மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டிவிஎஸ் ஜூபிடர் மிகவும் பிரபலமான பிராண்டாக வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. இதுவரை 45 லட்சம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில், வாடிக்கையாளர்களுக்கு அதிக செயல்திறன் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலை டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

அதிக பிரிமீயம் அம்சங்களுடன் 125சிசி எஞ்சினுடன் வந்துள்ள இந்த புதிய ஸ்கூட்டரை ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலையின் டெஸ்ட் டிராக்கில் வைத்து ஓட்டி பார்த்தோம். அப்போது இந்த ஸ்கூட்டர் குறித்து கிடைத்த சாதக, பாதக விஷயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

டிசைன்

டிவிஎஸ் ஜூபிடர் 110 மாடலில் இருந்து வேறுபடுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. அழகிய எல்இடி ஹெட்லைட்டுகள், இன்டிகேட்டர் க்ளஸ்ட்டர்கள் மீது கொடுக்கப்பட்டு இருக்கும் எல்இடி பகல்நேர விளக்கு பட்டை உள்ளிட்டவை தனித்துவத்தையும், பிரிமீயமாகவும் காட்டுகிறது.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

மேலும், க்ரோம் அலங்கார பாகங்களும் இதன் தோற்ற வசீகரத்தை கூட்டுகிறது. டேஷ்போர்டு மற்றும் முன்புற அப்ரான் பகுதி பாடி கலரில் உள்ளது. இரட்டை வண்ண அலாய் வீல்கள் மிக ஸ்டைலாக இருக்கிறது. பக்கவாட்டில் வலிமையான பாடி பேனல்கள், பின்புறத்தில் அழகிய டெயில் க்ளஸ்ட்டர்கள் வசீகரிக்கின்றன.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

அடுத்து, ஆல் இன் ஒன் லாக் என்ற வசதியையும் பெற்றிருக்கிறது. யுஎஸ்பி மொபைல்போன் சார்ஜர், இரண்டு சிறிய க்ளவ்பாக்ஸ் அறைகள் ஆகியவையும் சவுகரியத்தை அதிகரிக்கின்றன. இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது நல்ல பிரகாசத்தை வழங்கும் என்று நம்பலாம்.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இடது புறத்தில் அனலாக் மானி மற்றும் வலது புறத்தில் தகவல்களை பெற உதவும் மின்னணு திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. ஸ்பீடோமீட்டர் அனலாக்கிலும், இதர தகவல்களை பெறுவதற்கு நீல வண்ண பின்னணியில் ஒளிரும் எல்சிடி திரையும் உதவுகிறது. ஓடிய தூரம், டிரிப் மீட்டர்கள், சராசரி எரிபொருள் செலவு, இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும். இதனைவிட சற்று பெரிய திரையுடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

வெளிப்புறத்தில் பெட்ரோல் டேங்க் மூடி

டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, முன்புற அப்ரான் பின்புறத்தில் எரிபொருள் டேங்க் மூடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

பெரிய பூட்ரூம் வசதி

மேலும், பெட்ரோல் டேங்க் ஃபுட்போர்டுக்கு கீழாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், 33 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற்றிருக்கிறது. இரண்டு முழுமையான அளவுடைய ஹெல்மெட்டுகளை வைக்க முடியும்.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

எஞ்சின்

அதிக செயல்திறன் மிக்க எஞ்சின்தான் இந்த புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே, எஞ்சின் குறித்து முதலில் பார்த்துவிடலாம். இந்த ஸ்கூட்டரில் 124.8சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரில் உள்ள எஞ்சின் வடிவமைப்பு அம்சங்களை ஒத்திருந்தாலும், இது கம்யூட்டர் வகை ஸ்கூட்டராக நிலைநிறுத்தப்படுவதால், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையிலும், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரில் உள்ள எஞ்சின் 3 வால்வுகளை கொண்டுள்ள நிலையில், புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் 2 வால்வுகள் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் எஞ்சின் அதிகபட்சமாக 8.1 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்,மில் வெளிப்படுத்தும். இதனால், என்டார்க் ஸ்கூட்டரைவிட ஜூபிடர் 125 ஸ்கூட்டர் செயல்திறன் 1.1 பிஎச்பி குறைந்துள்ளது. மேலும், இன்டெலிகோ என்று குறிப்பிடப்படும் மைக்ரோ ஹைப்ரிட் தொழில்நுட்பமும் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட்டர் மோட்டாருக்கு பதிலாக ஐஎஸ்ஜி என்ற நவீன யுக ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் வழங்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்திலான கேம் செயின், இலகு எடை மற்றும் குறைவான தேய்மானம் கொண்ட கிராங்க்சாஃப்ட் பாகங்கள் மூலமாக அதிர்வுகளும், சப்தமும் வெகுவாக குறைக்க உதவுவதுடன், அதிக மைலேஜை பெறவும் வழி வகுக்கும். இதன் ரகத்திலேயே அதிக மைலேஜை வழங்கும் ஸ்கூட்டராக ஜூபிடர் 125 மாடலை டிவிஎஸ் குறிப்பிடுகிறது.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

சேஸீ, பிரேக் மற்றும் சஸ்பென்ஷன்

புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் ஸ்கூட்டரில் இலகு எடையிலான புதிய சேஸீ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், சிறப்பான கையாளுமை மற்றும் ஓட்டுதல் தரத்தை பெற முடிகிறது.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் முன்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரேக்குகளும் ஒருங்கிணைந்து செயல்படும் காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது. சேஸீ, சஸ்பென்ஷன், பிரேக் ஆகியவை ஜூபிடர் 110 மற்றும் இதர மாடல்களுடன் சிறப்பானதாக இருக்கிறதா? டிவிஎஸ் டெஸ்ட் டிராக்கில் புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டர் ஓட்டும்போது எவ்வாறு இருந்தது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

ஓட்டுதல் அனுபவம்

புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்தவுடன் இதன் அகலமான மற்றும் சொகுசான இருக்கைகள் சவுகரியமான உணர்வை தருகின்றன. ஓட்டுபவருக்கு அதிக சொகுசு மற்றும் சவுகரியத்தை தரும் வகையில் இதன் இருக்கைகள் மற்றும் கைப்பிடிகளை வடிவமைத்துள்ளனர். மேலும், ஃபுட்போர்டு அகலமாக இருப்பதால் சவுகரியமாக அமர்ந்து ஓட்டும் உணர்வை தருகிறது. ஸ்டார்ட்டர் பட்டனை அழுத்தியவுடன் எந்த சப்தமும் இல்லாமல் மிகவும் அமைதியாக எஞ்சின் உயிர் பெறுகிறது. அதேபோன்று ஐட்லிங்கில் எஞ்சின் சப்தமும் மிக குறைவாக இருக்கிறது.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

அதேநேரத்தில், ஆக்சிலரேட்டரை கொடுத்தவுடன் பிக்கப்பில் பின்னுகிறது. ஆரம்ப நிலை வேகம் ஓட்டுபவரின் எண்ணத்திற்கு தக்கவாறு இருப்பதால் உற்சாகமான அனுபவத்தை தருகிறது. சாதாரண சாலைகளில் ஓட்டவில்லை. ஆனால், டெஸ்ட் டிராக்கில் குறைவான வேகத்திலும் சிறப்பான நிலைத்தன்மையுடன் செல்கிறது. தினசரி பயன்பாட்டிற்கு நிச்சயம் சிறப்பானதாக இருக்கும் என்று கூறலாம்.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

சரி, எல்லாம் சிறப்புதான், கையாளுமை எப்படி உள்ளது? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் டெஸ்ட் டிராக்கில் ஓட்டும்போது கையாளுமையில் வெகு ஜோராக இருந்ததை கூற வேண்டும். அதாவது, எந்த நேரத்தில் நினைத்தாலும் உடனடியாக நாம் நினைத்தபடி ஓட்டுவதற்கான நிலையுடன் செல்கிறது. இதனால், நெருக்கடியான அல்லது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டும்போது எளிதாக ஓட்டலாம். இதன் சஸ்பென்ஷன் மிக சொகுசான அனுபவத்தை தருவதாக இருக்கிறது. இதைத்தான் இந்த ஸ்கூட்டரை வாங்க விரும்புவோரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

செயல்திறனில் இந்த ஸ்கூட்டர் ரொம்ப சூப்பர் என்று கூற முடியாவிட்டாலும், சிறப்பாக இருக்கிறது. 0 - 60 கிமீ வேகம் வரையிலும் செயல்திறனில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது. இது கம்யூட்டர் வகை ஸ்கூட்டர் என்பதால், இதற்கு மேல் செயல்திறனை எதிர்பார்ப்பதும் நன்றாக இருக்காது. இந்த ஸ்கூட்டர் 75 கிமீ வேகம் வரை தொய்வு இல்லாமல் செல்கிறது. டெஸ்ட் டிராக்கில் 90 கிமீ வேகம் வரை தொட முடிந்தது.

மைலேஜிலும், செயல்திறனிலும் கில்லி... புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

இந்தியாவில் 125சிசி ரக ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் சிறந்த தினசரி பயன்பாட்டு ஸ்கூட்டராக இதனை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 110சிசி ரகத்தில் விற்பனையில் கலக்குவது போன்றே 125சிசி ரகத்திலும் ஜூபிடர் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக மாறும் என்று எதிர்பார்க்கலாம். சிறந்த எஞ்சின், வடிவமைப்பு, வசதிகளுடன் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் என்று நம்பலாம். இந்த ஸ்கூட்டரை விரைவில் சாதாரண சாலைகளில் வைத்து ஓட்டிப் பார்த்து சாதக, பாதகங்களை வழங்குவதற்கு விரைவில் முயற்சி செய்கிறோம்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Jupiter 125 First Ride Review In Tamil. First ride impressions, Engine, Specifications, Performance and Features Details In Tamil.
Story first published: Thursday, October 7, 2021, 17:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X