பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு சூப்பரான தீர்வு... நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் ரிவியூ!

கடந்த 19ம் நூற்றாண்டில்தான் சைக்கிள்கள் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன. மக்கள் மத்தியில் அவை உடனடியாக மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாக மாறின. 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 1 பில்லியனுக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் இருந்ததாக கூறப்படுகிறது. முதலில் சைக்கிள்களை வேலைக்கும் மற்றும் விவசாய பணிகளுக்கும்தான் பயன்படுத்தினர்.

ஆனால் இன்று பொழுதுபோக்கு, உடற்பயிற்சி, பயணம் என பல்வேறு விஷயங்களுக்காக சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு பொருளாகவும் கூட சைக்கிள்கள் திகழ்கின்றன. காலம் உருண்டோடினாலும் கூட, சைக்கிள்களின் அடிப்படை டிசைன் பெரிதாக மாற்றமடையவில்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக சைக்கிள்கள் தற்போது நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில், சைக்கிள்கள் பல புதுமையான தொழில்நுட்ப வசதிகளை பெற்றுள்ளன. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் சைக்கிள்கள் இன்னும் நன்கு பிரபலமடையும் என்பது வெளிப்படையான உண்மை.

இந்தியாவை பொறுத்தவரை நெக்ஸூ மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனத்தின் ரோம்பஸ் ப்ளஸ் (Nexzu Rompus+) எலெக்ட்ரிக் சைக்கிளை நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு சூப்பரான தீர்வு... நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் ரிவியூ!

டிசைன்

நாங்கள் ஓட்டி பார்த்த நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள், நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் முன் பகுதியில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின் பகுதியில் பாடியின் நிறத்திலேயே மட்கார்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு சூப்பரான தீர்வு... நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் ரிவியூ!

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் ஹேண்டில்பார் தடிமனாக உள்ளது. எலெக்ட்ரிக் டிரைவ்ட்ரெய்னிற்கான கண்ட்ரோல் பேனல் ஹேண்டில்பாரிலேயே வழங்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் ஃப்ரேம் அடிப்படையில் நெக்ஸு ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு சூப்பரான தீர்வு... நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் ரிவியூ!

ஃப்ரேமின் உள்ளே பேட்டரி வழங்கப்பட்டுள்ளதால், இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் வெளிப்புற தோற்றம் நன்றாக உள்ளது. வயர்களும் கூட ஃப்ரேமுக்கு உள்ளேயே வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் பின் பக்க டிசைன் எளிமையாக உள்ளது. பின் பக்க மட்கார்டில் ரெஃப்லெக்டர் பொருத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு சூப்பரான தீர்வு... நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் ரிவியூ!

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் 26 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் அலுமினியம் ரிம் வழங்கப்பட்டிருப்பதுடன், ஸ்போக்குகள் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் முன் மற்றும் பின் பகுதிகளில் இடம்பெற்றுள்ள பெட்டல் டிஸ்க்குகள் டிசைன் அம்சமாகவும் விளங்குகின்றன. அதே சமயம் பின் பக்க வீலின் மையத்தில் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. ஒருவரின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு இது பெரியது அல்ல. சைக்கிளுடன் நன்றாக பொருந்தி போய் விடுகிறது.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு சூப்பரான தீர்வு... நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் ரிவியூ!

வசதிகள்

நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிளில் வழங்கப்பட்டுள்ள வசதிகளின் பட்டியல் மிகப்பெரியது கிடையாது. ஆனால் தேவையான வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் முக்கியமான வசதிகள் பின்வருமாறு:

  • வாக் அஸிஸ்ட்
  • டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் சஸ்பென்ஸன்
  • ரைடிங் மோடுகள்
  • மூன்று ரைடு ஸ்பீடு
  • ட்யூயல் டிஸ்க் பிரேக்குகள்
  • நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் ஹேண்டில்பாரில் கண்ட்ரோல் பேனல் வழங்கப்பட்டுள்ளது. ரைடிங் ஸ்பீடு மற்றும் ரைடிங் மோடுகளை கட்டுப்படுத்த இது உதவுகிறது. ஹெட்லேம்ப்பை ஆன் செய்யவும், ஆஃப் செய்யவும் அங்கே ஸ்விட்ச்சும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதே கண்ட்ரோல் பேனல் மூலமாக எலெக்ட்ரிக் சர்க்யூட் ஆன் செய்யப்பட்டால் மட்டுமே இது வேலை செய்யும். இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் ஹாரன், நெரிசல் மிகுந்த மற்றும் சத்தமான இடங்களில் மற்றவர்களை எச்சரிக்கை செய்யும் அளவிற்கு ஒலி எழுப்பவில்லை. ஆனால் மற்ற சமயங்களில் நன்றாக இருக்கிறது.

    பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு சூப்பரான தீர்வு... நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் ரிவியூ!

    பவர்ட்ரெயின், செயல்திறன் & கையாளுமை

    நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிளில், 250W ஹப் மோட்டாரும், 5.2Ah பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளன. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு இரண்டரை மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை ஆகலாம். முழுமையான எலெக்ட்ரிக் மோடில், இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் ரேஞ்ச் 22 கிலோ மீட்டர்கள் எனவும், பெடலெக் மோடில் இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் ரேஞ்ச் 32 கிலோ மீட்டர்கள் எனவும் நெக்ஸூ நிறுவனம் தெரிவிக்கிறது.

    நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிளை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. சாதாரண சைக்கிளை ஓட்ட தெரிந்த யார் வேண்டுமானாலும், இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை எளிமையாக பயன்படுத்தலாம். எடையை தவிர மற்ற அனைத்து அம்சங்களிலும் சாதாரண சைக்கிள் போலவேதான் இது உள்ளது. எடை அதிகமாக இருப்பதற்கு காரணம் பேட்டரி தொகுப்பு.

    பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு சூப்பரான தீர்வு... நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் ரிவியூ!

    அதேபோல் எலெக்ட்ரிக் மோட்டார் இடம்பெற்றிருப்பதும், சாதாரண சைக்கிளிடம் இருந்து இதனை வேறுபடுத்துகிறது. எலெக்ட்ரிக் டிரைவ்ட்ரெய்னை ஆன்/ஆஃப் செய்வதற்கு கண்ட்ரோல் பேனலில் உள்ள ஆன்/ஆஃப் பட்டனை பயன்படுத்தலாம். இதனை ஆன் செய்யும்போது, அதுவாகவே பெடலெக் மோடிக்கு வந்து விடுகிறது. இது ஹைப்ரிட் போல செயல்படுகிறது. ரைடர் பெடல் செய்யும்போது, சக்தியை வழங்கி உதவி செய்கிறது.

    நீங்கள் பெடல் செய்ய தொடங்கும்போது பெடலக் மோடு உங்களை ஆச்சரியப்படுத்தும். ஏனெனில் டார்க் திறனில் திடீர் எழுச்சி ஏற்படுகிறது. முன்பக்க ஸ்ப்ராகெட்டிற்கு அருகே உள்ள சென்சார் அடிப்படையில் பெடலெக் மோடு இயங்குகிறது. முன்பக்க ஸ்ப்ராகெட் சுழலும்போது, ரைடர் பெடல் செய்கிறார் என்பதை புரிந்து கொண்டு, இது சக்தியை வழங்கி உதவி செய்யும்.

    பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு சூப்பரான தீர்வு... நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் ரிவியூ!

    நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், லோ, மீடியம் மற்றும் ஹை என மொத்தம் மூன்று ஸ்பீடு செட்டிங்குகளை இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் பெற்றுள்ளது. பெடலெக் மோடில் கூட இந்த ஸ்பீடு செட்டிங் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் ஹை-ஸ்பீடு சைக்கிளிங்கை மேற்கொள்ள விரும்பினால், ஹை செட்டிங் பயன்படுத்துவது நல்லது. அதுவே நெருக்கடியான இடங்கள் என்றால், லோ செட்டிங் பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும். முழுமையான எலெக்ட்ரிக் மோடுக்கும் இது பொருந்தும். இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. ஆனால் எலெக்ட்ரிக் மோடை ஆஃப் செய்து விட்டால், இந்த சைக்கிளை ஓட்டுவதற்கு சற்று கடினமாக உள்ளது.

    கையாளுமை என பார்த்தால், நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் இலகுவாக உள்ளது. அதேபோல் டயர்கள் நல்ல க்ரிப்பை வழங்குகின்றன. முன் பக்க சஸ்பென்ஸன் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் இந்த விலைக்கு இன்னும் அதிநவீன சஸ்பென்ஸனை நாம் எதிர்பார்க்க முடியாது. பின்புற சஸ்பென்ஸனுடன் இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் வந்திருந்தால், பயணம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் விலையை கருத்தில் கொள்ளும்போது, இது ஓகேதான். அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் இருக்கை மிருதுவாகவும், சௌகரியமாகவும் உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் சிறப்பான பயண அனுபவத்தை வழங்குகிறது.

    பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு சூப்பரான தீர்வு... நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் ரிவியூ!

    விலை, போட்டியாளர்கள் & வாரண்டி

    நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிளின் விலை 32,925 ரூபாய். விலையை கருத்தில் கொள்ளும்போது, எலெக்ட்ரிக் சைக்கிள் செக்மெண்ட்டில் நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் டாப்பில் உள்ளது என்றோ அல்லது கீழே உள்ளது என்றோ சொல்ல முடியாது. மாறாக நடுத்தரமாக இருக்கிறது. ஹீரோ லெக்ட்ரோ சி3 மற்றும் பேட்ரி எலெக்ட்ரிக் நியூட்ரான் ஆகியவற்றுடன், நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் போட்டியிடும்.

    ஒவ்வொரு பாகத்திற்கும் வெவ்வேறு விதமான வாரண்டியுடன் நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் வருகிறது. இதன்படி கண்ட்ரோலர் மற்றும் சார்ஜருக்கு 6 மாதங்கள் வாரண்டி வழங்கப்படுகிறது. அதே சமயம் ஃப்ரோம் மற்றும் ஃபோர்க்கிற்கு ஒரு வருடம் வாரண்டி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரிக்கு 18 மாதங்கள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு சூப்பரான தீர்வு... நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் ரிவியூ!

    டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

    நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. உங்களது அனைத்து தேவைகளையும் இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் பூர்த்தி செய்யும். பயணம் செய்வதற்கு, உடற்பயிற்சி அல்லது பொழுதுபோக்கிற்கு என உங்களது தேவை எதுவாக இருந்தாலும், அதனை நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் நிறைவேற்றுகிறது.

Most Read Articles
English summary
Nexzu Rompus+ Electric Cycle Review: Features, Performance, Ride & Handling, Range And More Details. Read in Tamil
Story first published: Saturday, July 24, 2021, 10:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X