கள். இருப்பினும் புதிய என்250, என்எஸ்200 உடன் ஒப்பிடுகையில் தோற்றத்தில் ஸ்போர்டியானதாக, பலரை வெகுவாக கவரக்கூடியதாக மாடர்ன் தரத்தில் உள்ளது.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

குறிப்பாக முன்பக்கம் இவை இரண்டிற்கும் இடையே முற்றிலும் வித்தியாசமானவைகளாக உள்ளன. புதிய என்250 பைக்கில் எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப் அமைப்பானது இரு-கண் மற்றும் திறந்த வாய் போன்றதான டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய முன்பக்க தோற்றமே என்250 பைக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

இதற்கு மேலே அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் பல்சர் என்250 பைக்கில் வழங்கப்பட்டுள்ள ஒற்றை-துண்டு ஹேண்டில்பார் மற்றும் ஸ்விட்ச் கியர் உள்ளிட்டவையும் புதியவை ஆகும். இருக்கை அமைப்பு இரண்டாக பிளவுப்பட்ட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்த நாக்டு மோட்டார்சைக்கிளின் தோற்றத்திற்கு கணக்கச்சிதமாக பொருந்துகிறது.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

250சிசி பைக் என்பதால் சற்று பிரீமியமான தோற்றத்திற்காக என்ஜின் அமைப்பின் வெளிப்பகுதி டார்க் கோல்டு நிறத்திலும், அதற்கு கீழே என்ஜின் பாதுகாப்பான் பைக்கின் உடல் நிறத்திலும் வழங்கப்பட்டுள்ளன. பல்சர் 250 பைக்குகளின் ஸ்டைலை பற்றி பார்க்கும்போது, நிச்சயம் இவற்றின் நறுக்கப்பட்ட, அளவில் சிறிய எக்ஸாஸ்ட் குழாயினை பற்றி கூறியே ஆக வேண்டும்.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

இரட்டை-முனைகளை கொண்ட எக்ஸாஸ்ட் குழாய்க்கு சில்வர் நிறம் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த பைக்கிற்கும் பளிச்சிடும் நிறத்தை வழங்குகிறது. மொத்தமாக தற்கால மாடர்ன் இளம் தலைமுறையினர் விரும்பக்கூடிய ஸ்டைலில் என்250 பைக்கை பஜாஜ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. எனவே என்250-ஐ வாங்கும் எவர் ஒருவரும் பைக்கின் தோற்றத்தை பார்த்து ஏமாற்றம் அடைய வாய்ப்பே இல்லை.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

தொழிற்நுட்ப அம்சங்கள்

ஆனால் உண்மையில் நமக்கு ஏமாற்றத்தை தரக்கூடிய பகுதி இதுதான். குறைவான விலை மோட்டார்சைக்கிள்களில் கூட ப்ளூடூத் இணைப்பு வழங்கப்படும் நிலையில், இந்த 250சிசி பைக்குகளில் மிகவும் அடிப்படையான தொழிற்நுட்ப அம்சங்களே வழங்கப்பட்டுள்ளன. ஹெட்லேம்பிற்கு மேல் வழக்கமான அன்லாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரே வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தோம்.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

இருப்பினும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் செட்-அப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது வேகமானி, எச்சரிக்கை விளக்குகள் உள்ளிட்டவற்றின் இடம் மாற்றப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், பயணம் செய்யப்பட்டுள்ள தொலைவு, எரிபொருள் அளவு, எரிபொருள் திறன் உள்ளிட்டவற்றை அறியலாம்.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

என்250 பைக்கின் சராசரியான எரிபொருள் திறன் எண்ணை பஜாஜ் பொறியியலாளர்கள் கொடுத்துள்ளனர். ட்ரிப் மீட்டரில் கணக்கிடப்படும் பயண தூரத்தை அடிப்படையாக கொண்டு இந்த சராசரி எரிபொருள் திறன் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்விட்ச்கியருக்கு பின்னால் வழக்கம்போல் விளக்கு எரிகிறது. பைக்கில் வழங்கப்படும் பொத்தான்களின் தரத்தில் எப்போதும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமரசம் ஆனதில்லை.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

கூடுதல் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போனை பைக்கின் வாயிலாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதியும் இந்த புதிய பல்சர் பைக்கில் உள்ளது. இத்தனை இருந்தும் ப்ளூடூத் இணைப்பு இல்லாதது நிச்சயம் என்250 பைக்கின் விற்பனையில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தும். பஜாஜ் நிறுவனம் மொத்த பல்சர் பைக்குகளையும் தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றவாறு அப்டேட் செய்ய தயாராகி வருகிறது. அப்போதாவது என்250-இல் இணைப்பு வசதிகள் வழங்கப்படுகின்றனவா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

என்ஜின் & செயல்திறன் & ரைடிங் அனுபவம்

மேற்கூறியவாறு தொழிற்நுட்ப அம்சங்களில் சற்று பின்தங்கி இருந்தாலும் பல்சர் பைக்குகளின் விற்பனை எல்லா மாதங்களிலும் நல்லப்படியாக இருப்பதற்கு காரணம், இவற்றில் பொருத்தப்படும் பஜாஜ் நிறுவனத்தின் என்ஜினே. இருப்பினும் இந்த என்250-இல் புதிய 249சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், ஆர்வத்துடனே இந்த பல்சர் பைக்கில் பயணம் செய்ய ஆயத்தமாகினோம்.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-இல் 24.1 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 21.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் பின் சக்கரத்தை இயக்கும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் & உதவி க்ளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது. எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து வெளிவரும் என்ஜினின் உறுமல் சத்தம் மிகவும் பயமுறுத்தக்கூடியதாகவும் இல்லை, அதேநேரம் மொத்தமாக அமைதியாகவும் இல்லை, சரியான அளவில் உள்ளது.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

எக்ஸாஸ்ட் சத்தம் கிட்டத்தட்ட பல்சர் 220-இல் இருந்து வெளிவருவதை போன்றே உள்ளது. சிறிய மாற்றம், அதனை காட்டிலும் என்250-இல் சத்தம் சற்று வேகமாக வெளிவருகிறது. இதன் என்ஜின் அதிகப்பட்சமாக 24.1 பிஎச்பி ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியது என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தான் கூறுகிறதே தவிர்த்து, அந்த அளவிற்கு என்ஜின் ஆற்றல் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என பைக் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

இருப்பினும் வேறொரு கண்ணோட்டத்தில் உலகை பார்க்க விரும்புவோருக்கு தேவையான என்ஜின் ஆற்றல் இயக்கத்தின்போது பல்சர் என்250 பைக்கில் கிடைக்கும். 3,000 ஆர்பிஎம் வேகத்தின் கீழ் இருக்கும் வரை என்ஜின் அதிர்வுறுவதை உணர முடிகிறது. 3,000 ஆர்பிஎம்-மிற்கு மேல் அந்த அதிர்வு இல்லை. 5,000 - 8,000 ஆர்பிஎம் வேகத்தில் என்ஜின் சவுகரியமான, அதேநேரம் அதிர்வு இல்லாத ரைடிங்கை வழங்குகிறது.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

நிறத்தேர்வுகள், விலை & போட்டி

ரேசிங் சிவப்பு & டெக்னோ க்ரே என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் புதிய பல்சர் என்250 பைக்கை பெறலாம். இந்த இரு நிறங்களிலும் பைக் உண்மையில் அட்டகாசமாக உள்ளது. டெக்னோ க்ரே நிறம் இந்த நாக்டு மோட்டார்சைக்கிளிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. பஜாஜ் பல்சர் என்250 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.1.38 லட்சம்.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

250சிசி பைக்கை இவ்வளவு குறைவான விலையில் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் மட்டுமே முடியும். சந்தையில் இந்த பைக்கிற்கு யமஹா எஃப்.இசட்25 மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் 250 முக்கியமான போட்டியாக விளங்குகின்றன. பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் மற்றொரு 250சிசி நாக்டு மோட்டார்சைக்கிளாக டோமினார் 250-ஐ விற்பனை செய்து வருகிறது.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

ட்ரைவ்ஸ்பார்க்கின் கருத்து

தோற்றம் மற்றும் ஸ்டைல் உடன் ஒப்பிட்டால் பல்சர் என்250 அதன் போட்டி மாடல்களை காட்டிலும் பல படி முன்னோக்கி உள்ளது. ஏனெனில் மற்றவை பல மாதங்களாக விற்பனையில் உள்ளன. ஆனால் என்250 இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இயந்திர பாகங்களில், 6 கியர்களை கொண்ட பைக்கில் எவ்வாறு லிக்யுடு-கூல்டு என்ஜினை பஜாஜ் நிறுவனம் பொருத்தலாம்? என கேள்விகள் எழ துவங்கியுள்ளன.

வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பைக்!! பஜாஜ் பல்சர் என்250-இன் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஃபர்ஸ்ட் ரிவியூ!

என்250-ஐ பார்க்கும்போது இந்தியாவில் தோல்வியடைந்த மிகவும் சில பல்சர் மாடல்களில் ஒன்றான 220எஸ் நம் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. பல்சர் பைக்குகளுக்கு சிறப்பு சேர்ப்பதே அவற்றின் செயல்படுதிறன் தான். ஆனால் என்250-இல் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் லிக்யுடு-கூல்டு என்ஜின் உடன் வழங்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் கடந்து பல்சர் என்250 சந்தையில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles

English summary
Bajaj Pulsar N250 First Review.
Story first published: Saturday, November 6, 2021, 10:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X