யூஸ்டு கார் மார்க்கெட்டில் களமிறங்க ஆடி முடிவு

Audi A8
டெல்லி: சொகுசு கார் தயாரிப்பில் பிரபலமான ஆடி நிறுவனம் யூஸ்டு கார் மார்க்கெட்டில் நுழைவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

யூஸ்டு கார் மார்க்கெட் ஆடி நிறுவனத்துக்கு புதிதல்ல. ஆடி அப்ரூவ்டு ப்ளஸ் என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் அந்த நிறுவனம் தனது பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் யூஸ்டு கார் மார்க்கெட்டில் களமிறங்கினால் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கான சாத்தியக்கூறுகளை ஆடி ஆராய்ந்து வருகிறது.

ஆடி இந்தியா நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு தலைவர் அனில் ரெட்டி கூறியதாவது:

"வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் தேவை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து வருகிறோம். சிறிய கார் வைத்திருப்பவர்கள் சொகுசு கார் வாங்கும் வகையில் எங்களது விற்பனை கொள்கை இருக்கும்.

5 ஆண்டுகளுக்கு உட்பட்ட பயன்படுத்தப்பட்ட ஆடி பிராண்டு கார்களை விற்பனை செய்வோம். மேலும், எங்களது அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள் மூலம் கார்களை முழுவதுமாக ஆய்வு செய்யப்படும். அடுத்த ஆண்டில் யூஸ்டு கார் சந்தையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

Most Read Articles
English summary
Audi has said that it is keen on offering its pre-owned cars in the Indian market. The company will be operating in used car business through its Audi Approved Plus programme by next year.
Story first published: Sunday, June 5, 2011, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X