எம் நெஞ்சை கொள்ளை கொண்ட யமஹா ஆர்எக்ஸ்100 பைக்!

By Saravana

யமஹா ஆர்எக்ஸ்100... இந்த பெயரை கேட்டாலே, மனதில் பட்டாம்பூச்சு பறக்கும். கைகளில் சுறுசுறுப்பு எகிறும். அத்தகைய பெர்ஃபாரமென்ஸ் கொண்ட இந்த பைக் இந்திய பெர்ஃபார்மென்ஸ் பைக் பிரியர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை இன்றளவும் தக்க வைத்து வரும் மாடல்.

யமஹா நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, யமஹா ஆர்எக்ஸ்100 மற்றும் யமஹா ஆர்எக்ஸ்135 பைக்குகளை பயன்படுத்திய அனுபவத்தில், இதுவரை ஓட்டிய 2 ஸ்ட்ரோக் பைக் மாடல்களில் மிக அற்புதமான மாடல்களாக கூற முடியும். பலருக்கும் இந்த பைக்கின் பேச்சை எடுத்தாலே, மூளை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிடும். பலருக்கு இந்த பைக்கை தெரிந்தாலும், இந்த பைக்கின் தொழில்நுட்ப அம்சங்கள் தெரிந்திருக்காது. அவர்களுக்காக சில தொழில்நுட்ப விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் சுருக்கமாக வழங்கியிருக்கிறோம்.

 அறிமுகம்

அறிமுகம்

கடந்த 1985ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. யமஹா ஆர்டி350 பைக்கின் தோல்வியும், இந்த்- சுஸுகி ஏஎக்ஸ்100 பைக்கிற்கு கிடைத்த வரவேற்பும், இந்த பைக்கை தயாரிக்கும் அவசியத்தை யமஹாவுக்கு ஏற்படுத்தியது.

Photo credit: Capt. Das

போட்டி

போட்டி

100சிசி மார்க்கெட்டில் யமஹா ஆர்எக்ஸ்100 அறிமுகம் செய்யப்பட்டதற்கு பின்னர் வந்த கவாஸாகி கேபி100, ஹீரோ ஹோண்டா சிடி-100 போன்ற மாடல்கள் ஒன்றுக்கு பின் ஒன்றாக வந்தபோதிலும், இளைஞர்களின் முக்கிய குறியாக மாறிப்போனது யமஹா ஆர்எக்ஸ்100.

Photo credit: Capt. Das

டிசைன்

டிசைன்

யமஹா ஆர்எக்ஸ்100 டிசைனில் மிக அற்புதமான மாடல். மிகவும் அடக்கமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட மாடல். இதன் வடிவமைப்பு பார்க்க மட்டுமல்ல, ஓட்டுபவருக்கு கச்சிதமான உணர்வையும் தரும்.

எஞ்சின்

எஞ்சின்

யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கிற்கு ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக இருப்பதற்கு, இதன் சிறப்பான செயல்திறன் கொண்ட 2- ஸ்ட்ரோக் எஞ்சின்தான். இந்த பைக்கில் 11 பிஎச்பி பவரையும், 10.39 என்எம் டார்க்கையும் வழங்கும் 98 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது.

அலாதி சப்தம்

அலாதி சப்தம்

டிசைன், செயல்திறன் போன்றவை ஒருபுறம் இருந்தாலும், புல்லட் மோட்டார்சைக்கிளுக்கு அடுத்து, இந்திய பைக் பிரியர்களை அதிகம் ஈர்த்த எக்ஸாஸ்ட் நோட் கொண்ட பைக் இதுதான்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த பைக் மணிக்கு 113 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. மேலும், இதன் ட்யூனிங் செய்யப்பட்ட எஞ்சின் கொண்ட ஆர்எக்ஸ்100 பைக் கால் மைல் தூரத்தை வெறும் 14 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தது.

கையாளுமை

கையாளுமை

வெறும் 95 கிலோ எடை கொண்ட இந்த பைக் கையாளுமையில் கில்லி. இந்த ரகத்தில் இதற்கு ஈடான மாடலை கண்டுபிடிப்பது கடினம். அதே அளவுக்கு பிரேக் சிஸ்டமும் துல்லியமாக இருக்கும்.

 உற்பத்தி

உற்பத்தி

கடந்த 1985ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்டது. மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளால் 2- ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட இந்த பைக்கின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

விலை

விலை

முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ.16,000 விலையில் வந்த இந்த பைக் கடைசியாக ரூ.19,784 விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிளாசிக் மாடலாகியிருக்கும் இந்த பைக் கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும், இதன் விலையும், ஒரிஜினல் விலையை விட இரட்டிப்பாக உள்ளது.

காலத்தால் அழியாத மாடல்

காலத்தால் அழியாத மாடல்

மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளால், யமஹா ஆர்எக்ஸ்100 வரிசையில் ஆர்எக்ஸ்ஜி மற்றும் ஆர்எக்ஸ்-135 போன்ற மாடல்களை யமஹா அறிமுகம் செய்தாலும், வாடிக்கையாளர்களை கவரவில்லை. மேலும், யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கை போன்றதொரு பைக் இனி பிறந்துதான் வரவேண்டும் என்று கூற முடியாத அளவிற்கு சிறப்பம்சங்களை கொண்ட பைக் மாடல் என்றால் மிகையில்லை.

யமஹா நிறுவனத்தின் டாப் 15 பைக் மாடல்கள்

Most Trending:

யமஹா நிறுவனத்தின் டாப் 15 பைக் மாடல்கள்

பட்ஜெட் விலையில் பவுசு காட்டும் புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

Images Source: Yamaha Rx-100 lovers

Most Read Articles
English summary
Some Interesting Facts About Legendary Yamaha RX100
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X