இந்திய சந்தையில் சரியான சமயத்தில் கால் பதித்துள்ளோம்-ரினால்ட்

Renault Logo
கொல்கத்தா: "இந்திய சந்தையில் தாமதமாக நுழையவில்லை; சரியான சமயத்திலேயே காலடி எடுத்து வைத்துள்ளோம்" என, ரினால்ட் துணைத் தலைவர் லென் கூரன் கூறினார்.

கொல்கத்தாவில் புளூயன்ஸ் காரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரினால்ட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு தலைவர் லென் கூரன் கலந்துகொண்டு காரை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர் கூறியதாவது:

"எங்களுக்கு இந்திய சந்தை புதிதல்ல. இந்திய கார் சந்தையின் நாடித்துடிப்பை நன்கு அறிவோம். எனவே, குறுகிய காலத்தில் சந்தையில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

இந்திய சந்தையில் 5 சதவீத இடத்தை பிடிப்பதே முக்கிய இலக்காக கொண்டுள்ளோம். வரும் 2013ம் ஆண்டுக்குள் இந்திய சந்தையில் 2.5 சதவீத இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, 5 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

மேலும், மினிடிரக் சந்தையில் தயாரிப்பில் ஈடுபடும் எண்ணமும் உள்ளது. இந்திய சந்தையில் தாமதமாக நுழைந்துவிட்டதாக கூறுவதை ஏற்க இயலாது. தக்க சமயத்தில் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளோம்," என்று கூறினார்.

Most Read Articles

English summary
The Vice-President of Renault was in the city of Kolkatta for the launch of its luxury sedan ‘Renault Fluence’ and at the same moment he expressed that“We are also looking at the LCV market in India. Also we are not late entrants into the Indian car market. It is the right time to make an entry.”
Story first published: Friday, June 3, 2011, 15:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X