வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று முன்பதிவில் முந்தைய சாதனைகளை எல்லாம் தகர்த்து, புதிய வரலாறு படைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் முன்பதிவின் மூலம் தங்களது விருப்பத்தை பதிவு செய்துள்ளனர். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பார்க்காமலும், டெஸ்ட் ரைடு செய்யாமலும் பலர் தங்களது பணத்தை முன்பதிவிற்கு செலவிட்டுள்ளனர்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதுதான் இதற்கு காரணம். ஆனால் இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பூர்த்தி செய்கிறதா? என்ற கேள்விக்கு இன்னும் வாடிக்கையாளர்களுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு விடை கிடைத்து விட்டது. பெங்களூரின் புறநகர் பகுதியில் நாங்கள் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்தோம். நாங்கள் சிறிது நேரம்தான் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்தோம். இருந்தாலும் வாடிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க அது போதுமானதாக இருந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

ஓலா எஸ்1 ப்ரோ முக்கிய அம்சங்கள்

ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முக்கிய அம்சங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன. இதில், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைதான் நாங்கள் ஓட்டினோம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்படி உள்ளது? என்பதை சொல்வதற்கு முன்பாக, அதன் முக்கிய அம்சங்களை கூறி விடுகிறோம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.97 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹைப்பர் டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8.5 kW பவரையும், 58 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை 6 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சாதாரண வீட்டு சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் செலவாகும் நேரம் ஆகும். அதே நேரத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியா முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜர்களை பொருத்தி வருகிறது. இந்த ஹைப்பர் சார்ஜர்கள் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்து விடும். இந்த சார்ஜர்கள் மூலம் 75 கிலோ மீட்டர்கள் பயணிக்க தேவையான அளவிற்கு வெறும் 18 நிமிடங்களில் சார்ஜ் செய்து விட முடியும்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டி விட முடியும். இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான செயல்திறன் என்பதில் சந்தேகமில்லை.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

ஓலா எஸ்1 ப்ரோ ஓட்டுதல் அனுபவம்

குறுகிய நேரமே இருந்தாலும், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஓட்டுதல் அனுபவம், செயல்திறனை சோதித்து பார்ப்பதில்தான் நாங்கள் அதிக கவனம் செலுத்தினோம். உண்மையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவாக செயல்படுகிறது. குறிப்பாக ஆக்ஸலரேஷன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. செயல்திறன் மிக்க பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களுடன் ஒப்பிடும் அளவிற்கு ஓலா எஸ்1 ப்ரோ வேகமாக செயல்படுகிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 115 கிலோ மீட்டர்கள். இந்த வேகத்தை விரைவாக எட்ட முடிகிறது. மணிக்கு 90 கிலோ மீட்டர்கள் மற்றும் அதற்கும் மேலான வேகத்தை எட்ட முடிந்தது. ஆனால் இந்த சிறப்பான ஆக்ஸலரேஷன் ஹைப்பர் மோடில் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹைப்பர் மோடு செயல்திறன் மிக்கது என்பதால், ரேஞ்ச் குறைகிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

ஆனால் நார்மல் மோடையும் நாங்கள் பரிசோதித்து பார்த்தோம். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 30 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை ஹைப்பர் மோடை போலவே வேகமாக எட்ட முடிகிறது. ஆனால் அதற்கு பின் சற்று 'ஸ்லோ' ஆகி விடுகிறது. நார்மல் மோடில் அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்க முடிகிறது. ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 180 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஞ்ஜை நார்மல் மோடில்தான் பெற முடியும். ஆனால் ஒரு விஷயம் மட்டும் எங்களுக்கு தெளிவாக தெரிகிறது. இது உண்மையிலே செயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் என மொத்தம் 3 ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் மோடும் கொடுக்கப்பட்டுள்ளது. பட்டன்கள்/ஸ்விட்ச்கியர் மூலம் இந்த மோடுகளை மாற்றி கொள்ள முடியும்.

அதேபோல் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கையாளுமையும் சிறப்பாக இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் ஃபோர்க்கும், பின் பகுதியில் கிடைமட்டமாக மோனோஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளது. சமதளமற்ற மேற்பரப்புகளில் நாங்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்தோம். அதில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 'பாஸ்' ஆகி விட்டது. பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் பகுதியில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 180 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக்குகள் மிகவும் 'ஷார்ப்' ஆகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. ஆனால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் இது எட்டக்கூடிய வேகம் ஆகியவற்றை கருத்தில்கொள்ளும்போது, ஏபிஎஸ் இருந்தால் பரவாயில்லை என்று எங்களுக்கு தோன்றியது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

எனினும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டுவது உற்சாகமான அனுபவத்தை தருகிறது. ஆனால் குறுகிய நேரமே ஓட்டியது எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இன்னும் நீண்ட நேரம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்ய வேண்டும் என விரும்புகிறோம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

ஓலா எஸ்1 ப்ரோ வசதிகள் மற்றும் தொழில்நுட்பம்

ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான வசதிகள் 'செக்மெண்ட்-ஃபர்ஸ்ட்' என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதிகள்தான், ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் முன்பதிவுகள் குவிவதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. பயன்படுத்துகிறோமோ, இல்லையோ வாகனத்தில் நிறைய வசதிகள் இருக்க வேண்டும் என்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பு.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், டிஜிட்டல் கீ, இன்-பில்ட் நேவிகேஷன், ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்கூட்டர் டிராக்கிங் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் நாங்கள் ஓட்டியது தயாரிப்பிற்கு முந்தைய நிலை மாடல்கள் ஆகும். ஆனால் ஒரு சில வசதிகள் விடுபட்டிருந்தன. எனினும் தயாரிப்பு நிலை மாடல் கைக்கு கிடைத்ததும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப வசதிகள் குறித்து தனியாக ரிவியூ செய்வோம்.

எனினும் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளேவை நாங்கள் பயன்படுத்தி பார்த்தோம். இதனை பயன்படுத்துவதற்கு எளிமையாக உள்ளது. நெட்வொர்க்கை பொறுத்து, நேவிகேஷன் வேகமாக 'லோட்' ஆகிறது. அதேபோல் எலெக்ட்ரிக் லாக்/அன்லாக், எலெக்ட்ரிக் சீட் ஓபனிங் உள்ளிட்ட வசதிகள் குறைபாடுகள் இல்லாமல் வேலை செய்கிறது.

அதேபோல் ஸ்விட்ச்கியரும் சிறப்பாக உள்ளது. இது முறையான ஸ்விட்ச்களை போல் அல்லாமல், கீ பேட் போன்ற உணர்வை தருகிறது. இவை சாஃப்ட் டச் பட்டன்கள் ஆகும். இந்த பட்டன்கள் மூலமாக அழைப்புகளை ஏற்கவும், துண்டிக்கவும் முடியும். மேலும் மியூசிக்கை கண்ட்ரோல் செய்வது, ரிவர்ஸ் மோடை ஆக்டிவேட்/டிஆக்டிவேட் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

இது சப்தத்தையும் உருவாக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். 2 ஆன் போர்டு ஸ்பீக்கர்கள் மூலமாக இந்த சப்தம் உருவாக்கப்படுகிறது. மேலும் ரைடர் என்ன மோடை தேர்வு செய்கிறாரோ, அதற்கு ஏற்ப சப்தம் உருவாகும். ஒட்டுமொத்தத்தில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? ரிவியூ!

ஓலா எஸ்1 ப்ரோ தீர்ப்பு

எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை நாம் நிச்சயமாக பாராட்டியாக வேண்டும். ஆனால் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, 'ஓபன் ரோடு' மற்றும் நகர பகுதிகளில் ஓட்டி பார்ப்பதற்கு நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம். ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
English summary
Ola s1 pro review design features technology riding impressions specifications
Story first published: Monday, November 15, 2021, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X