ஏப்ரலில் ஹாச்ட்பேக் எடியோஸ் லிவா அறிமுகம்: பட்ஜெட்டுக்குப் பிறகு விலை நிர்ணயம்

By
Toyota Liva
மும்பை: எடியோஸ் செடானின் ஹாட்ச்பேக் காரான எடியோஸ் லிவா வரும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தபடவுள்ளது.

உலக கார் சந்தையில் டொயோடா பெரிய பெயர் எடுத்திருந்தாலும் இந்திய சந்தையில் இப்பொழுது தான் சற்றுத் தலைதூக்கத் துவங்கியுள்ளது. டொயோடா, கிர்லோஸ்கர் மோட்டாருடன் கூட்டாக இணைந்து இந்தியாவி்ல் வியாபாரம் செய்து வருகிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் துணை தலைவர் கூறியதாவது,

புதிதாக வரும் செடானின் விலை ரூ. 4. 96 முதல் 6.86 லட்சம் வரை இருக்கும். ஆனால் இதன் சரியான விலை இந்திய அரசின் பட்ஜெட்டுக்குப் பிறகே முடிவு செய்யப்படும்.

எடியோஸின் ஹாட்ச்பேக் வெர்ஷன் வரும் ஏப்ரலில் அறிமுகம் செய்யப்படும். ஏற்கனவே உள்ள செடானில் 1. 5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. தற்போது வரவிருக்கும் ஹாட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இருக்கும்.

வரும் 2011-ம் ஆண்டில் 70000 எடியோஸ் மற்றும் எடியோஸ் லிவா கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

ஏற்கனவே இந்திய கார் சந்தையில் இன்னோவா எம்யுவி, கொரோலா ஆல்டிஸ் ஆகிய பிரீமியம் செடான் கார்கள் உள்ளன. தற்போது வரும் எடியோஸின் இரண்டு வகைகள் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது.

Most Read Articles
English summary
The launch of the new sedan Etios in the competitive Indian car market has tempted the company to come out with the hatchback version, Etios Liva in April. Though Toyota is a great name in the global car market, its presence in the Indian car market is yet to be on the penetrating level. Currently the Indian business is going on under the JV with Kirloskar Motor and the new hatchback version of Etios will be moderated on the compact sedan version. The entry-level sedan is priced in the range of Rs4.96 – Rs6.86 lakhs and exact pricing will be decided after the Indian government budget
Story first published: Monday, December 6, 2010, 16:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X