யமஹா ஆர்3 Vs கவாஸாகி நின்ஜா 300 Vs கேடிஎம் ஆர்சி 390: எது வாங்கலாம்!!

Written By:

இதுவரை 150சிசி பைக்குகளை ஓட்டி அலுத்து போனவர்கள், அடுத்து வாங்க எத்தனிக்கும் பைக்குகள்தான், 200சிசி முதல் 500 சிசி வரையிலான மாடல்களை உள்ளடக்கிய ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக்குகள். 500சிசி வரை நீளும் இந்த செக்மென்ட்டில் இருக்கும் தேவையை கருதி பல புதிய மாடல்கள் தொடர்ந்து களமிறங்கி வருகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் வந்திருக்கும் ஓர் புத்தம் புதிய மாடல் யமஹா ஆர்3 பைக். 'ஹார்டு கோர்' என்ட்ரி லெவல் பைக் என்று ஆட்டோமொபைல் பிரியர்களால் அழைக்கப்படும் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்குடன் இந்த செக்மென்ட்டில் முன்னிலை வகித்து வரும் கவாஸாகி நின்ஜா 300 மற்றும் கேடிஎம் ஆர்சி 390 பைக்குகளுடன் முக்கிய சிறப்பம்சங்களை ஒப்பீடு செய்து வழங்கியுள்ளோம்.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

யமஹா ஆர்: 3,25,000

கவாஸாகி நின்ஜா 300: ரூ.3,60,916

கேடிஎம் ஆர்சி 390: ரூ.2,10,561

[மும்பை எக்ஸ்ஷோரூம் விலை விபரம்]

 டிசைன்: யமஹா ஆர்3

டிசைன்: யமஹா ஆர்3

தனது சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களின் டிசைன் தாத்பரியங்களுடன் யமஹா வடிவமைத்திருக்கும் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்தான் யமஹா ஆர்3. ஃபேரிங் பேனல்களால் மறைக்கப்பட்ட உடலமைப்பு கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் இரட்டை ஹெட்லைட் உள்ளது. முறுக்கலான பெட்ரோல் டேங்க், கூர்மையான தோற்றமுடைய ஃபேரிங் பேனல்கள், கச்சிதமான சைலென்சர், தோற்றத்திற்கு வலு சேர்க்கும் வால் பகுதி என அனைத்தும் அமர்க்களமான தோற்றத்தை கொடுத்திருக்கிறது. இலகு எடையிலான டைமன்ட் டைப் செமி ட்ரெல்லிஸ் ஸ்டீல் ஃப்ரேம் மூலமாக கட்டமைக்கப்பட்டிருப்பதால், சிறந்த கையாளுமையை வழங்கும்.

டிசைன்: கவாஸாகி நின்ஜா 300

டிசைன்: கவாஸாகி நின்ஜா 300

கவாஸாகி நின்ஜா 250ஆர் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் இது. கவாஸாகி இசட்எக்ஸ்-10ஆர் பைக்கின் டிசைன் தாத்பரியங்கள் இந்த பைக்கில் கையாளப்பட்டு, ஓர் அசுரத்தனமான உணர்வை தரும் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கிறது. இந்த பைக் சிறப்பான ரைடிங் பொசிஷனை ஓட்டுனருக்கு வழங்கும்.

டிசைன்: கேடிஎம் ஆர்சி 390

டிசைன்: கேடிஎம் ஆர்சி 390

இந்த செக்மென்ட்டில் அதி மிரட்டலான தோற்றத்தை உடைய பைக் மாடல் கேடிஎம் ஆர்சி390. குறிப்பாக, புரொஜெக்டர் ஹெட்லைட், வெளியில் தெரியும்படி, கொடுக்கப்பட்டிருக்கும் ஃப்ரேம் ஆகியவை போட்டியாளர்களிடத்திலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மேலும், சக்கரங்களில் ஆரஞ்ச் வண்ண அட்டகாசமும், ஒரு கஸ்டமைஸ் பைக் போன்ற தோற்றத்தை வழங்குவதால், இளைஞர்களின் மனதை க்ளீன் போல்டாக்கிவிடுகிறது.

எஞ்சின்: யமஹா ஆர்3

எஞ்சின்: யமஹா ஆர்3

யமஹா ஆர்3 பைக்கில் இரட்டை சிலிண்டர் கொண்ட 321சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 41.4 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க்கையும் வழங்கும் இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 எஞ்சின்: கவாஸாகி நின்ஜா 300

எஞ்சின்: கவாஸாகி நின்ஜா 300

கவாஸாகி நின்ஜா 300 பைக்கிலும் இரட்டை சிலிண்டர் கொண்ட 296சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 39 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக்கிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் சிஸ்டம் உள்ளது.

எஞ்சின்: கேடிஎம் ஆர்சி390

எஞ்சின்: கேடிஎம் ஆர்சி390

இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 373சிசி லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 43 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க்கையும் வழங்கும். இதுவும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் கொண்டிருப்பதுடன் ஸ்லிப்பர் க்ளட்ச் சிஸ்டமும் உள்ளது. இந்த செக்மென்ட்டில் அதிக சக்தியை வெளிப்படுத்தக்கூடிய எஞ்சினை பெற்றிருப்பது ஒற்றை சிலிண்டர் எஞ்சின் கொண்ட கேடிஎம் ஆர்சி390 பைக்தான்.

சிறப்பம்சங்கள்: யமஹா ஆர்3

சிறப்பம்சங்கள்: யமஹா ஆர்3

யமஹா ஆர்3 பைக்கில் அனலாக் மற்றும் டிஜிட்டல் மீட்டர் கொண்ட மீட்டர் கன்சோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பைக் 169 கிலோ எடை கொண்டது. முன்புறத்தில் சாதாரண டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் சிஸ்டமும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோஷாக் அப்சார்பரும் உள்ளது. இந்த பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

சிறப்பம்சங்கள்: கவாஸாகி நின்ஜா 300

சிறப்பம்சங்கள்: கவாஸாகி நின்ஜா 300

கவாஸாகி நின்ஜா 300 பைக்கிலும் அனலாக் மற்றும் டிஜிட்டல் மீட்டர் கன்சோல் அமைப்புதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கவாஸாகி நின்ஜா 250ஆர் பைக்கில் பாஸ் லைட் இல்லை. இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பைக் 172 கிலோ எடை கொண்டது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளது. இந்த பைக்கில் 17 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளது.

சிறப்பம்சங்கள்: கேடிஎம் ஆர்சி390

சிறப்பம்சங்கள்: கேடிஎம் ஆர்சி390

கேடிஎம் ஆர்சி390 பைக்கில் முழுவதுமான டிஜிட்டல் மீட்டர் கன்சோல் அமைப்பு உள்ளது. சைடு ஸ்டான்ட் போட்டிருக்கும்போது எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாது. இந்த பைக் 159 கிலோ எடை கொண்டது. பின்புறத்தில் தலைகீழ் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளது. இந்த பைக்கில் 1.5 லிட்டர் ரிசர்வுடன் கூடிய 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் இப்போது வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பு அம்சம் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம். ஆனால், யமஹா ஆர்3 மற்றும் கவாஸாகி நின்ஜா 300 ஆகிய பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆப்ஷனலாக கூட அளிக்கப்படவில்லை. ஆனால், கேடிஎம் ஆர்சி390 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. அத்துடன், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை ஆஃப் செய்து வைக்கும் வசதியும் உண்டு.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

மூன்று பைக்குகளுமே ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. தோற்றம், விலை, வசதிகள், ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்குரிய செயல்திறன் மிக்க எஞ்சின், பாதுகாப்பு என அனைத்திலும் கேடிஎம் ஆர்சி390 பைக்தான் சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், யமஹா ஆர்3 மற்றும் கவாஸாகி நின்ஜா 300 பைக்குகளைவிட ஒரு லட்சம் வரை விலையிலும் குறைவாக இருப்பதும் கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு பெரும் வலு சேர்க்கிறது. ஆனால், பயன்பாட்டை பொறுத்து தேர்வு செய்வது அவசியம். எனவே, தினசரி பன்பாட்டிற்கு, கேடிஎம் ஆர்சி390தான் சிறப்பாக இருக்கும். இலகு எடை, செயல்திறன் ஆகியவை காரணங்களாக இருக்கும். தினசரி பயன்பாடு மற்றும் டிராக்கில் ஓட்ட சிறந்த பைக் மாடலை விரும்புபவர்களுக்கும், விலை ஒரு பொருட்டல்ல, என்று கருதுபவர்களுக்கும் யமஹா ஆர்3 பைக் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 
English summary
So how does the new R3 fare against the Ninja 300 and the segment leader, the RC 390? Let's take a look:
Story first published: Thursday, August 20, 2015, 14:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark