ஸ்டீயரிங் பிரச்னை: 1.6 லட்சம் பிரையஸ் கார்களை திரும்ப பெறும் டொயோட்டோ

Toyota Prius
டோக்கியோ: ஸ்டீயரிங்கில் கியர்பாக்ஸ் பிரச்னை காரணமாக 1.6 லட்சம் பிரையஸ் கார்களை திரும்ப பெற இருப்பதாக டொயோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு முதல் தலைமுறை பிரையஸ் செடான் கார்களை தனது உள்நாட்டு சந்தையான ஜப்பானில் டொயோட்டோ அறிமுகம் செய்தது. வடிவமைப்பு, தரம் என அனைத்திலும் விஞ்சியதால் பிரையஸ் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, 2001ம் ஆண்டு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் பிரையஸ் கார்களை டொயோட்டோ அறிமுகம் செய்தது. அனைத்து நாடுகளிலும் பிரையஸ் நன்மதிப்பை பெற்று விற்பனையும் வெகுவேகமாக உயர்ந்தது.

இந்த நிலையில், பிரையஸ் கார்களின் ஸ்டீயரிங் மற்றும் கியர்பாக்சில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்படுவதாக வாடிக்கையாளர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்தன. இதுகுறித்து பரிசீலனை செய்த டொயோட்டோ முதலாம் தலைமுறையை சேர்ந்த அனைத்து பிரையஸ் கார்களையும் திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

ஜப்பானில் விற்பனை செய்யப்பட்ட 47,784 கார்கள் மற்றும் அமெரிக்க சந்தையில் வி்ற்பனை செய்யப்பட்ட 52,000 பிரையஸ் கார்களை டொயோட்டோ திரும்ப பெற உள்ளது. தவிர, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் விற்பனை செய்யப்பட்ட 6,000 கார்களையும் பிரச்னையை சரிசெய்வதற்காக டொயோட்டோ திரும்ப பெறுகிறது.

Most Read Articles
English summary
The world’s number one automobile company Toyota Motor Corp has announced that it will recall 105,784 early model Prius cars in Japan and overseas to fix a fault with the model's steering and gearbox.
Story first published: Thursday, June 2, 2011, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X