டாடாவிற்கு 'செக்' வைக்க போகும் தமிழ்நாட்டு நிறுவனம்! இவ்ளோ கம்மியான விலையில் புது காரை களமிறக்க போறாங்களா!

இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களில் ஒன்றாக வின்ஃபாஸ்ட் (Vinfast) தற்போது உருவெடுத்து வருகிறது. வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. தற்போதைய நிலையில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (Vinfast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (Vinfast VF 7) என 2 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஆனால் கூடிய விரைவில் ஏராளமான புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்திய சந்தைக்கான வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் 3வது எலெக்ட்ரிக் காராக வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் (Vinfast Limo Green) விற்பனைக்கு வரவுள்ளது.

Vinfast VF 5

இதற்கு அடுத்தபடியாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 (Vinfast VF5) எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரவுள்ள வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் கார் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இது பல்வேறு சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும். சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் காரில் 29.6 kWh மற்றும் 37.23 kWh பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுகின்றன.

Vinfast VF 5 EV

இதில், 29.6 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 268 கிலோ மீட்டர்கள் ஆகவும், 37.23 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 326 கிலோ மீட்டர்கள் ஆகவும் உள்ளது. இதில், ஏதாவது ஒரு பேட்டரி ஆப்ஷன் இந்திய சந்தையில் வழங்கப்படலாம். அல்லது இரண்டு பேட்டரி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டாலும், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அதே நேரத்தில் சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் காரில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், கீலெஸ் எண்ட்ரி, 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பிஎம் 2.5 ஏர் ஃபில்டர், லெதரேட் இருக்கைகள் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

மறுபக்கம் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 6 ஏர்பேக்குகள் மற்றும் ரியர் பார்க்கிங் அஸிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இவை அப்படியே இந்திய சந்தையில் வழங்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் வசதிகளின் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும். இது இந்திய சந்தையில் டாடா பன்ச் இவி (Tata Punch EV) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

அனேகமாக வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 3, 2026, 13:42 [IST]
English summary
Vinfast vf 5 india launch nears expected price battery options driving range safety features
மேலும்... #VinFast #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+