மெக்சிகோ நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவில் கால் பதிக்கும் டாடா!

By
Tata Mexican
மும்பை: மெக்சிகோவின் மெடால்சா நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவி்ல் நானோ கார்களைத் தயாரித்து, விற்க டாடா மோட்டர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மெடால்சா எஸ்ஏ டெ சிவி நிறுவனமும் டாடாவும் இணைந்து 2011ம் ஆண்டில் நானோ கார்களை விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளன.

உலகளவில் கார்கள், கன ரக வாகனங்களுக்கான பாகங்களைத் தயாரி்த்து வழங்குவதில் முன்னணியில் உள்ள க்ருபோ ப்ரோயென்சா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் மெடாசா.

மெடால்சாவின் இந்திய துணை நிறுவனம் ஏற்கனவே டாடாவின் கனரக, நடுத்தர, இலகு ரக டிரக்குகளுக்கு சேசிஸ், ஆயில் பம்புகள் உள்ளிட்ட முக்கிய பாகங்களை தயாரி்த்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நானோ தவிர மான்சா, இன்டிகா வி்ஸ்டா ரக கார்களையும் அமெரி்க்காவில் தயாரி்தது விற்கவும் டாடாவும் மெடால்சாவும் பேச்சு நடத்தி வருகின்றன.

இப்போது டாடாவின் மொத்த வாகன உற்பத்தியில் 10 சதவீதம் வெளிநாடுகளில் தயாராகி விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் கார்கள், கன ரக வாகனங்களுக்கான பாகங்களைத் தயாரி்த்து வழங்குவதில் முன்னணியில் உள்ள க்ருபோ ப்ரோயென்சா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் மெடாசா.

Most Read Articles
Story first published: Monday, May 31, 2010, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X