இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல... டிவிஎஸ் ரோனின் ரிவியூ

டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய டிவிஎஸ் ரோனின் பைக் எப்படி இருக்கிறது. இதன் ஃபொபாமென்ஸ் எப்படி இருக்கிறது. காணலாம் வாருங்கள்.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

ஒரு மோட்டார் வாகன விரும்பிக்கு ஒரு வாகனத்தின் லுக்கையும் அதன் அம்சங்களையும் பார்த்தாலே அதன் செயல்திறன் எப்படி இருக்கும் என கணித்து விட முடியும். ஆனால் இது சில நேரங்களில் பொய்யாகிவிடும். நாம் கணித்ததை விட சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வாகனங்களாக அது இருக்கும். ஆனால் இப்படியாக கணிப்புகள் சில நேரம் பொய்யாவது பிரீமியம் அல்லது பவர்ஃபுல் வாகனங்களில் தான் நடக்கும். இந்நிலையில் தான் டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி தனது புதிய ரோனின் பைக்கை அறிமுகப்படுத்தியது . இதன் அம்சங்களை பார்த்தபோது இது ஒரு சாதாரண பைக்காகத்தான் இருக்கும் என நாங்கள் முதலில் நினைத்தோம் . ஆனால் புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடக்கூடாது என்பதை இந்த ரோனின் பைக் எங்களுக்கு உணர்த்தியது

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

புதிய ரோலிங் பைக் எப்படி இருக்கிறது? இது ஸ்கிரம்பிளரா? க்ரூஷியரா? ரோட்ஸ்டரா? இதன் எஞ்சின் எப்படி இருக்கிறது? இப்படியான பல கேள்விகளுக்கு உங்களுக்கான பதிலை எங்கள் ரிவியூ மூலம் வழங்கியுள்ளோம் இதைப் பற்றி காணலாம் வாருங்கள்

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

டிசைன் மற்றும் ஸ்டைல்

இந்த பைக்கை முதலில் பார்த்ததும் நமக்கு ஒரு பெரிய குழப்பம் தோன்றும், இந்த பைக் ஸ்கிரம்பிளரா? க்ரோஸியரா அல்லது ரோட்ஸ்டிரா? என்ற குழப்பம் நமக்கு இருக்கும் ஆனால் டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கை எந்த செக்மென்ட் கொள்ளும் சேராத பைக்கென தெரிவித்துள்ளது. இந்த பைக்கின் டிசைன் ஒவ்வொரு செக்மெண்டில் உள்ள பைக்கில் உள்ள பிரத்தியேகமான டிசைன்களை எல்லாம் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது தான் டிவிஎஸ் ரோனின்

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இந்த பைக்கில் ஃபுல் பேக் ஹேண்டில் பார், பெரிய பெட்ரோல் டேங்க், ஃபென்டர் சீட்கள் ஆகியன க்ரூஸர் பைக்கில் இருக்கும் அம்சங்கள் இந்த பைக்கிலும் இருக்கிறது. இதுபோக மிட்- செட் ஃபூட்பெக்ஸ், ஸ்டப்பி எக்ஸாட், வட்டமான ஹெட்லைட் ஆகியன ரோட்ஸ்டர் பைக்கில் உள்ள அம்சங்கள் இந்த பைக்கில் இருக்கிறது. இறுதியாக ஆப்செட் இன்ஸ்ட்ருமென்ட், டயர்கள் ஆகியன ஸ்கிரம்லர் பைக்கில் உள்ள அம்சங்கள் இதில் இருக்கிறது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இந்த பைக்கின் முகப்பில் வட்டமான எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. அதில் T வடிவ எல்இடி டிஆர்எல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்லைட் மற்ற மற்ற வாகனங்களின் ஹெட்லைட்டை விட பவர்ஃபுல்லாகவும் அதிக தூரம் வெளிச்சத்தை கடத்தும் படியும் வடிவமைத்துள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாங்கள் இந்த வாகனத்தை இரவு நேரத்தில் ஓட்டி செல்ல முடியவில்லை.அதனால் இதன் ஹெட்லைட்டை எங்களால் டெஸ்ட் செய்ய முடியவில்லை. ஆனால் பகல் நேரங்களில் சாலையில் இருந்த ரெப்லெக்டிவ் சைன் போர்டுகளில் நாங்கள் ஓட்டிச் சென்ற பைக்கின் ஹெட்லைட் ரிப்லேட்டானதை வைத்து பார்க்கும் போது இது பவர்ஃபுல் ஹெட்லைட் என எங்களால் உறுதியாக சொல்ல முடியும்.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இந்த பைக்கின் முன்பக்கத்தை பொருத்தவரை தங்க நிறத்தில் தலைகீழாக ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. இது மற்றவர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மிட் மற்றும் டாப் வேரியன்டில் மட்டுமே கிடைக்கும். பேஸ் வேரியன்டில் தங்க நிறம் இல்லாமல் இதே ஃபோர்க்கில் கருப்பு நிறம் இருக்கிறது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

முன்பக்க மட்கார்டு மெட்டலால் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது பிளாக்டிக்கை விட நல்ல தரமானதாக இருக்கிறது. இன்ஸ்ட்ரூமெண்டெஷனை பொருத்தவரை சிங்கிள் பாட் டிஜிட்டல் ஆப்செட் யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்க வித்தியாசமானதாக இருக்கிறது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

மிகப்பெரிய பெட்ரோல் டேங்க் இந்த பைக்கில் இருக்கிறது. இது 14 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டது. இதனால் ஒரு முறை பெட்ரோல் டேங்கை முழுவதுமாக நிரப்பினால் கிட்டதட்ட 400 கி.மீ வரை பயணிக்க முடியும். இந்த டிவிஎஸ் ரோனின் பைக்கின் பெயிண்டிங் ஃபினிஷ் சிறப்பாக இருக்கிறது. முக்கியமாக பெட்ரோல் டேங்க் பகுதியில் சிறப்பான பெயிண்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்ட் சிங்கிள் டோன் கலரில் இருக்கிறது. டீக்கல் மற்றும் பின்ஸ்டிரிப்பிங் ஆகிய விஷயங்கள் பேஸ் வேரியண்டான SS வேரியன்டில் இல்லை.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

நாங்கள் டாப் வேரியன்டான TD வேரியன்ட் வாகனத்தை ஓட்டிப்பார்த்தோம். அதில் டூயல் டோன் பெயிண்ட் ஸ்மீம் இருந்தது. இது க்ரே ஷேடில் மிக வித்தியாசமாக இருந்தது. பெட்ரோல் டேங்கிற்கு கீழே ஒரு பிளாஸ்டிக் பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்க சிறப்பான லுக்கை தருகிறது. சைடு பேனல்களில் பிளாஸ்டிக்கால் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

டிவிஎஸ் ரோனின் பைக்கில் சீட் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது பயணத்தின் போது சொகுசான அனுபவத்தை தருகிறது. பின்னால் உள்ள சீட் சிம்பிளாக வழங்கப்பட்டுள்ளது. பின்புற மட்கார்டும் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. பின்புறமும் எல்இடி லைட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

டிவிஎஸ் ரோனின் பைக்கின் ஸ்போர்ட்டியர் டிசைன் இரண்டு விதமாக ஈர்கிறது. சிலருக்கு இந்த பைக்கை பார்த்தவுடன் பிடித்து விடுகிறது. சிலருக்கு பார்க்க பாரக்க பிடிக்கிறது. இந்த பைக் ஒருவரை நிச்சயம் பிடிக்க வைக்குமே தவிர வெறுக்க வைக்காது என்பது மட்டும் உறுதி

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

டிவிஎஸ் ரோனின் அம்சங்கள்

டிவிஎஸ் ரோனின் ஒரு பிரிமியம் பைக் அல்ல. இது சிறப்பான அம்சங்கள் நிறைந்த என்ட்ரி லெவல் மோட்டார் சைக்கிள், இதில் ஏகப்பட்ட அம்ஙசகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட்டேஷன். இது வட்ட வடிவில் மிகப்பெரியதுமாக இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர், டேக்கோ மீட்டர், டிரிப் மீட்டர், ஃப்யூயல் காஜஸ், ஆகிய தகவல்கள் தகவல்கள் இருக்கின்றன. இது போக பைக் எவ்வளவு மைலேஜ் தருகிறத. இன்னும் எவ்வளவு தூரத்தில் டேங்க் காலியாகும், மேலும் ஒவ்வொரு திருப்பதிற்கான நேவிகேஷன் ஆகிய அம்சங்கள் இந்த பைக்கில்இருக்கிறது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

நேவிகேஷனிற்காக இந்த பைக்கில் ப்ளுடூத் மூலம் ஸ்மார்ட்போன்களை கனெக்ட் செய்யும் வசதி இருக்கிறது. இதற்காக பிரத்தியேகமான ஆப் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏரளாமான தகவல்களை பெற முடியும். மேலும் பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மூலமே நமது ஸ்மார்ட் போனிற்கு வரும் கால்களை எடுப்பது அல்லது ரிஜெக்ட் செய்வது மியூசிக் சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்வது மேலும் மழை மற்றும் டிராபிக் ஆகிய இரண்டு ஏபிஎஸ்களில்எந்த மோடில் பைக்க இருக்கிறது என தேர்வு செய்வது என பல வசதிகள் இந்த பைக்கில் இருக்கிறது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இந்த டிவிஎஸ் ரோனின் பைக்கில் 3 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் பிரேக் மற்ம் கிளச் லிவர் போஷின்கள் உள்ளன. ரைடருக்கு தேவையான போஷிஷனில் இதை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இது டாப் ஸ்பெக் வேரியன்டில் மட்டுமே உள்ளது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் ரைடிங் இம்பிரஷன்

டிவிஎஸ் ரோனின் பைக்கை பொருத்தவரை அதன் இன்ஜின் தான் பைக்கின் சிறப்பம்சமாக இருக்கிறது. இந்த பைக்கில் 225.9 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கிலும் இருக்கிறது. ஆனால் இந்த இன்ஜினில் சில மாற்றங்களை செய்து ரோனின் பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் பொருத்தியுள்ளது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இந்த இன்ஜின் ரேஸ் டிராக்கிற்கு தகுந்தார் போல வடிவமைக்கபப்டவில்லை. குறைந்த மற்றும் மிட் ரேஞ்சை மனிதில் வைத்தே இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் போர் மற்ம் ஸ்ட்ரோக்கள் 66 மிமீ உடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஸ்கோயர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இது பவர் மற்றும் டார்க் திறனை சமமாக வெளிப்படுகிறது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இந்த பைக்கில் ஆயில் கூல் பயன்படுத்திற்கு முக்கிமான காரணம் இந்த பைக்கின் பவர் மற்றும் திறனை அதிகரிப்பதற்காக தான் என டிவிஎஸ் நிறுவனம்தெரிவித்துள்ளது. அதன்படி இந்தபைக்கின் இன்ஜின் 20.12 பிஎச்பி பவரை 7750 ஆர்பிஎம்மிலும் 19.93 என் எம் டார்க் திறனை 3750 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இந்த பவர் சாதாரண பவராக தோன்றலாம் ஆனால் இதை ஓட்டி பார்க்கும் போது எதிர்பாராத அனுபவத்தை கொடுத்தது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இந்த பைக்கில் நீங்கள் ஏறி அமர்ந்ததும் சொகுசை உணர்வீர்கள், சீட் 795 மிமீ உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஃபூட் பெக்கள் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளன. இது தனித்துவமான ரைடிங் போஷிஷனாக இருக்கிறது. ரிலாக்ஸான உணர்வையும் தருகிறது. முதல் கியரில் பைக்கை நகர்த்துவது சுலபமாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இந்த பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் GTT (Glide Through Technology) தொழிற்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. இது குறைந்த வேகத்தில் பைக்கை நிறுத்தி நிறுத்தி செல்லும் டிராபிக்கிற்கு உதவுகிறது. பைக்கில் எக்ஸாஸ்டிலிருந்து வரும் சத்தம் வித்தியாசமாக இருக்கிறது. இந்த சத்ததிற்காக ஏர்பாக்ஸை மறுவடிமைப்பு செய்வதில் டிவிஎஸ் சிறப்பான பணியை செய்துள்ளது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இந்த பைக் 8000 ஆர்பிஎம் வரை சிறப்பாக செயல்படுகிறது. நாங்கள் இதை கோவாவில் டெஸ்ட் செய்த போது அங்குள்ள இயற்கை சூழல் மழையில் நாங்கள் ஓட்டிசெல்லும் போது எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்றே தெரியவில்லை திடீரென ஸ்பீடாமீட்டரை பார்த்தால் பைக் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால்இன்ஜின் அந்த வேகத்தில் அதிக ஸ்டிரெஸ் எடுத்துக்கொள்ளவில்லை. மூன்று இலக்க வேகத்திலும் இன்ஜின் சிறப்பாக ஈடு கொடுத்தது 90 கி.மீ வேகத்தில் சுகமான அனுபவத்தை தந்தது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இந்த பைக்கின் பவரை பற்றி சொல்லியே ஆக வேண்டுமு் 7750 ஆர்பிஎம்மில் பைக் அதிகபட்ச பவரை வெளிப்படுத்துகிறது. பை்கில் 3750 முதல் 7750 ஆர்பிஎம் வரையில் சிறப்பான ரைடிங் அனுபவத்தை தருகிறது. பின்புறம் ஒரு ஆள் அமர்ந்து பைக்கை ஓட்டிப்பார்த்தோம். பைக் சிறப்பாகவே செயல்பட்டது. 2000 ஆர்பிஎம்மில் டீசென்டாக சென்றது. ஆனால் விரைவாக 3750 ஆர்பிஎம்மிற்கு வந்துவிட்டது. அதன்பின்னர் பக்கம் நாம எதிர்பாராத விதத்தில் இருந்தது. தினந்தோறும் பயன்படுத்த ரோனின் சிறந்த பைக்.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பே சொன்னது போல முன்பக்கம் தலைகீழாக வைக்கப்பட்ட ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறம் மோனா ஷாக் கொடுக்கப்பட்டள்ளது. யூஎஸ்டி ஃபோர்க்கள் சிறப்பாக செயல்படுகிறது. குழிகளில் ஏறி இறங்கும் போது பெரியதாக தெரியவில்லை. முன்பக்க சஸ்பென்சன் லேசான ரக்கெட்டாக இருக்கிறது. இந்த பைக் ரேஸ் டிராக்கிற்கு உகந்த பைக் இல்லை.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

ஆனால் நெடுஞ்சாலைகள் மற்றும் வளைவு நெளிவு நிறைந்த சாலைகளில் இந்த பைக்கில் பயணிப்பது என்பது சுலபமான ஒன்று. இந்த பைக்கின் பிரேக்கிங் என்பது முன்புறம் 300 மிமீ டிஸ்க்

மற்றும் பின்புறம் 240 மிமீ டிஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் டாப் ஸ்பெக் பைக்கை ஓட்டியதால் அதில் டூயல் சேனல் ஏபிஎஸ் இருந்தது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இதில் இரண்டு ஏபிஎஸ் மோட்கள் இருக்கிறது. மழை மற்றும் அர்பன் நாங்கள் இரண்டையும் டெஸ்ட் செய்து பார்த்தோம். இதை செய்யும் போது கோவாவில் மழை அதிகமாக இருந்தது. இதனால் நாங்கள் அதிகமாக வழுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் பைக் ஓட்டும் போத அப்படியான எதையும் நாங்கள் சந்திக்கவல்லை. நாங்கள் டெஸ்டிங்கில் எமர்ஜென்சி பிரேக்கிங் பிடித்து பார்த்தோம். அப்பொழுதும் ஏபிஎஸ் சிறப்பாக செயல்பட்ட பைக் ஸ்லிப் ஆவதை தடுத்தது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள டயர் டிவிஎஸ் ரோனின் பைக்கிற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது. இதில் டிவிஎஸ் யூரோ கிரிப் ரேமோராபைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் தனது இன்ஜினியர்களை கொண்டு சிறப்பான பைக்கை வடிவமைத்துள்ளது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

வேரியன்ட் மற்றும் கலர் ஆப்ஷன்கள்

டிவிஎஸ் மோட்டார் நிறவனம் முதன் முறையாக வேரியன்டிற்கு தகுந்த கலர் ஆப்ஷனை வழங்கியுள்ளது. அதாவது நீங்கள் வாங்கும் வேரியண்டிற்கு தந்தார் போல் வாகனத்தின் கலரும் மாறும். இந்த பைக்கில் 3 வேரியன்ட்கள் உள்ளன.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

டிவிஎஸ் ரோனின் SS

இந்த வேரியன்டின் எக்ஸ் ஷோரூமின் விலை ரூ1.49 லட்சம் இந்த வேரியன்டில் சிங்கள் டோன் கலர் ஆப்ஷ் மட்டுமே உள்ளது. மேக்னா ரெட் மற்றும் லைட்டனிங் பிளாக் ஆகிய நிற ஆப்ஷன்கள் உள்ளன. இதில் முன்பக்கத்தில் ஃபோர்க்கள் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் கனெக்ட்டிவிட்டி வசதி கிடையாது. மேலும் இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் அட்ஜெஸ்டபிள் லிவர் ஆப்ஷன்கள் இல்லை.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

டிவிஎஸ் ரோனின் DS

இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ1.58 லட்சம் இது மிட் வேரியன்டாகும். இதில் முன்பக்க ஃபோர்க்கிங் தங்க நிற பினிஷிங் இருக்கிறது. இந்தபைக் டெல்டா ப்ளு, ஸ்டார்கேஸ் பிளாக் ஆகிய கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த வேரியன்டில் அலாய் வீலில் சிவப்பு பின் ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

டிவிஎஸ் ரோனின் TD

இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூ1.69 லடசம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் அட்ஜெஸ்டபிள் லிவர் உள்ளன. இது க்ளாடிக் கரோ மற்றும் க்ரே மற்றும் கருப்பு அல்லது டார்க் ஆரஞ்ச், ஆரஞ்ச் கருப்பு சேர்ந்த வண்ணத்தில் இருக்கிறது.

இப்படி ஒரு பைக்கை யாருமே எதிர்பார்க்கல . . . டிவிஎஸ் ரோனின் ரிவியூ

டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கை அறிமுகப்படுத்தும் போது #Unscripted & #NewWayOfLife ஆகிய ஹேனு் டேக்களுடன் அறிமுகப்படுத்தியது. இதற்கு முக்கியமான காரணம் இந்த பைக் எந்த செக்மெண்டிற்குள்ளும் சேராமல் இருப்பது மற்றும் இந்த பைக்கின் பெர்பாமென்ஸ்நம்ப முடியாத அளவிற்கு சிறப்பாக இருப்பதும் முக்கியமான காரணம். . இந்த இன்ஜின் நீங்கள் வேகமாக சென்று அடுத்தடுத்த கியரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றாலும் அதற்கும் ஈடு கொடுக்கும் மெதுவாக சிட்டிக்குள் ஓட்டிச்செல்வும் ஈடு கொடுக்கும். மொத்தத்தில் நீங்கள் எதிர்பார்த்ததும் மேல் இந்த பைக் நிச்சயம் இருக்கும்.

Most Read Articles
English summary
Tvs ronin review look variant features engine test ride details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X