புதிய பெனெல்லி டிஎன்டி899 ஸ்போர்ட்ஸ் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Posted By:

இந்தியாவின் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கும் இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பிரிமியம் பைக் தயாரிப்பு நிறுவனம் பல்வேறு எஞ்சின் வகைகளில் பைக் மாடல்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. 300சிசி முதல் 1190சிசி வரையிலான பெனெல்லி பைக்குகள் விரைவில் இந்திய சந்தையில் தடம் பதிக்க உள்ளன.

இந்த நிலையில், பெனெல்லி பைக் மாடல்களை சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம் என்று தெரிவித்திருந்தோம். ஏற்கனவே, பெனெல்லி டிஎன்டி600 பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை வழங்கியிருந்தோம். இந்த நிலையில், பெனெல்லியின் மற்றொரு மாடலான பெனெல்லி டிஎன்டி 899 பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்தபோது கிடைத்த அனுபவங்களை வாசகர்களுடன் இந்த செய்தித்தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

பெனெல்லி டிஎன்டி 899 பைக் டிஎன்டி600 மாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் சிறப்பம்சங்கள், குறைகளை தொடர்ந்து காணலாம்.

 2.டெஸ்ட் டிரைவ் மாடல்

2.டெஸ்ட் டிரைவ் மாடல்

மாடல்: 2014 டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி899

எஞ்சின்: 3 சிலிண்டர், 899சிசி

கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு மேனுவல்

இடம்: புனே

3.முகப்பு டிசைன்

3.முகப்பு டிசைன்

முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டிருக்கிறது இந்த நேக்டு ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் பைக். நேக்டு ஸ்டைல் பைக்குகளுக்கே உரித்தான ஹெட்லைட் டிசைன், ரியர் வியூ கண்ணாடிகள், முன்புறத்தில் நீண்டிருக்கும் சைடு ஸ்கூப் முன்புறத்திற்கு வலு சேர்க்கின்றன.

4.பக்கவாட்டு டிசைன்

4.பக்கவாட்டு டிசைன்

கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண காம்பினேஷில் கலக்கலாக இருந்தது நாம் டெஸ்ட் டிரைவ் செய்த மாடல். நேக்டு ஸ்டைல் மாடல் என்பதால், இதன் ஃப்ரேம் வெளியில் தெரியும்படி இருப்பதோடு, அதில் சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க் டிசைன் பைக்கின் முறுக்கி நிற்பது போல் காட்டுகிறது. மேலும், சக்கரங்களில் இருக்கும் பெட்டல் டிஸ்க்குகளும் பாதுகாப்புக்கு மட்டுமின்றி டிசைனுக்கு வலு சேர்க்கின்றன. ரேடியேட்டர் மற்றும் கூலிங் சிஸ்டம் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது வித்தியாசப்படும் அம்சம்.

 5. பின்புற டிசைன்

5. பின்புற டிசைன்

அகலமான டயர் கம்பீரத்தை கொடுப்பதோடு, எஞ்சினிலிருந்து மூன்று குழாய்களாக புறப்படும் புகைப்போக்கி குழாய், இருக்கைக்கு கீழாக வந்து ஒன்றாக முடிகிறது. புகைப்போக்கி குழாய்க்கு மேற்புறத்தில் இரண்டு பிரேக் எச்சரிக்கை விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் எப்படி பார்த்தாலும் முரட்டுத் தனமாகவே காட்சியளிக்கிறது.

6. எஞ்சின்

6. எஞ்சின்

பெனெல்லி டிஎன்டி899 பைக்கில் 3 சிலிண்டர்கள் கொண்ட 899சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 121 எச்பி பவரையும், 88என்எம் டார்க்கையும் அளிக்கம் வல்லமை கொண்டது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மூலம் எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தப்படுகிறது. வெட் கிளட்ச் சிஸ்டத்துடன் கூடிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

7.எஞ்சின் செயல்திறன்

7.எஞ்சின் செயல்திறன்

இந்த பைக்கின் எஞ்சின் சக்தியை சீராக வெளிப்படுத்துவதால், முதல்முறையாக ஓட்டுபவர்களுக்கும் உற்சாகத்தை தருகிறது. தோற்றத்தில் முரட்டுத்தனமாக இருந்தாலும், சக்தியை சீராக வெளிப்படுத்துவது அதிக நம்பிக்கையுடன் ஓட்ட முடிகிறது. எஞ்சின் அதிக அதிர்வுகள் கொண்டதாக இருப்பது சில சமயங்களில் எரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே, வாடிக்கையாளர்கள் சிலர் ஜப்பானிய தயாரிப்புகளுக்கு செல்ல முடிவு எடுக்கலாம். அதேவேளை, ஜப்பானிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் எஞ்சின் சப்தத்தை பார்த்து சலித்தவர்களுக்கு, இது சிறப்பான தேர்வாக அமையலாம். டிசைன் மற்றும் எஞ்சின் முற்றிலும் ஜப்பானிய பைக்குகளிலிருந்து வேறுபட்டிருப்பதாலேயே இவன் வேற மாதிரி என்று டைட்டிலில் தெரிவித்திருக்கிறோம்.

8.கையாளுமை

8.கையாளுமை

கையாளுமை சுமாராக இருக்கிறது. வளைவுகளில் திரும்பும்போது, இந்த பைக் கொஞ்சம் கனமான உணர்வை தருகிறது. ஆனால், நேரான பாதைகளில் தரைப்பிடிப்புடன் செல்வதால் நம்பிக்கையுடன் ஆக்சிலேட்டரை முறுக்கலாம்.இந்த பைக்கின் எடைதான் பைக்கிற்கு ஒரு மைனஸ் பாயிண்ட்டாக சொல்லலாம்.

9. ரைடிங் பொஷிசன்

9. ரைடிங் பொஷிசன்

ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக்குகளை போன்ற சிறப்பான ரைடிங் பொசிஷனை கொண்டிருக்கிறது. நீண்ட தூர பயணத்தின்போதுகூட அலுப்பு தராது.

10. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

10. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

கச்சாமுச்சா என்று இல்லாமல் எளிமையாகவும், நாகரீகமாகவும் இருக்கிறது இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர். அதிவேகத்தில் செல்லும்போது தெளிவாக பார்க்க முடிகிறது. இதுபோன்ற பைக்குகளில் இது மிகவும் முக்கியம். அனலாக் டாக்கோமீட்டருடன், பிற தகவல்களை பெறுவதற்கு ஏதுவாக டிஜிட்டல் திரை கொடுக்கப்பட்டுள்ளது.

11. சுவிட்சுகள் தரம்

11. சுவிட்சுகள் தரம்

சுவிட்சுகள் கைகளுக்கு லாவகமான இடத்தில் இருக்கிறது. ஆனால், அவை இயக்குவதற்கு மென்மையாக இல்லை. கொஞ்சம் கூடுதல் அழுத்தம் தரவேண்டியுள்ளது. மென்மையான தொடுதல் உணர்வை தந்தாலும், இன்னும் கொஞ்சம் சாஃப்ட்டாக இருந்திருக்கலாம் என்று உள் மனது கூறுகிறது.

12. பிடித்த விஷயம் -1

12. பிடித்த விஷயம் -1

இதன் டிசைன் தனித்துவம் பிடித்திருக்கிறது.சாலையில் செல்லும்போது அனைவரின் கவனத்தை ஈர்க்கும். இத்தாலிய டிசைனில் உருவான பைக் என்பதற்கு சான்றாக மிக நேர்த்தியாக இருக்கிறது.

 13. பிடித்த விஷயம் -2

13. பிடித்த விஷயம் -2

முன்புற பிரேக் செயல்திறன் சிறப்பாக இருக்கிறது. முன்புறத்தில் இரட்டை ரோட்டர்கள் கொண்ட பிரெம்போ பிரேக் சிஸ்டம் சிறப்பான செயல்திறனை காட்டுகிறது. மேலும், பிரேக் ரோட்டர்களின் டிசைனும் சக்கரங்களில் முரட்டுத்தனமாக தெரிகிறது.

 14. பிடித்த விஷயம் -3

14. பிடித்த விஷயம் -3

வழக்கமாக எஞ்சினுக்கு முன்பகுதியில் ரேட்டியேட்டர் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால்,இந்த பைக்கில் பெட்ரோல் டேங்கின் பக்கவாட்டையொட்டி, ரேடியேட்டர் ஃபேன் உள்ளது. டிசைனுக்கு வலு சேர்க்கும் அம்சமாக இருக்கிறது.

 15. பிடிக்காத விஷயம் -1

15. பிடிக்காத விஷயம் -1

பின்புறத்திலும் பெட்டல் ரோட்டர் பிரேக்குகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், எதிர்பார்த்த செயல்திறன் இல்லை. இது நம்பிக்கையை குறைப்பதாக இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இருப்பது அவசியம் என்பதை பெனெல்லி உணர வேண்டியது அவசியம்.

 16. பிடிக்காத விஷயம் -2

16. பிடிக்காத விஷயம் -2

இருக்கைக்கு கீழே இருக்கும் புகைப்போக்கி குழாய் பார்ப்பதற்கு கவர்ச்சியை கொடுத்தாலும், பின்னால் அமர்ந்து செல்பவருக்கு தொந்தரவை கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதன் புகைப்போக்கி குழாய் அதிக வெப்பத்தை வெளிப்படுத்துவதால், பின்னால் அமர்பவருக்கு வெப்பத்தின் தாக்கம் தெரியும்.

 17. பிடிக்காத விஷயம் - 3

17. பிடிக்காத விஷயம் - 3

ரியர் வியூ கண்ணாடி மிகச்சிறியதாக இருப்பதுடன், பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக பார்க்க முடியவில்லை. இது பெரும் குறையாக இருக்கிறது.

 சாதகங்கள்

சாதகங்கள்

தனித்துவமான டிசைன்

இந்தியாவில் அசெம்பிள்

பிரேம்போ பிரேக் சிஸ்டம்

அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன்

பாதகங்கள்

பாதகங்கள்

அறிமுகமில்லாத பிராண்டு

விலை பற்றிய விபரம் தெரியவில்லை

அதிக அதிர்வுகள் கொண்ட எஞ்சின்

நெருக்கடியான ஓட்டுதல் அமைப்பு

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

புதிய பெனெல்லி டிஎன்டி899 பைக்கிற்கு நேரடி போட்டியாளர்கள் தற்போது இல்லை. ஆனால், 3 சிலிண்டர் எஞ்சின் கொண்ட பைக் மாடல்களாக பார்க்கப் போனால், டிரையம்ஃப் நிறுவனம் மட்டுமே 3 சிலிண்டர் எஞ்சின் கொண்ட மாடல்களை விற்பனை செய்கிறது. டிரையம்ஃப் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் டிரிப்பிள் மற்றும் ஸ்பீடு ட்ரிப்பிள் மோட்டார்சைக்கிளுக்கு இடையிலான மாடலாக வருகிறது. அனைவரையும் பைக்காக கூற முடியாது என்பதால், தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வாங்குவதற்கான பைக் மாடலாக இருக்கும்.

 
English summary
Last time we tested their BN600i, which will be sold in India under the nomenclature of TNT600. Now we test their most raw and meanest looking machine, the TNT899. It is a totally different motorcycle from what we tested out previously.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark