ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் (Yezdi Scrambler) மோட்டார்சைக்கிளின் ரிவியூ தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம்.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

யெஸ்டி (Yezdi) நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இந்நிறுவனம் அதன் மறு வருகை பற்றிய தகவலை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த நிலையில், மூன்று புதுமுக டூ-வீலர்களை கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்ததன் வாயிலாக இந்திய வருகையை உறுதிப்படுத்தியது. இந்நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தைக்கு புதியது அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

அதேநேரத்தில் ரசிகர்களும் நிறுவனத்திற்கு நாட்டில் ஏராளம். ஆகையால், மிக பெரிய அளவில் நிறுவனத்தின் வருகை மீது எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையிலேயே யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster), யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் (Yezdi Scrambler) மற்றும் யெஸ்டி அட்வென்சர் (Yezdi Adventure) என மொத்தமாக மூன்று புதிய பைக்குகளை இந்திய இருசக்கர வாகன சந்தையில் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

இதில் யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மாடல் பைக்கையே அண்மையில் நமது டிரைவ்ஸ்பார்க் குழு 'டெஸ்ட் டிரைவ்' செய்து பார்த்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். அதாவது, இருசக்கர வாகனத்தின் இயக்க அனுபவம், சிறப்பம்சங்கள் மற்றும் எஞ்ஜின் விபரங்கள் ஆகியவை பற்றிய தகவலையே வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் தகவலுக்குள் போகலாம்.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் பைக்கின் டிசைன் மற்றும் ஸ்டைல்:

இது ஓர் ஸ்கிராம்ப்ளர் ரக பைக் என்பதை குறிப்பிடும் வகையிலேயே யெஸ்டி நிறுவனம் அதற்கு 'ஸ்கிராம்ப்ளர்' என்ற பெயரை வைத்திருக்கின்றது. பெயர் ரொம்ப வழக்கமானதாக காட்சியளித்தாலும், அது ஓர் தனித்துவமான தோற்றம் கொண்ட ஸ்கிராம்ப்ளர் ரக மோட்டார்சைக்கிளாக காட்சியளிக்கின்றது. இதன் டிசைன் மற்றும் ஸ்டைல் ஆகியவை பிரத்யேகமானதாக தென்படுகின்றன.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இதன் தோற்றம் 50ஸ் மற்றும் 60ஸ் காலத்தை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வட்ட வடிவ ஹெட்லேம்ப், எஞ்ஜினுக்கான பாதுகாப்பு மற்றும் ஆஃப் ரோடு - வழக்கமான சாலை என இரு வித பயன்பாட்டு வசதிக் கொண்ட டயர்கள் உள்ளிட்டவற்றை இந்த பைக் கொண்டிருக்கின்றது. இவை இப்பைக்கிற்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில் உள்ளன.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

இதுமட்டுமின்றி இந்த தோற்றத்தை மேலும் மெருகேற்றும் வகையில் வட்ட வடிவ எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டர்ட்-பைக் ரக மட்குவார்ட், ஸ்போர்ட்ஸ் ட்வின் எக்சாஸ்ட் பைப் போன்ற அட்டகாசமான அம்சங்களும் ஸ்கிராம்ப்ளரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது ஏற்கனவே யெஸ்டி பைக் பிரியர்களாக இருப்பவர்களை மட்டுமின்றி புதியவர்களையும் கவர்ந்திழுக்க உதவியாக இருக்கின்றது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

இந்த பைக்கில் ஸ்போக் வீல்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவே இரட்டை பயன்பாட்டு வசதிக் கொண்ட டயர்களை தாங்கி நிற்கின்றது. இவை இரண்டின் காம்பினேஷன் மிகவும் முரட்டுத்தனமானதாகக் காட்சியளிக்கின்றது. பின் பக்க டயரில் ஹக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே, வாகனத்தின் பதிவெண்ணை தாங்கி நிற்கிறது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

இதுமட்டுமின்றி, உடல் நிறத்திற்கு ஏற்ற சிறிய துண்டு போன்ற மட்குவார்டு இருக்கையின் அடிப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. இது தேவையற்ற பாதிப்புகளில் இருந்து இருக்கையின் அடிப்பகுதியை பாதுகாக்க உதவும். இந்த துண்டின் மீதே ஸ்டாப் லைட்டும், அதன் பக்கவாட்டு பகுதியில் சைடு இன்டிகேட்டர்களும் இடம் பெற்றிருக்கின்றன.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

அவையும் வட்ட வடிவத்திலேயே காட்சியளிக்கின்றன. உருவத்தில் மட்டுமில்லைங்க இந்த ஸ்கிராம்ப்ளர் பைக் பல கவர்ச்சிகரமான நிறத் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். மூன்று இரட்டை நிற தேர்வுகள் மற்றும் மூன்று ஒற்றை நிற தேர்வுகள் என அது பரந்து விரிந்துக் காணப்படுகின்றது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

நிற தேர்வுகளும் அதன் விலையும்:

ஒற்றை நிற தேர்வு:

ஃபையர் ஆரஞ்சு (Fire Orange): ரூ. 2,04,900

ஆவுட்லா ஆலிவ் (Outlaw Olive): ரூ. 2,06,900

யெல்லிங் மஞ்சள் (Yelling Yellow): ரூ. 2,06,900

இரட்டை நிற தேர்வு:

மிட்நைட் ப்ளூ (Midnight Blue): ரூ. 2,10,900

மீண் பச்சை (Mean Green): ரூ. 2,10,900

ரிபெல் (Rebel Red): ரூ. 2,10,900

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

மேலே பார்த்ததில் நீங்கள் எந்த நிறத்தைத் தேர்வு செய்தாலும் அந்த நிறம், முன் மற்றும் பின் பக்க மட்குவார்ட் மற்றும் பெட்ரோல் டேங்க் ஆகியவற்றில் மட்டுமே காணப்படும். இரட்டை தேர்வை வாங்கும்போது பைக்கின் ப்யூவல் டேங்கில் மட்டுமே அந்த இரு நிறங்களும் இடம் பெறும். மட்குவார்ட்டுகள் இரண்டும் ஒற்றை நிறத்திலேயே காட்சியளிக்கும்.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

மீதமுள்ள உடற்பாகங்கள் அனைத்தும் கருப்பு நிறத்தில் மட்டுமே காட்சியளிக்கும். இதுமாதிரியான வித்தியாசமான நிற கையாளுகையால் யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மிகவும் கவர்ச்சிகரமான வாகனமாக காட்சியளிக்கின்றது. பைக்கின் தனித்துவமான ஸ்டைலை உறுதிப்படுத்தும் வகையில் இத்தகைய யுக்தியை நிறுவனம் கையாண்டிருக்கின்றது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

யெஸ்டி பைக்கின் சிறப்பம்சங்கள்:

பார்ப்பதற்கு பாரம்பரியமான தோற்றத்தில் காட்சியளிக்கும் ஸ்கிராம்ப்ளர் அதற்கான எந்த அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், சேஸிஸ், மின் விளக்குகள் போன்ற பாரம்பரிய தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. அதேநேரத்தில், இது நவீன யுகம் என்பதால் புதுயுகத்திற்கு ஏற்ப அம்சங்கள் பல இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

ஒரே நேரத்தில் இரு செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. டைப் ஏ, டைப் சி என எந்த ரக சார்ஜிங் பின் கொண்ட செல்போனாக இருந்தாலும் இதன் மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம். இதனைத் தொடர்ந்து பைக் முழுவதும் எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. முகப்பு விளக்கு தொடங்கி இன்டிகேட்டர் வரை அனைத்தும் எல்இடி மின் விளக்குகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

இத்துடன், பைக்கில் சிங்கிள் பாட் வட்ட வடிவ திரை எல்சிடி தரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரை ட்ரிப் மீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி, ஸ்பீடோ மீட்டர், டேக்கோ மீட்டர், ஓடோ மீட்டர் ஆகியவையாக செயல்படும். இதுமட்டுமின்றி ஏபிஎஸ் மோட் பற்றிய தகவலையும் இத்-திரை வழங்கும்.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

இந்த ஏபிஎஸ் அம்சம் மூன்று விதமான மோட்களைக் கொண்டிருக்கின்றது. ரோட், ஆஃப்-ரோட் மற்றும் மழை ஆகிய மோட்களையே அது கொண்டிருக்கிறது. இந்த மோட்கள் அனைத்தையும் ஹேண்டில் பாரில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்விட்ச் கியர் வாயிலாக கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும். இந்த ஸ்விட்ச் கியரின் ஹேண்டில் திறன் மிக சிறப்பானதாக இருக்கின்றது என்பதை நாங்கள் அதனை பயன்படுத்தி பார்த்த பின்னரே உணர்ந்தோம்.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

யெஸ்டி பைக்கின் எந்திரமும், அதன் செயல்திறனும்:

ஸ்கிராம்ப்ளர் ஓர் ஃபன் ரைட் மெஷின் என்பதை டெஸ்ட் டிரைவ் வாயிலாக உணர்ந்தோம். இதற்கேற்ப மிக அதிக உற்சாகமான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய ஓர் எஞ்ஜினே யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. 334 சிசி திறன் கொண்ட டிஓஎச்சி மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது ஓர் லிக்யூடு-கூல்டு எஞ்ஜின் ஆகும். யெஸ்டி அட்வென்சர், யெஸ்டி ரோட்ஸ்டர் மற்றும் ஜாவா பெராக் ஆகிய மோட்டார்சைக்கிள்களில் இதே எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், ஸ்கிராம்ப்ளர் பைக்கில் இது சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

இது ஓர் சிறப்பான எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் ரைடருக்கு த்ரில்லான் அனுபவத்தை வழங்குகின்றதா? என்பதை ஆராய்வதற்காக தார் சாலை மற்றும் ஆஃப்-ரோடில் வைத்து ஸ்கிராம்ப்ளர் பைக்கை இயக்கி பார்த்தோம். இந்த இயக்கத்தின்போது மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தை நாங்கள் பெற்றோம். அதாவது மிகுந்த த்ரில்லான ரைடிங் அனுபவத்தை பைக் எங்களுக்கு வழங்கியது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

உண்மையில், இதன் ரைடிங்கை அதிகம் என்ஜாய் செய்யும் வகையில் இருந்தது. மிகவும் மகிழ்ச்சியான அனுபவத்தையும் பெற்றோம். சிலர் கஷ்டமான நேரங்களில் அதனை மறக்க பைக் ரைடு செய்வர், இதுமாதிரியானோருக்கு நிச்சயம் இந்த பைக் நல்ல ரைடிங் அனுபவத்தை வழங்கும் என்பதை எங்கள் குழுவினர் உறுதி செய்தனர். இதற்கு பைக்கில் உள்ள எஞ்ஜினின் மிக சிறப்பான திறன் வெளிப்பாடே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

8,000 ஆர்பிஎம்மில் 28.7 பிஎச்பி பவரையும், 28.2 என்எம் டார்க்கை 6,750 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனை எஞ்ஜின் கொண்டிருக்கின்றது. இந்த சூப்பரான திறனை நாம் பெற வேண்டும் என்றால் நல்ல சாலையில் நம்முடைய பயணம் இருக்க வேண்டும். ஆம், சாலையை பொருத்தே இந்த சிறப்பான எஞ்ஜின் திறனை பயன்பாட்டாளர்களால் பெற முடியும்.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

இதை உறுதிப்படுத்தும் வகையில் முதலில் எங்களது பயணத்தை வழக்கமான தார் சாலையில் செய்து மேற்கொண்டோம். அந்த பயணத்தில் 6,000 முதல் 8,000 ஆர்பிஎம் வரை மிக ஸ்மூத்தான இயக்கத்தை பைக் வெளிப்படுத்தியது. 8,500 ஆர்பிஎம்மை எட்டியபோது லேசான அழுத்தம் தெரிந்தது. ஆனால், ஸ்பீடு மிக சிறப்பானதாகவே இருந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மிக சிறப்பான ஷிஃப்டிங் அனுபவத்தை வழங்குகின்றது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

க்ரூஸிங் அனுபவம் மிக சிறப்பானதாக இருந்தது. அதேநேரத்தில் அதிகபட்ச வேகம் நல்லதாக தென்படவில்லை. ஸ்டியரிங் ஆங்கிள் மற்றும் ரேக் ஆகியவற்றினால் சில அசௌகரியமான உணர்வு அதிக வேகத்தின்போது தென்பட்டது. மேலும், லேசான அழுத்தமும் ஹேண்டில் பாரில் தெரிந்தது. ஆனால், இது எந்த வகையிலும் ரைடிங்கை பாதிக்கும் வகையில் இல்லை. எனவேதான் இந்த பைக்கில் ரைடு செய்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கியது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

இதற்கு பின்னர் நாங்கள் இந்த பைக்கைக் கொண்டு ஆஃப்-ரோடு பயணத்தையும் செய்தோம். பைக்கில் இடம் பெற்றிருக்கும் இரு வித பயன்பாட்டு வசதிக் கொண்ட டயர்கள் மிக சிறப்பான பயண அனுபவத்தை ஆஃப்-ரோடில் வழங்கியது. மண் மற்றும் சரளை பகுதி என அனைத்திலும் அது சிறப்பாக செயல்பட்டது. சாகசம் செய்வதைப் போன்ற பயண அனுபவத்தை இது எங்களுக்கு வழங்கியது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

இதுமாதிரியான பாதையில் எழுந்து நின்று ஒரு முறை ஸ்கிராம்பளர் பைக்கை இயக்க வேண்டும். அப்படி ஒரு முறை நீங்கள் செய்தால் மீண்டும் இருக்கையில் அமரவே மாட்டீர்கள். ஏனெனில் மிக சிறப்பான அனுபவத்தை அது வழங்கும். ஃபூட் பெக் மற்றும் டேங்க்பேட் இந்த ரைடிற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளன. எஞ்ஜின் சவுண்டை இந்த நேரத்தில் கேட்பதும் மிகவும் சுவாரஷ்யமானதாக இருக்கின்றது.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

பைக்கில் சிறப்பான பிரேக்கிங் அனுபவத்திற்காக 320 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 240 மிமீ டிஸ்க் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், அதிக பாதுகாப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து நல்ல இயக்கத்தை வழங்கின.

ரைடிங் அனுபவம் சூப்பர்... யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் ஓட்ட எப்படி இருக்கு?.. இதோ ரிவியூ தகவல்!

மேலும், புதிய யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் பைக்கை சிறந்த ஸ்கிராம்ப்ளர் பைக்காகவும் மாற்றியிருக்கின்றன. இந்த பைக் தற்போது இந்திய சந்தையில் பெனெல்லி லியன்சினோ 500, பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி ஸ்கிராம்ப்ளர், டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் மற்றும் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles
மேலும்... #யெஸ்டி #yezdi
English summary
Yezdi scrambler review details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X