மகிந்திராவி்ன் புதிய கார் 'ஸைலோ'

Xylo
தனது ஸ்கார்பியோ காரின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் அறிமுகப்படு்த்தியுள்ள அடுத்த மல்டி பர்பஸ் வெகிக்கிள் ஸைலோ (Xylo).

இந்தியாவின் முன்னணி ஜீப் தயாரிப்பு நிறுவனமான மகிந்திரா டிராக்டர்கள், வேன்கள் என பல்வேறு வாகன தயாரிப்புகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தாலும் அந்த நிறுவனத்தை பெரும் வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றது ஸ்கார்பியோ ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வெகிக்கிள்.

இந்த கார் இந்திய சாலைகளையும் கடந்து பல நாடுகளிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.

இந் நிலையில் ஸ்லோவை அறிமுகப்படுத்தி பிரமிக்க வைத்திருக்கிறது மகிந்திரா.

டயோட்டா இன்னொவை முறியடிக்கும் வகையில் இந்த மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது மகிந்திரா.

டிசைனைப் பொறுத்தவரை ஸ்கார்பியோவின் லுக் இந்த காரில் இல்லை. ஆனால், இன்னோவின் பாதிப்பை இதில் பார்க்க முடிகிறது. இன்னோவாவைப் போலவே அமர்ந்து செல்பவர்களின் வசதியையே அதிகமாக கவனத்தில் வைத்து இந்த காரை வடிவமைத்துள்ளனர்.

இன்னோவாவை அறிமுகப்படுத்தி அதை மக்களிடையே பிரபலப்படுத்த டயோடா எடுத்த முயற்சிகள் மிக அதிகம். அந்த வாகனத்துக்குக் கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு அலையில் நாமும் பயணித்துவிடலாம் என மகிந்திரா கணக்கு போட்டு ஸைலோவை களத்தில் இறக்கியுள்ளது.

அதே போல இந்திய சாலைகளில் இன்னோவா சந்திக்கும் முதல் போட்டியும் இது தான்.

புதிய 2.5 லிட்டர் என்ஜினுடன், அமர்பவர்களுக்கு தாராளமான இட வசதியுடன் வந்திறங்கியிருக்கும் ஸைலோவின் விலையும் கட்டுக்குள்ளேயே இருப்பதும் இன்னொரு பிளஸ் பாயிண்ட்.

இ2, இ4, இ6, இ6 என்ற நான்கு வகைகளில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.

ஸைலோவின் விலை (எக்ஸ் ஷோரூம்-டெல்லி)

மாடல்-இ2
விலை-ரூ. 6,24,500

மாடல்-இ4:
விலை-ரூ.6,69,500

மாடல்-இ6:
விலை-ரூ.7,32,500

மாடல்-இ8:
விலை-ரூ.7,69,500

Most Read Articles
Story first published: Monday, January 19, 2009, 17:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X