டாடாவிற்கு எமனாக மாற போகும் சீன நிறுவனம்! அடிமாட்டு விலையில் 3 புது கார்களை இந்தியாவில் களமிறக்க போறாங்க!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான (Electric Cars) 'டிமாண்ட்', நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும், போட்டி போட்டு கொண்டு, இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் காலடி எடுத்து வைத்து வருகின்றன.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) மற்றும் எம்ஜி மோட்டார் (MG Motor) போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அத்துடன் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் கூட, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான், தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ விட்டாராவை (e Vitara) விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

Leapmotor B10

இந்த வரிசையில் மிகவும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று, கூடிய விரைவில் இந்திய சந்தையில் நுழையவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்று ஸ்டெல்லண்டிஸ் (Stellantis).

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஜீப் (Jeep), சிட்ரோன் (Citroen) மற்றும் மஸராட்டி (Maserati) போன்ற நிறுவனங்களை எல்லாம், ஸ்டெல்லண்டிஸ் நிறுவனம்தான் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது, சீனாவை சேர்ந்த லீப்மோட்டார் (Leapmotor) நிறுவனத்தையும், ஸ்டெல்லண்டிஸ் நிறுவனம்தான் நிர்வகித்து கொண்டுள்ளது.

Leapmotor T03

இந்த லீப்மோட்டார் நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஸ்டெல்லண்டிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிகவும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் லீப்மோட்டார் பிராண்டு கடந்த 2024ம் ஆண்டே இந்தியாவிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் இருந்த பிரச்சனைகள் காரணமாக அப்போது அது நடக்கவில்லை.

இருப்பினும் நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்திலோ, இந்திய சந்தைக்கு லீப்மோட்டார் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. லீப்மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் முதற்கட்டமாக 3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், லீப்மோட்டார் டி03 (Leapmotor T03) ஒன்றாகும். டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வரவுள்ள லீப்மோட்டார் டி03 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லீப்மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் 2வது எலெக்ட்ரிக் கார், லீப்மோட்டார் சி10 (Leapmotor C10) ஆகும். டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக வரவுள்ள லீப்மோட்டார் சி10 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 13 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் லீப்மோட்டார் பி10 (Leapmotor B10) எலெக்ட்ரிக் காரையும், லீப்மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. மாருதி சுஸுகி இ விட்டாரா, ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வரவுள்ள இதன் ஆரம்ப விலை 17 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை அனைத்துமே எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் நுழைந்தது. இந்த வரிசையில் மற்றொரு வெளிநாட்டு நிறுவனமான லீப்மோட்டாரும் இந்தியாவில் காலடி எடுத்து வைக்கவுள்ளது. லீப்மோட்டார் நிறுவனத்தின் வருகை, இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில், போட்டியை இன்னும் கடுமையானதாக மாற்றலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 2, 2026, 12:56 [IST]
English summary
Leapmotor to launch 3 new affordable electric cars soon in india check all details here
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+