ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

ராயல் என்பீல்டு என்ற பெயரை கேட்டால், தொலை தூர பயணங்களுக்கு ஏற்ற கிளாசிக் ரெட்ரோ மோட்டார்சைக்கிள்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு இந்திய சந்தையில் சமீப காலமாக போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. புத்தம் புதிய மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்ததன் மூலமாக, அதிகரித்து வரும் போட்டிக்கு, ராயல் என்பீல்டு நிறுவனம் பதில் அளித்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் லைன் அப்பில், முதல் முறையாக கடந்த 2002ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, தண்டர்பேர்டு ஆதிக்கம் செலுத்தி வந்தது. இடைப்பட்ட ஆண்டுகளில் தண்டர்பேர்டு லைன்-அப் பல்வேறு ஃபேஸ்லிஃப்ட் அப்பேட்களை பெற்றது.
ஆனால் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பு, தண்டர்பேர்டு லைன்-அப்பை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கி கொண்டது. தண்டர்பேர்டு என்ற பெயருக்கும், அதன் 18 ஆண்டு கால தொடர் உற்பத்திக்கும் தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் ஓய்வு கொடுத்துள்ளது.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

எனினும் அதற்கு பதிலாக புதிய பெயரில், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் டிசைன் அம்சங்களுடன் புத்தம் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வர ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்தது. இதன் விளைவாக மீட்டியோர் 350 பைக் பிறந்தது. ராயல் என்பீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 பைக்கை சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் சூப்பர்நோவா வேரியண்ட் எங்கள் கைகளுக்கு கிடைத்தது. 1,000 கிலோ மீட்டருக்கும் மேல் அந்த பைக்கில் சவாரி செய்து, அதன் திறன்களை நாங்கள் பரிசோதித்தோம். வளைந்து நெளிந்து செல்லும் மலை சாலைகள், நேராக செல்லும் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகள் என பல்வேறு சூழல்களில் மீட்டியோர் 350 பைக்கை நாங்கள் ஓட்டினோம். எங்களது டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

டிசைன் & ஸ்டைல்

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டிசைன், பொதுவான க்ரூஸர் மோட்டார்சைக்கிளை உங்களுக்கு நினைவுபடுத்தும். இந்த மோட்டார்சைக்கிளை பார்த்தவுடன், கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட தொலை தூர பயணங்கள் உங்கள் நினைவுக்கு வரலாம். அல்லது புதிதாக ஒரு தொலை தூர பயணத்தை தொடங்குவது பற்றி நீங்கள் சிந்திக்கலாம்.

க்ரூஸர் மோட்டார்சைக்கிளுக்கு உண்டான பண்புகள் அனைத்தும், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் உள்ளன. இதில், ரெட்ரோ தோற்றத்துடன் கவர்ச்சிகரமான எரிபொருள் டேங்க், பாடி பேனல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிளை சுற்றி சிறிய அளவில் க்ரோம் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆகியவை அடங்குகின்றன.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

இந்த பைக்கின் டிசைன் எப்படி உள்ளது? என்பதை முன் பகுதியில் இருந்து தொடங்குவோம். நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்த சூப்பர்நோவா வேரியண்ட்டில், வட்ட வடிவ ஹாலேஜன் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. அதனுடன் எல்இடி டிஆர்எல் ரிங் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றாலும், ஹை மற்றும் லோ பீம்களுக்கு ஹாலோஜன் யூனிட் அருமையாக உள்ளது. எனினும் எல்இடி டிஆர்எல்கள் இன்னும் கொஞ்சம் பிரகாசமாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

அத்துடன் 13.6 இன்ச் விண்டுஸ்க்ரீனையும் இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் இதனை 'டூரிங் வைசர்' என அழைக்கிறது. இந்த விண்டுஸ்க்ரீனின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். ஆனால் இந்த செயல்முறைக்கு கூடுதலாக 'ஆலன் கீ டூல்' தேவை. அத்துடன் மற்ற க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களில் காணப்படுவதை போன்று இந்த பைக்கிலும், முன் சக்கரங்களை கட்டியணைத்தது போன்று முன் பக்க ஃபென்டர் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

இனி இந்த பைக்கின் பக்கவாட்டு பகுதிக்கு நகர்வோம். இங்கே 15 லிட்டர் கொள்ளவு கொண்ட ட்யூயல்-டோன் எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்க்கின் மீது 'ராயல் என்பீல்டு' லோகோவும், சைடு பேனலில் மீட்டியோர் 350 பேட்ஜ்ஜூம் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இருக்கையில் பேக் ரெஸ்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட தனித்துவமாக இருப்பது இந்த பைக்கின் க்ரோம் எக்ஸாஸ்ட் அமைப்புதான். இந்த பைக்கின் தோற்றத்தை பிரீமியம் ஆக காட்டுகிறது.

இந்தியாவின் இரு சக்கர வாகன விதிமுறைகள் காரணமாக, இந்த பைக் சாரி கார்டையும் பெற்றுள்ளது. அத்துடன் ரைடர் இருக்கைக்கு பின்னால் இருபுறமும் க்ராப் ஹேண்டில்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. எங்களது நீண்ட பயணத்தின்போது, லக்கேஜை கொண்டு செல்வதற்கு இது உதவியாக இருந்தது.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

பின் பகுதியை பொறுத்தவரை வட்ட வடிவ டெயில்லேம்ப்பும், அதற்கு கீழாக வழங்கப்பட்டுள்ள டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்களும், இந்த பைக்கிற்கு க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தோற்றத்தை வழங்குகின்றன. அத்துடன் முறையான வெளிச்சத்திற்காக சிறிய விளக்கை ஒன்றை, பின் பக்க நம்பர் பிளேட் பெற்றுள்ளது.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

வசதிகள்:

ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் ஆகும். எனவே பல்வேறு புதிய வசதிகளையும் இந்த பைக் பெற்றுள்ளது. முதலில் ஸ்விட்ச்கியரில் இருந்து தொடங்கலாம். இந்த பைக்கின் ஹேண்டில்பாரில் இரு பக்கமும், இரண்டு வட்ட வடிவ டயல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், வலது பக்கம் உள்ள டயல், ஒருங்கிணைந்த ஸ்டார்ட்டர் ஸ்விட்ச் உடன் இன்ஜின் செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. அதே சமயம் இடது பக்கம் உள்ள டயல், ஒருங்கிணைந்த பாஸ் ஸ்விட்ச் உடன் ஹெட்லேம்ப் செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

அத்துடன் ஹசார்டு லைட் வசதியையும் இந்த பைக் பெற்றுள்ளது. ஹேண்டில்பாரின் வலது பக்கத்தில் உள்ள ஸ்விட்ச் மூலம் இதனை பயன்படுத்தலாம். அதே சமயம் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்களை பயன்படுத்துவதற்கான ஸ்விட்ச் மற்றும் ஹாரனுக்கான பட்டன் ஆகியவை ஹேண்டில்பாரின் இடது பக்கத்தில் உள்ளன. இதுதவிர இடது பக்கத்தில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி ஸ்லாட்டும் உள்ளது. இன்ஜின் இயங்கும்போது மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.

ஸ்விட்ச் கியரின் செயல்பாடு எளிமையாக உள்ளது. ஆனால் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கின் தரம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது எங்கள் எண்ணம். ஹேண்டில்பாரின் மேலே பொருத்தப்பட்டுள்ள டயல்கள் மிகவும் வலுவாக இருப்பது போன்ற உணர்வை எங்களுக்கு தரவில்லை.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

அதே சமயம் இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டபுள்-போடு க்ளஸ்ட்டரே தொடர்ந்தாலும், இரண்டாவது டிஸ்ப்ளே தற்போது ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியை கொண்டுள்ளது. முதலில் மெயின் க்ளஸ்ட்டரில் இருந்து தொடங்கலாம். இதில், அனலாக் ஸ்பீடோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறிய டிஜிட்டல் டிஸ்ப்ளேவையும் இது பெற்றுள்ளது. இது ஏராளமான தகவல்களை வழங்குகிறது. இதில், கியர் இன்டிகேட்டர், கடிகாரம், எரிபொருள் இன்டிகேட்டர், சர்வீஸ் ரிமைண்டர் ஆகியவை அடங்குகின்றன. மேலும் மெயின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில், ஹை-பீம், டர்ன்-சிக்னல், இன்ஜின் செக் லைட், குறைவான எரிபொருள் மற்றும் லோ பேட்டரி இன்டிகேட்டர்கள் ஆகியவற்றுக்கான லைட்களும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இது க்ரூஸர் மோட்டார்சைக்கிள் என்னும் நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு சில ரீடிங்குகளை தவற விட்டுள்ளது. இதில், மைலேஜ் இன்டிகேட்டர், இருக்கும் எரிபொருளில் இன்னும் எவ்வளவு தொலைவு பயணிக்கும்? என்பது போன்ற ரீடிங்குகள் அடங்குகின்றன. இந்த இரண்டு தரவுகளும், தொலை தூர பயணங்களை எந்தவித தொந்தரவும் இல்லாமல் மேற்கொள்ள உதவும்.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

அதே சமயம் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் இரண்டாவது போடு, சிறிய டிஎஃப்டி கலர் டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது. இது ட்ரிப்பர் நேவிகேஷன் வசதிக்கான யூனிட் ஆகும். இந்த வசதியை அறிமுகம் செய்வதற்காக கூகுள் நிறுவனத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனம் கூட்டணி சேர்ந்துள்ளது. ஸ்மார்ட்போனை இணைப்பதன் மூலம் ட்ரிப்பர் நேவிகேஷனை ஆக்டிவேட் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் என இரண்டிற்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ள செயலியை பயன்படுத்தி இதனை செய்யலாம். ஸ்மார்ட்போனில் செயலியை இன்ஸ்டால் செய்து தொடங்கிய பிறகு, 'நேவிகேட்' வசதியை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின் ஸ்மார்ட்போனை இணைப்பதற்கு, திரையில் காட்டும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இணைக்கப்பட்டவுடன், செல்ல வேண்டிய இடத்தை எண்டர் செய்ய வேண்டும். அதன் பின் டிஸ்ப்ளே டர்ன்-பை-டர்ன் நேவிகேஷனை காட்ட தொடங்கும்.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

இன்ஜின் & செயல்திறன்

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் புத்தம் புதிய ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 349 சிசி SOHC இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6100 ஆர்பிஎம்மில் 20.2 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

கிளாசிக் 350 போன்ற மற்ற மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்பட்டுள்ள UCE இன்ஜின்களுடன் ஒப்பிடுகையில், இந்த புத்தம் புதிய இன்ஜின் மிகவும் 'ஸ்மூத்' ஆக உள்ளது. பழைய UCE யூனிட்களுடன் ஒப்பிடுகையில், SOHC இன்ஜினில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வால்வுகளின் செயல்பாட்டிற்காக இந்த புதிய இன்ஜினில் குறைந்த பாகங்களே இடம்பெற்றுள்ளன. எனவே UCE இன்ஜின்களுடன் ஒப்பிடுகையில், என்விஹெச் லெவல் (NVH - Noise, Vibration, Harshness Levels) குறைவாக உள்ளது. அத்துடன் பழைய UCE இன்ஜின்களுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த திறன் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் அதிகரித்துள்ளது. கூடுதலாக புதிய SOHC யூனிட் தற்போது கவுன்டர் பேலன்சர்களையும் கொண்டுள்ளது. இன்ஜினில் இருந்து அதிர்வுகளை குறைக்க இது மேலும் உதவி செய்கிறது.

மிகவும் மென்மையாக மாறியுள்ள அதே நேரத்தில், பழைய UCE இன்ஜின் உடன் ஒப்பிடுகையில், SOHC யூனிட்டின் டார்க் திறன் 1 என்எம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் 350 சிசி UCE யூனிட் உடன் ஒப்பிடும்போது, 0.4 பிஎச்பி என்ற அளவிற்கு பவர் உயர்ந்துள்ளது.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

சேஸிஸ் & ரைடர் எர்கோனாமிக்ஸ்

350 சிசி செக்மெண்ட்டில், டபுள்-க்ராடில் ஃப்ரேமை பெற்றுள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் மோட்டார்சைக்கிள் இதுதான். சிங்கிள்-க்ராடில் ஃப்ரேமுக்கு மாற்றாக இந்த சேஸிஸ் உள்ளது. என்றாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி லைன்-அப்பில் உள்ள மற்ற மோட்டார்சைக்கிள்களில் சிங்கிள்-க்ராடில் ஃப்ரேம் இன்னும் தொடர்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளின் ஹேண்ட்லிங் பண்புகளை, டபுள்-க்ராடில் சேஸிஸ் அருமையாக மாற்றியுள்ளது. புதிய செட்-அப் காரணமாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 வலுவாகவும், பேலன்ஸான உணர்வையும் தருகிறது. அதே சமயம் இந்த பைக்கின் முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 260 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் முன் பகுதியில், 100/90 செக்ஸன் டயருடன் 19-இன்ச் அலாய் வீலும், பின் பகுதியில் 140/70 செக்ஸன் டயருடன் 17-இன்ச் அலாய் வீலும் வழங்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே ட்யூப்லெஸ் டயர்கள்தான். தொந்தரவு இல்லாத தொலை தூர பயணத்தை இவை உறுதி செய்கின்றன.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

இந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிளின் ரைடர் எர்கோனாமிக்ஸை, புதிய ஃப்ரேம் மேம்படுத்தியுள்ளது. ரைடருக்கு மிகவும் முக்கிய அம்சமான இருக்கை உயரத்தில் இருந்து தொடங்குவோம். ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ரைடர் இருக்கை உயரம் 765 மிமீ. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரி இருக்கை மூலம் இதனை மேலும் 20 மிமீ குறைத்து கொள்ள முடியும்.

அதே சமயம் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மிமீ. எந்தவொரு கடினமான நிலப்பரப்பையும் சமாளிப்பதற்கு இது போதுமானது. அத்துடன் வேகத்தடைகளையும் பிரச்னையின்றி எளிதாக கடக்கலாம். அதே சமயம் பின்புற இருக்கை இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்திருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம். அதேபோல் பில்லியன் பேக் ரெஸ்ட்டையும் சில இன்ச்கள் பின்னால் நகர்த்தியிருக்கலாம். மீட்டியோர் 350 பைக்கில், பின்புற இருக்கையின் இடத்தை பில்லியன் பேக்ரெஸ்ட் விழுங்கி விடுவது போல் தெரிகிறது. ஆனால் பில்லியன் ரைடருக்கான ஃபுட்ரெஸ்ட் சௌகரியமான இடத்தில் வழங்கப்பட்டுள்ளது. தொலை தூர பயணங்களின்போது எந்த அசௌகரியமும் ஏற்படாது.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

ரைடு & ஹேண்ட்லிங்

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் சவாரி செய்வது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும். சௌகரியமான ரைடிங் பொஷிஷன் மற்றும் இருக்கைகள், ஓய்வு எடுக்காமல் நீண்ட நேரம் பைக்கை தொடர்ந்து ஓட்டுவதற்கு உதவுகின்றன.

இன்ஜினில் இருந்து வரும் சக்தி, சீராகவும், மென்மையான பாணியிலும் டெலிவரி செய்யப்படுகிறது. இந்த இன்ஜின் 'ஸ்மூத்'ஆக இருந்தாலும், நீங்கள் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளை ஓட்டி கொண்டுள்ளீர்கள் என்பதை நினைவுபடுத்தும், தனித்துவமான எக்ஸாஸ்ட் சத்தம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்ஜினில் பெரிதாக குறைபாடுகள் தெரியவில்லை. ஒரு நாள் முழுவதும் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும்.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

குறைவான ஆர்பிஎம்மிலேயே டார்க் திறன் நன்கு வெளிப்பட தொடங்குகிறது. அதே சமயத்தில் கியர் பாக்சும் மிகவும் மென்மையாக உள்ளது. கியர்களை மாற்றுவதில் ரைடர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்த மோட்டார்சைக்கிளின் ஹேண்ட்லிங்கை புதிய ஃப்ரேம் கணிசமான அளவில் மேம்படுத்தியுள்ளது. ஷார்ப்பான பெண்ட்களில் செல்வதற்கோ, கார்னர்களில் வேகமாக வளைந்து செல்வதற்கோ பயப்பட வேண்டியதில்லை. இந்த விஷயத்தில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 எங்களை வெகுவாக 'இம்ப்ரஸ்' செய்தது.

நேராக செல்லும்போது ஸ்திரத்தன்மையுடன் பயணிக்கும் திறனை புதிய சேஸிஸ் மேம்படுத்தியிருக்கும் அதே நேரத்தில், கார்னர்களையும் நல்ல வேகத்தில் எதிர்கொள்வதற்கான திறனுடைய க்ரூஸர் மோட்டார்சைக்கிளாக இதனை மாற்றியுள்ளது. அதேபோல் டிஸ்க் ரோட்டர்களின் செயல்திறனும் சிறப்பாக உள்ளது. ஆனால் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக்கின் செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை. சாதாரண மோட்டார்சைக்கிள்களை போன்று இருக்கிறது. எனினும் டயர்களின் செயல்பாடு நன்றாக உள்ளது.

இந்த பைக்கின் எடை 191 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான எண்ட்ரி-லெவல் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 உள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட பைக்குகளுடன் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 போட்டியிடும்.

Model / Specification Royal Enfield Meteor 350 Honda H'ness CB350 Jawa 42 Benelli Imperiale 400
Engine 349cc, single-cylinder, air-cooled 348cc, single-cylinder, air-cooled 293cc, single-cylinder, liquid-cooled 374cc, single-cylinder, air-cooled
Power 20.2bhp 20.7bhp 26.1bhp 20.7bhp
Torque 27Nm 30Nm 27.05Nm 29Nm
Gearbox 5-speed 5-speed + slipper clutch 6-speed 5-speed
Weight (Kerb) 191Kgs 181Kgs 172Kgs 205Kgs
Fuel Tank Capacity 15-litres 15-litres 14-litres 12-litres
Price ₹1.75 Lakh ₹1.85 Lakh ₹1.74 Lakh ₹1.99 Lakh
ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ...

தீர்ப்பு

சிறப்பான தோற்றம் கொண்ட ரெட்ரோ கிளாசிக் மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவதில் ராயல் என்பீல்டு நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது. இதில், எந்த குறைபாடும் இல்லாமல் மீட்டியோர் 350 பைக்கும் வந்துள்ளது. ராயல் என்பீல்டு ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாரம்பரியமான டிசைன் மற்றும் தனித்துவமான எக்ஸாஸ்ட் சத்தத்தை மீட்டியோர் 350 கொண்டுள்ளது.

ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என மீட்டியோர் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்கிறது. இதில், ஃபயர்பால் வேரியண்ட்டின் விலை 1.75 லட்ச ரூபாய் ஆகவும், ஸ்டெல்லர் வேரியண்ட்டின் விலை 1.81 லட்ச ரூபாய் ஆகவும், சூப்பர்நோவா வேரியண்ட்டின் விலை 1.90 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். நீங்கள் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களின் ரசிகர் என்றாலோ, அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்ள விரும்பினாலோ, ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Most Read Articles

English summary
Royal Enfield Meteor 350 Test Ride Review - Engine Performance, Handling, Features, Price. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X