இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிதாக ஹன்டர் 350 என்ற பைக்கை தாய்லாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் எப்படி இருக்கிறது? இந்த பைக்கின் உள்ள அம்சங்கள் என்ன? மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

ராயல் என்ஃபீல்டு இந்த பெயரைக் கேட்டாலே நமக்குத் தோன்றும் விஷயம் கெத்து, மாஸ் போன்ற விஷயங்கள் தான். இந்நிறுவனம் ரெட்ரோ லுக் வாகனங்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. இந்த பைக் அதன் ஓட்டிகளுக்கு ஒல்டு ஸ்கூல் ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது. ரயில் என்ஃபீல்டை பொருத்தவரை அதன் லுக் மற்றும் வலிமையில் மிக அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதற்காகவே இந்த நிறுவனத்தின் பைக்கள் பெயற் பெற்றது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

இந்நிலையில் தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய ஹன்டர் 350 பைக்கை அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகத்தின் போது "ஒல்டு ஸ்கூல் மீட் நியூ ஏஜ்" என அந்நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் தெரிவித்திருந்தார். இந்த ஹன்டர் 350 பைக் எப்படி இருக்கிறது? ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்தப்பைகள் ராயல் என்ஃபீல்டின் பெயரைக் காப்பாற்றுமா? இதை செக் செய்ய இதன் அறிமுகத்திற்காகத் தாய்லாந்து நாட்டின் பேங்காக்கிற்கு அழைக்கப்பட்டோம். அங்கு எங்களது புதிய ஹன்டர் 350 பைக்கில் முதல் ரைடு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளோம் காணுங்கள்

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 டிசைன்

இந்த ஹன்டர் 350 பைக் முற்றிலும் புதிய பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் டிசைன் ராயல் என்ஃபீல்டின்

அடிப்படை டிசைன் மொழி மாறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் லேசான சில மாற்றங்கள் ஆங்காங்கே செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் பைக்கள் எல்லாம் ஜே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும். தற்போது ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ள சில மாற்றங்கள் இந்த பிளாட்பார்மில் உள்ள பைக்கை விட சில எக்ஸ்ட்ரா மாற்றங்களைச் செய்துள்ளது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

புதிய ஹன்டர் 350 பைக்கில் வழக்கமான ரெட்ரோ மோட்டார்சைக்களிலின் அம்சங்கள் எல்லாம் இந்த பைக்கிலும் உள்ளது. வட்டமான ஹெட்லைட், அதன் பக்கவாட்டு பகுதிகளில் வட்ட வடிவிலான இன்டிகேட்டர்கள், முன்பக்க பெரிய ஃபோர்க் மற்றும் சிறிய மட்கார்டு, என முழுமையாக டெட்ரோ லுக்கை இந்தபைக் பெற்றுள்ளது. இந்த பைக்கில் 17 இன்ச் ஃபோர்க்டு அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஹன்டர் 350 பைக்கிற்கு புதிய ரெட்ரோ லுக்கை கொடுக்கிறது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

ஹெட்லைட்டிற்கு மேல வழக்கம் போல ரெட்ரோ ஸ்டைலில் ஸ்பீடோமீட்டர் எல்சிடி ஸ்கிரீன் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ரைடு குறித்த எல்லா தகவல்களும் காட்டப்படுகிறது. இதில் பெட்ரோல் இருக்கும் அளவு, ட்ரிப் மீட்டர், ஓடோ மீட்டர், மற்றும் மணி நேரம் ஆகிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வாகன உரிமையாளர்கள் இரண்டாவது வட்ட வடிவிலான டிஸ்பிளேவை வேண்டுமானால் கேட்டுப் பெறலாம்.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

இதில் ராயல் என்ஃபீல்டில் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம் டிஸ்பிளேவில் கிடைக்கும். இது ஒவ்வொரு திருப்பத்திற்கும் தகவல்களைத் தரும். இதற்காக செல்போனை ப்ளூடூத் மூலம் இணைத்து ராயல் என்பீல்டு ஆப் மூலம் தகவல்களைப் பெற வைக்க முடியும். இது போக ரெட்ரோ ஸ்டைலில் இல்லாத அம்சங்களான செல்ஃப் ஸ்டார்ட், USB போர்ட் வசதி இருக்கிறது. இது பயணிக்கும்போது செல்போனை சார்ஜ் ஏற்றிக்கொள்ள வழி வகுக்கும்.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

பெட்ரோல் டேங்க்கை பொருத்தவரை ராயல் என்ஃபீல்டு பைக்கின் ஸ்டைலிலேயே இருக்கிறது. அதில் குறிப்பாக ரைடர்கள் தங்கள் கால் முட்டிகளை ரைடிங்கின் போது போஷிசனில் வைக்க வசதியான வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்கின் பக்கவாட்டு பகுதியில் ஹன்டர் 350 பைக்கின் புதிய லோகோ கொடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

பெட்ரோல் டேங்கிற்கு கீழே ஜே சிரீஸ் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இன் எக்ஸாட்ஸ் ராயல் என்பீல்டு ஏற்ற சத்தத்தை வெளியிடுகிறது. இந்த இன்ஜின் வழக்கமான ராயல் என்ஃபீல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜினாக கொடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

ராயல் என்ஃபீல்டு ஹன்டர் செயல்திறன்

ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக்கை பொருத்தவரை 349 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃப்யூயல் இன்ஜெக்ஷன், சிங்கிள் சிலிண்டர் இன்ஜினாக பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 பிஎச்பி பவரை 6100 ஆர்பிஎம்மிலும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த ஹன்டர் 350 பைக்கின் பிக்கப் மற்றும் ஆக்ஸிலரேஷன் குறித்த தகவல்கள் வெளியிடவில்லை. ஆனால் அந்த பைக் அதிகபட்சம் 114 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த ஹன்டர் 350 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் ஜெசிரீஸ் இன்ஜினைவிட குறைந்த எடையில் உள்ள இன்ஜினாக உள்ளது. மேலும் சேஸிஸ் எடையும் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. புதிய ஹன்டர் 350 பைக் 181 கிலோ எடையில் வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே விற்பனையில் உள்ள மீட்டியோரை விட 10 கிலோ குறைவாகவும், கிளாசிக் 350 பைக்கை விட 14 கிலோ குறைவான எடையிலும் விற்பனைக்கு வருகிறது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

இந்த புதிய ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக்கின் சஸ்பென்சனை பொருத்தவரை 41 மிமீ டெலக்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், பின்பக்கத்தில் ப்ரீ லோடு ட்வின் ஷாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை 2 கேலிபர்களுடனான 300 மிமீ டிஸ்க் முன்பகுதியிலும், சிங்கிள் கேலிபருடன் 270 மிமீ டிஸ்க் பின்பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

இந்த ஹன்டர் 350 பைக்கை பொறுத்தவரை 17 இன்ச் லைட் வெயிட் கேஸ்ட் அலாய் வீல் டியூப்லெஸ் டயர்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 110/70-17 டயரும் பின்பக்கம் 140/70-17 டயர் பொருத்தப்பட்டுள்ளது. இது எல்லாம் பைக்கின் அம்சங்கள் இது எல்லாம் சேர்ந்து பைக் எப்படி இருக்கிறது?

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

ஹன்டர் 350 ரைடிங் இம்பிரஷன்

இந்த ஹன்டர் 350 பைக்கில் மீட்டியோர் மற்றும் கிளாசிக் 350 ஆகிய பைக்களில் உள்ள அதே இன்ஜின் தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த இன்ஜினின் இக்னிஷியன் மற்றும் ஃப்யூயல் மேப்பிங் மாற்றியமைக்கப்பட்டு ரைடிங் அனுபவத்தைப் புதிதாக மாற்றியுள்ளது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

ஹன்டர் 350 பைக்கை பொருத்தவரை இதன் இன்ஜின் பவர் சிறப்பாகவும், எதிர்பார்த்த அளவிலும் இருக்கிறது. குறிப்பாக இந்த இன்ஜின் 60-100 கி.மீ வேகத்திற்கு இடையே சிறப்பாகச் செயல்படுகிறது. இதை பேங்காக்கில் ஓட்டி பார்க்கும் போது 80 கி.மீ வேகத்தில் 5வது கியரில் பயணிக்கும் போது இனிமையான அனுபவத்தைத் தந்தது. இந்த இன்ஜினிலிருந்து வரும் சத்தம் வழக்கமான ராயல் என்ஃபீல்டு பைக்கின் சத்தத்தை விட வித்தியாசமாக இருக்கிறது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

இந்த ஹன்டர் 350 பைக்கின் ஹேண்டிலிங்கை பொருத்தவரை வழக்கமான ராயல் என்ஃபீல்டு போல இல்லாமல் வித்தியாசமான அனுபவத்தை வழங்கியது. வழக்கமான ராயல் என்ஃபீல்டில் ஸ்போர்ட்டி அனுபவம் இருக்காது. ஆனால் இந்த ஹன்டர் 350 ஸ்போர்ட்டி அனுபவத்தை வழங்கியது. இந்த பைக்கின் ஷார்ப்பான ஸ்டிரிங் ஜாமென்ட்ரி, சிறிய வீல்கள், குறைவான வீல் பேஸ், இதனால் பயணத்தின் போது சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்குகிறது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

இந்த பைக்கின் கால் வைக்கும் பகுதியைப் பொருத்தவரை மீட்டியோரை விட உயரமாகக் கொடுத்துள்ளனர். இது போகக் குறைந்த எடை சேஸிஸ், புதிய அலாய் வீல், மேலும் சில பாகங்கள் பிளாஸ்டிக்கில் வழங்கப்பட்டுள்ளது. பைக்கை ஹேண்டிலிங் சிறப்பாக இருக்கிறது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

முன்பக்க சஸ்பென்சனை பொருத்தவரை சிறப்பாக உள்ளது. ஹார்டு பிரேக்கிங்கிலும் சிறப்பாக இருக்கிறது. பின்பக்கம் 6 ஸ்டேஜ் ப்ரீலோடு அட்ஜெட்ஸ்டபுள் ஷாக்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. இது மிகப்பெரிய பல்லாங்குழி ரோடுகளில் எப்படிச் செயலாற்றுகிறது என டெஸ்ட் செய்ய முடியவில்லை. தாய்லாந்தில் ரோடுகள் எல்லாம் சிறப்பாகவே இருந்தன. இந்த பைக் ஓட்டும் போது கைகள் மற்றும் முதுகு பகுதியில் சிறப்பாக இருக்கிறது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

பிரேக்கிங்கும் மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்களிலிருந்து மேம்படுத்தப்பட்ட ஒன்றாக இரக்கிறது. முதலில் இது சற்று செளகரியம் இல்லாமல் இருந்தது. இது மற்ற ஸ்போர்ட்டி 300 சிசி பைக்களில் உள்ள பிரேக்கின் பெர்பாமென்ஸ் அளவிற்கு இல்லை. ஆனால் ஓட்ட ஓட்ட இது பழகிவிடும். முன் மற்றும் பின் பிரேக்கை சேர்ந்து பிடிப்பது தான் சிறப்பான பெர்பாமென்ஸை வழங்குகிறது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

புதிய ஹன்டர் 350 பைக்களுக்கு வழங்கப்பட்டுள்ள டயர்களுக்கு ஆம்பில் கிரிப் வழங்கப்பட்டுள்ளது. இந்தபைக்கை நாங்கள் பேங்காக்கில் உள்ள இம்பேக்ட் ஸ்பீடுவே பகுதியில் டெஸ்ட் செய்தோம். இதை பைக் வேகமாகச் செல்லும் போதும் திருப்பத்திலும், சாலிட் மற்றும் ரெஸ்பான்ஸிவ் பெர்பாமென்ஸை வழங்குகிறது. ஆனால் மிக அதிகமாக வளைத்தால் பின்பக்க டயர் கொஞ்சம் வழுக்குகிறது. ஆனால் இதைக் குறை சொல்ல ஒன்றும் இல்லை. இந்த டயர்கள்சாலைகளில் பயன்படுத்தத் தான் சிறந்தது. டிராக்களில் பெரும்பாலும் இதைப் பயன்படுத்த மாட்டார்கள்.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

பலருக்கு ராயல் என்ஃபீல்டு பைக் என்றாலே வைப்ரேஷன் குறித்த கேள்வி இருக்கும் ஹன்டர் 350 பைக்கில் வைப்ரேஷன் எப்படி இருக்கிறது? இந்த பைக்கில் மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்களை விட வைப்ரேஷன்கள் குறைவாகவே இருக்கிறது. ஆனால் டேங்க், கண்ணாடி பகுதிகளில் அதிகம் தென்படுகிறது.

இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக்கில் உள்ள சிறப்பான மற்றும் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் என்ன?

சிறப்பான விஷயங்கள்

  • பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்பீடாே மீட்டர் பார்க்க எளிதாகப் புரிந்து கொள்ளும்படி இருக்கிறது. இரவு நேரங்களிலும் சிறப்பாகத் தெரியும்படி லைட் கொடுக்கப்பட்டுள்ளது.
  • சீட் 790 மிமீ உயரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உயரம் குறைவாக இருப்பவர்களுக்கும் கால் தரையை எட்டும்
  • வேகமாகச் செல்லும் போதும் திருப்பங்களிலும் உறுதியாக ரைடிங் அனுபவத்தைத் தருகிறது.
  • சேஸில் சிறப்பாக டியூன் செய்யப்பட்டுள்ளது, திடீரென பிரேக் பிடித்தாலும் சஸ்பென்சன் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.
  • -ஹன்டர் 350 பைக் வேகம் அதிகமாகும் போது மிட்ரேஞ்ச் வேகத்தில் நல்ல சத்தத்தை எழுப்புகிறது.
  • மேம்படுத்த வேண்டியது

    • ரெவ் கவுண்டரை பைக்கில் இணைத்திருக்கலாம்.
    • செயல்திறனிற்காகச் சிறிது பவரை அதிகம் செய்திருக்கலாம்.
    • நீங்கள் டேங்கிற்கு மிக அருகில் அமர்ந்து பைக்கை ஓட்டினால் உங்களுக்கு டேங்க் அதிர்வு அதிகமாக உணரப்படும்.
    • இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ

      இறுதித் தீர்ப்பு

      ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதன் முறையாக தங்களது கம்ஃபோர்ட் சோனிலிருந்து வெளியே வந்து வாகனம் ஒன்றைத் தயாரித்துள்ளனர். ராயல் என்ஃபீல்ட் இது வரை தயாரிக்காத ஸ்போர்ட்டி பைக்காக இந்த புதிய ஹன்டர் 350 பைக்கை தயாரித்துள்ளது. இதன் விலை ரூ1,49,900 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கின் பேஸ் வேரியன்டான ரெட்ரோ வேரியன்டில் அலாய் வீல், ட்யூப் லெஸ் டயர், எல்இடி டெயில் லைட் ஆகிய வசதிகள் மட்டும் இல்லை. இந்த ராயல் என்ஃபீல்டு ஹன்டர் பைக்கை பொருத்தவரை இளைஞர்கள் புதிதாக பைக் வாங்குபவர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாகப் பெண்கள் ராயல் என்ஃபீல்டில் குறைந்த எடை பைக்கை ஓட்ட அதிக காலம் விரும்பினர். அவர்களுக்கு இந்த பைக் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மொத்தத்தில் இந்த ஹன்டர் 350 பைக் தற்போதைய இளைஞர்களின் லைஃப் ஸ்டைலாகவே மாறும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
English summary
Royal Enfields all new hunter 350 bike review riding experience all other details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X