சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்தியாவில் உள்ள டிராப்பிற்கு ஏற்ற வாகனம் டூவீலர்கள் தான். டிராப்பிக்குள் கூட புகுந்து புகுந்து எளிதாக கடந்துவிடலாம். டூவீலரிலும் குறிப்பாக ஸ்கூட்டர்கள் இந்த பிரச்னையை சுலபமாக தீர்த்து வைக்கிறது. இதனா

By Balasubramanian

இந்தியாவில் உள்ள டிராப்பிற்கு ஏற்ற வாகனம் டூவீலர்கள் தான். டிராப்பிக்குள் கூட புகுந்து புகுந்து எளிதாக கடந்துவிடலாம். டூவீலரிலும் குறிப்பாக ஸ்கூட்டர்கள் இந்த பிரச்னையை சுலபமாக தீர்த்து வைக்கிறது. இதனால் இந்தியாவில் சமீப காலங்களாக ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகமாகி வருகிறது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

இதுவரை இந்தியாவில் 110 சிசி ரக ஸ்கூட்டர்கள் தான் அதிகள அளவில் விற்பனையாகி வந்தன. ஆனால் தற்போது 125 சிசி ரக ஸ்கூட்டர்கள் மத்தியில் மக்களுக்கு ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

இந்நிலையில் சுஸூகி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் பர்க்மேன் ஸ்டிரீட் 125 என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் முதல் மேக்ஸி ரக ஸ்கூட்டராக கருதப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவிற்காகவே டிசைன் செய்யப்பட்டது என்றாலும் சுஸூகி பர்க்மேன் 650 பைக்கில் உள்ள பெரும்பாலான டிசைனை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

சுஸூகி நிறுவனம் இன்ட்ரூடர் 150 பைக்கை ஜிக்ஸர் பைக்கின் பிளாட்பார்மில் அமைக்கப்பட்டதை போல் இந்த பர்க்மேஸ் ஸ்டிரீட் ஸ்கூட்டரை சுஸூகி ஆக்ஸஸ் 125 பைக்கின் பிளாட்பார்மில் இந்த பைக்கை தயாரித்துள்ளது. ஆனால் ஆக்ஸஸ் 125 பைக்கைவிட ரூ 8,800 அதிகமான விலையில் விற்பனையாகிறது. இந்த அதிகமான விலைக்கு என்னென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா வாருங்கள் பார்க்கலாம்.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

சுஸூகி பார்க்மேன் ஸ்கூட்டரின் முகப்பு பகுதி பெரிதாகவும் வித்தியாசமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் போல இந்தியாவில் விற்கப்படும் மற்ற ஸ்கூட்டர்கள் இல்லை, இது மட்டும் இல்லாமல் எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஆர்எல், ஆகியனவும் உள்ளன. மேலும் டர்னிங் சிக்னல் லைட்களும் முகப்பு பகுதியிலேயே அமைந்துள்ளது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

இந்த ஸ்கூட்டரின் பக்கவாட்டு பகுதியை பொருத்தவரை சிறப்பான விடிவமைப்பை பெற்றுள்ளது. அதில் பர்க்மேன் ஸ்டிரீட் என்ற எழுத்து க்ரோம் கலரில் பதிக்கப்பட்டுள்ளது இது பைக்கிற்கு பிரிமியம் லுக்கை கொடுக்கிறது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

பைக்கின் பின்புறத்தை பொருத்தவரை எல்இடி டெயில் லைட் மற்றும் எல்இடி இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இன்டிகேட்டரையும் எல்இடியில் வடிவமைத்துள்ளது ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

இந்த பைக்கின் சீட்டை பொருத்தவரை ஸ்டெப் வடிவிலான சிறப்பான குஷன் வசதியை கொண்ட பெரிய சீட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்போர்ட்டி லுக் எக்ஸாட் மஃப்ளர்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

மேலும் இந்த பைக்கில் 100 மிமீ டயர் உடன் கூடிய 10 இன்ச் அலாய் வீல் , பெரிய வீல் பின்பக்க வீல் பொருத்தப்பட்டுள்ளது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

மேலும் ஸ்கூட்டர் சந்தையிலேயே முதன் முதலாக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்ட ஸ்கூட்டராக இந்த ஸ்கூட்டர் இருக்கிறது. இது பகல் நேரத்திலும் சிறப்பாக தெரியும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், இரண்டு ட்ரிப் மீட்டர்கள், கடிகாரம், பெட்ரோல் அளவு, என பைக்கிற்கு பிரீமியம் அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

மேலும் இந்த பர்க்மேன் ஸ்டிரீட் ஸ்கூட்டரில் முன்பக்கம் இரண்டு பெரிய ஸ்டோரேஜ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில் வைக்கும் இடவசதி, 12W மொபைல் போன் சார்ஜிங் சாக்கெட், போன் மற்றும் வாலெட்டை வைக்க பெரிய இட வசதியும் இருக்கிறது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

மேலும் முன்புறமே இரண்டு கொக்கிகள் வழங்கப்பட்டுள்ளது. இது ஷாப்பிங் சென்று பொருட்களை எடுத்து வர வசதியாக இருக்கும். ஃபார்வேர்டு பயாஸ்டு போஷிஷன் ஃபூட் ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

சீட்டிற்கு அடியில் 21.5 லிட்டர் ஸ்டோரேஜ் வசியும், மல்டி பங்ஷன் கீ யில் அதை திறக்கும் வசதியும் இதில் இருக்கிறது. ஆனால் அதில் எல்இடி லைட் வசதியில்லை மேலும் முழு முகத்தையும் மூடும் ஹெல்மெட்டை அதில் வைக்க முடியாது என்பது ஒரு குறைதான்.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை சுஸூகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் உள்ள அதே 124 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.6 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், அதே நேரத்தில் சுஸூகி ஆக்ஸஸை விட இந்த ஸ்கூட்டர் 8 கிலோ அதிகமாக இருக்கிறது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

இதன் இன்ஜின் ஓவர் டேக்கிங் செய்யும் போது, டிராபிக்கில் பயனிக்கும் போதும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இன்ஜின் ஸ்மூத்தான சவுண்டை வெளிப்படுத்துகிறது, அதே நேரத்தில் வேகமாக பயணிக்கும் போது அதிக சத்தத்தை ஏற்படுத்துகிறது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

சுஸூகி எக்கோ பெர்பாமென்ஸ் தொழிற்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறப்பான பெட்ரோல் சிக்கனத்தை பெர்பாமென்ஷில் பெரும் மாற்றம் இன்றி இதை செய்கிறது. மேலும் இந்த பைக்கில் கம்பைன் பிரேக்கிங் சிஸ்டம் என்று சொல்லக்கூடிய (CBS) பொருத்தப்பட்டுள்ளது. முன் விலில் டிஸ்க் பிரேக்கும், பின் வீலில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

சஸ்பென்ஸனை பொருத்தவரை சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட் ஸ்கூட்டரில் முன்பக்கம் டெலஸ்கோபின் ஃபோர்க்ஸூம், பின் பக்கம் மோனோன ஷாக் அப்சர்பர்களும் பொருத்தப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த ஸ்கூட்டரில் ஹேண்டில் பார் சுஸூகி ஆக்ஸஸ் பைக்கை விட சற்று உயரமாகவே விடிவமைக்கப்பட்டுள்ளது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

து பைக்கை திருப்பும் போது உயரமான வாகன ஓட்டிகளுக்கு காரில் தட்டும் இதனால் அவர்கள் சற்று சிரமத்திற்கு உள்ளாவார்கள் ஆனால் சுஸூகி பர்க்மேன் ஸ்கூட்டரில் சுமார் 6 ஆடி உயர் உள்ளவரும் எந்த தொந்தரவு இல்லாமல் பயணிக்கலாம்.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

சுஸூகி நிறுவனம் இந்த பர்க்மேன் ஸ்டிரீட் ஸ்கூட்டர் லிட்டருக்கு 53 கி.மீ. வரை மைலேஜ் தரும் என அறிவித்துள்ளது. ஆனால் ரோட்டில் நாம் பயணிக்கும் போது சுமார் 45 கி.மீ. வரை மைலேஜ் தரலாம். 125 சிசி ஸ்கூட்டருக்கு இந்த மைலேஜ் சிறப்பான ஒன்று தான்.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

இந்த ஸ்கூட்டரின் டேங்க் கொள்ளவு 5.6 லிட்டர் தான் அதை கொண்டு சுமார் 250 கி.மீ வரை பயணிக்கலாம்.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

இந்த ஸ்கூட்டர் இந்தியாவின் முதல் மேக்ஸி ஸ்கூட்டராக வெளியாகியிருப்பதால் அதிகமாக மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. முக்கியமாக இளைஞர்களின் விருப்பங்களை நிறைவு செய்யும் ஸ்கூட்டராக இந்த ஸ்கூட்டர் உள்ளது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

இந்த ஸ்கூட்டர் ரூ 68 ஆயிரம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது.இது வெஸ்பாவிற்கு அடுத்த அதிக விலை ஸ்கூட்டராக உள்ளது.

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ்

சுஸூகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரை மையமாக கொண்டு இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதில் இல்லாத பல விஷயங்கள் இந்த ஸ்கூட்டரில் இருக்கிறது. அக்ஸஸ் பைக்கைவிட ரூ 8 ஆயிரம் கூடுதலாக வழங்கினாலும் அதற்கு தகுந்த பல வசதிகளை நீங்கள் அனுபவிக்க முடியும்.

மேலும் இந்த பைக்கின் போட்டோ கேலரியை கீழே காணுங்கள்..

Most Read Articles
English summary
Suzuki Burgman Street Road Test Review — India's First Maxi-Scooter. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X