வரும் செப்டம்பரில் பிரையோ: ஹோண்டா திட்டம்

Honda Brio
டெல்லி: ஜப்பானில் சுனாமி, மார்க்கெட் தட்பவெப்பம் சரியில்லை என பல காரணங்களை கூறி பிரையோவின் அறிமுகத்தை ஹோண்டா தள்ளிபோட்டு வருகிறது.

டொயோட்டோ கூட ஒருவழியாக லிவா ஹேட்ச்பேக்கை களமிறக்கிவிட்டது. ஆனால், பிரையோவை களமிறக்க ஹோண்டா நாள்குறித்தபாடில்லை.

ஹோண்டா பிராண்டில் வரும் முதல் சிறிய கார் என்பதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிரையோ அறிமுகத்தை எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.

இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட ஜாஸ் காரை அறிமுகம் செய்தவுடன், வரும் செப்டம்பரில் பிரையோவை ஹோண்டா களமிறக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைததுள்ளன.

முதலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் பிரையோவை அறிமுகப்படுத்தவும், பின்னர் டீசல் மாடலை அறிமுகப்படுத்தவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

மேலும், பிரையோவுக்கு முடிந்தளவுக்கு இநதியாவிலிருந்து பெறப்படும் உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்பட இருப்பதால், விலையும் குறைவாக இருக்கும்.

பெரும்பாலும், ரூ.4.5 லட்சம் ஆரம்ப விலையில் இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் ஏற்கனவே தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The reliable automobile sector sources said that the Honda Brio Hatchback could see a September launch, close on the heels of the facelifted Honda Jazz’s launch, which incidentally is scheduled to happen later this month. The Honda Brio Hatchback is what Honda SIEL hopes will put the bang back in its car sales in India.
Story first published: Thursday, August 4, 2011, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X