லோகன் கார் தயாரிப்பிலிருந்து விலகுகிறது ரெனால்ட்!

By
Mahindra Renault Logan
டெல்லி: மகிந்திரா ரெனால்ட் நிறுவனத்திலிருந்து முழுமையாக விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது அதன் முக்கிய பங்குதாரரான பிரான்ஸ் நிறுவனம் ரெனால்ட். தனது 49 சதவிகித பங்குகளையும் இன்னொரு பங்குதாரரான மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்துக்கு விற்கிறது.

2005-ம் ஆண்டு கூட்டு நிறுவனமாக மகிந்திரா ரெனால்ட் பிரைவேட் லிமிடெட் ஆரம்பிக்கப்பட்டது.

ஆண்டுக்கு 50000 லோகன் கார்களை விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தமே 1.53 லட்சம் கார்களைத்தான் விற்க முடிந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு 5332 கார்கள்தான் விற்கப்பட்டன. இதனால் ஆண்டுக்கு ரூ 490 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலிருந்து நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக, மகிந்திரா ரெனால்ட் நிறுவனம் முழுமையாக மகிந்திராவிடமே ஒப்படைக்கப்படுகிறது. அதில் தனக்கிருந்த 49 சதவிகித பங்குகளையும் ரெனால்ட் திரும்பத் தருகிறது.

அதே நேரம் லோகன் கார் உற்பத்திக்கான உதிரிபாகங்கள், எஞ்ஜின்கள் போன்றவற்றை ரெனால்ட் தொடர்ந்து வழங்கும். ஒவ்வொரு கார் விற்பனையிலும் ராயல்டி தொகை மட்டும் ரினால்டுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

அதே நேரம் இந்த புதிய டீலில் கைமாறியுள்ள தொகை குறித்த எந்த தகவலையும் மகிந்திரா அண்ட் மகிந்திரா மோட்டார்ஸ் தலைவர் பவன் கோயங்கா தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இப்போது இந்தக் காரின் பெயரும் மாற்றப்படுகிறது. புதிய பெயர் சூட்டப்பட்டதும், புதிய லோகோவுடன் மலிவான விலையில் விற்பனைக்கு வருமாம் லோகன்.

Most Read Articles
Story first published: Saturday, April 17, 2010, 14:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X