டாடா மோட்டார்ஸை விட மஹிந்திரா கொஞ்சமும் சளைச்சது இல்ல! ஒரே மாதத்தில் 60 ஆயிரம் கார்களை விற்குறது சாதாரணம் இல்ல

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதங்களில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்து இருந்தாலும், கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மஹிந்திராவை முந்தியுள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்த்தால், மஹிந்திராவின் கார்கள், கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் வேளாண் சார்ந்த கருவிகளின் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் ஓரளவிற்கு சிறப்பாக இருந்துள்ளது என்றே கூற வேண்டும்.

மஹிந்திரா கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 60 ஆயிரத்து 18 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்திருந்த 50 ஆயிரத்து 420 கார்களுடன் ஒப்பிடுகையில் 19.04%, அதாவது 9,598 கார்கள் அதிகமாகும். ஆனால், கடந்த 2026 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.50% குறைவாகும்.

mahindra car sales february 2026

ஏனெனில், அந்த மாதத்தில் 63 ஆயிரத்து 510 கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. ஜனவரியில் அதிக நாட்கள் என்பதால், இந்த சிறிய சரிவை மஹிந்திரா பெரியதாக எடுத்துக் கொள்ளாது. கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 2026 பிப்ரவரி வரையிலான 11 மாத காலக்கட்டத்தை எடுத்துப் பார்த்தால், மஹிந்திரா மொத்தம் 6 லட்சத்து 4 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கை தனி. அதுவே, 2024-25 வருடங்களுக்கு இடையேயான இதே 11 மாத காலக்கட்டத்தில் மஹிந்திரா வெறும் 5,03,439 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், சுமார் 96 ஆயிரத்திற்கும் அதிகமான மஹிந்திரா கார்கள் கடந்த 11 மாதங்களில் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அப்படியே மஹிந்திராவின் கமர்ஷியல் வாகனங்கள் பக்கம் வந்தால், மஹிந்திரா கடந்த பிப்ரவரி மாதத்தில் 9190 மூன்று-சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதுவே, 2025 பிப்ரவரி மாதத்தில் 6395 யூனிட் மூன்று-சக்கர வாகனங்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. கடந்த 11 மாதங்களில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான 3-வீலர்களை மஹிந்திரா இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.

mahindra car sales february 2026

இதில், மஹிந்திராவின் எலெக்ட்ரிக் 3-வீலர்களும் அடங்குகின்றன. எடை குறைவான மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்களை பொறுத்தவரையில், 2 டன்களுக்கும் குறைவான எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்கள் 3169 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2025 பிப்ரவரியில் இந்த வகை மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் 3,290 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

மஹிந்திராவின் இந்த வாகனங்களின் விற்பனை கடந்த 11 மாத காலமாகவே பெரியதாக மாற்றம் இல்லாமல் எப்போதும்போல் இருந்து வருகிறது. 2 டன்களுக்கும் 3.5 டன்களுக்கும் இடைப்பட்ட எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்கள் தான் நாம் பார்க்க வேண்டியவற்றில் முக்கியமானவை ஆகும். ஏனெனில், இவைதான் மஹிந்திராவுக்கு ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையிலான யூனிட்கள் விற்பனையாகுகின்றன.

கடந்த 2026 பிப்ரவரி மாதத்திலும் இந்த வகை மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் 21,416 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2025 பிப்ரவரியில் இவை 19,155 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2 டன்- 3.5 டன் எடை கொண்ட இந்த மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் கடந்த 11 மாதங்களில் சுமார் 2.30 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா & மஹிந்திராவில் இருந்து மிகவும் அதிக எடை கொண்ட கனரக கமர்ஷியல் வாகனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. இந்த தொகுப்பின் மூலம், மஹிந்திராவுக்கு கார்களுக்கு அடுத்து 2 டன்- 3.5 டன் எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்கள் முக்கியமானவைகளாக உள்ளன என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 4, 2026, 18:56 [IST]
English summary
Mahindra sold more than 60 thousand cars in just one month of february 2026
மேலும்... #mahindra #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+