புதிய டிவிஎஸ் விக்டர் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

Written By:

நம் நாட்டின் மிகவும் வெற்றிகரமான பைக் மாடல்களில் ஒன்று டிவிஎஸ் விக்டர். சந்தையின் நிலவரத்திற்கு தகுந்தாற்போல், புதிய மாடல்கள் களமிறக்கப்பட வேண்டிய கட்டாயத்தில், டிவிஎஸ் விக்டர் பிராண்டுக்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் விடை கொடுத்தது.

இந்தநிலையில், டிசைன் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களில் முற்றிலும் புதிய டிவிஎஸ் விக்டர் பைக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கை ஓட்டி பார்க்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்த் தளத்திற்கு சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் வழங்கியது. பெங்களூரில் வைத்து இந்த புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கை சோதனை செய்தோம். அதில், கிடைத்த சாதக, பாதக அம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன்

டிசைன்

பழைய விக்டர் மாடல்களுக்கும் புதிய விக்டர் மாடலுக்கும் பெயர் மட்டுமே ஒத்துப்போகிறது. மற்றபடி, டிசைனில் ஒற்றுமைகள் இல்லை. முற்றிலும் புதிய டிசைனில் வெளிவந்துள்ளது.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

முகப்பில் பெரிய ஹெட்லைட் ஸ்கூப் கம்பீரத்தை வழங்குகிறது. கூர்மையான லைன்கள், கருப்பு நிற மேட் ஃபினிஷ் சக்கரங்கள் போன்றவை கவர்ச்சியாக இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் பெரியண்ணன் போன்று இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கில் 109சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும்,9.4 என்என் டார்க்கையும் வழங்கும். இந்த பைக்கில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

ஸ்மூத் எஞ்சின்

ஸ்மூத் எஞ்சின்

இந்த பைக்கின் எஞ்சின் மிகவும் மென்மையாக இருக்கிறது. சிறப்பாக டார்க்கை வழங்கும் இந்த பைக்கின் அதிகபட்ச பவரை 4,000 ஆர்பிஎம்.,மில் வெளிப்படுகிறது.

செயல்திறன்

செயல்திறன்

இந்த பைக் 0 - 60 கிமீ வேகத்தை வெறும் 7.2 வினாடிகளில் எட்டிவிடுகிறது. பிற மாடல்களை விட இது மிக விரைவான ஆக்சிலரேசன் கொண்ட பைக மாடல்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

புதிய டிவிஎஸ் விக்டர் பைக் லிட்டருக்கு 76 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் சராசரியாக லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை தரும் என்பது எங்களது டெஸ்ட் டிரைவ் மூலமாக தெரிய வந்தது.

சிட்டி பைக்

சிட்டி பைக்

இந்த பைக் நகர்ப்புறத்தில் பயணிக்க ஏற்றதாக கூறலாம். 60 கிமீ வேகத்தை தாண்டும்போது, எஞ்சின் திணறுகிறது. மேலும், நெடுஞ்சாலை பயணங்களுக்கு இதன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் போதுமானதாக இல்லை. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருந்திருந்தால் நெடுஞ்சாலைக்கும் ஏற்றதாக இருந்திருக்கும். இந்த பைக்கின் கியர்பாக்ஸ் சிறப்பாக இல்லை. அதேசமயத்தில் க்ளட்ச் இயக்கம் மிருதுவான அனுபவத்தை வழங்குகிறது.

மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோல்

டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை ஒத்திருக்கிறது இதன் மீட்டர் கன்சோல். எரிபொருள் அளவை காட்டும் வசதி, ஸ்பீடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர் போன்றவை டிஜிட்டல் திரை மூலமாக பார்க்க முடியும். வெள்ளை வண்ண டாக்கோமீட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டாக்கோமீட்டர்

டாக்கோமீட்டர்

இதன் டாக்கோமீட்டரில் எக்கானமி மற்றும் பவர் ஆகிய இருவிதமான இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 4,000 ஆர்பிஎம்.,மை தாண்டுபோது பவர் இண்டிகேட்டர் சிவப்பு வண்ணத்தில் காட்டுகிறது. எக்கானமி இண்டிகேட்டரில் ஓட்டும்போது அதிக மைலேஜ் வழங்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஓட்டுதல் தரம் & கையாளுமை

ஓட்டுதல் தரம் & கையாளுமை

இந்த பைக்கை 65 கிமீ வேகத்திற்குள் ஓட்டும்போது சிறப்பான கையாளுமை கொண்டதாக இருக்கிறது. இதன் சேஸீ அமைப்பும், முன்புற டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் உள்ள சீரிஸ் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர் செட்டிங் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு, சிறந்த கையாளுமையையும், மென்மையான பயணத்தையும் வழங்குகின்றன.

சொகுசான இருக்கை

சொகுசான இருக்கை

இதன் சஸ்பென்ஷன் பள்ளம் மேடுகளையும் எளிதாக சமாளிப்பதால், சொகுசான பயணத்தை வழங்குகிறது. இதன் இருக்கை அமைப்பும் சிறப்பாக இருக்கிறது.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

நாம் டெஸ்ட் டிரைவ் செய்த விக்டர் பைக் முன்புறத்தில் பெட்டல் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொண்டது. இந்த பிரேக் சிஸ்டம் மிகவும் சிறப்பான செயல்பாட்டை எமது டெஸ்ட் டிரைவின்போது வெளிப்படுத்தியது. இது ஓட்டுபவருக்கு மிகவும் தன்னம்பிக்கையான உணர்வை வழங்கும் என்று கூற முடியும்.

கட்டுமான தரம்

கட்டுமான தரம்

டிவிஎஸ் பைக்குகளில் மிகவும் சிறந்த கட்டுமானத் தரம் கொண்ட மாடல்களில் ஒன்றாக கூறலாம். இதிலுள்ள பிளாஸ்டிக் பாகங்களும் மிகவும் தரமானவையாக இருக்கின்றன. அதிவேகத்தில் கூட பிளாஸ்டிக் பாகங்களில் அதிர்வுகள் இல்லை.

பெயிண்ட் ஃபினிஷ்

பெயிண்ட் ஃபினிஷ்

அதேபோன்று, இதன் பெயிண்டிங்கும் மிக சிறப்பாக இருக்கிறது. அதேநேரத்தில், பெட்ரோல் டேங்க் மூடியை சுற்றிலும் பெயிண்ட் ஃபினிஷ் சிறப்பாக இல்லை. இது இந்த பைக்கில் மட்டுமா அல்லது எல்லா பைக்குகளிலும் இருக்குமா என்பது தெரியவில்லை.

இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

இருக்கை அகலமாகவும், நீளமாகவும் ஓர் சிறப்பான கம்யூட்டர் ரக பைக் மாடலாக இருக்கிறது. மேலும், இருக்கையின் கான்ட்ராஸ்ட் தையல் வேலைப்பாடுகளும் கவர்கிறது.

ஹசார்டு இண்டிகேட்டர்

ஹசார்டு இண்டிகேட்டர்

இந்த பைக்கில் பாஸ் சுவிட்ச், அனைத்து இண்டிகேட்டர் விளக்குகளும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்து எச்சரிக்கும் ஹசார்டு லைட்டுகள் போன்றவை முக்கியமானவையாக இருக்கின்றன.

ட்யூப்லெஸ் டயர்கள்

ட்யூப்லெஸ் டயர்கள்

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கில் டிவிஎஸ் ரெமோரா ட்யூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை மிகுந்த தரைப்பிடிப்பை வழங்குவதோடு, பஞ்சரானால் கூட உடனடியாக காற்று இறங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

டர்னிங் ரேடியஸ்

டர்னிங் ரேடியஸ்

பழைய விக்டர் ஜிஎக்ஸ் பைக் போன்றே, இந்த புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கும் மிக குறைவான டர்னிங் ரேடியஸ் கொண்டதாக இருக்கிறது. இது குறுகிய சாலைகளில் திருப்புவதற்கு ஏற்ற பைக் மாடலாக இருக்கும்.

ஹெட்லைட்

ஹெட்லைட்

ஹெட்லைட் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. ஹை பீம், லோ பீம் பிரகாசத்தை காட்டும் படம்.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

8 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும், 2 லிட்டர் ரிசர்வ் வசதியும் உள்ளது.

மீட்டர் கன்சோர் பேக்லிட்

மீட்டர் கன்சோர் பேக்லிட்

இரவிலும் மிக தெளிவாக தெரியும் மீட்டர் கன்சோலின் பேக்லிட் சிறப்பாக இருக்கிறது.

பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தம்

பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தம்

பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்த விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டயர் அளவு

டயர் அளவு

முன்புறத்தில் 2.75, 17-இன்ச் டயரும், பின்புறத்தில் 3.0, 17-இன்ச் அளவுடைய டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

முன்புறத்தில் 240 மிமீ விட்டமுடைய பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 110 மிமீ விட்டமுடைய டிரம் பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இடவசதி

இடவசதி

ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைப்பதற்கான இருக்கைக்கு கீழேயுள்ள இடவசதி.

ப்ளஸ் என்னென்ன?

ப்ளஸ் என்னென்ன?

சிறப்பான கட்டுமானத் தரம்

சொகுசான கம்யூட்டர் பைக்

மென்மையான எஞ்சின்

சிறப்பான டிஸ்க் பிரேக் சிஸ்டம்

பிரகாசமான ஹெட்லை்

எளிதாக படிக்கக்கூடிய மீட்டர் கன்சோல்

அழகான வண்ணங்கள்

மைனஸ் என்னென்ன0?

மைனஸ் என்னென்ன0?

நெடுஞ்சாலைக்கு உகந்தது அல்ல

பெயிண்ட் ஃபினிஷிங்கில் குறைபாடுகள்

மோசமான கியர்பாக்ஸ்

ஆன்ரோடு விலை

ஆன்ரோடு விலை

புதிய டிவிஎஸ் விக்டர் டிரம் பிரேக் மாடல்: ரூ.56,500

புதிய டிவிஎஸ் விக்டர் டிஸ்க் பிரேக் மாடல்: ரூ.58,500

டெல்லி ஆன்ரோடு விலை விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த சாய்ஸா?

சிறந்த சாய்ஸா?

கண்டிப்பாக. மென்மையான எஞ்சின், சிறப்பான சஸ்பென்ஷன், சொகுசான பயணத்தை வழங்கும் பிரிமியம் கம்யூட்டர் ரக மோட்டார்சைக்கிளாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. குறைவான விலையில் சற்றே பிரிமியம் அம்சங்கள் கொண்ட கம்யூட்டர் ரக பைக் என்பதால், நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும்.

வாடிக்கையாளர் இலக்கு

வாடிக்கையாளர் இலக்கு

குறிப்பாக, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளரகளை வெகுவாக கவரும் என்று கூறலாம்.

பணத்திற்கு மதிப்பு

பணத்திற்கு மதிப்பு

பழைய விக்டர் மாடலை போன்று இல்லாமல் முற்றிலும் புதிய மாடலாக வந்திருப்பது புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கிற்கு மிகப்பெரிய பலம். மாடர்ன் டிசைன் மட்டுமின்றி, டிஸ்க் பிரேக், டிஜிட்டல் திரை கொண்ட மீட்டர் கன்சோல், ஹசார்டு வார்னிங் லைட், பாஸ் லைட், ட்யூப்லெஸ் டயர்கள் என கொடுக்கும் பணத்திற்கு நிறைவான பைக் மாடலாகவே இருக்கிறது புதிய டிவிஎஸ் விக்டர். எனவே, இந்த விலையில் பைக் வாங்க விரும்புவோர் நிச்சயமாக டிவிஎஸ் விக்டரையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கிற்கு ஹீரோ ஸ்பிளென்டர், ஹோண்டா லிவோ, ஹோண்டா ட்ரீம் வரிசை மாடல்கள், சுஸுகி ஹயாட்டே, பஜாஜ் பிளாட்டினா, மஹிந்திரா செஞ்சூரோ போன்ற மாடல்கள் போட்டியாக இருக்கும்.

டிவிஎஸ் விக்டர் பிராண்டு

டிவிஎஸ் விக்டர் பிராண்டு

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான பிராண்டு பெயர் விக்டர். கடந்த 2002ம் ஆண்டில் டிவிஎஸ் விக்டர் பிராண்டில் முதல் பைக் மாடல் வெளியிடப்பட்டது. மேலும், டிவிஎஸ் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் முதல் 4 ஸ்ட்ரோக் மாடல் என்ற பெருமைக்குரிய மாடலாக டிவிஎஸ் விக்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய தலைமுறை விக்டர்

புதிய தலைமுறை விக்டர்

பின்னர், விக்டர் ஜிஎல்எக்ஸ் என்ற 125சிசி மாலும் வந்தது. இந்த பைக் மைலேஜ் மற்றும் போட்டியாளர்களைவிட குறைவான விலை போன்ற காரணங்களால் வாடிக்கையாளரகளை கவர்ந்தது. இந்த நிலையில், டிவிஎஸ் விக்டர் பிராண்டில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்று கூறலாம்.

விக்டர் பிரியர்களுக்கு...

விக்டர் பிரியர்களுக்கு...

நீண்ட ஆண்டுகளாக பழைய டிவிஎஸ் விக்டர் பைக்கை பயன்படுத்தி வரும் விக்டர் பிரியர்கள், நிச்சயமாக புதிய பைக்கை வாங்கும் நேரமிது. உங்களது பழைய விக்டரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய விக்டரை வாங்குவது சரியான சாய்ஸாக இருக்கும்.

கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் சிறப்பு பார்வை!

கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் சிறப்பு பார்வை!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கின் பிரத்யேக படங்கள்!

புதிய டிவிஎஸ் விக்டர் டெஸ்ட் டிரைவ்

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கின் பிரத்யேக படங்கள்.

 
English summary
New Tvs Victor First Ride Impression In Tamil.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark