நேபாளத்தில் நானோ கார் டோர் டெலிவிரி: ஷிப்ரடி மோட்டார்ஸ்

Tata Nano
காத்மாண்டு: நேபாளத்தில் ஆரவார வரவேற்பை பெற்ற நானோ கார் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று டோர் டெலிவிரி செய்யப்பட இருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி அண்டை நாட்டு சந்தைகளிலும் நானோ காரை டாடா மோட்டார்ஸ் களமிறக்கியுள்ளது.

இலங்கையில் அறிமுகப்படுத்த நானோ அங்கு பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, நேபாளத்திலும் நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு நானோ காருக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது.

புக்கிங் துவங்கப்பட்டு 4 நாட்களில் 352 நானோ கார்கள் புக்கிங் செய்யப்பட்டது. எதிர்பார்ததைவிட அதிக புக்கிங் ஆனதால், அங்கு நானோ காருக்கான புக்கிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், நேபாள ஷோரூம்களில் நானோ காரை வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்வதாகவும், பலர் புக்கிங் செய்ய ஆவலாக காத்திருப்பதாகவும் டீலர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நேபாளத்தில் புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நானோ டெலிவிரி துவங்கப்பட இருக்கிறது.

நேபாளத்திற்கான அங்கீகாரம் பெற்ற இறக்குமதியாளரான ஷிப்ரடி மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு முதல் கட்டமாக 250 நானோ கார்கள் வந்துள்ளது.

புக்கிங் வரிசைப்படி முதலில் 250வாடிக்கையாளர்களுக்கு நானோ கார் டோர் டெலிவிரி செய்ய இருப்பதாக ஷிப்ரடி தெரிவித்துள்ளது. மேலும், விரும்பும் வாடிக்கையாளர்கள் ஷோரூம்களில் வந்தும் டெலிவிரி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
The Tata Nano small car which created quite a stir in Nepal is being delivered to customers. Tata Motors which had launched a road trip of the Nano and also displayed its small car at its showrooms had received a tremendous response from customers.The bookings of the Nano was closed within four days of the bookings being opened in Nepal. Tata Motors has now started delivering the car through its official importer Sipradi Trading. Sipradi has received 352 bookings for the Tata Nano so far and will be delivering 250 units in the first batch of deliveries. Sipradi Trading has said it would deliver the Tata Nano to customers making full cash payments and to people who have bank approved loans. The official Tata importer will deliver the Nano to the doorsteps of the customers. Otherwise the customers can visit the Tata Motors Showroom to pick up the Indian small car.
Story first published: Tuesday, June 19, 2012, 16:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X