நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ஆடி ஏ-6 கார் அறிமுகம்

Audi A6
டெல்லி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆடி நிறுவனத்தின் புதிய ஏ-6 செடான் கார் இன்று இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

சொகுசு கார் என்றவுடன் வாடிக்கையாளர்கள் நினைவுக்கு வருவது ஆடி கார்கள்தான். அதிக தரம், நிறைந்த வசதிகள் என எதிர்பார்ப்புகளை கண்முன் நிறுத்துவதில் ஆடி கார்களுக்கு நிகரில்லை என்று கூறலாம்.

இதனால், இந்திய சொகுசு கார் சந்தையில் ஆடி கார்களுக்கான வரவேற்பு கூடிக்கொண்டே செல்கிறது. இதனால், தனது புதிய மாடல்களை இந்திய சந்தையில் ஆடி தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், தனது ஏ-6 பிரிமியம் செடான் காரையும் இந்திய சந்தையில் ஆடி இன்று அறிமுகம் செய்துள்ளது.

எடையை குறைப்பதற்காக அலுமினியம் கலந்த பாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஆடி கார்களுக்கே உரித்தான ரன்னிங் எல்இடி விளக்குகளின் அழகு கண்களை விட்டு அகல மறுக்கின்றன.

பின்பக்க டேஞ்சர் விளக்குகள் U வடிவில் புதிய பொலிவுடனும், ரன்னிங் விளக்குகளுடன் ஆடி ஏ-6 அலங்கரிக்கப்பட்ட தேரைப்போல மின்னுகிறது.

இது இரண்டு டீசல் எஞ்சின் மற்றும் இரண்டு பெட்ரோல் எஞ்சின் மாடல்களி்ல வந்துள்ளது. மேலும், ஆடியின் குவாட்ரோ மாடல் கார் 4 வீல் டிரைவுடன் வந்துள்ளது.

இதன் அனைத்து மாடல்களும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் கார் அதிகபட்சமாக மணி்க்கு 240கிமீ வேகத்திலும், டீசல் மாடல் கார் அதிகபட்சமாக மணிக்கு 222 கிமீ வேகத்திலும் செல்லும்.

ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் ஏராளமான வசதிகளுடன் வந்துள்ள ஆடி ஏ-6 ரூ.37.7 லட்சம் முதல் ரூ.46.95 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Audi India has launched the all new Audi A6 in the country. The new premium saloon will be priced at Rs 37.7 lakh for the base 2.0 TDI version, ex-showroom Delhi. The car was launched at an event organized for the media at Gurgaon. The top- of- the- line diesel variant, 3.0 TDI Quattro is priced at Rs 46.95 lakh ex-showroom Delhi.
Story first published: Thursday, August 4, 2011, 12:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X