இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான பைக்குகள் கம்யூட்டர் (Commuter) ரகத்தை சேர்ந்தவை. நீங்கள் செயல்திறன் மிக்க, அதிவேகத்தில் பயணிக்க கூடிய பைக்குகளை விரும்புபவராக இருக்கலாம். ஆனால் கம்யூட்டர் ரக பைக்குகள் இல்லாமல், இந்திய சந்தை இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்தியாவில் கம்யூட்டர் பைக் செக்மெண்ட்டிற்கு டிவிஎஸ் மோட்டார் கம்பெனி புதியது அல்ல. இந்தியாவின் கம்யூட்டர் பைக் செக்மெண்ட்டில் டிவிஎஸ் நிறுவனம் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இதற்கு விக்டர், ஸ்டார் சிட்டி போன்ற பல்வேறு பைக்குகள் உதவி செய்துள்ளன.

இந்த வரிசையில் தற்போது பிரீமியம் கம்யூட்டர் பைக் ஒன்றை டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இங்கே நாங்கள் 'பிரீமியம்' குறிப்பிட்டிருப்பதற்கு காரணம் உள்ளது. அதனை இந்த செய்தியில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். டிவிஎஸ் ரைடர் (TVS Raider) என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புதிய பைக், 125 சிசி செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கை டெஸ்ட் ரைடு செய்வதற்காக, ஓசூர் டிவிஎஸ் தொழிற்சாலையில் அமைந்திருக்கும் டெஸ்ட் டிராக்கிற்கு நாங்கள் அழைக்கப்பட்டோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த பைக் பற்றிய விரிவான தகவல்களையும் இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

டிசைன்

டிவிஎஸ் ரைடர் பைக்கை பார்த்த உடனேயே இது உண்மையில் 125 சிசி கம்யூட்டர் பைக்தானா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இந்த பைக்கை பற்றிய தகவல்கள் தெரியாமல் முதல் முறையாக பார்ப்பவர்கள், இது 125 சிசி கம்யூட்டர் பைக் என்பதை நம்புவது கடினம். ஏனெனில் இதன் டிசைன் 160-180 சிசி பைக்குகளை போன்று இருக்கிறது. மற்ற பைக்குகளிடம் இருந்து தனித்து தெரிய செய்யும் வகையில், ஏராளமான டிசைன் அம்சங்களை டிவிஎஸ் ரைடர் பெற்றுள்ளது.

டிவிஎஸ் ரைடர் பைக்கில் நிறைய வண்ண தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் நாங்கள் டெஸ்ட் ரைடு செய்தது பிரகாசமான ஃபியரி யெல்லோ நிற பைக் ஆகும். எரிபொருள் டேங்க், முன் பக்க மட்கார்டு மற்றும் இன்ஜின் பேஷ் ப்ளேட் ஆகியவையும் அதே பளபளப்பான மஞ்சள் நிறத்தில்தான் டிசைன் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்றும் சேர்ந்து, போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், டிவிஎஸ் ரைடர் பைக்கிற்கு பிரீமியமான லுக்கை தருகின்றன.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

ஒருவேளை மஞ்சள் நிறத்தை நீங்கள் விரும்பாவிட்டால், உங்களுக்காக மேலும் மூன்று கவர்ச்சிகரமான வண்ண தேர்வுகள் உள்ளன. அவை ஸ்ட்ரைக்கிங் ரெட், விக்கெட் ப்ளாக் மற்றும் ப்ளாசிங் ப்ளூ ஆகியவை ஆகும். இதில், விக்கெட் ப்ளாக் நிறம் எளிமையாக உள்ளது. ஆனால் எங்கள் பார்வைக்கு ப்ளாசிங் ப்ளூ நிறம் மிகவும் கவர்ச்சிகரமாக தோன்றியது. ஆனால் வண்ண தேர்வு விருப்பங்கள் ஒவ்வொருவரையும் பொறுத்து மாறுபடும் என்பதை மறுக்க முடியாது. எனவே உங்கள் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், நிறத்தை தேர்வு செய்யலாம்.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

இது புதிய பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புத்தம் புதிய பைக் ஆகும். என்றாலும் கூட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (TVS Apache RTR 160 4V) பைக்கில் இருந்து டிசைன் அம்சங்கள் பெற்றப்பட்டுள்ளதை போல் தெரிகிறது. அந்த பைக்கை மனதில் வைத்து டிவிஎஸ் நிறுவனம் ரைடர் பைக்கை டிசைன் செய்திருக்கலாம். முன் பகுதியில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப்தான் இந்த பைக்கின் தனித்துவமான டிசைன் அம்சம். தனித்துவமான 'X' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் இது வருகிறது. ஹை மற்றும் லோ பீம்களுக்கு எல்இடிதான் வழங்கப்பட்டுள்ளது.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

இதற்கு மேலே சிறிய ஃப்ளை ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மிகவும் சிறப்பாக இருக்கிறது. நிறைய தகவல்களை நமக்கு வழங்குகிறது. அதே நேரத்தில் இந்த பைக்கின் முன் பக்க மட்கார்டு ட்யூயல்-டோன் யூனிட் ஆகும். இது கவர்ச்சியாக இருப்பதுடன், பெட்டல் டிஸ்க் பிரேக்கும் டிசைனுக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கிறது.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

பக்கவாட்டு பகுதியில் இருந்து டிவிஎஸ் ரைடர் பைக்கை பார்த்தால், உங்கள் கவனம் முதலில் பெரிய எரிபொருள் டேங்க் மீதுதான் செல்லும். இது முரட்டுத்தனமாக இருப்பதுடன், கவர்ச்சியாகவும் உள்ளது. உண்மையில் அளவு அடிப்படையில் பார்த்தால், டிவிஎஸ் ரைடர் மிகப்பெரிய பைக் கிடையாது. ஆனால் இது பெரிய பைக் போன்ற தோற்றத்தை இந்த எரிபொருள் டேங்க் வழங்குகிறது.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

அதேபோல் இன்ஜினுக்கு அடியில் இருக்கும் பேஷ் ப்ளேட்டும், இந்த பைக்கிற்கு துள்ளலான மற்றும் ஸ்போர்ட்டியான லுக்கை தருகிறது. சைடு பேனல்களில் ரைடர் பேட்ஜ், ஸ்பிளிட் இருக்கைகள், மேல் நோக்கிய வகையிலான சைலென்சர் மற்றும் பெரிய க்ராப்ரெயில் ஆகியவையும் டிவிஎஸ் ரைடர் பைக்கில் குறிப்பிடத்தகுந்த அம்சங்களாக உள்ளன. அதே நேரத்தில் இந்த பைக்கில் 6 ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

பின் பகுதியிலும் இந்த பைக் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. இந்த பைக்கின் டெயில் லேம்ப், ஸ்பிளிட் எல்இடி யூனிட் ஆகும். ஆனால் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள், ஹாலோஜன் பல்புகள் மூலம்தான் ஒளிர்கின்றன. அதேபோல் இந்த பைக்கின் சாரி கார்டும் (Saree Guard) கவனிக்க கூடியதாக உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த பிரீமியம் கம்யூட்டர் பைக்கின் டிசைன் ஸ்போர்ட்டியாகவும், அனைவரையும் கவர்ந்து இழுக்க கூடியதாகவும் உள்ளது. மிகவும் குறைவான விலையில் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட பைக்கை எதிர்பார்க்கும் இளைய தலைமுறையினர், டிவிஎஸ் ரைடர் பைக்கின் டிசைன் அம்சங்கள் நிச்சயமாக கவர்ந்து இழுக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

வசதிகள்

இளம் தலைமுறையினரை குறிவைத்து, ரைடர் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. வசதிகளின் பட்டியல் மிகவும் நீளமாக இருக்க வேண்டும் என்பதுதான், இளம் தலைமுறையினர் பலரின் எதிர்பார்ப்பு. அந்த தேவையை டிவிஎஸ் நிறுவனம் சரியாக பூர்த்தி செய்துள்ளது. இந்தியாவில் ரைடர் அளவிற்கு வேறு எந்த 125 சிசி பைக்கிலும் வசதிகளின் பட்டியல் இவ்வளவு பெரிதாக இல்லை என்று கூறலாம்.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப்பில் எல்இடி விளக்குகள்தான் வழங்கப்பட்டுள்ளன. 125 சிசி செக்மெண்ட்டில் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ள ஒரே பைக், டிவிஎஸ் ரைடர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மற்ற பைக்குகளில் எல்இடி பகல் நேர விளக்குகள்தான் வழங்கப்படுகின்றன. டிவிஎஸ் ரைடர் பைக்கில் எல்இடி இன்டிகேட்டர்களும் வழங்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அப்படி செய்திருக்கும்பட்சத்தில், விலை சுமாராக 1,000 ரூபாய் வரை அதிகரித்து விடும். எனவேதான் இன்டிகேட்டர்களில் டிவிஎஸ் நிறுவனம் ஹாலோஜன் பல்புகளை வழங்கியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இன்ஸ்ட்ரூமெண்டேஷன் பணிகளுக்கு எல்சிடி திரை வழங்கப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டேக்கோமீட்டர், ட்ரிப் மீட்டர்கள், ரேஞ்ச், எரிபொருள் சிக்கனம் மற்றும் ரைடு மோடுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது.

அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டில் பெரிய 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில், டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் (SmartXConnect) ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஹை-ஸ்பீடு அலர்ட், மெசேஜ் நோட்டிஃபிகேஷன் அலர்ட், டிஜிட்டல் டாக்குமெண்ட் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகளை இது பெற்றுள்ளது. ஆனால் இந்த வசதியை பயன்படுத்தி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

அதே நேரத்தில் இந்த பைக்கில் புத்தம் புதிய ஸ்விட்ச் கியர் வழங்கப்பட்டுள்ளது. ஹேண்டில்பாரின் இடது பக்கத்தில் லைட்கள் மற்றும் ஹாரனுக்கான ஸ்விட்ச்கள் இருக்கின்றன. வலது பக்கத்தில் ரைடிங் மோடுகளை தேர்வு செய்வதற்கான ஸ்விட்ச் உள்ளது. இதன் மூலம் ஈக்கோ மற்றும் பவர் மோடுகளை நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். அதே நேரத்தில் எரிபொருள் டேங்க்கின் முன்னால் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்வதற்கு வசதியாக யூஎஸ்பி ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

இன்ஜின் செயல்திறன் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

பைக்கை ஸ்டார்ட் செய்த உடனேயே இந்த இன்ஜின் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை உணர முடிகிறது. அத்துடன் இந்த இன்ஜின் பிரீமியமான உணர்வையும் தருகிறது. மேலும் பழைய தனித்துவமான டிவிஎஸ் பைக்குகளின் சைலென்சர் சப்தத்தை புதிய டிவிஎஸ் ரைடர் பைக்கும் பெற்றுள்ளது. இந்த பைக்கை பார்க்காமல், சைலென்சர் சப்தத்தை கேட்டால், ஒரு 125 சிசி பைக் இப்படியான ஒரு சப்தத்தை உருவாக்குகிறதா? என்பதை கண்டறிவது மிகவும் கடினம். அந்த அளவிற்கு சைலென்சர் சப்தம் சிறப்பாக இருக்கிறது. ஆனால் 6,500 ஆர்பிஎம்மிற்கு பிறகு சைலென்சர் சப்தம் நன்றாக இல்லை. எனினும் அந்த ஆர்பிஎம் வரை மிகவும் நன்றாக உள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் ஓசூர் தொழிற்சாலைக்கு உள்ளே அமைந்திருக்கும் டெஸ்ட் டிராக்கில்தான் நாங்கள் இந்த பைக்கை ஓட்டி பார்த்தோம். ஒரு கம்யூட்டர் ரக பைக்கை டெஸ்ட் ரைடு செய்வதற்கு இது ஏற்ற இடம் கிடையாதுதான். ஆனால் கூடிய விரைவில் சாதாரண சாலைகளில் இந்த பைக்கை நாங்கள் டெஸ்ட் ரைடு செய்வோம். எனினும் டெஸ்ட் டிராக்கில் சோதனை செய்ததன் மூலம், இந்த பைக்கின் சுறுசுறுப்பை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

டிவிஎஸ் ரேஸிங் பேட்ஜ்களை பெற்றிருக்கும் பைக்குகள் அளவிற்கு இது ஸ்போர்ட்டியாக இல்லைதான். எனினும் டிவிஎஸ் ரேஸிங் லோகோ இல்லாத மற்ற பைக்குகளை காட்டிலும் இது ஸ்போர்ட்டியாக இருக்கிறது. பவர்-டூ-வெயிட் ரேஷியோதான் இதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

டிவிஎஸ் ரைடர் பைக்கில், 124.8 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 11.2 பிஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 11.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பவர் அவுட்புட் பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் செயல்திறன் சிறப்பாக உள்ளது.

கேடிஎம் 125 ட்யூக், கேடிஎம் ஆர்சி 125 மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ் 125 ஆகிய பைக்குகளுக்கு பிறகு, 125 சிசி செக்மெண்ட்டில் கிடைக்கும் அதிக சக்தி வாய்ந்த நான்காவது பைக் என்ற பெருமையை டிவிஎஸ் ரைடர் பெறுகிறது. இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம். ஏனெனில் இது பிரீமியம் கம்யூட்டர் பைக். ஆனால் மற்றவையோ பெர்ஃபார்மென்ஸ் பைக்குகள்.

டிவிஎஸ் ரைடர் பைக்கின் எடை வெறும் 123 கிலோதான். மேலே கூறப்பட்டுள்ள பைக்குகள் உடன் ஒப்பிடுகையில் இதன் எடை குறைவு. எடை குறைவாக இருந்தால் செயல்திறன் சிறப்பாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். எனவே குறைவான எடை காரணமாக சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை டிவிஎஸ் ரைடர் வழங்குகிறது. இந்த பைக்கின் ஆக்ஸலரேஷன் சுறுசுறுப்பாக உள்ளது. நீங்கள் இதனை உணரும் முன்பே, மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தை கடந்திருப்பீர்கள். மணிக்கு 90 கிலோ மீட்டர் என்ற வேகத்தை கூட விரைவாக எட்டி விட முடிகிறது. ஆனால் அதற்கு பிறகு ஆக்ஸலரேஷன் சற்று மந்தமாகி விடுகிறது.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 99 கிலோ மீட்டர்கள் என டிவிஎஸ் நிறுவனம் கூறுகிறது. ஆனால் எங்களால் மணிக்கு 107 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட முடிந்தது. எனினும் வளைவுகள் இல்லாத நேரான பாதையில், குனிந்தபடியான பொஷிஷனில் ஓட்டும்போதுதான் இந்த வேகத்தை நாங்கள் எட்டினோம். நிமிர்ந்த சரியான பொஷிஷனில் ஓட்டும்போது, எங்களால் மணிக்கு 101 கிலோ மீட்டர் வேகத்தில்தான் பயணிக்க முடிந்தது. இந்த பைக்கின் ரைடிங் பொஷிஷனும் நன்றாக இருக்கிறது என கூறலாம்.

இந்த பைக்கில் குறைவான ஆர்பிஎம்மிலேயே டார்க் அதிகளவில் கிடைக்கிறது. 5வது கியரில் 2,000 ஆர்பிஎம்மில் பயணிக்கும்போதில் இருந்தே டார்க் தேவையான அளவு கிடைத்து விடுகிறது. இதுவும் ஓட்டுதல் அனுபவத்தை இன்னும் மேம்படுத்துகிறது. ஓபன் ரோட்டில் இந்த பைக்கை ஓட்டும்போது, மணிக்கு 70 கிலோ மீட்டர் என்ற வேகத்தை 5,000 ஆர்பிஎம்மில் எட்டுகிறது. அதே நேரத்தில் மணிக்கு 90 கிலோ மீட்டர் என்ற வேகம் சுமார் 6,500 ஆர்பிஎம்மில் வருகிறது. தொலைதூர பயணங்களின்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்வது சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் மணிக்கு 70-75 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்வது சிறப்பான அனுபவத்தை தருகிறது.

சஸ்பென்ஸன் பணிகளை பொறுத்தவரை முன் பகுதியில் 30 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதிக வேகத்தில் கார்னர்களை எதிர்கொள்ளும்போது பைக் சற்று நிலையாக இல்லை என்பது ஒரு குறை. ஆனால் இதனை பெரிய குறையாக சொல்ல முடியவில்லை. ஓட்டுதல் அனுபவம் உற்சாகமாகதான் இருக்கிறது.

அதே சமயம் இந்த பைக்கின் பிரேக்குகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக உள்ளன. முன் பகுதியில் 240 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 130 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்களும், டிவிஎஸ் யூரோகிரிப் ரிமோரா டயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இந்த பைக்கின் ஓட்டுதல் தரம் சிறப்பாக இருக்கிறது. அத்துடன் Fun-to-ride பண்புகளையும் இந்த பைக் கொண்டுள்ளது.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

போட்டியாளர்கள்

ஒரு சமயத்தில், 125 சிசி செக்மெண்ட்டில் கம்யூட்டர் பைக்குகள் மட்டுமே கிடைத்து கொண்டிருந்தது. ஆனால் தற்போதோ, இதே 125 சிசி செக்மெண்ட், கம்யூட்டர் பைக்குகள் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகள் என இரண்டாக பிரிந்துள்ளது.

125 சிசி செக்மெண்ட்டில் பெர்ஃபார்மென்ஸ் பிரிவில், கேடிஎம் 125 ட்யூக், கேடிஎம் ஆர்சி 125 மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ் 125 ஆகிய பைக்குகள் வருகின்றன. அதே சமயம் இந்த செக்மெண்ட்டின் கம்யூட்டர் பிரிவில், ஹோண்டா எஸ்பி 125, ஹோண்டா சிபி ஷைன், ஹீரோ கிளாமர் ஐ3எஸ் உள்ளிட்ட பைக்குகள் வருகின்றன.

125 சிசி செக்மெண்ட்டின் இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் டிவிஎஸ் ரைடர் வருகிறது என கூறலாம். பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மற்றும் கேடிஎம் நிறுவனத்தின் 125 பைக்குகளை எதிர்கொள்ளும் அளவிற்கு கூட, டிவிஎஸ் ரைடர் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. அத்துடன் உங்களது தினசரி பயணங்களுக்கு ஏற்ற பைக்காகவும் இது இருக்கும். எனவே செயல்திறன் மற்றும் தினசரி பயணங்கள் என இரண்டு தேவைகளுக்கும் ஏற்ற கலவையாக டிவிஎஸ் ரைடர் பைக்கை கூறலாம்.

இது 125 சிசி பைக்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க... TVS Raider வேற லெவல்... விலை தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

ஓரளவிற்கு குறைவான விலையில், சிறப்பான செயல்திறன் உடன், பிரீமியம் கம்யூட்டர் பைக்கை வாங்க வேண்டும் என நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற பைக்காக டிவிஎஸ் ரைடர் 125 பைக் இருக்கும். தற்போதைய நிலையில் டெஸ்ட் டிராக்கில் மட்டும்தான் நாங்கள் இந்த பைக்கை ஓட்டியுள்ளோம். இங்கே இந்த பைக் எங்களை வெகுவாக கவர்ந்து விட்டது. ஆனால் சாதாரண சாலைகளிலும் இந்த பைக்கை ஓட்டி பார்க்க நாங்கள் விரும்புகிறோம். அதனை கூடிய விரைவில் செய்தும் விடுவோம். எனவே சாதாரண சாலைகளில் இந்த பைக் எப்படி இருக்கிறது? என்பதை உங்களுக்கு கூடிய விரைவில் தெரிவிக்கிறோம்.

முன்னதாக டிவிஎஸ் ரைடர் 125 பைக் இந்திய சந்தையில் இன்று (செப்டம்பர் 16) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் அறிமுக செய்தியில் விலை விபரங்களை குறிப்பிட்டுள்ளோம். அதனை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs raider 125 review design features engine performance riding impressions and more
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X