புதிய டிவிஎஸ் எக்ஸ்எல் 100 பிஎஸ்6 எப்படி இருக்குனு உங்களுக்கு தெரியுமா?.. இதோ முழுமையான ரிவியூ தகவல்

40 ஆண்டு காலங்களாக இந்திய சாலைகளை ஆட்சி செய்து வரும் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டின் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த மொபட் எப்படி இருக்கிறது என்பதை விளக்கும் விதமாக அதன் விமர்சனத்தை தொகுத்து வழங்கியுள்ளோம்.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்களில் எக்ஸ்எல் மொபெட்டும் ஒன்று. இந்த இருசக்கர வாகனத்தை டிவிஎஸ் நிறுவனம் 1980ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றது. சரக்கு ஏற்றி செல்வது, குடும்பத்துடன் பயணிப்பது என அனைத்து விதமான பயன்பாட்டிற்கும் இந்த மொபட் உதவும். எனவேதான், இந்த மொபெட் தற்போதும் இந்தியர்களின் விருப்பமான இருசக்கர வாகனமாக இருந்து வருகின்றது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் 40 ஆண்டுகளாகியும் சற்றும் மங்காத வரவேற்பினை அது பெற்று வருகின்றது. குறைந்த எடை, சிறந்த பெர்ஃபார்மன்ஸ் மற்றும் கியர் இல்லா நிலை ஆகியவையே இந்த இடத்தை பிடிப்பதற்கு டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டிற்கு உதவியாக இருக்கின்றது. இது ஓர் 50சிசி திறன் கொண்ட மொபட் ஆகும்.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

பல ஆண்டுகளைக் கடந்தும் இந்த இருசக்கர வாகனம் இந்தியாவில் விற்பனையில் இருக்கிறதென்றால், அதில் டிவிஎஸ் நிறுவனத்தின் பங்களிப்பும் ஓர் அங்கமாக உள்ளது. ஆம், இந்த மொபட்டை காலத்திற்கு ஏற்பவாறு அப்டேட் செய்து அது வழங்குவதனாலயே இந்தியாவில் தற்போதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் டிவிஎஸ் நிறுவனம், தற்போது எக்ஸ்எல்100 மொபட்டிற்கு பிஎஸ்6 தர அப்டேட்டை வழங்கியிருக்கின்றது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

இந்த அப்டேட்டின்மூலம் மொபட்டில் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. என்பதைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்த தகவலை, நமது டிரைவ்ஸ்பார்க் குழுவைச் சேர்ந்த ஆட்டோ வல்லுநர்கள், புதிய பிஎஸ்6 டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டை டெஸ்ட் டிரைவ் செய்து பரிசோதித்ததன் அடிப்படையிலேயே வெளியிட்டிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

வடிவமைப்பு மற்றும் ஸ்டைல்:

டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டின் சிறப்பே அதன் மெல்லிய மற்றும் எடை குறைவான தோற்றம் ஆகும். எனவேதான், அதற்கு குந்தகம் விளைவிக்காத வகையில் புதுப்பித்தலை வழங்கியுள்ளது டிவிஎஸ். இருப்பினும், சில அழகு சேர்ப்பு பணிகளை நம்மால் காண முடிகின்றது. அது, மொபெட்டை நவீனமானதாகவும், டிரெண்டானதாகவும் மாற்ற உதவியுள்ளது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

மொபெட்டின் முகப்பு பகுதி, மொபட்டின் ஹெட்லைட் பகுதி பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது ஓர் வட்ட வடிவ ஹாலோஜன் மின் விளக்கைக் கொண்டிருக்கின்றது. இதனைக் கவர் செய்யும் வகையில் இரு நிற கலவைக் கொண்ட மாஸ்க் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதுதவிர ஹெட்லேம்ப்பிற்கு கீழே எல்இடி மின் விளக்கு பட்டையான வடிவத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

இது ஓர் பகல்நேர மின் விளக்காகும். இதற்கு சற்று மேலே, வலது மற்றும் இடது பக்கத்தில், இன்டிகேட்டர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவையும் ஹாலோஜன் தரத்திலான மின் விளக்குகள் ஆகும். பக்கவாட்டு பகுதி தோற்றம், கால்களை வைத்துக் கொள்ள ஏதுவாக, பெரியளவில் இட வசதி விடப்பட்டுள்ளது. இங்கு கால்களை மட்டுமின்றி லக்கேஜ்களையும் வைத்துக் கொள்ள முடியும்.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

இதுதவிர மொபட்டின் இரு புறத்திலும் கால்களை வைத்துக் கொள்ள ஏதுவாக ரப்பர் பொருத்தப்பட்ட இரும்பு கம்பிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, சௌகரியமாக அமர்ந்து செல்வதற்காக லெதர் போர்வையிலான மிகவும் மிருதுவமான இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது இரு நிறங்கள் கொண்ட இருவர் அமர்ந்து செல்லக்கூடிய ஒரே நீளமான இருக்கையாகும். இத்துடன், பின் பகுதியில் சிறிய முதுகு ஓய்வளிப்பான் வழங்கப்பட்டிருக்கின்றது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

இது பின் பக்க பயணி களைப்பில்லாமல் பயணிக்க உதவும். பெட்ரோல் டேங்க், இது 4 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இதில், 1.3 லிட்டர் ரிசர்வ் அளவாகும். இதுதவிர புதிய எக்ஸ்எல் மொபெட்டை மெருகேற்றும் பணிகளையும் டிவிஎஸ் செய்திருக்கின்றது. அதாவது, மொபட்டின் உடல் பகுதியில் ஆங்காங்கே குரோம் நிற கூறுகளைச் சேர்த்துள்ளது. இது மொபெட்டிற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

சஸ்பென்ஷன், ஹேண்டில் பார், பேக் ரெஸ்ட், புகைப் போக்கும் குழாய் ஆகியவற்றில் குரோம் பூச்சுக் கொண்ட கூறுகளை நம்மால் காண முடியும். இந்த மொபெட்டின் பின் பகுதியில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. அங்கு ஹாலோஜன் தரத்திலான மின் விளக்குகளே காணப்படுகின்றன.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

அம்சங்கள்:

டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் காணப்படுகின்றன. அவை, அடிப்படை வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், அனலாக் ஸ்பீடோ மற்றும் ஓடோ மீட்டர் ஆகியவை ஆகும். மேலும், எரிபொருள் அளவை எச்சரிக்கும் இன்டிகேட்டர், டர்ன் மின் விளக்கு இன்டிகேட்டர், ஹைபீம் மின் விளக்கு இன்டிகேட்டர் உள்ளிட்டவையும் அனலாக் மீட்டருக்கு அருகில் வழங்கப்பட்டுள்ளன.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

அவை, ரைடருக்கு தேவையான தகவல்களை வழங்க உதவும். அதேசமயம், எரிபொருள் அளவை குறிப்பிடுவதற்கு வெறும் எச்சரிக்கை மின் விளக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பது கவலையளிக்கும் விதமாக உள்ளது. பொதுவாக இதற்கு அனலாக் மீட்டர் மாதிரியான கருவியே வழங்கப்படும். ஆனால், இந்த அம்சம் இதில் இடம்பெறவில்லை. இந்த குறையை சமாளிக்கும் விதமாக யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் பாயிண்ட் வழங்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

மேலும், ஹேண்டில் பாரில் குறிப்பிட்ட சில கன்ட்ரோல் பொத்தான்களையும் டிவிஎஸ் வழங்கியுள்ளது. ஐ-டச் ஸ்டார்ட் சிஸ்டம் (இது எஞ்ஜினை ஆஃப் செய்வதற்கு உதவும்), ஹை பீம் - லோ பீம் கன்ட்ரோல், இன்டிகேட்டர், ஹாரன் உள்ளிட்டவற்றிற்கான கன்ட்ரோல்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

எஞ்ஜின், செயல்திறன் மற்றும் கையாளுதல்:

டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டில் 99.7 சிசி திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்ட் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் எஞ்ஜின் ஆகும். இந்த கியர்பாக்ஸின் உதவியுடன் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 4.3 பிஎச்பி பவரையும், 3500 ஆர்பிஎம்மில் 6.0 என்எம் டார்க்கையும் அது வெளிப்படுத்தும்.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

எக்ஸ்எல் 100 லிட்டர் ஒன்றிற்கு 65 கிமீட்டரை மைலேஜை தரும் டிவிஎஸ் நிறுவனம் உறுதியாக கூறுகின்றது. இருப்பினும், எங்கள் சோதனையின் போது உண்மையான அது 55 கிமீட்டரை மட்டுமே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வழங்கியது. அந்தவகையில், எக்ஸ்எல் மொபட்டின் தொட்டியை முழுமையாக நிரப்பினால் 220 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது வெறும் 4 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டியை வைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

இந்த மொபெட் வெளிப்படுத்தும் எச்பி மற்றும் டார்க் திறன் மிகக் குறைவான தென்படலாம். ஆனால், இதனை சாலையில் வைத்து இயக்கும்போது அதிக வேகத்தில் சீறிப் பாயும் வகையில் இருக்கின்றது. அதாவது, பிக்-அப் திறன் அட்டகாசமானதாக காட்சியளிக்கின்றது. இது உச்சபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

இந்த மொபெட்டின் ஒட்டுமொத்த எடை 89 கிலோ ஆகும். இதில் அதிகபட்சமாக 130 கிலோ வரையிலான பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். இந்த அதிகபட்ச எடையை இருசக்கர வாகனத்தில் ஏற்றிய பின்னரும் மொபெட் சற்றும் சலைக்காமல் செல்லும். ஒரு போதும் சக்தியற்றதைப் போன்று அது உணர்த்தாது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

கையாளுமை எப்படி இருக்கின்றது?

டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபெட் சுறு சுறுப்பான குழந்தையைப் போன்று காட்சியளிக்கின்றது. அதாவது, இந்த மொபெட் உருவத்தில் சிறியதாக தென்பட்டாலும் இதன் வேகம், செயல்படும் திறன் அதீதமானதாக காட்சியளிக்கின்றது. மேலும், சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில், இருக்கை, ஹேண்டில் பார் மற்றும் கால்களை வைக்கும் இடம் உள்ளிட்டவை இருக்கின்றன.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

குறிப்பாக, பின் பக்க பயணிக்கு முதுகு ஓய்வெடுப்பான் வழங்கப்பட்டிருக்கின்றது மிகவும் அசத்தலான செயல். ஆம், இது ஓய்வை வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இருக்கையில் இருந்து நழுவிச் செல்வதை தடுக்கவும் உதவுகின்றது. இதுதவிர மிகவும் மெல்லிய எடையில் மொபெட் இருப்பது, அதை எளிதில் கையாள உதவுகிறது. இவ்வாறு அனைத்து தரப்பிலும் புதிய பிஎஸ்-6 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 சௌகரியமான உணர்வையே வழங்குகின்றது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

எனவேதான் இந்தியாவில் விற்பனையாகும் மிக சிறப்பான மொபெட்டாக இது காட்சியளிக்கின்றது. இதையேதான் நாங்களும் கூறுகின்றோம். இதன் அதிகளவிலான கிரவுண்ட் கிளியரன்ஸ், டிரம் பிரேக், ட்யூவல் ஷாக் அப்சார்பர் உள்ளிட்டவை மொபெட்டை மேலும் சிறப்பானதாக மாற்ற உதவுகின்றது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

வேரியண்ட், விலை மற்றும் நிறத் தேர்வு:

2020 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, கம்ஃபோர்ட் ஐ-டச் ஸ்டார்ட், ஹெவி ட்யூட்டி ஐ-டச் ஸ்டார்ட், ஹெவி ட்யூட்டி ஐ-டச் ஸ்டார்ட் ஸ்பெஷல் எடிசன் ஆகியவை ஆகும். இதற்கு ரூ. 39,990 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பநிலை வேரியண்டின் விலையாகும். உச்சபட்சமாக ரூ. 48,839 என்ற விலையில் இது விற்கப்படுகின்றது.

40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..!

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். இது இரு விதமான நிறத் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நீளம் மற்றும் தங்க நிறத் தேர்வில் அது கிடைக்கின்றது. இதில் நீள நிறத்திலான கம்ஃபோர்ட் ஐ-டச் ஸ்டார்ட் மாடலையே நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் டெஸ்ட் டிரைவ் செய்து சோதனையிட்டனர். அதில் கிடைத்த தகவலையே மேலே நாம் பார்த்தோம்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS XL100 Comfort BS6 Review: The Latest-Iteration Of A Two-Wheeler First Introduced 40-Years Ago!. Read In Tamil.
Story first published: Tuesday, October 13, 2020, 16:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X