நானோவுக்கு முன்னோடியான பிளையர் கார்- விலை வெறும் ரூ. 5985 மட்டுமே

By
Flyer Car
இது ஏதோ குட்டீஸ்கள் விளையாடும் பொம்மைக் கார் அல்ல. ரோட்டில் சவாரி விடும் நிஜக் கார்தான். ஆனால் அதன் விலைதான் அனைவரையும் வியக்க வைக்கிறது. ஆனால் இந்த விலை இக்காலத்து விலை அல்ல -20களில் விற்ற விலை இது.

இந்தக் காரின் பெயர் பிளையர். ரொம்ப ரொம்ப குட்டிக் கார். வெயிட்டே இல்லாத கார். இரண்டு பேர் அமர்ந்து செல்லலாம். காரின் பிரேம் உள்ளிட்டவை மரத்தால் ஆனது.

காரில் சிறிய காஸோலின் என்ஜின்உள்ளது. காரின் 5வது சக்கரம் அல்லது மோட்டார் வீல் மீது இந்த என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சக்கரத்தின் அடித்தளம் 62 இன்ச் ஆகும். சக்கரங்கள் தலா 20 இன்ச் சுற்றளவையும், 30 இன்ச் அகலத்தையும் கொண்டவை.

இந்தக் காரை பிரிக்ஸ் அன்ட் ஸ்டிராட்டன் நிறுவனம் விற்பனை செய்தது.1925ம் ஆண்டு இந்தக் காரை விற்கும் உரிமையை ஆட்டோமோட்டிவ் எலக்ட்ரிக் சர்வீஸஸ் கார்ப்பரேஷன் வாங்கியது. இந்த காருக்கான என்ஜினின் சப்ளை நின்று போகும்வரை இந்த நிறுவனம்தான் பிளையர் கார்களை விற்று வந்தது.

1908ம் ஆண்டு பிரிக்ஸ் அன்ட் ஸ்டிராட்டன் தொடங்கப்பட்டது. ஸ்டீபன் போஸ்டர் பிரிக்ஸும், ஹரால்ட் ஸ்டிராட்டனும் இணைந்து ஜாலியாக தொடங்கிய கம்பெனி இது.

அந்தக் காலத்தில் மிகவும் விலை மலிவான கார் இந்த பிளையர் கார்தான். இதை விற்பனை செய்ததன் மூலம் பிரிக்ஸ் அன்ட் ஸ்டிராட்டன் நிறுவனம் சாதனை படைத்ததாம்.

இந்தக் கார்கள் அனைத்துக்கும் ஒரே கலர்தான் - அதாவது சிவப்பு நிறம் மட்டுமே. இதனால் இந்த கார்களை சிவப்பு பூச்சி என்று செல்லமாக அழைப்பார்களாம் அந்தக் காலத்து தாத்தாக்கள்.

உலகிலேயே மிகவும் விலை குறைவான கார் என்று இந்தக் காருக்கு கின்னஸ் சாதனைப் புத்தகம் சான்றிதழ் அளித்துள்ளது. இதுகுறித்து கின்னஸ் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது - 1922ல் பிரிக்ஸ் அன்ட் ஸ்டிராட்டன் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பிளையர் கார், 125 முதல் 150 டாலர்கள் வரை (ரூ. 5985 முதல் ரூ. 6940 வரைஃ) விலை வைத்து விற்கப்பட்டது.

உலகிலேயே மிகவும் விலை மலிவான கார் இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ப இது டாடாவின் நானோவுக்கு தாத்தா...!

Most Read Articles
Story first published: Friday, May 21, 2010, 17:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X