ஏற்றுமதியில் புதிய உச்சம்! மேட்-இன்-தமிழக டூ-வீலர்களுக்கு வெளிநாடுகளில் செம்ம டிமாண்ட்... நம்பவே முடியல!

டிவிஎஸ் (TVS) நிறுவனம் கடந்த எந்த வருடங்களில் இல்லாத அளவு 2021-22 நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஏற்றுமதியில் புதிய உச்சம்! மேட்-இன்-தமிழக டூ-வீலர்களுக்கு வெளிநாடுகளில் செம்ம டிமாண்ட்... நம்பவே முடியல சூப்பரான வளர்ச்சி!

இந்தியாவின் மிக முக்கியமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் டிவிஎஸ் (TVS) நிறுவனமும் ஒன்று. தமிழகத்தின் ஓசூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம், கடந்து சென்ற எந்தவொரு வருடங்களில் இல்லாத வகையில் போன 2021ம் ஆண்டில் மிக அதிகளவில் இருசக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்றுமதியில் புதிய உச்சம்! மேட்-இன்-தமிழக டூ-வீலர்களுக்கு வெளிநாடுகளில் செம்ம டிமாண்ட்... நம்பவே முடியல சூப்பரான வளர்ச்சி!

நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, சுமார் 1 மில்லியன் இருசக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, 2021-22 நிதியாண்டில் 10 லட்சம் யூனிட் டூ-வீலர்களை டிவிஎஸ் ஏற்றுமதி செய்திருக்கின்றது.

ஏற்றுமதியில் புதிய உச்சம்! மேட்-இன்-தமிழக டூ-வீலர்களுக்கு வெளிநாடுகளில் செம்ம டிமாண்ட்... நம்பவே முடியல சூப்பரான வளர்ச்சி!

உண்மையில் மிக அதிக ஏற்றுமதி எண்ணிக்கை ஆகும். இந்த அதீத ஏற்றுமதி எண்ணிக்கையினால் நாட்டின் இரண்டாவது அதிக இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்த நிறுவனமாக டிவிஎஸ் மாறியுள்ளது. நிறுவனத்தின் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடலான அப்பாச்சி (TVS Apache) வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகளே அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதியில் புதிய உச்சம்! மேட்-இன்-தமிழக டூ-வீலர்களுக்கு வெளிநாடுகளில் செம்ம டிமாண்ட்... நம்பவே முடியல சூப்பரான வளர்ச்சி!

இதையடுத்து வெளிநாடுகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வரும் எச்எல்எக்ஸ் (TVS HLX) எனும் மாடலும் ஏற்றுமதியில் சிறந்த எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது. இதேபோல் டிவிஎஸ் ரைடர் (TVS Raider) மற்றும் டிவிஎஸ் நியோ (TVS Neo) ஆகிய பைக்குகளும் சிறப்பான எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதியில் புதிய உச்சம்! மேட்-இன்-தமிழக டூ-வீலர்களுக்கு வெளிநாடுகளில் செம்ம டிமாண்ட்... நம்பவே முடியல சூப்பரான வளர்ச்சி!

இவற்றிற்கே உலக நாடுகளில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இது உலகளவில் டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு டிமாண்ட் அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கின்றது. இது இந்திய தயாரிப்பிற்கு கிடைத்திருக்கும் நற்சான்றாகவும் பார்க்கப்படுகின்றது.

ஏற்றுமதியில் புதிய உச்சம்! மேட்-இன்-தமிழக டூ-வீலர்களுக்கு வெளிநாடுகளில் செம்ம டிமாண்ட்... நம்பவே முடியல சூப்பரான வளர்ச்சி!

டிவிஎஸ் நிறுவனம் தற்போது 80க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆப்பிரிக்கா, தெற்காசிய நாடுகள், இந்தியாவின் துணை கண்டங்கள், மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிவிஎஸ் நிறுவனம் அதன் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது.

ஏற்றுமதியில் புதிய உச்சம்! மேட்-இன்-தமிழக டூ-வீலர்களுக்கு வெளிநாடுகளில் செம்ம டிமாண்ட்... நம்பவே முடியல சூப்பரான வளர்ச்சி!

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இருசக்கர வாகன உற்பத்தி பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. நிறுவனம், பிஎம்டபிள்யூவின் புகழ்பெற்ற மாடல்களான ஜி310ஆர் (BMW G 310 R) மற்றும் ஜி310 ஜிஎஸ் (BMW G 310 GS) ஆகிய மாடல்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ஏற்றுமதியில் புதிய உச்சம்! மேட்-இன்-தமிழக டூ-வீலர்களுக்கு வெளிநாடுகளில் செம்ம டிமாண்ட்... நம்பவே முடியல சூப்பரான வளர்ச்சி!

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வாகன தயாரிப்பு நடவடிக்கை மேலும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இரு நிறுவனங்களும் வளர்ந்து வரும் மின் வாகன துறையில் கால் தடம் பதிக்க இருக்கின்றன. ஆகையால், மிக விரைவில் பிஎம்டபிள்யூ-டிவிஎஸ் கூட்டணியில் மிக விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்றுமதியில் புதிய உச்சம்! மேட்-இன்-தமிழக டூ-வீலர்களுக்கு வெளிநாடுகளில் செம்ம டிமாண்ட்... நம்பவே முடியல சூப்பரான வளர்ச்சி!

டிவிஎஸ் நிறுவனம் ஏற்றுமதியில் எட்டியிருக்கும் புதிய மைல்கல் சாதனை குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணு கூறியதாவது, "ஒரு மில்லியன் ஏற்றுமதி டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் சிறந்த மைல்கல் ஆகும். உலகளவில் டிவிஎஸ் தயாரிப்புகளுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருவதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஏற்றுமதியில் புதிய உச்சம்! மேட்-இன்-தமிழக டூ-வீலர்களுக்கு வெளிநாடுகளில் செம்ம டிமாண்ட்... நம்பவே முடியல சூப்பரான வளர்ச்சி!

தரம், தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்காக டிவிஎஸ் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இது மேலும் மேம்படுத்தப்பட இருக்கின்றது. கவர்ச்சிகரமான தயாரிப்புகள் மற்றும் பிரிவில் புதிய தொழில்நுட்ப சலுகைகளுடன் இன்னும் சில நாடுகளிலும் கால் தடம் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்று தொடர்ச்சியான வளர்ச்சி பாதையை உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs announced its annual two wheeler exports cross 10 lakh units in fy 2021 22
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X