சந்தையில் கலக்கும் செவர்லே பீட்-சிறப்பு பார்வை

By Super
Chevrolet Beat
ஹேட்ச்பேக் கார் வாங்கும்போது அதில் சில வசதிகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அந்த குறைகளை போக்கும் வகையிலான வடிவமைப்பு மற்றும் வசதிகளையும் பீட்டில் கொண்டுவந்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். ஸ்போர்ட்டி ஹேட்ச்பேக் காரான செவர்லே பீட் பற்றிய சிறப்பம்சங்கள் தொகுப்பு.

எஞ்சின்:

பெட்ரோல் மற்றும் எல்பிஜி ஆகிய இரண்டு எஞ்சின் மாடல்களில் செவர்லே பீட் மார்க்கெட்டில் கிடைக்கிறது. இதில், நான்கு சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 79 பிஎச்பி திறனை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் எஞ்சின் மாடல் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வெளிப்புற வடிவமைப்பு:

முதல் முறையாக பார்த்தவுடனேயே இது நகரத்துக்கான கார் என்று கூறிவிடும் அளவுக்கு பீட்டின் வெளிப்புறத்தை ஸ்போர்ட்டியாக வடிவமைத்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். நெஞ்சத்தை நிமிர்த்தி நடப்பது போல் உள்ள பீட் கார் பார்த்தவுடனேயே காதல் கொள்ள செய்கிறது. முகப்பு விளக்குகள், பின்புற எச்சரிக்கை விளக்குகள், முன்பக்க கிரில் ஆகியவை குரோம் பூச்சுடன் பளிச்சிடுகிறது.

உட்புற வடிவமைப்பு:

இதன் டேஷ்போர்டு வளைவு நெளிவுகளுடன் அழகாக காட்சி தருகிறது. ஸ்பீடோமீட்டர் வழக்கமாக இல்லாமல் ஸ்டீயரிங் வீலுக்கு சற்று மேலே பொருத்தப்பட்டிருப்பதால் காரின் வேகத்தை எளிதாக காண முடிகிறது. பின் இருக்கையில் அமரும்போது முன் இருக்கையில் கால் இடிக்காதவாறு லெக்ரூம் வசதியாக இருக்கிறது.

சொகுசு மற்றும் கையாளுமை:

டிரைவர் சீட்டில் அமர்ந்தவுடன் ஒரு காம்பெக்ட் காரில் அமர்ந்த உணர்வு ஏற்படுகிறது. ஸ்டீயரிங் வீல் சரியான அளவில் பொருந்தியுள்ளதால் கைக்கு லாவகமாக இருக்கிறது. இதனால், நகர்ப்புற சாலைகளில் எளிதாக ஓட்ட முடிகிறது. மேலும், ஆடியோ சிஸ்டம், ஏ.சி.ஸ்விட்ச் ஆகியவை கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளதால் டிரைவிங்கின்போது கவனக்குறைவு ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது.

பாதுகாப்பு:

சென்ட்ரல் லாக்கிங், ஏபிஎஸ், ஏர்பேக்ஸ், பவர் விண்டோ உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்கிறது பீட். இதனால், ஒரு காம்பெக்ட் காரில் உள்ள பாதுகாப்பு வசதிகளை பீட் காரில் பெற முடிகிறது. மேலும், நவீன தொழில்நுட்பம் கொண்ட பிரேக்கிங் சிஸ்டம் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது. பனிக்காலங்களில் பாதுகாப்பான பயணத்திற்காக பனிமுகப்பு விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்:

செவர்லே பீட் கார் நகர்ப்புற சாலைகளில் லிட்டருக்கு 14.5 கி.மீ. தூரமும், நெடுஞ்சாலைகளில் 18 கி.மீ.தூரமும் சராசரியாக செல்கிறது.

விலை:

சென்னையில் செவர்லே பீட் பெட்ரோல் மாடல் ரூ.3.83 லட்சம் முதல் ரூ.4.73 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

குறைகள்:

பெரிதாக குறைகள் எதையும் கூறமுடியவில்லை. ஆனால், மார்க்கெட்டில் இதன் ரகத்தை சேர்ந்த ஹேட்ச்பேக் கார்களுடன் ஒப்பிடும்போது விலை சற்று கூடுதலாக இருக்கிறது.

Most Read Articles
English summary
The Chevrolet Beat is a neat hatchback from the stable of the famous bowtie brand General motors. Here are given some specifications and features of Chevrolet Beat car.
Story first published: Tuesday, March 6, 2012, 17:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X