யமஹா ஆர்3 ஸ்போர்ட்ஸ் பைக்கின் குறைகள் என்னென்ன?

By Saravana

250சிசி முதல் 500சிசி வரையிலான ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் ஆர்15 என்ற 150சிசி பைக்கை வைத்து காலம் தள்ளி வந்தது. ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் பல சிறப்பான மாடல்கள் குவிந்ததையடுத்து, யமஹாவுக்கு சற்று தடுமாற்றம் ஏற்பட்டது.

அந்த தடுமாற்றத்தை போக்கும் விதத்தில், ஓர் உண்மையான செயல்திறன் கொண்ட ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக யமஹா ஆர்3 பைக் வந்திருக்கிறது. யமஹா பிராண்டை விரும்பும் இளைஞர்களுக்கு இந்த புதிய மாடல் மிகப் பொருத்தமானதாக வந்து இறங்கியிருக்கிறது. இந்த நிலையில், இந்த பைக் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய சில விஷயங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

01. எஞ்சின்

01. எஞ்சின்

யமஹா ஆர்25 பைக்கில் இருக்கும் அதே 321சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட இந்த பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 41 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வழங்கும். சிங்கிள் சிலிண்டர் கொண்ட கேடிஎம் ஆர்சி390 பைக் 43 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட நிலையில், இரட்டை சிலிண்டர் கொண்ட யமஹா ஆர்3 பைக்கின் அதிகபட்ச பவர் வெளிப்படுத்தும் திறன் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கூடுதல் பவர் கொண்டதாக இருந்திருக்கலாம் என்பது வாடிக்கையாளர் எதிர்பார்ப்பு.

 02. டயர்கள்

02. டயர்கள்

இந்த பைக்கில் முன்புறத்தில் 110/70 எம்ஆர்எஃப் நைலோக்ரிப் ஸாப்பர் எஃப்ஒய் டயர்களும், பின்புறத்தில் 140/70 ஸாப்பர் எஸ் டயர்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது சிறப்பானதாக இருந்தாலும், கேடிஎம் ஆர்சி390 பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் மெட்ஸீலர் டயர்கள் டிராக்கில் ஓட்டுவதற்கு கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.

 03. சஸ்பென்ஷன்

03. சஸ்பென்ஷன்

யமஹா ஆர்3 பைக்கின் மற்றொரு குறையான அம்சம், முன்புறத்தில் சாதாரண ஃபோர்க்குகள் கொண்ட KYB 41மிமீ ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் உள்ளது. அட்ஜெஸ்ட் செய்ய வசதியில்லாததும் குறைதான். இதற்கு பதிலாக தலைகீழ் அமைப்புடைய அப்சைடு டவுன் ஃபோர்க் சிஸ்டம் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது இளம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு. அதேநேரத்தில், பின்புறத்தில் 7 விதமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கேஒய்பி மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டிருப்பது ஆறுதல்.

04. ஏபிஎஸ் இல்லை...

04. ஏபிஎஸ் இல்லை...

தோற்றம், சிறந்த எஞ்சின் கொண்டிருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாதது குறையாக இருக்கிறது. ஆப்ஷனலாக கொடுத்திருக்கலாம். அடுத்த சில மாதங்களில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடலை அறிமுகம் செய்ய யமஹா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

05. விலை

05. விலை

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாத யமஹா ஆர்3 பைக்கின் விலை சற்று அதிகம் என்ற அதிருப்தி பலரிடம் காணப்படுகிறது. கவாஸாகி நின்ஜா 300 மற்றும் கேடிஎம் ஆர்சி200 பைக்குளின் சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஒப்பிடுகையில், இந்த விலை சற்றே அதிகமாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

Most Read Articles
English summary
Much awaited Yamaha R3 entry level sports bike has lauched in the Indian market recently. Here are given some drawbacks of Yamaha R3 bike.
Story first published: Tuesday, August 18, 2015, 12:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X