எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

எண்ட்ரி-லெவல் பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிள் செக்மெண்ட்டில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் ஒரு அருமையான தேர்வு டிவிஎஸ் அப்பாச்சி. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதலே இந்திய வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை டிவிஎஸ் அப்பாச்சி பெற்று வருகிறது. டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு, அப்பாச்சி 150 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

அந்த சமயத்தில் விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருந்த பல்சர் 150 மற்றும் பல்சர் 180 மாடல்கள் இதன் மூலம் குறிவைக்கப்பட்டன. அதற்கு ஏற்ப வெகு விரைவாகவே இந்த செக்மெண்ட்டில் நம்பகமான ஒரு தயாரிப்பு என தன்னை நிரூபித்து காட்டியது. இடைப்பட்ட ஆண்டுகளில் டிவிஎஸ் அப்பாச்சி பிராண்டு வெகுவாக வளர்ச்சியடைந்துள்ளது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

எனவே டிவிஎஸ் மோட்டார் கம்பெனி அப்பாச்சி ரக பைக்குகளில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை செய்து கொண்டே வருகிறது. அதிக சக்தி வாய்ந்த வேரியண்ட்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் ஆர்டிஆர் 180 மோட்டார்சைக்கிள் மாடல்களை இதற்கு உதாரணமான கூற முடியும்.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

இந்த இரண்டு மாடல்களும் இந்த செக்மெண்ட்டில் புயலென பாய்ந்தன. இதற்காக அவற்றின் சக்தி வாய்ந்த இன்ஜின்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். இதன் பின்பு இன்னும் பெட்டராக, அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளை டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போது அதிக சக்தி வாய்ந்த அப்பாச்சி மாடலாக இது இருந்தது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

புத்தம் புதிய டிசைன் மற்றும் சேஸிஸ் உள்ளிட்டவற்றை அது கொண்டிருந்தது. இதனால் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் உரிமையாளர்கள், தங்கள் மோட்டார்சைக்கிளை அதிகம் நேசிக்க தொடங்கினர். நாங்கள் கூட அந்த மோட்டார்சைக்கிளை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம்.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

இதில், நாங்கள் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் டிவிஎஸ் எங்களிடம் இந்த பைக்கை கொடுத்தது. பைக் ஆர்வலர்களை பொறுத்தவரை, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளின் பிஎஸ்-6 வேரியண்ட்டை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

இந்தியாவில் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வர இன்னும் 4 மாதங்கள் உள்ளன. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. ஆனால் அதற்கு முன்னதாகவே டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் பிஎஸ்-6 வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. முன்பு இருந்ததை காட்டிலும் தற்போது இந்த பைக் தூய்மையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கிறது.

MOST READ: டூவீலர் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேல்ஸ்மேன்... அந்தரத்தில் பறந்து சென்ற அதிர்ச்சி வீடியோ

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

ஆனால் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் பிஎஸ்-6 வேரியண்ட் ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது? அதன் பெர்ஃபார்மென்ஸ் எப்படி? என்ற சந்தேகங்கள் உங்களுக்கு எழலாம். இதனை தெரிந்து கொள்வதற்காக ஒசூரில் உள்ள டிவிஎஸ் உற்பத்தி ஆலையின் டெஸ்ட் டிராக்கிற்கு சென்றோம். அங்கு இந்த பைக் எங்களுக்கு வழங்கிய அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

MOST READ: பாஜக-வை வீழ்த்திய உத்தவ்... பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட்... எதற்காக தெரியுமா...?

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

டிசைன் & ஸ்டைலிங்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பகுதியில் எல்இடி டிஆர்எல்களுடன் புதிய எல்இடி ஹெட்லேம்ப் இடம்பெற்றுள்ளது. புதிய ஹெட்லேம்ப் மாஸ்க்-ஆல் அவை சூழப்பட்டுள்ளன. இந்த புதிய ஹெட்லேம்ப் மாஸ்க் ஒட்டுமொத்த யூனிட்டையும் உண்மையில் இருப்பதை விட பெரிதாக காட்டுகிறது.

MOST READ: 2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

இதுதவிர தங்க நிற வண்ணத்தில் கன்வென்ஷனல் டெலஸ்கோபிக் போர்க் வழங்கப்பட்டுள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6 மாடலில் ஸ்டைலான அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. சந்தையில் இருந்து வெளியேறவுள்ள மாடலில் இருந்த அதே அலாய் வீல்கள்தான் புதிய மாடலிலும் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் இந்த பைக் முழுவதும் கவர்ச்சிகரமான கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

இது பைக்கின் தோற்றத்திற்கு இன்னும் கூடுதல் சிறப்பை சேர்க்கிறது. அதே நேரத்தில் இந்த பைக்கின் பின் பகுதி டிசைன் மற்றும் ஸ்டைலிங் சந்தையை விட்டு வெளியேறவுள்ள மாடலை போன்றுதான் இருக்கிறது. இதில், எல்இடி டெயில் லேம்ப் மற்றும் பல்ப்-லிட் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை பொறுத்தவரை, அதே ட்வின்-பேரல் யூனிட்தான் வழங்கப்பட்டுள்ளது. தற்போதும் கூட அருமையான சப்தத்தை அது உருவாக்குகிறது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

இன்ஜின் & பெர்ஃபார்மென்ஸ்

சந்தையை விட்டு வெளியேறவுள்ள மாடலுடன் ஒப்பிடுகையில், மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான புதிய இன்ஜின்தான். பழைய மாடலில் இருக்கின்ற அதே ஏர் மற்றும் ஆயில் கூல்டு, 197.75 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

ஆனால் டிவிஎஸ் நிறுவன இன்ஜினியர்கள் இந்த இன்ஜினை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தியுள்ளனர். புதிய அஸிமெட்ரிக் நானோ ஃபிரிக்ஸ் பிஸ்டன் மற்றும் புதிய ப்யூயல் இன்ஜெக்ஸன் சிஸ்டம் ஆகியவற்றுடன் இது வந்துள்ளது. குறைவான உமிழ்வை உருவாக்க இது உதவுகிறது. அதேசமயம் பிஎஸ்-6 அப்டேட், இன்ஜின் அவுட்புட்டை பாதித்துள்ளதா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்கு 'ஆம்' என்பதுதான் பதில்.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

புதிய பிஎஸ்-6 இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 20.21 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 16.8 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. சந்தையை விட்டு வெளியேறவுள்ள பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய மாடலில் 0.03 பிஎச்பி பவர் மற்றும் 1.3 என்எம் டார்க் திறன் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அதிகபட்ச டார்க் திறன் 7,000 ஆர்பிஎம்மிற்கு பதில் தற்போது 7,500 ஆர்பிஎம்மில் வரும்.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

இருந்தபோதும் பிஎஸ்-6 அப்டேட் பெர்ஃபார்மென்ஸை பெரிதாக ஒன்றும் பாதிக்கவில்லை. ரைடருடைய வலது மணிக்கட்டின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் தற்போது இன்ஜினிடம் இருந்து ரியாக்ஸன் கிடைக்கிறது. இந்த பைக்கில், Glide Through Technology (GTT) எனும் தொழில்நுட்பத்தை டிவிஎஸ் மோட்டார் கம்பெனி வழங்கியுள்ளது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

மெதுவாக நகரும் டிராபிக்கில், பைக் 'ஸ்டால்' ஆவதில் இருந்து இந்த தொழில்நுட்பம் பாதுகாக்கிறது. இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. சிங்கிள் சிலிண்டர் பைக்குகள் இதனை சமாளித்து செல்ல வேண்டுமென்றால், கிளட் மற்றும் கியர்களுக்கு அதிக வேலையை கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

ஆனால் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6 பைக்கில் இந்த பிரச்னை இருக்காது. ஜிடிடி டெக்னாலஜி இருப்பதால், குறைவான கியர்களில் இந்த பைக் 'ஸ்டால்' ஆகாது. எவ்வித த்ராட்டில் இன்புட்டும் இல்லாமல், முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கியர்களில், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6 மோட்டார்சைக்கிள் 'மூவ்' ஆகும்.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

மேற்கூறிய ஏதேனும் ஒரு கியரில், டிராபிக்கில் பைக் ஊர்ந்து செல்லும்போதெல்லாம், ப்யூயல் இன்ஜெக்ஸன் சிஸ்டம் பைக்கை தொடர்ந்து 2,000 ஆர்பிஎம்மில் பராமரிக்கிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதிக ஆர்பிஎம்-களில் பின் சக்கரம் லாக் ஆவதை ஸ்லிப்பர் கிளட்ச் தடுக்கிறது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

இதன் மூலமாக வளைவுகளில் 'ஸ்மூத்' ஆக பயணிப்பது உறுதி செய்யப்படுகிறது. பெர்ஃபார்மென்ஸ் என்ற விஷயத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6 மாடல் உண்மையில் எங்களை இம்ப்ரஸ் செய்தது. ட்ராக்கில் நாங்கள் பைக்கை செலுத்தும்போது, டார்க் திறன் குறைந்துள்ளது என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படவில்லை.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த பைக் வெறும் 4 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விட்டது. அதே சமயம் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட இந்த பைக் சுமார் 12 வினாடிகளை எடுத்து கொண்டது. இந்த பைக் மணிக்கு அதிகபட்சமாக 127 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்லும் என டிவிஎஸ் கூறுகிறது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

குனிந்து கொண்டு, ரேஸிங் பொஷிஷனில் அமர்ந்து பைக்கை ஓட்டும்போது எங்களால் அந்த வேகத்தை எட்ட முடிந்தது. அதே சமயம் சாதாரணமாக சாலையில் பயணிக்கும் பெரும்பாலான வாகன ஓட்டிகளை போல் வழக்கமான முறையில் அமர்ந்து ஓட்டும்போது மணிக்கு 117 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த மோட்டார்சைக்கிள் எட்டியது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

ரைடு & ஹேண்ட்லிங்

இந்த செக்மெண்ட்டில் கையாள்வதற்கு மிக சிறப்பான மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி உள்ளது. இந்த விஷயத்தை பொறுத்தவரை புதிய மாடலிலும் எவ்வித மாற்றமும் இல்லை. அதாவது கையாள்வதற்கு மிக சிறப்பாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகள், டிராக்குகளில் இந்த பைக்கை எளிதாக கையாளலாம்.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

சஸ்பென்ஸன் பணிகளை பொறுத்த மட்டில், முன் பக்கம் டெலஸ்கோபிக் போர்க்கும், பின் பகுதியில் கேஒய்பி மோனோஷாக்கும் கவனிக்கின்றன. இந்த செக்மெண்ட்டில் சௌகரியமான பயணத்தை வழங்கும் ஒரு பைக் என டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளை கூறலாம். இந்த பைக்கின் பிஎஸ்-6 மாடலை நாங்கள் இன்னும் வழக்கமான சாலையில் வைத்து ஓட்டி பார்க்கவில்லை.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

இருந்தபோதும் இந்த புதிய மாடலும் சௌகரியமான பயணத்தை வழங்கும் என்றுதான் நாங்கள் கூறுவோம். ஏனெனில் சஸ்பென்ஸனில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதேபோல் டயர்கள் மற்றும் ரோடு க்ரிப் ஆகிய அம்சங்களிலும் கூட போட்டியாளர்களை காட்டிலும் இந்த பைக் அசத்தலாக உள்ளது. இதற்கு புதிய டிவிஎஸ் டயர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

இந்த பைக்கின் டயர்கள் அற்புதமாக உள்ளன. ஒரு சில விலை உயர்ந்த மற்றும் மிகவும் புகழ் பெற்ற நிறுவன டயர்களை விட இந்த பைக்கின் டயர்கள் நன்றாக இருக்கின்றன. டிவிஎஸ் நிறுவனம் முதல் முறையாக பின் பகுதியில் ரேடியல் டயரை வழங்கியுள்ளது. ஆனால் தினசரி பயன்பாட்டிற்கு க்ரிப் எப்படி இருக்கிறது? என்பதை எங்களால் சொல்ல முடியாது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

ஏனெனில் நாங்கள் பொது சாலையில் பைக்கை ஓட்டி பார்க்கவில்லை. இந்த பைக்கின் முன் பகுதியில் 270 மிமீ பெடல் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. ட்யூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

முக்கியமான வசதிகள்:

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6 வேரியண்ட் எல்இடி டிஆர்எல்கள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ப்யூயல் இன்ஜெக்ஸன் உள்ளிட்ட புதிய வசதிகளுடன் வந்துள்ளது. எனினும் இந்த பைக்கின் புதிய SmartXonnect வசதி மற்றும் புதிய எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட்டேஷன் ஆகிய வசதிகளை வாடிக்கையாளர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

இந்த பைக்கின் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், இன்-பில்ட் டாட்-மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளேவுடன் வந்துள்ளது. இது பைக்கின் வேகத்தை மணிக்கு எத்தனை கிலோ மீட்டர்கள் என்ற வீதத்திலும், மணிக்கு எத்தனை மைல் என்ற வீதத்திலும் பார்க்க உதவுகிறது. பைக் எட்டிய அதிகபட்ச வேகத்தையும் கூட இது காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

இதுதவிர பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை விரைவாக எட்டிய நேரம், சராசரி வேகம் உள்பட பல்வேறு தகவல்களையும் இது காட்டும். இந்த பைக்கில் உள்ள மற்றொரு முக்கிய வசதி Rear-wheel Lift Protection என சொல்லலாம். ஏபிஎஸ் சிஸ்டமின் ஒரு பகுதியாக இந்த வசதி வருகிறது. முன் சக்கரத்தில் மிக கடினமாக பிரேக் பிடிக்கும்போது, பின் சக்கரம் தூக்குவதில் இருந்து இது காக்கிறது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு:

பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு அப்டேட் செய்யப்பட்டிருப்பதன் மூலமாக, பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் புது மாடல் பல்வேறு வழிகளில் சிறப்பாக உள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு டிவிஎஸ் நிறுவனம் 6 ஸ்பீடு கியர் பாக்ஸை வழங்கியிருக்கலாம். இந்த செக்மெண்ட்டில் 5 ஸ்பீடு கியர் பாக்சுடன் இருக்கும் ஒரே மோட்டார்சைக்கிள் அப்பாச்சி மட்டுமே.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

ஆனால் இதுபோன்ற ஒரு சில குறைகளை களைந்து விட்டு பார்த்தால், அனைத்து அம்சங்களிலும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6 மாடல் அசத்துகிறது. பெர்ஃபார்மென்ஸை இழக்காமலேயே தூய்மையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இது மாறியுள்ளது.

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

அதே நேரத்தில் தனது முக்கிய போட்டியாளரான பஜாஜ் பல்சர் 200என்எஸ் பைக்கை காட்டிலும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6 பைக்கின் விலை சற்றே அதிகம். ஆனால் அதற்கேற்ப கூடுதல் வசதிகளை இது பெற்றுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் குறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக வெளிப்படுத்துங்கள்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Apache RTR 200 4V BS-6 First Ride Review. Read in Tamil
Story first published: Thursday, December 12, 2019, 21:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more