புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் ரேடியான் பைக்கை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். அப்போது இந்த பைக் குறித்து கிடைத்த சாதக, பாதக விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வரிசை கட்டிய டிவிஎஸ் மாடல்கள்

பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. குறிப்பாக, 110சிசி ரகத்தில் பல மாடல்கள் போட்டி போடுகின்றன. டிவிஎஸ் நிறுவனமே, ஸ்டார் சிட்டி ப்ளஸ் மற்றும் விக்டர் என இரண்டு மாடல்களை வைத்திருக்கிறது. தற்போது 3-வது மாடலாக டிவிஎஸ் ரேடியான் பைக் இந்த செக்மென்ட்டில் களமிறங்கி உள்ளது.

போட்டியாளர்களை விஞ்சும் விதத்தில் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள், டிசைன், செயல்திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா? தொடர்ந்து படியுங்கள்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்

மிக எளிமையான, அதே சமயத்தில் நேர்த்தியான பைக் பட்ஜெட் பைக் மாடலாக டிவிஎஸ் ரேடியான் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பட்ஜெட் மார்க்கெட்டில் மிக வெற்றிகரமாக இருக்கும் ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கின் டிசைன் தாத்பரியங்களை மனதில் வைத்து இந்த பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முக்கிய அம்சங்கள்

முன்புறத்தில் எளிமையான ஹெட்லைட் அமைப்புடன் எல்இடி பகல்நேர விளக்குகள் கொண்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. சைடு மிரர்கள் இரட்டை வண்ண பின்னணியுடன் அழகுற காட்சி தருகிறது. கிளியர் லென்ஸ் இண்டிகேட்டர்களும் மிக எளிமையாக உள்ளது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் பெட்ரோல் டேங்க், சைடு ஸ்கூப்புகள் ஆகியவை ஹீரோ ஸ்பிளென்டரின் சாயலை நினைவூட்டுகிறது. எனினும், டிவிஎஸ் பேட்ஜ் மற்றும் புதிய வண்ணக் கலவைகள் இந்த பைக்கிற்கு தனித்துவத்தை தருகின்றன. மேட் பிளாக் அலாய் வீல்களும் சிறப்பு.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

இந்த பைக்கில் சதுர வடிவிலான கச்சிதமான டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் கிளியர் லென்ஸ் இண்டிகேட்டர்கள் சிறப்பாக இருக்கின்றன. இருக்கையின் பின்புறத்தில் க்ரோம் பூச்சுடன் கூடிய கேரியர் உள்ளது. மொத்தத்தில் டிசைன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்பதில் ஐயமில்லை.

MOST READ: ப்யூர் சிங்கிள் பசங்களுக்கான யமஹாவின் புதிய மாடல்... அட்டகாசமான புகைப்படம் உள்ளே...

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

க்ரோம் அலங்காரம்

கேரியர், சைலென்சர் உள்ளிட்ட பல ஆக்சஸெரீகள் க்ரோம் பூச்சுடன் கொடுக்கப்பட்டு இருப்பதால் பிரிமீயம் பைக் மாடல் போன்று காட்சி தருகிறது. அதாவது, பட்ஜெட் விலையில் சற்று பகட்டான மாடல் போன்று இருப்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும் விஷயமாக இருக்கும்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின்

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 109.7சிசி எஞ்சின்தான் இந்த புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.3 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

செயல்திறன்

பட்ஜெட் பைக்குகளில் டார்க் திறனை வெளிப்படுத்தும் முறையும், மைலேஜும் மிக முக்கியமான விஷயங்களாக பார்க்கப்படும். இந்த பைக்கை 300 கிமீ தூரம் வரை டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதில், இந்த பைக் போதுமான டார்க் திறனை வெளிப்படுத்துவதை உணர முடிகிறது. எனினும், எதிர்பார்த்த அளவு இல்லாமல் சற்று ஏமாற்றத்தை தருவதையும் கூற வேண்டும்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மேலும், முதல் கியர் ரேஷியோ மிக குறைவாக இருப்பதால், இரண்டு பேர் அமர்ந்து செல்லும்போது, ஆக்சிலரேட்டரை கூடுதலாக கொடுத்து இயக்க வேண்டி இருக்கிறது. ஆனால், இரண்டாவது கியரிலிருந்து சாவகாசமான ஓட்டுதல் அனுபவத்தை தருகிறது. நகர்ப்புறத்தில் ஒருவர் மட்டுமே ஓட்டிச் செல்லும்போது போதுமான செயல்திறனை வழங்குவது ஆறுதல்.

இது செயல்திறனுக்கான பைக் மாடல் என்பது உண்மையாக இருந்தாலும், இந்த பைக் 0 -100 கிமீ வேகத்தை 8 வினாடிகளில் எட்டிவிடுகிறது. எமது டெஸ்ட் டிரைவின்போது 90 கிமீ வேகம் வரை தொட்டது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மைலேஜ்

டிவிஎஸ் ரேடியான் பைக் லிட்டருக்கு 69.3 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தெரிவிக்கிறது. ஆனால், எமது டெஸ்ட் டிரைவின்போது நகர்ப்புறம் மற்றும் சில நெடுஞ்சாலைகளில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்ததில், 60 முதல் 65 கிமீ மைலேஜ் வரை வழங்கியது. இந்த பைக்கில் 10 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இருப்பதால் ஒருமுறை ஃபுல் டேங்க் அடித்தால் 600 முதல் 650 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஓட்டுதல் அனுபவம்

டிவிஎஸ் ரேடியான் பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேப்ரியல் நிறுவனத்தின் இரண்டு ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஷாக் அப்சார்பர்கள் மோசமான சாலைகளிலும் சிறப்பாக எதிர்கொள்கின்றன. சஸ்பென்ஷன் மென்மையாக இருப்பதால், சொகுசான பயண அனுபவத்தை கொடுக்கிறது. இருக்கையும் போதிய குஷனுடன் இருப்பது நன்று.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கையாளுமை

இந்த பைக் 112 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. மேலும், எளிமையான வடிவமைப்பு மற்றும் ஹேண்டில்பார் அமைப்பு எளிதாக கையாள உதவுகிறது. நெருக்கடியான போக்குவரத்து நெரிசலில் கூட எளிதாக புகுந்து செல்ல முடிவதால் உற்சாகமான அனுபவத்தை தருகிறது. அதேநேரத்தில், பின் இருக்கையில் பயணி அமர்ந்திருக்கும்போது கவனமாக ஓட்ட வேண்டி இருக்கிறது. கையாளுமை ஓகே ரகமாக சொல்லலாம்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டயர்கள்

இந்த பைக்கில் முன்புறத்தில் 2.75x18 அளவுடைய டிவிஎஸ் ட்யூரா க்ரிப் டயரும், பின்புறத்ததில் 3.00x18 அளவுடைய டிவிஎஸ் டயரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த டயர்கள் போதிய தரைப்பிடிப்பை வழங்குகின்றன.

MOST READ: ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சிறப்பம்சங்கள்

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கில் அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவு மானி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இண்டிகேட்டர், ஹை பீம் ஹெட்லைட் மற்றும் நியூட்ரல் கியருக்கான சமிக்ஞை விளக்குகளும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் உள்ளன. மிக எளிமையான முறையிலான இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் எழுத்துக்கள், எண்களை தெளிவாக பார்க்க முடிகிறது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிரேக் சிஸ்டம்

இந்த பைக்கில் எஸ்பிடி எனப்படும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிரேக் பவரை இரண்டு சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரித்து தரும் இந்த தொழில்நுட்பம் உள்ளது. இது இக்கட்டான தருணங்களில் சிறப்பான பாதுகாப்பை ஓட்டுபவருக்கு வழங்குகிறது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வண்ணங்கள்

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் பியர்ல் ஒயிட், மெட்டல் பிளாக், கோல்டன் பீஜ் மற்றும் ராயல் பர்ப்புள் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தீர்ப்பு

டிசைன், எஞ்சின், வசதிகளுடன் இந்த பைக் ரூ.48,400 என்ற சவாலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த ரகத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஓர் சிறந்த தேர்வை டிவிஎஸ் நிறுவனம் வழங்கி இருக்கிறது. நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதி வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் ரகத்தில் சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles

Tamil
English summary
TVS Radeon road-test review: TVS Motor Company launched the Radeon in the Indian market back in August 2018, and it has been selling reasonably well. A 109.7cc engine, 8.2bhp and 8.7Nm might not sound very enchanting but it is the volume driving end of the segment. How does it feel when pushed hard? Let's find out.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more